PDA

View Full Version : ஆங்கிலத்தில் எழுதும் இந்தியக் கவிஞர்கள&a



Nanban
18-10-2003, 02:45 PM
இந்தியாவில் பிறந்து, ஆங்கில மொழியைக் கற்று அதில் புலமை பெற்று, கவிதை எழுதும் பல கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கவிதைகளில் சிலவற்றை இங்கு மொழி பெயர்த்துத் தருகிறேன். தமிழ் மொழியின் பெருமை கூறும் அதே நேரத்து, பிற மொழி இலக்கியங்கள் எங்கு செல்கின்றன, வளமை பெற்றனவா என்றெல்லாம், நாம் ஒரு கண் வைத்திருப்பது நல்லது. நம் மொழி இலக்கியங்களுக்கு ஒரு உரை கல்லாகவும், புதிய சிந்தனைகளின் வரவாகவும் அது இருக்கக் கூடும்...........

முதலில், அருண் கோலாட்கர் என்ற கவிஞர்.............

1932ஆம் ஆண்டு, மராட்டிய தேசத்தில், கோலாப்பூர் என்ற இடத்தில் பிறந்தவர்...
பிறந்த ஊரிலும், பின்னர் புனே, மும்பை நகரங்களிலும் கல்வி கற்றவர்.......

இதோ அவருடைய கவிதைகளில் ஒன்று........

Nanban
18-10-2003, 02:48 PM
[fade:330d2903f6][u][i]நண்டுகள்............





பாருங்கள்,

நன்றாகப் பாருங்கள் -

நண்டுகள்,

இரண்டு நிற்கின்றன.



அவைகள் காத்து நிற்கின்றன.

யாருக்காக ?

எல்லாம் உங்களுக்காகத் தான்,

அல்லாமல், வேறு யாருக்கு?



பாருங்கள்,

அவை எப்படிப் பார்க்கின்றன?

உங்களைத் தான்

பார்க்கின்றன,

இயற்கையாக.

அவைகள் கண்

இமைத்துப் பார்க்க

முடியாது - உங்களால்.



இந்தப் பக்கம் ஒன்று,

அந்தப் பக்கம் ஒன்று

என்று இரண்டு பக்கமும்

நூற்று அறுபது கோணத்தில்

உங்களுக்கு இடமும், வலமுமாக

நிற்கின்றன.



அவைகள்

உங்கள் கண்களைச்

சாப்பிடப் போகின்றன.

பயம்மாக இருக்கிறதா?

தேவையில்லை -

உங்களுக்குத் தெரியும்.

உடனே சாப்பிடாது என்று

உங்களுக்குத் தெரியும்.



ஆனால், ஒருநாள் சாப்பிடும் -

நாளைக்கு? யாருக்குத் தெரியும்?

நாளை இல்லையென்றால்,

நாளை மறுநாள்.

இல்லையென்றால்

ஒரு பத்து வருடங்கள் கழித்து!

யாரால் சொல்ல முடியும்?



அவைகள் அவசரப்படாது.

நிறைய அவகாசமிருக்கிறது.

அவைகளால் உணவில்லாமல்

நீண்ட நாட்கள் வாழ முடியும் என்று

நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.



இந்தப் பக்கம் பாருங்கள் -

சீக்கிரம்,

தலையைத் திருப்பாதீர்கள்!

கண்களை மட்டும்

உருட்டிப் பாருங்கள்.



அங்கே ஒரு நண்டு தெரிகிறதா?

புதிதான நண்டு ஒன்று -

இன்னும் முழுமையடையாமல்,

தெரிகிறதா?

அசைவது தெரிகிறதா?



மீண்டும் பாருங்கள் -

இல்லை, இல்லை,

தலையைத் திருப்ப வேண்டாம்.

கண்களை மட்டும்

உருட்டிப் பாருங்கள்,

நான் சொன்னவாறு.



உங்களுக்குத் தெரிவதெல்லாம்,

அதன் கொடுக்கு மட்டும் தான்.

ஆனால், நீங்கள் பார்ப்பீர்கள்,

முழு நண்டையும்,

சற்று நேரம் பொறுத்து -

தெளிவாகப் பார்ப்பீர்கள்.

அவைகள்

தங்கள் கடமையைத் தான் செய்கின்றன.

பொறுமையை

அவைகளிடமிருந்து தான்

நீங்கள் கற்று கொள்ள வேண்டும்.



அந்த நண்டுகள்

உங்களுக்குச் சொந்தமானவை -

உங்களுக்கு மட்டுமே!

வேறு யாரோ ஒருவரின்

கண்களைச் சாப்பிடாது அவை.



எங்கிருந்து வந்தன அவை?

ஆச்சரியமாக இருக்கிறதா -

உங்கள் தலையிலிருந்து தான்,

பின் வேறு எங்கிருந்து வரும் -

உங்கள் பிரத்யேகமான நண்டுகள்?



எத்தனை அழகாகக் வளர்ந்திருக்கின்றன

பாருங்கள் அவைகளை -

பருத்த, பெரிய கொழுத்த நண்டுகள்!

அவைகள் உங்களுடைய

பொறுமையுடன்

விளையாடிக் கொண்டிருக்கின்றன!

உங்கள் தலையிலிருந்து

வந்த காலத்திலிருந்தே!



அவைகள் உங்கள்

கண்களைப் பார்த்து வரும் -

எந்த நேரத்திலும்.

சில சமயங்களில்

எனக்குத் தோன்றுகிறது -

உங்களின் அனுமதிக்காக

அவைகள் காத்திருக்கின்றனவோ என்று!



உங்களால் செய்வதற்கு ஒன்றுமில்லை -

வார்த்தை கொடுப்பதைத் தவிர.

அனுமதி கிடைத்ததும்

உங்கள் கண்களைச் சாப்பிட்டு

அவை தம் பணி நிறைவேற்றிப்

போய்விடும்.



அந்த நண்டுகளை

அப்புறம்

எந்தக் காலத்திலும்

உங்களால்

பார்க்கவே முடியாது..........!







(புரிகிறதா, கவிதை.........?



மீண்டும், மீண்டும் படித்துப் பாருங்கள்.......



எழுதுவதற்கு மட்டுமல்ல, வாசிப்பதற்கும் அசாத்தியமான கற்பனைத் திறன் தேவைப்படும். ஆனால், புரிந்ததும் எழும் இன்பம் இருக்கிறதே - விவரிக்க இயலாத, இலக்கிய இன்பத்தையும், கவிதை நயத்தையும் தரக் கூடியது.........)

இளசு
18-10-2003, 08:54 PM
நண்பன்

உங்கள் பங்களிப்பு மன்றத்தின் பெரும் சக்தியாக

பெருகிவருவது கண்டு ரொம்ப மகிழ்கிறேன்.

இந்த முயற்சியை வரவேற்று பாராட்டுகிறேன்.





(கவிதை அர்த்தம்..._ இருண்மைக் கவிதைகள் என்னைக்கு எனக்கு புரிஞ்சிருக்கு சொல்லுங்க...? நீங்க பொழிப்புரை சொன்னபின்தானே

குறியீடு விளையாடும் படைப்புகளுக்கு "கருத்து" சொல்ல வருவேன்..



இங்கே நீண்ட நேரம் யோசித்ததில் ஈகோ, மரணம் என்னென்னவோ

நண்டாய் தோன்றி மண்டை (மூளை அல்ல :lol: ) குழம்பிவிட்டது நண்பனே!)

முத்து
19-10-2003, 12:09 AM
அருமையான கவிதை ..

புலனும் , வாக்கும் தவறானால் ..

யாரையும் அழிக்கும்தானே ...



தன் வாயால் கெடுவது நுணல் மட்டுமா .. ?

மனிதனும்தானே ...

அற்புதம்.. நன்றி...

நண்பன் அவர்களே ....

அறிமுகப்படுத்தியமைக்கு ...





-------------------------



வலையில் சிக்கிய கோலேட்கரின் இன்னொரு கவிதை .....







வண்ணத்துப்பூச்சி !!


பின்னால் எந்த வரலாறும் இதற்கு இல்லை ....

இது நொடிபோல் பிரிந்திருக்கிறது

தன்னைச் சுற்றியே சிறகடிக்கிறது ..


இதற்கு நாளை என்பது இல்லை ..

தொடர்பில்லை நேற்றுடனும் ..

இது இன்றுகூட பலபொருள் காட்டி மயக்கும் சிலேடையாய் ...


சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சி இது ..!

இந்த சோகமான மலைகளை வைத்திருக்கிறது ..

தன் இறகுக்குக் கீழேயே ..


சின்னஞ் சிறு மஞ்சள் நிறமாய் ..

திறக்கிறது மூடும்முன்.. திறக்குமுன் மூடுகிறது ..

அட ..!!

எங்கே அது ..??

பாரதி
19-10-2003, 01:28 AM
மிகவும் சிறப்பு நண்பா...முத்துவுக்கும் பாராட்டுக்கள்.

இளசு
19-10-2003, 06:10 AM
முத்து அருமை அருமை

(இருந்தாலும் இந்த அண்ணனுக்கு தனிமடலில் க்ளூ கொடுத்திருக்கலாம்.)

Nanban
19-10-2003, 06:36 AM
அற்புதம், முத்து. என்னுடைய புத்தகத்திலும் அந்த கவிதை இருந்தது. என்றாலும் நண்டு கவிதைகள் தான் என்னை மிகவும் கவர்ந்தது - ஒரு கவிதையைப் படித்ததுமஎ, உடனே அந்த கவிஞரின் மற்ற கவிதைகளையும் தேடி நெட்டில் இறங்கி விட்ட ஆர்வம், சிறப்பானது......



பட்டாம் பூச்சி கவிதையின் மொழி பெயர்ப்பும் கூட நன்றாக இருக்கிறது - ஆங்கிலத்தில் அந்தக் கவிதையை வாசித்ததினால் தான் சொல்கிறேன்.



நண்டுகள் என்ற அந்தக் கவிதைக்கு கவிஞர் எந்தக் குறிப்புகளும் கொடுக்கவில்லை. படித்து நாமே விளங்கிக் கொள்ள வேண்டியது தான். இளசு குறிப்பிட்டது போல இது மரணத்தைப் பற்றியது.



பூச்சாண்டி பயம் காட்டி நல்வழிப்படுத்த வேண்டிய சிறு குழந்தையைப் போன்று அறியாமையில் முங்கியிருக்கிறோம். அந்த மாதிரி குழந்தைகள் பயப்படும் பொருளைக் கொண்டு, நம்மைப் பயமுறுத்துகிறார்.



ஒரே ஒரு நண்டு அல்ல, நமக்கு வயதாக, வயதாக, புதிது புதிதாக நண்டுகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. அது, ஈகோ, பொறாமை, கோபம், என்று பல வகையான குணங்களும், அந்தக் குணங்க்களால் விளைந்த விளைவுகளையும் குறிக்கிறது. இந்த நண்டுகள் பிறக்கும் பொழுதே நம்முடன் பிறக்க வில்லை. நம் தலையில் இருந்து - அது தானே தலைமைச் செயலகம் - அங்கிருந்து தான் தோன்றுகிறது. கொழுக்கிறது - ஒரு நாள் அது நம்மையே அழித்து ஒழித்து விட்டு அழிந்து விடும் - ஏனென்றால், நம் செயல்களின் விளைவுகள் நம்மைத் தான் அழிக்கும்.



இந்தக் கவிதையின் சிறப்பு - அதன் எளிமை. நண்டு (நண்டு என்பது symbol of Cancer - புற்று நோயைக் குறிக்கும். உள்ளிருந்து அரித்து, மரணம் விளைவிக்கும்) என்ற ஒரு சிறு குறியீடைத் தவிர, வேறு பிரதானமான குறியீடுகள் எதையும் உபயோகிக்க வில்லை. வார்த்தைகளும் அத்தனை எளிமையானவை - ஆங்கிலத்தில் கூட. கூடிய வரையிலும் அதே எளிமையை அப்படியே மொழிபெயர்ப்பிலும் கூட வைத்திருக்கிறேன்.



இதில் எல்லோரும், த்ங்களுக்குத் தெரிந்த பிற மொழி கவிதைகளை மொழி பெயர்ப்பின் மூலம், நம்முடைய சிந்தனைகள் - கவிதையின் கருப் பொருள் தேர்ந்தெடுத்தல், கவிதையின் வடிவம், வெளியீட்டு முறைகள், என்று பலவற்றையும் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்..............

முத்து
19-10-2003, 09:53 AM
நன்றி நண்பன் அவர்களுக்கு... நண்பன் கொடுத்த கொலாட்கரின் நண்டுகள் கவிதை நன்றாக இருக்கிறது .. சட்டெனெ அனைவரும் எளிதில் பொருள் விளங்க முடியாதபடி இருப்பதுதான் இதன் பலமும் , பலவீனமும் ..



அண்ணன் இளசுவின் பதில் சரியாகவே இருக்கிறது . நண்பனின் பதிலும் அருமையாக இருக்கிறது.. மேலும் நண்பன் சொன்னது போல ஆசிரியர் எந்தக் "குளூ"-வும் தரவில்லை.. எனவே யோசித்துப் பார்த்து அவரவர் பொருத்தமாய் விளக்கிக்கொள்ளவேண்டியதுதான் ... மேலும் இதே கவிதைக்கு பல பொருள்கள் இருக்கவும் வாய்ப்புண்டு ... கவிதையைப் படித்தவுடன் எனக்கு என்ன தோன்றியது என்றால் ..



நன்பன் சொன்னது போலவே நண்டுகள் பல்வென்றும் , அது நம் புலன்கள் குறிப்பாய் , காதுகள் , வாய் , நாக்கு மற்றும் சொற்கள் என்று எண்ணத்தோன்றியது ...





(............ பார்க்க

முடியாது - உங்களால்.



இந்தப் பக்கம் ஒன்று,

அந்தப் பக்கம் ஒன்று

என்று இரண்டு பக்கமும்

நூற்று அறுபது கோணத்தில்

உங்களுக்கு இடமும், வலமுமாக

நிற்கின்றன..... )



இதைப் படித்தவுடன் காதுகள் மிகப்பொருத்தமாய் தோன்றியது ... காதால் பிறரின் சொற்களை , பிறரின் சிறப்பைக் கேட்டுப் பொறாமை கொள்வது , சினம் கொள்வது அல்லது ஏதாவது அரைகுறையாய்க்கேட்டு தவறாய்ப் புரிந்து மதி மயங்கிச் செயல்படுவது .......





(அங்கே ஒரு நண்டு தெரிகிறதா?

புதிதான நண்டு ஒன்று -

இன்னும் முழுமையடையாமல்,

தெரிகிறதா?

அசைவது தெரிகிறதா?



மீண்டும் பாருங்கள் -

இல்லை, இல்லை,

தலையைத் திருப்ப வேண்டாம்.

கண்களை மட்டும்

உருட்டிப் பாருங்கள்,

நான் சொன்னவாறு.



உங்களுக்குத் தெரிவதெல்லாம்,

அதன் கொடுக்கு மட்டும் தான்.

ஆனால், நீங்கள் பார்ப்பீர்கள்,

முழு நண்டையும்,

சற்று நேரம் பொறுத்து -

தெளிவாகப் பார்ப்பீர்கள்.



( இது படித்தவுடன் நமது வாயைக் குறிப்பதாய் எனக்குத் தோன்றியது ... கொடுக்கு என்று குறிப்பிட்டிருப்பது நமது நாக்கு என்றும் , ஆனால் முழுமையான நண்டு என்பது நமது வாய் , நாக்கு மற்றும் சொல் ஆகியவை சேர்ந்தது .. )



நாவடக்கம் என்று வள்ளுவர் குறிப்பிட்டது போல ஒருவன் என்னதான் பொறுமையாய் இருந்தாலும் , நாமே தவறியோ அல்லது பிறரில் தவறான சொல்கண்டு, அல்லது அவரின் பெருமை , பணம் , புகழ் போன்ற அறிவை , கண்ணை மறைத்து மனிதன் உதிர்க்கும் தவறான சொற்கள் அழிவுக்குக் காரணமாவதைக் குறிப்பிட்டிருக்கலாம் ...



ஒரு தடவை வெளிப்பட்ட தவறான சொல்லைத் திரும்பவும் அழைக்கமுடியாது என்பதால் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டும் என்பதையே பாடலின் கடைசிப் பகுதில் வலியுறுத்தி இருப்பதாய்த் தோன்றியது ....



இப்போது திரும்பவும் அதே கவிதையை ஒரு தடவை படிக்க அருமையாக இருக்கும் ....

இளசு
19-10-2003, 09:57 AM
உண்மைதான் முத்து

படிக்க, படிக்க

புதுப்புது அர்த்தங்கள்

பூத்துக்கொண்டே இருந்தால்

கவிஞன் சுவைஞனை வென்றுவிட்டான்!



அவர் நல்ல கவிஞர்!

நண்பனும் நீயும் நல்ல சுவைஞர்!!

நான் உங்கள் அனைவருக்கும் நல்ல ரசிகன்!!!

Nanban
19-10-2003, 04:09 PM
அருமை, முத்து அவர்களே. ஆம், நம் காதுகள் நம் முகத்தில் 160 கோணத்தில் தான் இருக்கின்றன. அதே போல நாவும், நம் கண்களால் கண்டும், காணாதும் போலத் தான் இருக்கிறது.



இன்னும் பிறருக்கு, பிறிதொரு கோணத்தில் தோன்றி, வேறு எண்ணங்களும் எழலாம்....



கவிதையின் இன்பம் இது தான்..............



மீண்டும், மீண்டும் வாசிக்க, வாசிக்க வேறுபட்ட சுவைகளையும், அனுபவத்தையும் கொடுக்க வேண்டும்......

Nanban
19-10-2003, 05:57 PM
அடுத்த கவிஞர் - அத்திப்பட்டு கிருஷ்ணசுவாமி ராமானுஜன் - A.K. ராமானுஜம். 1929ல், மைசூரில் பிறந்தவர். தமிழும், கன்னடமும் நன்கு அறிந்தவர். இவரின் கூற்றுப் படி, மனிதர்களுக்கு முகமூடி அவசியம் என்றும், அந்த முகமூடிகள் போதுமான அளவிற்கு மனிதர்களிடத்தில் இல்லையென்றும், புதிதாக முமூடி செய்ய வேண்டும் - அது, இயற்கையான முகத்திற்கு எத்தனை பொருந்துமோ, அத்தனை இயல்பானதாக இருக்க வேண்டுமாம். இனி கவிதை...........

Nanban
19-10-2003, 05:57 PM
நெடுஞ்சாலையில் ஒரு துகிலுரிப்பு...........

காற்று எனக்காகப் பாடிக்கொண்டிருந்த
ஒருநாள் நான் பயணம் போய்க் கொண்டிருந்தேன்
மெக்ஸிகோவிற்குப் போகும் நெடுஞ்சாலை ஒன்றில்.

அடிபட்டு, நெளிந்து, நைந்து போன
நீல மஸ்டாங்க் வண்டியொன்று எனக்கு முன்னே,
அழுக்குப் படிந்த பின் கண்ணாடியுடன்
விரைந்து கொண்டிருந்தது.

விரைந்து செல்லும் காரிலிருந்து திடீரென
அழகிய பெண்ணின் கரம் ஒன்று -
கடிகாரம் கட்டிய கரம் ஒன்று,
பலப்பல பொருட்களை
தூக்கி எறிய ஆரம்பித்தது -
பின்னோக்கி விரைந்திடும் சாலையின் மீது......

ஒரு தொப்பி,
ஒரு அழகிய வெள்ளை காலணி,
பின்னர் அதன் ஜோடி,
மடிப்புகள் நிறைந்த பாவாடை,
எல்லாம் ஒழுங்கற்ற இயக்கத்துடன்
காற்றில் ஒலியெழுப்பி
கண்முன்னே பறந்து செல்கிறது -
மார்புச் சட்டையும் கூட.

எரிசக்தியை அழுத்தி,
வண்டியின் வேகம் கூட்டி,
முந்தைய காரின் பின்னே
ஐம்பதடி தூரத்தில்
ஆவலுடன் உற்றுப் பார்க்கிறேன் -
உபயோகத்தில் பழமையான
தேய்ந்து போன மார்புக் கச்சை ஒன்று -
சிறிய மார்புகளுக்கானது,
விரைந்து போய்
சாலையோர வேலியில்
சிக்கிக் கொள்கிறது -
வேலிக்கு அப்பால்,
மஞ்சளும், பச்சையுமான
கோதுமை வயல்கள்.
வெளிர் மஞ்சள் மார்புக் கச்சையை,
வேலியில் ஆணியடித்தாற் போன்று
நிறுத்தி வைக்கிறது,
வீசியடிக்கும் காற்று....

வியர்த்துக் கொட்டி,
இன்னும் வேகமெடுத்து விரட்ட
உத்தேசத்திருக்கும் வேளையில்,
அட்டகாசமான சிவப்பில்,
வெள்ளை நூல் எம்பிராய்டரி கொண்ட
கீழ் உள்ளாடை,
நான் அறியுமுன்னே
விரைந்து வந்து என் பார்வையைத் தாக்க
நிலைகுலைந்தும், இடம், வலம் தடுமாறியும்,
அநாதையான அந்தச் சாலையில் விபத்தில்லாமல்
நிலைக்கு வந்து சேர்ந்த பொழுது,
காணவில்லை, அந்த உள்ளாடையை.
காற்றின் வலிய கரங்கள்
கீழ் உள்ளாடையை மட்டும் நகர்த்தவில்லை -
என் நாவையும் வரளத்தான் செய்து விட்டது.


அந்த துகிலுரியும் நங்கையை
நன்றாகப் பார்த்து விட
ஆவலும், பரபரப்பும், அதிகரித்தது -
ஒரு பெண் மட்டும் தானா?
இல்லை ஆணும் இருக்கிறானா?
அல்லது பல ஆண்களா?
அவள் மார்பின் மீது
அல்லது அவள் தொடையின் மீது
அவன் கைகள் இருக்குமோ?
நிச்சயமாக இந்தக் காட்சியைக்
கண்டே விட வேண்டும் -
அந்த அழுக்கடைந்த பின்கண்ணாடி உதவாது.

எரிசக்தி பெடலில் ஏறினின்று மிதிக்க
விரைந்து சென்று
அந்தக் காரின் பக்கவாட்டுக் கண்ணாடி வழியே
பார்த்த அந்த முழுமையான விநாடியில்,
அடுத்தவர் அந்தரங்கத்தை நோட்டம் விடும்
அநாகரீக நரகவாசிகள் மிகுந்த உலகில்
நானும் ஒருவனாக
அந்த காரின் பக்கவாட்டு கண்ணாடி வழியே
கிடைத்த தரிசனத்தில்
நான் பார்த்தது ஒரே ஒரு மனிதனைத் தான் -
நாற்பது வயதிருக்கும் மனிதன்,
காரின் சக்கரத்தை இயக்கி கொண்டிருந்தான்.

மூக்குக் கண்ணாடி அணிந்து
சாலையை மட்டுமே பார்த்துக் கொண்டு,
வானொலியில் கால்பந்தைக் கேட்டுக் கொண்டு,
நிர்ச்சலனமாய்,
நிதானமாய் போய்க் கொண்டிருந்தான்.

முந்திச் சென்ற நான்
பின் வரும் பொருள் காட்டும்
கண்ணாடி வழியே
திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறேன் -
என் வண்டியை
நிதானத்துக்குக் கொண்டு வந்தவனாய்.
பின்னோக்கி செல்லும் மரங்களுக்கிடையில்
உறுதி செய்து விட்டேன் -
ஒரு ஆண் தான்.

ஏமாற்றமுற்ற எனக்குத் தெரியவில்லை -
என்ன தான் நடந்தது?
அவன் வீசியெறிந்தவை
தொப்பியும், காலணிகளும்,
மார்புக் கச்சையும்,
கீழாடையும் மட்டும் தானா?
அல்ல
அவன் தான் அணிந்திருந்த
(அணிவிக்கப்பட்ட)
பெண்ணை தான் தூக்கி எறிந்தானா?

அல்லது
நான் தான் தூக்கி எறிகிறேனா?
முன்னோர்களின் வழக்கத்தையும்
எனது பழைய முதலீடுகளையும்,
தூக்கி எறிந்து விட்டு -
இவ்வுலகின்
முகவரியற்ற இடங்களில்,
அம்மண வெறுமையை
துல்லியமாகப் புணர்ந்து ருசிக்க
வெறிகொண்டு பாய்ந்து செல்லும்
நான் தான் அந்த மனிதனா?

இளசு
19-10-2003, 08:21 PM
நண்பனைப் பாராட்டிய கையோடு
தம்பி முத்துவின் பதிவை எதிர்பார்க்கிறேன்..

முத்து
19-10-2003, 09:39 PM
நன்றி.. நண்பன் அவர்களே ... பள்ளியில் படித்தபோது ஏ.கே.ராமாநுஜன் அவரகளின் சில கவிதைகளைப் படித்ததாய் ஞாபகம்.. அதற்குப்பின் இப்போதுதான் படிக்கிறேன்.. உள்மன விகாரங்களை சுயவிமர்சனம் செய்யும் , பல காட்சிகளையும் , சிந்தனைகளையும் கொண்டுவரும் இக்கவிதை அருமை .. தொடருங்கள் உங்கள் அருமையான பணியை ...

Nanban
29-10-2003, 12:51 AM
அடுத்த இந்தியக் கவிஞர், யார் என்று நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்...... (கொஞ்சம் விடுகதைப்பக்கத்தில் இருந்து ஆட்களைத் த்ரட்டிட்டு வாங்க.... எல்லோரும் ஒரேடியா அங்கே போய்க் குவிஞ்சிட்டாங்க.....)

இந்தக் கவிஞர் - இந்தியாவின் பிரபல அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர். இதுதான் இவரது கவிதகளின் முதல் தொகுப்பு. வாழ்க்கை முழுக்க துயரங்களையே சந்தித்தவர்... அதன் விளைவாகவே அவர் கவிதைகள் முழுக்க, மெளனங்கள், மரணங்கள், வளி, வேதனைகள் இவைகளே வியாபித்திருக்கின்றன.

இதற்கு மேல் clue கொடுத்தால், அப்புறம் அது சஸ்பென்ஸாக இருக்காது.........



உயிர்த்தெழுந்த கவிஞனின் குரல்.....................


மனநல காப்பகங்களும்
மருத்துவ மனைகளும்
இன்று சற்றேனும் மதிக்கப்பட்டன.

எனக்கு,
அவைகள் தாம் யதார்த்தங்கள்.

இசையின் அடிநாதமாய் ஒலிக்கும்
யதார்த்தங்கள்......
வலுவில் அமரச் செய்து
அருந்திச் சுவைக்கச் செய்யும்
யதார்த்தங்கள்......

நாளை
எனக்கு நினைவூட்டுகிறது -
இன்று எத்தனை இனிய நாள் என்று.

இப்பொழுது,
சிறிதாக தூரவிலகி ஓடும்
அல்லது வலிதாக விரைந்தருகே வரும்
பொருட்களைக் காட்டும் எனது கண்கள்,
என்மீது காட்சிகளை
அசுர வேகத்தில் மோத விடுகின்றன.

தாமரை இலை நீராக
தத்தளிக்கும் காட்சிகள்
என்னைத் தாமதப்படுத்துகிறது -
என் கவிதைக்கு கரு
என்ணுள்ளில் கலந்து போவதை.

எனக்குத் தான் தெரியவில்லை -
என்னைக் கவிஞனாக்கியது,
அமர்ந்து சிந்திக்க வைத்த
அந்தத் தருணங்கள் தானே தவிர
சிந்தனையில் தோன்றிய எண்ணங்கள் அல்ல,

இளசு
29-10-2003, 06:31 AM
ஒரு ஆழ்ந்த, உணர்ந்த வலி..
நாளை நினைவூட்டுகிறதாம்
இன்று எத்தனை இனிய நாள் என்று...

கடும் சோதனைகள், வேதனைகளின் நடுவே
இன்பத் தருணங்களைப் பொறுக்கிச் சேகரிக்கும்
இந்த மனம்
என்னை ரொம்பவே பாதிக்கிறது - பாஸீட்டீவ்வாக..

கவிஞர் யார்? கண்டுபிடிக்க முடியவில்லை.
(மருத்துவமனைகள் என்றதும் வி.பி.சிங் நினவுதான் முதலில்..)
காத்திருக்கிறேன் - கண்டிப்பாய் நண்பனுக்கு முன்
முத்து சொல்லிவிடுவார்தானே..

Nanban
29-10-2003, 10:49 AM
VP சிங் அல்ல. அவர் வய்து முதிர்ந்தவர். இந்தக் கவிஞர் வயதில் இளையவர். இன்னும் திருமணமாகதவர்.

வி.பி.சிங் ஓவியங்கள் வரைவதாகத் தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.....

கவிதைகளும் எழுதுவாரா?

முத்து
29-10-2003, 12:38 PM
நண்பன் அவர்களே... அருமையான கவிதை .... உங்களின் தமிழாக்கம் அற்புதம் ... இதை எழுதியவர் யாரென்று தெரியவில்லையே .. ஒரு வேளை ராகுல் காந்தியா ... ?

Nanban
29-10-2003, 12:56 PM
நண்பன் அவர்களே... அருமையான கவிதை .... உங்களின் தமிழாக்கம் அற்புதம் ... இதை எழுதியவர் யாரென்று தெரியவில்லையே .. ஒரு வேளை ராகுல் காந்தியா ... ?

கொஞ்சம் தவறி விட்டது. ராகுல் காந்தி அல்ல, அவரது தம்பி - பெரொஸ் வருண் காந்தி........ மேனகா, சஞ்சய் தம்பதியினரின் மகன். தந்தையின் அகால மரணம், பாட்டி வீட்டிலிருந்து வெளியேற்றம், பின் பாட்டியின் அகால மரணம், பின் பெரியப்பாவின் அகால மரணம் என்று தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்ட்தினாலோ என்னவோ - அவரது முதல் கவிதைத் தொகுப்பு முழுவதும் தனிமை, மரணம், கோபம், வேதனை, மௌனங்கள் என்றே இருக்கின்றன......

நன்றாக வடிவமைக்கப்பட்ட புத்தகம்......

ஓவியங்கள் இந்தியாவின் பிரபலங்களால் வரையப்பட்டிருக்கின்றன....

அஞ்சோலி இலா மேனோன், மஞ்சிட் பாவா, மனு பிரகாஷ், இவர்களுடன் எம்.எப் ஹஸ்ஸைன் என்று.....

பிரபலமான குடும்பப் பிண்ணனி...............

இந்தியாவின் பிரபல புத்தக நிறுவனம் சர்வ சாதாரணமாக வெளியிட்டதைப் பார்த்தால், வருண் காந்தி born with a silver spoon தான்.

இதே நிறுவனம் தான், கள்ளிக் காட்டுக் கமப்னை இன்னும் இழுத்தடிக்கிறது - யாரோ வைரமுத்து புலிகளின் ஆதரவாளர் என்று எழுதி விட, அவருடைய கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பை அச்சிடாமல் கிடப்பில் போட்டு, பின்னர் வைரமுத்து விளக்கி, இப்பொழுது தான் அச்சாகியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

வருண் காந்தி எழுதிய புத்தகத்தின் பெயர் - The otherness of Self - Printers - Rupa&Co. விலை - ரூ.295/- (Pricing Strategy like Bata?)

Nanban
29-10-2003, 03:53 PM
அடுத்த கவிஞர் - Dom Moraes.


பம்பாயில் பிறந்தவர். (1938). முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட பொழுது வயது - 19. (1957). முதல் புத்தகத்தின் பெயர் - A Beginning. முதல் புத்தகமே விருது புத்தகமாக அமைந்து விட்டது. கிடைத்த விருது - Hawthornden Prize. அப்போதைய காலத்தில் மிகவும் பெருமை வாய்ந்த விருது. கல்லூரி முடித்து சிறிது நாட்கள் நிருபராக இருந்தார். போர்முனைச் செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பும் நிருபராக. அந்தக் கோர அவலங்களைக் கண்ணால் கண்டு, செய்தி செய்து, கடைசியில் அதையே கவிதையாக எழுதி விட்டார் போலும்.

'நல்ல நாள் போய்க் கொண்டிருக்கிறது' என்ற கடைசி வரியில், மீடியாக்களின் பேராசையை, மரணங்களைச் செய்தியாக்கி, பரபரப்பு உண்டாக்குவதும், அதற்காக தங்கள் நிருபர்களை விரட்டி முந்திச் செய்தி தரப் பணிப்பதும் புரிகிறது. இவர் நிருபராக இருந்த காலம் 1960 என்ற கால கட்டம். இன்று நாம் திருந்தி இருக்கிறோமா?



[flash][size=24]போர்முனை நிருபர்.....

இந்தச் செய்திகள்
கடல் கடந்து போய்விட்டது -
துர்நாற்ற மனிதர்களும்,
அவர்களின்
மலேரியக் காய்ச்சலும்
செய்திகளாகப் போய்விட்டன.

திரும்பி வா -
செய்தி வருகிறது.
புதிய யுத்தம் ஆரம்பித்து விட்டது,
நான்கு ஆறுகள்
கூடிக் கலக்குமிடத்தில்.....

உருக்குலைந்த தொப்பி,
எங்கே போனதென்று தெரியாத
சிகரெட் பாக்கெட்,
பணம் வைத்த பர்ஸ்
மனதில் கவலையாய்,
நடுங்கும் கைகள்.
எதுவுமே தடுக்க்வில்லை -
மலைச்சரிவில்
வீழ்ந்து கிடக்கும் பிணங்களை
எண்ணுவதை.
நம் நண்பர்கள் காத்திருக்கிறார்கள்,
ஒளிரும் திரைக்குப் பின்னால்
இந்தக் கோரங்களை ரசிக்க.


பதுங்கு குழிகளை ஒட்டி
கிடக்கின்றன -
நரம்பு முடிச்சுகளை
அவிழ்த்துவிடும் மரணங்கள்
வாழ்வை வாழச் சொல்லும்
பாடம் புகட்டும் மரணங்கள்.

சங்கேத மொழிகள்
நிர்வாணப்படுத்தப்படுகின்றன -
இருட்டு வழியில்
தடுத்து நிறுத்தப்பட்டு.
மேற்கே இம்மொழிகள்
சௌகரியப்படி
காலை உணவிற்குப் பரிமாறப்படும்

பார்த்து நிற்கும்
எங்கள் சொற்களைத் தான்
காணவில்லை.
காற்றுக் குழாய்கள் மட்டும்
விசிலடிப்பதை நிறுத்தவில்லை.

திரும்ப வா,
உன் வார்த்தைகள் இங்கிருக்கின்றன.
உன் வீட்டிலேயே
குத்துக்காலிட்டு
அமர்ந்து கொண்டால் எப்படி?
வந்து கசப்பான
நிகழ்காலத்தின் மலமாய்
கிடக்கும் சவங்களைக்
கணக்கெடு.

நல்ல நாள் போய்க் கொண்டிருக்கிறது....

பாரதி
29-10-2003, 07:02 PM
சிறப்பான கவிஞர்களின் கவிதைகளை வழங்கும் நண்பனுக்கு நன்றிகள் பல.

இளசு
30-10-2003, 04:23 AM
இன்வெஸ்டிகேட்டீவ் ஜர்னலிசம், பப்பராஸிகள், "புகைப்படச் செய்திகள்" உள்ளிட்ட நிருபர்களின் தொழில் தர்மம் Vs பரபரப்பு, வெற்றி, பணம் இதைப்பற்றி முடிவுறா தர்க்கங்கள் என் மனதில் உண்டு.
இந்தக்கவிதை அதை அதிகரித்துவிட்டது.

Nanban
30-10-2003, 04:46 PM
மரணமடைந்த பின்னும், டயானாவிற்கு தனிமையை கொடுக்க மறுக்கும் அந்த மக்கள் தான், தாங்கள் இந்த உலகிற்கு நாகரீகம் கற்பித்தோம் என்று கூறிக் கொள்ளும் மேலை நாட்டைச் சார்ந்தவர்கள்...............

ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க எந்தக் காரணமும் இல்லாத பொழுது, ஒரு செய்தி நிறுவனத்தை மிரட்டி தப்புச் செய்திகளைத் தந்தவர்கள் தான் உலக அமைதியையும், சுதந்திரத்தையும் பற்றிப் பேசுகின்றனர்........

இன்று ஒருசில ஆதாயங்களுக்காக, நம் தலைவர்களும் இந்த நாடுகளிடம் நல்ல பெயர் வாங்கத் துடிக்கின்றனர். ஆனால், அப்படிச் செய்ய முனைந்தால், அதற்காகக் கொடுக்கும் விலை, நம்மால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கும்........

madhuraikumaran
30-10-2003, 06:50 PM
நண்பரின் படித்ததைப் பகிரும் உன்னதப் பணி போற்றத்தக்கது. எளிதாய்க் கிடைக்காத பலவற்றைத் தொகுத்துத் தருவதற்கு நன்றிகள்... பாராட்டுகள். வாழ்க நின் தமிழ்ப்பணி !

Nanban
01-11-2003, 05:03 PM
அடுத்த இந்தியக் கவிஞரைப் பார்ப்போம் - கேகி.என். தாருவாலா........

லாகூரில் பிறந்தவர் 1937 - லூதியானாவில் படித்தவர் - டெல்லியில் வாழ்ந்தவர்....

ஓநாய்கள்...........
பாதி கற்பனையாக
பாதி நிழலின் வரி வடிவாக
நெருப்புத் துண்டு விழிகளுடன்
என் கடந்த காலத்தை வட்டமிடுகின்றன
இந்த ஓநாய்கள்.......

இலைகளைக் குவித்து
படுக்கையாக மாற்றி
கால்களை நீட்டி
பாதங்களுக்கிடையில்
கருத்த முகவாயை இட்டுத்
தூங்கும் வரை
என் கடந்த காலத்தை வட்ட்மிடுகின்றன
இந்த ஓநாய்கள்..........

கந்தக உடம்பின்
கருத்த முகவாயைக் கொண்டு
என் சுயத்தைப் பிளந்து
உள்ளே புகுந்து
ஆசனமிட்டு உட்கார்ந்து கொண்டன
இந்த ஓநாய்கள்....

காற்றை முகர்ந்து
இரையைத் தேடும்,
குரல்வளையைக் கவ்வி
உயிர் குடிக்கும்
இவற்றின் ஓலங்கள்
என் இரவின் தனிமையைச் சுற்றி
கருத்த வளையங்களை
வரைந்து வைத்திருந்தன.........

காட்டோர கிராமத்துக்
குழந்தையின்
இரவுகள் என்னுடையவை.........

'காதுகள் வானுச்சியை நோக்கி
விடைத்து நிற்கும் -
பனி விழும் நேரத்தில்........'
அம்மா சொன்னாள்.
'வேலியின் அந்தப்புரத்தில்
நகரும் நிழலைக் கூட அறியும்
அமாவசை இரவின் இருட்டில் கூட;
உன்னை நோக்கி வரும்
கனவுகளையும்
முகர்ந்து விடும்;
இருளை வீசும் அந்த கணகளின்
பார்வையில்
ஒளிராத பொருள் ஏதுமில்லை'

இன்று அந்த ஒநாய்கள்
எல்லாம் படுகொலை செய்யப்பட்டுவிட்டன.
கரும்புகை உமிழும்
இரட்டைக் குழாய் துப்பாக்கிகளின்
உலோக ஓசைகள் தான்
என் பெண்ணின் கனவுகளை
வட்டமிடுகின்றன...........


தான் குழந்தையாக இருந்த பொழுது, இயற்கையோடு இயைந்த பயங்களால் தான் தன்னுடைய கனவுகள் நிறைந்திருந்தது. மனிதர்களைக் கொண்டு எந்தப் பயமும் இன்றி இருந்தது. அந்த பயங்களே ஒருவித சுகம்தான். இயற்கையைப் பயந்த குழந்தையாக தன் வாழ்வு கிராமத்தில் கழிந்தது. ஆனால், இன்று இயற்கையைப் பயந்த பயங்களை எல்லாம் நாம் கொன்று விட்டோம். அறிவால் அந்த பயங்களை வென்று விட்டோம், ஆனால் அதே அறிவு கொடுத்த வசதியால் துப்பாக்கி செய்து கொண்டோம். உணவுக்காக மட்டும் அலையும் ஓநாய்கள் அல்ல இந்த துப்பாக்கி ஏந்திய இந்த மனித ஓநாய்கள்.............

இந்த மனித ஓநாய்களை, அவை தரும் பயத்தை வெல்வது கடினம். இத்தகைய பயங்கள் தான் இன்று என் மகளின் கனவுகளைத் துரத்துகிறது.....

இதுதானே இன்றைய வாழ்வின் யதார்த்தம்...........

ஓநாய்கள் என்ற குறியீடுகள் எந்தக் காலத்தும் இருக்கும் ஏதாவது ஒரு பயம் தான்.... சில பயங்களை வெல்ல முடிந்தது, சிலவற்றை அத்தனை சுலபமாக வெல்ல முடியாது. துப்பாக்கி என்பது நிஜ துப்பாக்கி மட்டுமல்ல. மற்ற மனித மன வக்கிரங்களையும் சேர்த்து தான். இந்தத் தீவிரவாதிகள் எந்த ரூபத்திலும் இருக்கலாம். கல்வி கற்கச் செல்லும் பெண்ணை ஈவ் டீசீங் செய்யும் ஒநாய் முதல் சந்தர்ப்பம் செய்தால் பாலியியல் பலாத்காரம் செய்யும் மிருகம் வரை......

இளசு
01-11-2003, 05:30 PM
, Ǣš ,
,,
á ¢â -, ǡ ..
...??

¢ Ũ .
á Ȣ !

Nanban
01-11-2003, 05:38 PM
...........

ɡĢ Ȣ Ţ 츢. ..áۃ ؾ............

ɡĢ ¢ ը, ǡ Ţ............

Ţ ......

முத்து
01-11-2003, 06:42 PM
Ǣ ڦ ġ ...
ը¡ 츨 ȢӸ즸 Ȣ ....

Nanban
06-11-2003, 05:02 PM
" Ģ áĢ" ȡ Ţ. Чħ ŢǢ 鼡 ȡ. Ţ Ǣ . ɡ , ɢ áĢ .

(Ţ ؾġ -

áĢ
ġ Ǣ -
Ţ . )

ۨ Ţ Ȣ Ч ׸ 츢. ġ , . ( ؾ ¾. ɡ, â Ţ, ȡ ȡ, ġ, ھ ġ - .)

, Ţ ڸȡ - š򨾸, Ȣ . â¡ ¡, â¡ š â ȡ. Ţ¢ Ȣ, Ţۨ , š â. Ţ , š Ţ Ţ . Ţ š....

â - Ţ ¡?

- Ĩ .


[highlight=yellow:ac411f6897][scroll:ac411f6897][u][i][b][size=24]Ǣ..................

šɢ ,
Ȣ .

Ǣ θ
Ÿ
и.

Ө¡
Ǣ
츢.
и.



¡
Ǣ ¢
.
ը Ƣ
Ǣ Ţ.

ġš
â Ǣ
ռ̸.

( âǢ ........ Ţ էŨ á ġ .......)

இளசு
06-11-2003, 05:13 PM
என்னைக் கட்டிப்போடும் பதிவுகள் தரும் நண்பனே...

மௌனத்துக்கும் உமக்கும் உள்ள
நெருக்கமான உறவறிவோம் ஏற்கனவே....

இருண்மை உண்டு உம் படைப்புகளில்...
மோசம் என்று எதையும் கண்டதில்லை..
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை....


அதிகக் குளிரிலும் தேகம் வேகும்...தீக்காயம் போலவே
அதிக இன்பத்திலும் கண்கள் சொரியும்.... துன்பநிலை போலவே...
அதிக வெளிச்சம் கண்ணைக் குருடாக்கும்... அந்தகாரம் போலவே
அடர்ந்த மௌனம் பெரிய சத்தம் போடும்....ஊழிக்காற்றின் பேரலை போலவே

முரண்களின் தொகுப்பே வாழ்க்கை...

தொகுத்தவர் ஷபானாவாய் இருக்கலாம் என்பது கணிப்பு...

முத்து
06-11-2003, 05:13 PM
அருமை நன்பன் அவர்களே ...
நன்றிகள் பல ..
எழுதியவர் யார் ...
ஒருவேளை கமலஹாசனா .. ?

Nanban
06-11-2003, 05:26 PM
குல்ஸார்...............

பல ஹிந்தி திரைப்பாடல்களுக்கு பாட்டெழுதியுள்ளார்.......

பிரபலங்கள் தங்கள் தனிமையை இழந்து தவிப்பதைப் பற்றித் தான் இந்தப் பாடல். துரத்தி துரத்தி அடிக்கும் flash.... மக்களின் தொடர்ந்த கண்காணிப்பு என்ற வெளிச்ச வெள்ளத்தில், இந்த உலகில் எதையுமே அவர்கள் கண்டு களிக்க முடியாது. தனிமை என்பது அடர்ந்த இருளாக இருக்கலாம்.... ஆனால் அதுவே தனக்குப் பாதுகாப்பு என்று நினைக்கும் பிரபலங்கள் எத்தனை எத்தனை பேர்..................

இளசு
06-11-2003, 05:30 PM
நன்றி நண்பனே,விளக்கத்துக்குப்பின் இன்னும் சுவை கூடுகிறது...
குல்ஸார் மேல் மரியாதை கூடுகிறது..

(இளசுவுக்கு நண்பர் என்றதும் ஷபானாவை நினைத்தேன் பாருங்கள்.. .)

Nanban
06-11-2003, 06:02 PM
நன்றி நண்பனே,விளக்கத்துக்குப்பின் இன்னும் சுவை கூடுகிறது...
குல்ஸார் மேல் மரியாதை கூடுகிறது..

(இளசுவுக்கு நண்பர் என்றதும் ஷபானாவை நினைத்தேன் பாருங்கள்.. .)

இந்த விளாக்கம் கவிதையை நான் எவ்வாறு புரிந்து கொண்டேன் என்ப்து தான். குல்ஸார் கொடுத்த ஒரே விளக்கம் - என் கவிதைகள் எனக்காகப் பேசும். ஆகையால், நான் எந்த விளக்கமும் கொடுக்கப் போவதில்லை எனது கவிதைகளுக்கு என்று கூறிவிட்டார்........... அவர், ஆளுமை மிக்க கவிஞர். அதனால் பெற்ற தைர்யம். (நாமோ இன்னும் பலவற்றையும் பரீட்சித்து பார்க்கும் முயற்சியில் தான் இருக்கிறோம்........)

இந்தக் கவிதை அவருடைய 'Silences' என்ற புத்தகத்தில் இருக்கிறது, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - Rina Singh.

Nanban
11-11-2003, 02:54 PM
1. அநாதை...........

இலையுதிரும் காலம்
மரங்கள் உதிர்க்கின்றன சருகுகள் -
குப்பையில் உயிர்த்துளி.

2.

நகரமாகும் ஊர்கள்
ஈவிரக்கமற்ற இதயங்கள் -
காற்றெங்கும் மாசு.

3.

மயக்கத்தில் வீழ்ந்தேன்
கடந்த கால நினைவுகளால் -
அடுப்பில் புகையும் பனி.

4.

மழைத்துளி வீழ்கின்றது;
பள்ளத்தில் நதி பாய்கிறது -
உயிர்கள் எழும்புகின்றன.

5.

காலியான வானம்
மரித்தால் அழ ஆட்கள் இல்லை -
காய்ந்து பட்ட மரம்.

எழுதியவரின் விவரங்கள் - பின்னால்,................

பாரதி
11-11-2003, 04:07 PM
அருமை நண்பா. குல்ஸாரின் கவிதையும் மிகவும் நன்று. தொடர்ந்து எங்களுக்காக பணியாற்றும் உங்களை எப்பிடி பாராட்ட?

முத்து
12-11-2003, 08:48 PM
மூன்றே வரிகளில் நச்சென்று நினைப்பதை சொல்லும் அருமையான வரிகள் ..
நன்றிகள் நண்பன் அவர்களுக்கு ....

Nanban
24-04-2004, 06:45 PM
இதை மற்றவர்களும் தொடரலாமே....

மீண்டும் முதலில் இருந்து படிக்கும் பொழுது ஒரு ஆனந்தம்.... மொழி பெயர்ப்பாகவே இருந்தாலும், சுவை குன்றாதவை தாம்....

Nanban
24-04-2004, 07:14 PM
மாயக் கண்ணாடி..... கமலா தாஸ்

உன்னிடத்தில் கலவி புரிய
ஒரு ஆணைக் கண்டுபிடிப்பது
உனக்கு எளிது தான்.

ஆனால், பெண்ணாகிய
உன் தேவைகளைப் பற்றி மட்டும்
நேர்மையாக இரு.

.............
.............
...............

இதற்கு மேல் அதை மொழி பெயர்த்தால், அடிக்க வருவீர்கள் என்பதால், பாதியிலேயே விட்டுவிட்டேன்....

பரஞ்சோதி
25-04-2004, 04:44 PM
அருமை நண்பரே! உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.

உண்மை தான் கமலாதாஸ் பற்றிய கட்டுரை படிக்கும் போது தலையில் குட்டு வாங்கியவன் நான்.

Nanban
25-04-2004, 07:28 PM
நன்றி பரஞ்சோதி அவர்களே....

வாழ்த்துகள், ஆயிரம் பதிப்பு தாண்டியமைக்கு.....

அன்புடன்,

Nanban
25-04-2004, 07:40 PM
]உன்னில்........

எப்பொழுதுமே -
நீ என் அருகே இருக்கும் பொழுது
காதலுக்கு வடிவம் தேவையில்லை
என்றே தோன்றுகிறது.

இப்பொழுது
நீ அருகே இல்லாத பொழுது
எனக்குத் தெரியும் -
காதலுக்கும் வடிவம் தேவை என்று..

ஓசைக்கு நீல வானம் போல
நீருக்கு ஓடும் தெளிந்த சிற்றோடை போல
மின்சாரத்திற்கு ஒரு தாமிர கம்பியைப்போல
எனக்கு ஒரு மேகத்தைப் போல
மீனைப்போல,
ஒரு வெப்பமான தழுவலைப் போல
எல்லாம் நீயாக எனக்கு வேண்டும்.

நீ என் பூமியாக இரு.
என் வசந்தங்கள்
உன் பள்ளத்தாக்கில்
அதன் முதல் பூக்களைப் பூக்கட்டும்.

உன் இருண்ட குகைப்பாதைகளில்
நான் விசிலடித்துக் கொண்டே ஒடுவேன் -
கண்களில் விளக்கேந்தி.

வானோங்கி வளர்ந்த மரங்களிடையே
ஒரு காற்றைப் போல உலாவுவேன்.
உன் ஆழக் கடல்களில்
ஒரு நீர்மூழ்கியாக மிதப்பேன்.
உன் வயல்வெளிகளில்
தானியமாக விளைந்து கிடப்பேன்.

உன் இல்லத்தில்
ஏகாந்த நடை பயில்வேன் -
மல்லிகைப் பூவின் மணம் போல.

ஏங்குகிறேன் -
உன்னில் நான் பிறப்பதற்கு -
எப்பொழுதுமே

Nanban
25-04-2004, 08:00 PM
கவிதையை ஆங்கிலத்தில் எழுதியவர் - கே. சச்சிதானந்தன். அதற்கு மேல் விவரங்க்ள் கிடைக்க வில்லை.

கவிதையின் சிறப்பு - இந்தக் கவிதையை யாருக்கு வேண்டுமானாலும் அர்ப்பணிக்கலாம் - தாய்க்கு, காதலிக்கு, பூமிக்கு....

காதலுக்கு வடிவம் தேவையில்லை - நீ அருகே இருக்கும் பொழுது என்பது ஒரு புதிய பரிமானம். காணாமல் காதல் என்று எல்லோரும் சொல்கின்றனர். அது உண்மையா? காதலி அருகே இருக்கும் பொழுது வேண்டுமானால் வடிவம் தேவையற்றதாக இருக்கலாம் - ஆனால், பிரிந்து தொலைதூரம் போன் பின், அந்த வடிவங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன - எனக்குத் தோன்றுவதைப் போல......

இவர் எழுதிய புத்தகங்களை புத்தகக் கடையில் பார்த்தாலும் வாங்க வேண்டும் என்று தோன்றியதில்லை. இனி வாங்குவேன்....

Nanban
02-05-2005, 08:34 PM
ஆங்கிலத்தில் எழுதும் இந்தியக் கவிஞர்கள் என்ற தலைப்பில் பழைய மன்றத்தில் ஒரு தொடர் எழுதி வந்தேன் - இப்பொழுது அதை தொடரும் எண்ணம் உள்ளது. பழைய மன்றத்தில் உள்ள கவிதைகளை வாசிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட சுட்டியின் மூலம் அங்கு சென்று பழையவற்றை படித்துக் கொள்ளுங்கள். இங்கு இனி புதிதாக தொடரலாம்...





http://www.tamilmantram.com/new/index.php?showtopic=2330

Iniyan
02-05-2005, 09:09 PM
நண்பா !

அந்த பழைய பதிவை நான் யுனிகோடில் மாற்றி இங்கு இணைத்து விட்டேன்.

உங்கள் புரஃபைல் சென்று முதலில் உங்கள் திஸ்கி கையொப்பத்தை யுனிகோடில் மாற்றினால் உங்களது அருமையான பதிவை இனி யுனிகோடிலேயே தொடரலாம்.

நன்றி.

Nanban
08-05-2005, 09:28 PM
நண்பா !

அந்த பழைய பதிவை நான் யுனிகோடில் மாற்றி இங்கு இணைத்து விட்டேன்.

உங்கள் புரஃபைல் சென்று முதலில் உங்கள் திஸ்கி கையொப்பத்தை யுனிகோடில் மாற்றினால் உங்களது அருமையான பதிவை இனி யுனிகோடிலேயே தொடரலாம்.

நன்றி.

கையொப்பம் கூட இப்பொழுது மாற்றி விட்டேன் என்றே நினைக்கிறேன் - பார்த்தவர்கள் சொல்லவும் விளங்குகிறதா இல்லையா என்று. என் கணிணியில் எந்தப் பிரச்னையும் இல்லை.

நன்றி

பரஞ்சோதி
08-05-2005, 09:36 PM
கையொப்பம் கூட இப்பொழுது மாற்றி விட்டேன் என்றே நினைக்கிறேன் - பார்த்தவர்கள் சொல்லவும் விளங்குகிறதா இல்லையா என்று. என் கணிணியில் எந்தப் பிரச்னையும் இல்லை.

நன்றி


நண்பன் அவர்களே!

எனக்கு மிகவும் தெளிவாக தெரிகிறது, உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு பிரச்சனையாக தெரியவில்லை.

Iniyan
08-05-2005, 10:29 PM
இப்போது அருமையாக உள்ளது. நன்றி

Nanban
10-05-2005, 07:27 PM
ஒரு பித்தன்
என்னிடம் சொன்னான் -

எதை
வேண்டுமானாலும் எழுது
வெற்றுக் காகித வெண்மையின்
ஒரு படி முன்னேற்றமான
எழுத்துகளாகும் பட்சத்தில்.

இன்று
நான் எழுதுவதை விட
அதிமுக்கியமானவை
வெள்ளைத் தாளின்
காலியிடங்கள்

வார்த்தைகளுக்கிடையிலேயான
வெண்பரப்புகளில்
எனது கவிதை
சிக்கிக் கிடக்கிறது.

அதிகாலையில்
கரைந்து போன
மனிதனைப் பற்றிய
செய்தியைப் போல

மண்ணைக் கீறி
இட்ட விதையைப் போல

கனத்த எழுத்துருக்களால்
உண்மையை
மூடப்பார்க்கும்
தலையங்கத்தைப் போல

ஒரு பச்சை மலரின்
பிஞ்சு மணம் போல

அதிகம் எழுத எழுத
அதிகம் கவிதைகள்

வார்த்தைகளுக்கிடையிலேயான
வெண்பரப்பு மௌனங்களில்
அதிகம் கவிதைகள்

Nanban
10-05-2005, 07:42 PM
கீழ்க்கண்ட கவிதையை எழுதியவர் - நாரா. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - வி.நாராயணராவ். (இருவரும் ஒருவர்??)

தலைப்பு - வெள்ளைத் தாள்

இதே சாயலில் மன்றத்தில் கவிதை வாசித்ததாக பழைய ஆட்களுக்கு ஏதாவது நினைப்பு வந்தால், அந்த நினைப்புகளை வரச் செய்தது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம்.

அவ்வளவே.....

Nanban
11-05-2005, 06:35 PM
இந்தக் கவிதையை வாசித்ததும் சட்டென்று நினைவிற்கு வந்தது நம் மன்றத்து ஆட்கள் பல பேரின் நினைவு தான்.

குறிப்பாகப் பாரதி, கவிதா, மற்றும் நான்.... (நானே என் நினைவிற்கு வருகிறேனா?)

ஆமாம்.

இவர்கள் எல்லோரும் எப்பொழுதுமே கூறி வந்திருக்கிறார்கள் - எழுத வேண்டும் என்ற ஆவல் உந்துகிறது. எப்படி எழுதுவது என்ற மயக்கம், தயக்கம் ஆட்கொள்ள, சோர்வினில் மனம் புகுந்து எழுதுவதையே தள்ளி போடச் சொல்லுகிறது. பின்னர், மனதில் தோன்றிய சிந்தனைகள் அத்தனையும் மறைந்து விட, எழுத இயலாத சோகம் தான் எங்கும் மிஞ்சுகிறது.

நாரா சொல்லுவதை கேட்டுப் பார்க்கலாம் போலத் தானே இருக்கிறது, இல்லையா? எழுத எழுத எங்கிருந்தாவது ஒரு கவிதை வந்து குவிந்து விடலாம் தானே - நாமே நம்மை அறியாமல் விட்டுப் போகும் ஏதாவது ஒரு காலியிடத்தில்!

நிறைய முறை நானே வாசித்திருக்கிறேன் - மன்ற அன்பர்கள் உரை நடையாக எழுதிய பல வரிகளில் சில ஒரு புதுக்கவிதையின் உயிர்ப்புடன் இருப்பதை வாசித்திருக்கிறேன்...

ஆகையால், நண்பர்களே - எழுதுங்கள், எழுதுங்கள், எழுதுங்கள்... எங்காவது கவிதை தன் தலையைக் காட்டி விடும்....

எழுதுங்கள்