PDA

View Full Version : கவிஞன் விட்டுப் போன கவிதை...



Nanban
03-05-2005, 07:58 PM
Ţ Ţ Ţ...



Ģ

šŢǢ





á



ʼ



׸

ź





Ţĸ



ţ

¢

Ӹ

͸ǡ ܼ

â ¡

â

̸ -

¢



...

Iniyan
04-05-2005, 04:43 AM
Ţ Ţ Ţ...



Ģ

šŢǢ





á



ʼ



׸

ź





Ţĸ



ţ

¢

Ӹ

͸ǡ ܼ

â ¡

â

̸ -

¢



...






கவிஞன் விட்டுப் போன கவிதை...

சலித்துப் போன
வாழ்விடங்களில்
புதுக்காற்றுப் பாய்ச்ச

மராமத்து செய்து
வண்ணம் பூசி
அழகு கூட்டிட

புது வரவுகளுக்கு
வசதிகள் செய்திட
என்று

கொஞ்சம் விலகிப் போய்
திரும்பிய இடத்தில்
பழைய வீட்டின்
உயிர்ப்பு துரத்தப்பட்டு
முகமற்ற வடிவத்தில்
ஒப்பனை பூச்சுகளால் கூட
சரிக்கட்ட முடியாத
வரிகள்
நின்று முழங்குகின்றன -
உயிர்த்தெழுந்த
கர்த்தாக்கள்
நாங்கள் என்று...

Iniyan
04-05-2005, 04:43 AM
திஸ்கியை விட்டு விடுங்களேன்

அறிஞர்
05-05-2005, 03:48 AM
கவிதை அருமை நண்பரே......

சரியான மொழியாக்கம் தந்த இனியனுக்கு வாழ்த்துக்கள்

பரஞ்சோதி
05-05-2005, 04:39 AM
நன்றி நண்பன் அவர்களே!

மீண்டும் மன்றத்தில் உங்கள் கவிதைகளால் கவிதைப்பகுதி உயிர்தெழ வேண்டும்.

மன்மதன்
05-05-2005, 04:58 AM
கவிதைப்பக்கத்தின் இன்றைய நிலைமையை அழகிய கவிதையாக சொன்ன நண்பனுக்கு நன்றி.. நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறேன்..

அன்புடன்
மன்மதன்

poo
05-05-2005, 10:45 AM
நண்பன் அவர்களே மீண்டும் மன்றக்கவிதைகள் பக்கம் பொலிவுற முன்போல சிறப்பாக செயல்பட வேண்டி பாராட்டுகிறேன்.. எழுதிக்கொண்டேயிருங்கள்...

Nanban
05-05-2005, 03:40 PM
திஸ்கியை விட்டு விடுங்களேன்

திஸ்கியைப் பிடித்து வைத்துக் கொள்ளும் எண்ணமெல்லாம் இல்லை. யுனிகோட் விசைப் பலகையை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. யாராவது அனுப்பித் தந்தால் நன்றாக இருக்கும்.
மேலும் திஸ்கியில் வரும் வேகம் வேறு எதிலும் வருவதில்லை.
என்றாலும், மொழி பெயர்ப்பாளாராக பணியாற்றும் நண்பர் இனியன் அவர்களுக்கு மிக்க நன்றி....

Iniyan
05-05-2005, 03:43 PM
நண்பா! அதே விசைப்பலகை தானே யுனிகோடிலும்? அதில் எந்த மாற்றமும் இல்லையே?

kavitha
07-05-2005, 06:28 AM
எதார்த்த கவிதை நன்றாக உள்ளது

திஸ்கியில் தட்டச்சு செய்தபின் கீழே இருக்கும் எழுத்துரு மாற்றியில் மாற்றிக்கொள்ளலாமே நண்பன்!

Nanban
07-05-2005, 05:57 PM
இப்பொழுது பார்த்துச் சொல்லுங்கள் சரியாக வந்திருக்கிறதா என்று?

அறிஞர்
09-05-2005, 07:04 AM
இப்பொழுது பார்த்துச் சொல்லுனங்கள் சரியாக வந்திருக்கிறதா என்று?

மிகச்சரியாக வருகிறது....

ஆவலுடன் காத்திருக்கிறோம் உம் கவிகள் காண

Nanban
10-05-2005, 06:09 PM
மிகச்சரியாக வருகிறது....

ஆவலுடன் காத்திருக்கிறோம் உம் கவிகள் காண


நன்றி அறிஞரே

கவிதை பக்கத்தின் மிக முக்கிய அங்கத்தினர்கள் நிறைய பேரைக் காணவில்லையே இன்னமும்....

மன்மதன்
11-05-2005, 04:11 AM
நன்றி அறிஞரே

கவிதை பக்கத்தின் மிக முக்கிய அங்கத்தினர்கள் நிறைய பேரைக் காணவில்லையே இன்னமும்....

வருவார்கள்.. இல்லை வர மாட்டார்கள்.. உங்கள் கவிதை யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து..

அன்புடன்
மன்மதன்

kavitha
11-05-2005, 11:05 AM
வருவார்கள்.. இல்லை வர மாட்டார்கள்.. உங்கள் கவிதை யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து..

அன்புடன்
மன்மதன்

சரியாகச் சொன்னாய் மதன்!

இளசு அண்ணா, ராம்பால், பூ - இவர்கள் எல்லாம் எங்கே?

முத்து அண்ணாவின் கவிதைகள் மீண்டும் காண மகிழ்ச்சியாய் உள்ளது.

Nanban
11-05-2005, 06:22 PM
நன்றி மன்மதன், கவிதா.....

முத்து
12-05-2005, 12:12 AM
திஸ்கியைப் பிடித்து வைத்துக் கொள்ளும் எண்ணமெல்லாம் இல்லை. யுனிகோட் விசைப் பலகையை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. யாராவது அனுப்பித் தந்தால் நன்றாக இருக்கும்.
மேலும் திஸ்கியில் வரும் வேகம் வேறு எதிலும் வருவதில்லை.
என்றாலும், மொழி பெயர்ப்பாளாராக பணியாற்றும் நண்பர் இனியன் அவர்களுக்கு மிக்க நன்றி....

நண்பன்,
திஸ்கிக்கும், யுனிக்கோடுக்கும் விசைப்பலகையில் எந்த வித்தியாசமும் இல்லை, இரண்டும் ஒன்றேதான். நாம் அடித்தபின் கணினி எடுத்துக்கொள்ளும் விதம் மட்டுமே வேறு. நீங்கள் இங்கிருந்து எ-கலப்பையின் மேம்பட்ட பதிப்பை (http://ezilnila.com/software.htm) இறக்கிக்கொள்ளலாம்.
திஸ்கியில் எழுதியதை இப்பக்கத்தில் கீழேயிருக்கும் "யுனிகோடு கன்வர்டர்" ஒட்டியெடுத்தால் யுனிகோடுக்கு மாற்றிக்கொள்ளவும் செய்யலாம்.

முத்து
12-05-2005, 12:23 AM
நண்பன்,
கவிதை அருமை. கீறல்கள் ஒப்பனைப் பூச்சுக்களுக்களுக் கட்டுப்படுவது கடினம்தான்.

Nanban
13-05-2005, 05:43 PM
இ-கலப்பையின் மேம்பட்ட பதிப்பு என்னிடத்திலும் இருக்கின்றது. அதைக் கொண்டு தான் எழுதுகிறேன். இப்பொழுது எல்லாம் சரியாகி விட்டது என எண்ணுகிறேன்....

கவிதை, தமிழ் மன்றக் கவிதை தளத்தைப் பற்றியது...

rambal
28-05-2005, 02:35 PM
ஆணிவேர்கள் இங்கு நீண்டிருக்க கிளைகளை எங்கு பரப்பினாலும் வேரின் தீண்டுதலும் தேடுதலும் நீர் மட்டுமே...

எழுத வாருங்கள்... பழைய கணக்குகளில் நிறைய இருக்கிறது படித்துப் பார்க்க...

இருந்தாலும் அவைகளோடு அல்லாடாமல் புதியதை தொடங்கலாம்..

Nanban
02-06-2005, 02:30 PM
புதியதைத் தொடங்கி விட்டேன்..... ஒரே தலைப்பில் மட்டுமே எழுதலாம் என்றிருக்கிறேன்.......

அன்புடன்
நண்பன்,,,,,,,,,,,,,,,,,

அறிஞர்
02-06-2005, 03:05 PM
நல்லது நண்பன்..... ஆவலுடன்.. எதிர்பார்க்கிறோம்......

Nanban
02-06-2005, 03:39 PM
நல்லது நண்பன்..... ஆவலுடன்.. எதிர்பார்க்கிறோம்......


ஐய்யோ... அறிஞரே....

இப்படியெல்லாம் கடுப்பேத்தக் கூடாது.....

நேற்றே ஆரம்பித்து எட்டு பதிவும் வந்தாகிவிட்டது. அதைத்தான் இங்கே குறிப்பிட்டிருந்தேன்....

படியுங்கள்.... கருத்து சொல்லுங்கள்....

அன்புடன்....

பிரசன்னா
10-09-2005, 05:56 PM
நண்பன் அவர்களே மீண்டும் மன்றக்கவிதைகள் பக்கம் பொலிவுற முன்போல சிறப்பாக செயல்பட வேண்டி பாராட்டுகிறேன்.. எழுதிக்கொண்டேயிருங்கள்...

Nanban
12-09-2005, 07:00 PM
பிரசன்னா.....


உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள்.

உங்களுடைய வருகை மன்றத்தின் படைப்புகளுக்கு வலு சேர்க்கட்டும்.

நன்றி.