PDA

View Full Version : சின்னவளே!

சுவேதா
03-05-2005, 12:30 AM
சின்னவளே!

சின்னச் சின்ன கண்ணாலே என்னை
மயக்கி போட்டவளே!
சின்ன சின்ன உதட்டாலே காவியம்
பேசியவளே!
சின்ன தென்றலாய் என்னை தொட்டுவிட்டுச்
சென்றவளே!
வெண்நிலவாய் நீ என் முன் தோன்றினால்
நீயே என் சொர்க்கமடி! அதுவே என் ஆயுளுமடி!

.......

மன்மதன்
03-05-2005, 05:06 AM
கடைசி வரியில் ஆயில் என்று இருக்கிறதே.. அது எந்த ஆயில்??
(ஆயுள்தானே அது... )

சின்ன சின்ன கவிதை.. அருமையான தொடக்கம்...

அன்புடன்
மன்மதன்

சுவேதா
03-05-2005, 11:54 AM
கடைசி வரியில் ஆயில் என்று இருக்கிறதே.. அது எந்த ஆயில்??
(ஆயுள்தானே அது... )

சின்ன சின்ன கவிதை.. அருமையான தொடக்கம்...

அன்புடன்
மன்மதன்

ஆமாம் அது ஆயுள்தான்.
நன்றி ஆண்ணா!

மன்மதன்
03-05-2005, 12:59 PM
ஆமாம் அது ஆயுள்தான்.
நன்றி ஆண்ணா!

ஆஹா.. ஆன்னா.. ஆண்ணான்னு சொல்லிடுவீங்களே.. நான் தம்பிங்கோவ்.. :D

அன்புடன்
மன்மதன்

babu4780
03-05-2005, 01:03 PM
ஆஹா.. ஆன்னா.. ஆண்ணான்னு சொல்லிடுவீங்களே.. நான் தம்பிங்கோவ்.. :D

அன்புடன்
மன்மதன்
எல்லா அண்ணன் மார்களும் இங்கே பாருங்கோ !!

சுவேதா
03-05-2005, 01:43 PM
மன்மதன் அண்ணா நான் நினைகிறேன் நீங்கள் தம்பி இல்லை என்று நான்தான் தங்கையாக எருக்க வேண்டும் என்று நினைகிறேன்.

சுவேதா
03-05-2005, 01:49 PM
ஆஹா.. ஆன்னா.. ஆண்ணான்னு சொல்லிடுவீங்களே.. நான் தம்பிங்கோவ்.. :D

அன்புடன்
மன்மதன்

மன்னித்துகொள்ளவும் தவறுதலாக முதல் ஆண்ணா என்று வந்து விட்டது மன்னிக்கவும்.

Nanban
03-05-2005, 07:44 PM
கவிதை பக்கமா என்ற சந்தேகம் எழுகிறது தோழர்களே.....

ஒரு வேளை ஐவர் அணி இங்கே இடம் மாறி விட்டதோ?

அறிஞர்
05-05-2005, 03:55 AM
சுவேதா சின்ன சின்ன வரிகளால்... சித்திரமாக தீட்டிய கவிதை அருமை... தொடருங்கள்

(நண்பனை போன்று சிறு சந்தேகம் எழுந்தது.........)

பரஞ்சோதி
05-05-2005, 04:28 AM
அறிஞரே!

கவிதை போன்ற பகுதியில் அரட்டைகளை தவிர்ப்பது நல்லது, கவித்துமாக பேசவும், கவிதையில் சந்தேகங்களை கேட்கவுமே பதிவுகள் செய்யலாம்.

அப்படியே யாராவது தொடர் கேள்விக்கு பதிவு செய்தால், அதை கிண்டலாக பதிவு செய்ய ஐவர் அணியை பயன்படுத்தலாம்.

அறிஞர்
05-05-2005, 04:31 AM

அது தான் என் எண்ணமும்... இதை அனைவரும் மதிப்பது நல்லது

மன்மதன்
05-05-2005, 05:04 AM
கவிதை பக்கம் கவிதை பக்கமாய் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.. இனி அரட்டைகள் இங்கே வராது.. நல்ல கவிதைகளை எதிர்பார்க்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
05-05-2005, 05:19 AM
பழைய கவிஞர் மன்மதனின் புதிய கவிதைகள், இங்கேயும் வர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

மன்மதன்
05-05-2005, 06:31 AM
பழைய கவிஞர் மன்மதனின் புதிய கவிதைகள், இங்கேயும் வர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

கண்டிப்பாக நண்பா.. நீ சொல்லி நான் கேட்காமலேயா.. கூடிய விரைவில் கவிதை எழுதறேன்.. அதையும் ஐவரணி பக்கத்தில் சேர்த்திட கூடாது .. ஓகேயா..

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
05-05-2005, 07:02 AM
நண்பர்களின் எண்ணங்களுக்கு நன்றி...

poo
05-05-2005, 10:38 AM
சின்னவளால்தான் எத்தனை பெரிய மாற்றங்கள்...

-தொடருங்கள் சுவேதா!