PDA

View Full Version : தீபங்கள் பேசும்..



பிரியன்
02-05-2005, 07:22 PM
தமிழ்மன்றத்தில் உளறல்கள் எனும் தலைப்பில் வெளிவந்த கவிதை தொகுப்பு விரைவில் தீபங்கள் பேசும் என்று நூலாக வெளிவர இருக்கிறது.

திருத்திய பதிப்பை நம் மன்ற நண்பர்களுக்காக பதிவு செய்யலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

தூண்டும் திரிகளாய் நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..

Iniyan
02-05-2005, 09:11 PM
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்ன இன்னும் நீங்கள் திஸ்கியை விட்டபாடில்லை போலிருக்கிறதே?

pradeepkt
03-05-2005, 05:02 AM
ஐ...
ப்ரியன் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
உங்கள் கவிதைகளைப் படிப்பதென்றாலே எங்களுக்கொரு ஆனந்தம்.
கொடுங்கள் சீக்கிரம்.

மன்மதன்
03-05-2005, 05:13 AM
இனியனின் இனிமையான தீபங்கள் பேசுவதை கேட்க
ஆவலுடன்
மன்மதன்

gragavan
03-05-2005, 05:36 AM
ஆகா பிரியனின் கவிதைத் தொகுப்பு...காத்திருக்கிறோம் பிரியத்துடன்.

அன்புடன்,
கோ.இராகவன்

ஆண் பெண் அணிகலன்கள்...........கற்கையில் வேண்டியது
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=99776#post99776

பிரியன்
03-05-2005, 08:36 PM
முதல் கவிதை....

களவு புரிந்தேன்
கைதாகவில்லை.
உன்னில் சுதந்திரமாய்
நான்..

பரஞ்சோதி
03-05-2005, 08:41 PM
நன்றி பிரியன், முன்பு விட்டதை இனிமேல் படிக்க இருக்கிறேன்.

சுவாரசியமாக படிக்க நீங்கள் கொடுத்த் க்ளூ போதுமே.

அறிஞர்
05-05-2005, 03:49 AM
நல்ல தகவல் நண்பரே....

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.......

gragavan
05-05-2005, 05:20 AM
முதல் கவிதை....

களவு புரிந்தேன்
கைதாகவில்லை.
உன்னில் சுதந்திரமாய்
நான்..பிரமாதம். பிரமாதம். திருடினால் சுதந்திரம். நல்ல கவிநயம்.
அன்புடன்,
கோ.இராகவன்

poo
05-05-2005, 10:41 AM
ஆயுள்கைதிக்கு அத்துனை சலுகைகள்...

-ஆரம்பமே அமர்க்களமாய்... தொடருங்கள் ப்ரியன்.

உங்கள் தீபங்கள் உலகமெங்கும் பேசப்படும்.. - வாழ்த்துக்கள்..

பிரியன்
05-05-2005, 11:33 AM
இரண்டாவது கவிதை...

கோலம் போட்டுச் செல்கிறாய்.
வைக்கப்பட்ட
ஒவ்வொரு புள்ளியிலும் கைதியாய்
நான்

மன்மதன்
05-05-2005, 12:27 PM
முத்து மணி மாலையில் 2 முத்துக்கள் கோர்ந்து விட்டன.. விரைவில் முழுமை பெற வாழ்த்துக்கள்..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
05-05-2005, 01:59 PM
மூன்றாம் கவிதை

பார்வை பதிக்கிறாய்
நெஞ்சம் கிழிக்கிறாய்.
நீ குறிஞ்சி இதழா!!
நெருஞ்சி முள்ளா?

pradeepkt
05-05-2005, 06:08 PM
ப்ரியன், அருமை. நெருஞ்சி ( காலில் ஏறினாலே வாரக்கணக்கில் வலி ), குறிஞ்சி ( 12 வருடத்திற்கொரு முறை )

ஒரு சிறு கருத்து

பார்வை பதிப்பதும் நெஞ்சம் கிழிப்பதும் முறையே குறிஞ்சி இதழ் மற்றும் நெருஞ்சி முள்ளின் வேலைகள்.
கவிதையில் மாறி இருப்பது போல் தோன்றுகிறதே?

பிரியன்
06-05-2005, 10:51 AM
பிரதீப்

தழுவிப் போகும் காதலியின் பார்வையைத்தான் அப்படி கேட்கிறான் நீ எதுவென்று.....

pradeepkt
06-05-2005, 11:29 AM
அதைப் புரிந்து கொண்டேன் ப்ரியன்.
அந்த வரிசையைத்தான் சொன்னேன்.

ஒருவேளை கவிதை இப்படி இருக்க வேண்டுமோ?

பார்வை பதிக்கிறாய்
நெஞ்சம் கிழிக்கிறாய்.
நீ குறிஞ்சி இதழா?
நெறிஞ்சி முள்ளா!!

அன்புடன்,
பிரதீப்

பிரியன்
06-05-2005, 11:56 AM
அது உங்கள் விருப்பம் பிரதீப்

நான்காவது கவிதை

உயிரைக் கொடுத்து
உயிரை எடுப்பாய்.
தெரிந்தே காத்திருக்கிறேன்.
உன் பார்வைக்காக

வாணி
06-05-2005, 08:22 PM
உங்கள் கவிதைகள் அருமையாக இருக்கின்றது.
தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்!

பரஞ்சோதி
06-05-2005, 08:35 PM
பிரியன் கலக்குங்க.

என் இளமை நாட்களை மீண்டும் திரும்பி பார்க்க உங்கள் கவிதைகள் உதவுகின்றன.

பிரியன்
07-05-2005, 06:37 PM
நன்றி வாணி, பரஞ்சோதி....

ஐந்தாவது கவிதை

கூந்தலில் சூடிவிடும்
உன் அம்மாவிற்குத் தெரியாது
பூச்சரத்தின் முடிச்சுகளில்
நான் மாட்டிக் கொண்டிருப்பது

மன்மதன்
08-05-2005, 04:18 AM
ஒவ்வொரு முறை
உன் கூந்தலில் இருக்கும்
பூ உதிரும் போது
என் உயிர் உதிர்கிறதே .. அது ஏனோ..???

நன்றாக செல்கிறது உங்கள் தொகுப்பும் எங்கள் ப்ரியன். தொடந்து கொடுங்க.

அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
08-05-2005, 07:06 AM
நன்றி வாணி, பரஞ்சோதி....

ஐந்தாவது கவிதை

கூந்தலில் சூடிவிடும்
உன் அம்மாவிற்குத் தெரியாது
பூச்சரத்தின் முடிச்சுகளில்
நான் மாட்டிக் கொண்டிருப்பது

காதலால் காற்றை விட மென்மையாகிட்டீங்க தானே.

பிரியன்
09-05-2005, 03:29 AM
ஒவ்வொரு முறை
உன் கூந்தலில் இருக்கும்
பூ உதிரும் போது
என் உயிர் உதிர்கிறதே .. அது ஏனோ..???

நன்றாக செல்கிறது உங்கள் தொகுப்பும் எங்கள் ப்ரியன். தொடந்து கொடுங்க.

அன்புடன்
மன்மதன்

மன்மதன் உங்கள் கவிதை அருமை.

மன்மதன்
09-05-2005, 04:33 AM
நன்றி கவிரே..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
09-05-2005, 06:56 AM
அருமை அன்பரே.....

இன்னும் எழுதுங்கள்...

பிரியன்
09-05-2005, 04:34 PM
ஆறாவது கவிதை

ஆனந்தமாயிருப்பேன்
உன் நினைவுகளல்
உணர்வுகள் நிறைந்தால்..
எனக்கோ
இயக்கமே நின்றல்லவா
போகிறது!

விழியின் ஓரவீச்சிலே
பிரபஞ்ச இடைவெளி
எனக்குள்.

உன் விழித் தடைகள
தாண்ட முடியாத
என் நேசம்
இதயத்துள் கரைவது
எப்போதோ?

மணந்ததா? இல்லையா?
உன் கூந்தல் மலருக்காக
அனுப்பிய
என் மூச்சுக்காற்று.

பதில் சொல்லாத
உன் மெளனமும்
அழகுதான்

நீ தொட்ட பூவில்
பதிந்த ரேகையில்
என் விலாவின் வாசம்
தெரிகிறதா எனத்
தொடர்கிறதென்
தேடல்

சுவேதா
09-05-2005, 05:17 PM
நன்றி வாணி, பரஞ்சோதி....

ஐந்தாவது கவிதை

கூந்தலில் சூடிவிடும்
உன் அம்மாவிற்குத் தெரியாது
பூச்சரத்தின் முடிச்சுகளில்
நான் மாட்டிக் கொண்டிருப்பது


அருமையான கவிதை வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ப்ரியன் அண்ணா!

amudha
10-05-2005, 12:14 AM
ஐந்தாவது கவிதை

கூந்தலில் சூடிவிடும்
உன் அம்மாவிற்குத் தெரியாது
பூச்சரத்தின் முடிச்சுகளில்
நான் மாட்டிக் கொண்டிருப்பது

அழகிய கவிதை..வாழ்த்துக்கள்.. :)

அறிஞர்
10-05-2005, 02:50 AM
நல்ல கவிதை அன்பரே...



பதில் சொல்லாத
உன் மெளனமும்
அழகுதான்


மெளனத்தில்... தெரியும் உன்னத அழகு......

pradeepkt
10-05-2005, 04:14 AM
மணந்ததா? இல்லையா?
உன் கூந்தல் மலருக்காக
அனுப்பிய
என் மூச்சுக்காற்று.



அருமை அருமை. "மணந்தது" என்ற சிலேடை சிக்கென்று ஒட்டுகிறது.
மூச்சுக் காற்று கூந்தல் மலரை மணந்தால் அல்லவா அதுவும் மணக்கும்.
படித்தேன் சிலிர்த்தேன் ப்ரியன்.

மன்மதன்
10-05-2005, 04:31 AM
அருமை அருமை. "மணந்தது" என்ற சிலேடை சிக்கென்று ஒட்டுகிறது.
மூச்சுக் காற்று கூந்தல் மலரை மணந்தால் அல்லவா அதுவும் மணக்கும்.
படித்தேன் சிலிர்த்தேன் ப்ரியன்.


வாவ்.. அருமை.. கவிதையும்.. ப்ரதீப்பின் விளக்கமும்..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
10-05-2005, 08:02 PM
நன்றி சுவேதா,அமுதா, அறிஞர்,மன்மதன்...
விளக்கங்களே கவிதைகளாக இருக்கிறது பிரதீப். உங்களிடமிருந்த நல்ல கவிதைகளை எதிர்பார்க்கிறேன்...

ஏழாவது கவிதை

உன் இமைகள் வேகமாகக் படபடக்க
காரணம்
பிறர்க்குத் தெரியாமல்
களவாடிய என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??

மன்மதன்
11-05-2005, 04:20 AM
நன்றி சுவேதா,அமுதா, அறிஞர்,மன்மதன்...
விளக்கங்களே கவிதைகளாக இருக்கிறது பிரதீப். உங்களிடமிருந்த நல்ல கவிதைகளை எதிர்பார்க்கிறேன்...

ஏழாவது கவிதை

உன் இமைகள் வேகமாகக் படபடக்க
காரணம்
பிறர்க்குத் தெரியாமல்
களவாடிய என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??

"உன் இமைத்துடிப்பும்
எனது இதயத்துடிப்பும்
கட்டுப்பாட்டை மீறுகையில்
எழுந்து விட்ட வார்த்தைகள் மட்டும்
பெட்டிப்பாம்பாய் சுருண்டு விட்டு..
சொல்ல துணியாத என் மனது
புரிந்து கொள்ளாத உன் வயது
காதலுக்கு முன்
நம்மில் யார் கோழைகள்.."

உங்கள் கவிதையை படித்ததும் நான் எங்கோ படித்த இந்த கவிதை நியாபகம் வந்தது...

"எப்படி சொல்வாய்..
எப்போழுது சொல்வாய்.."

சொல்லாமல் தவிக்கும்
காதல்.. ஒரு சுகம்..
சொல்லிய பின்
பரிதவிக்கும் காதல்.. ஒரு சோகம்..

அன்புடன்
மன்மதன்

பிரியன்
11-05-2005, 02:49 PM
நன்றி மன்மதன்

பரஞ்சோதி
11-05-2005, 08:25 PM
பிரியனின் கவிதைக்கு எதிர்கவிதை தேடி கொடுத்த மன்மதனுக்கு நன்றி.

முத்து
12-05-2005, 12:04 AM
பிரியன், மன்மதன்,
கவிதைகள் அருமை.

பிரியன்
12-05-2005, 03:30 AM
எட்டாவது கவிதை

பூங்காவில் சிதறிக் கிடந்த
பூக்களை அள்ளி எறிந்தேன்
நட்சத்திரங்களானது
வானில்

பரணில் கிடந்த ஊஞ்சல்
உடைந்த கண்ணாடி,
பாடாத வானொலி
கசங்கிய கவிதைக் காகிதங்கள்
தேடித் தேடி ரசிக்கிறேன்

உரக்க குரலெழுப்பி பாடுகிறேன்
தெறித்து ஓடும்
குயில் கூட்டத்தையும்
கவனிக்காமல்

தந்தையை உப்புமூட்டை தூக்கிக்கொண்டு
தாயின் கழுத்தில் பின்னிக் கொண்டு
தங்கையின் கன்னம் கிள்ளிக்கொண்டு
கண்ணாடி முன் நாணிக் கொள்கிறேன்

எல்லாம் எல்லாம்
எல்லாம் எல்லாம்

உன் பிரியத்தை
சொன்ன
கணப்பொழுதிலிருந்துதான்.........

மன்மதன்
12-05-2005, 04:16 AM
எட்டாவது கவிதை
எல்லாம் எல்லாம்

உன் பிரியத்தை
சொன்ன
கணப்பொழுதிலிருந்துதான்.........

பிரியத்தை சொன்ன கணப்பொழுதிலிருந்து
மாறுபடும் நம் செயல்கள் அனைத்தும் காமெடி..

பிரிவை சொன்ன கணப்பொழுதிலிருந்து
துண்டு துண்டாகும் நம் மனது சரவெடி..

பெண்கள் எப்பொழுதும்
ஒரு கன்னிவெடி..
மனதால் மனதை அழுத்தி,
விட்டு விட்டால்
வெடித்து சிதறடிக்கும்
உங்கள் வாழ்க்கை நொடி(யில் )

இராகவன் :D :D ஸ்டைலில் ஒரு கருத்து சொல்லலாம் என்று விளைவில் இப்படி வந்து விட்டது.. ப்ரியன் ஒவ்வொரு வரியும் இப்பொழுது எனக்கு அத்து படி.

அன்புடன்
மன்மதன்

pradeepkt
12-05-2005, 04:19 AM
காதலைச் சொன்ன கணத்திலிருந்தே மனதில் கனங்கள் தூசுகளாகும் போது போக்கிலும் வித்தியாசம் காண்பது சாத்தியம்தானே?
எல்லாக் காலமும் வசந்தமாவது அப்போதுதானே? நீங்கள் சொன்ன அத்தனையும் நடக்கத்தான் செய்யும்.
இது உங்கள் மனநிலைப் படப்பிடிப்பு ப்ரியன், நன்று!

பரஞ்சோதி
12-05-2005, 04:19 AM
பிரியத்தை சொன்ன கணப்பொழுதிலிருந்து
மாறுபடும் நம் செயல்கள் அனைத்தும் காமெடி..

பிரிவை சொன்ன கணப்பொழுதிலிருந்து
துண்டு துண்டாகும் நம் மனது சரவெடி..

பெண்கள் எப்பொழுதும்
ஒரு கன்னிவெடி..
மனதால் மனதை அழுத்தி,
விட்டு விட்டால்
வெடித்து சிதறடிக்கும்
உங்கள் வாழ்க்கை நொடி(யில் )

இராகவன் :D :D ஸ்டைலில் ஒரு கருத்து சொல்லலாம் என்று விளைவில் இப்படி வந்து விட்டது.. ப்ரியன் ஒவ்வொரு வரியும் இப்பொழுது எனக்கு அத்து படி.

அன்புடன்
மன்மதன்

கலக்கு கண்ணா கலக்கு.

பிரியன்
12-05-2005, 12:51 PM
சரவெடியாய் எதிர்கவிதை தந்த மன்மதனுக்கு நன்றி..

நடந்தால் நலமே பிரதீப் ...இன்னொருமுறை....

நன்றி பரஞ்சோதி

பிரியன்
14-05-2005, 04:49 PM
ஒன்பதாவது கவிதை...

நீண்ட நேரமாய்
மேகம் பார்த்து,
மண் கிளறி கிளறி,
தாகமெடுக்கும் நாவை
உலரவிட்டு
இதயம் நனைக்கத் துடித்த
நம் முதல் சந்திப்பு.....

பரஞ்சோதி
14-05-2005, 08:00 PM
நல்ல கவிதை நண்பரே!

எல்லோருடைய மனதிலும் நீங்கா இடத்தை பெறுவது முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் சண்டை இது போன்ற முதல்கள் நினைவில் இருக்கும் வரை சந்தோசம் தான்.

மன்மதன்
15-05-2005, 04:17 AM
ஒன்பதாவது கவிதை...

நீண்ட நேரமாய்
மேகம் பார்த்து,
மண் கிளறி கிளறி,
தாகமெடுக்கும் நாவை
உலரவிட்டு
இதயம் நனைக்கத் துடித்த
நம் முதல் சந்திப்பு.....

முதல் காதலில்
நாவை உலர
வைப்பதை விட..
நாவை உளற
வைப்பதே அதிகம்..

தொடருங்கள் ப்ரியன்ஜி..

அன்புடன்
மன்மதன்

பிரியன்
15-05-2005, 03:32 PM
நல்ல கவிதை நண்பரே!

எல்லோருடைய மனதிலும் நீங்கா இடத்தை பெறுவது முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் சண்டை இது போன்ற முதல்கள் நினைவில் இருக்கும் வரை சந்தோசம் தான்.
__________________
---- உங்கள் பரஞ்சோதி ----
ஆமாம் பரஞ்சோதி.. முதல் நினைவின் பசுமை இறக்கும் வரைக்கும் மாறாது.

முதல் காதலில்
நாவை உலர
வைப்பதை விட..
நாவை உளற
வைப்பதே அதிகம்..

தொடருங்கள் ப்ரியன்ஜி..

அன்புடன்
மன்மதன்

அனுபவித்தவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் :) :)

பிரியன்
15-05-2005, 03:37 PM
பத்தாவது கவிதை


விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க
நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!

kavitha
16-05-2005, 03:56 AM
பேசும் தீபங்கள் ஒளி வீசிக்கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் ப்ரியன் :)

kavitha
16-05-2005, 04:02 AM
சொல்லாமல் தவிக்கும்
காதல்.. ஒரு சுகம்..
சொல்லிய பின்
பரிதவிக்கும் காதல்.. ஒரு சோகம்..

அன்புடன்
மன்மதன்



கலக்கு கண்ணா கலக்கு.


:) :) :) :)

pradeepkt
16-05-2005, 04:04 AM
பத்தாவது கவிதை


விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க
நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!

போர்க்காலம் முடிகிறதோ இல்லையோ
போர்க்களங்கள் காதலில் முடிவதேயில்லை!
அம்புகள் கேடயங்கள் வாட்கள்
என விதவிதமாய் ஆயுதங்கள் மட்டும்
காதலியின் உடலில்!
வேதனைகள் இன்பங்கள் ஆசைகள்
என விதவிதமாய் காயங்கள் மட்டும்
காதலனின் மனதில்!

வாழ்த்துகள் ப்ரியன்.

மன்மதன்
16-05-2005, 04:08 AM
பத்தாவது கவிதை


விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க
நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!


சில நேரம் விரும்புவதே
கேள்விக்குறியாய்..
காதலில் வெறுப்பதும்
ஒரு பிடித்தமான செயல்போல..

10 தீபங்களை ஏற்றிய ப்ரியனுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
மன்மதன்

பிரியன்
16-05-2005, 03:32 PM
பேசும் தீபங்கள் ஒளி வீசிக்கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் ப்ரியன் :)


நன்றி கவிதா... தொடர்ந்து ஒளிவீசி உங்களை எல்லாம் மகிழ்விக்கும் என்றே நம்புகிறேன்..

தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் பிரதீப், கவிஞர் மன்மதனுக்கும் நன்றி.....

பிரியன்
16-05-2005, 03:35 PM
பதினொன்றாவது கவிதை

நகைக்கடை -
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்,
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்...,

pradeepkt
17-05-2005, 04:08 AM
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள எண்ண வித்தியாசங்கள் சட்டென்று பிடிபடும் கவிதை.
அதிலும் தன் ஆசைக்காய் ஆண் சில நேரம் செயல்பட்டாலும் தன் வாழ்க்கைக்காய் பெண் செயல்படும் நேரம்தான் இருவரது நெஞ்சிலும் தீபங்களாய்ப் பேசும்.
வாழ்த்துகள் ப்ரியன்.

மன்மதன்
17-05-2005, 08:27 AM
பதினொன்றாவது கவிதை

நகைக்கடை -
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்,
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்...,

ஒரே அர்த்தம் பொதிந்திருக்கும் இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடித்தது.. சட்டென மனதில் பதியும் அப்துல் ரகுமான் ரக கவிதை வரிகள் இது. பாராட்டுக்கள் ப்ரியன்.. கவிதை வரிகளில் ஏறுமுகம்தான் உங்களுக்கு..


'கல்யாணத்திற்கு
பிறகு வந்த
சில மாதங்கள் கழித்து
நீ கொலுசை பார்க்கிறாய்
ஆசையாய்...
நான் பர்ஸை பார்க்கிறேன்
ஆழமாய்
'

அன்புடன்
மன்மதன்

pradeepkt
17-05-2005, 09:02 AM
அட மன்மதன், உங்களுக்குள்ள ஒரு அருமையான ஹைக்கூவிஞன் தூங்கிக்கிட்டு இருக்கான். சும்மா அவனை தட்டி அடிச்சு எழுப்பி இன்னும் நிறைய எழுதச் சொல்லுங்கப்பு

மன்மதன்
17-05-2005, 09:06 AM
அட மன்மதன், உங்களுக்குள்ள ஒரு அருமையான ஹைக்கூவிஞன் தூங்கிக்கிட்டு இருக்கான். சும்மா அவனை தட்டி அடிச்சு எழுப்பி இன்னும் நிறைய எழுதச் சொல்லுங்கப்பு

நன்றி ப்ரதீப்.... கூடிய சீக்கிரமே எழுதறேன்.. (மன்மதன் பக்கம் :D )
அன்புடன்
மன்மதன்

பிரியன்
17-05-2005, 11:30 AM
ஒரே அர்த்தம் பொதிந்திருக்கும் இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடித்தது.. சட்டென மனதில் பதியும் அப்துல் ரகுமான் ரக கவிதை வரிகள் இது. பாராட்டுக்கள் ப்ரியன்.. கவிதை வரிகளில் ஏறுமுகம்தான் உங்களுக்கு..


'கல்யாணத்திற்கு
பிறகு வந்த
சில மாதங்கள் கழித்து
நீ கொலுசை பார்க்கிறாய்
ஆசையாய்...
நான் பர்ஸை பார்க்கிறேன்
ஆழமாய்
'

அன்புடன்
மன்மதன்
ஏன்யா நான் நல்லா இருக்குறது புடிக்கலையா... அப்துல் ரகுமானோடே என்னை சேத்தி....... உண்மையான கவிஞர்கள் அடிக்க வரப்போறாங்க..

நான் இருப்பது தொடக்கநிலையே.. அதற்கு இன்னும் பலமடங்கு உழைக்க வேண்டும்.

நீங்கள் சொல்லுவது சத்தியம் பிரதீப்

பிரியன்
17-05-2005, 11:31 AM
மன்மதா தீபங்கள் பேசும் புத்தகம் வாங்குபவர்களுக்கு மன்மதன் கவிதைகள் இலவசமாக தர இருக்கிறேன்....

மன்மதன்
17-05-2005, 01:43 PM
மன்மதா தீபங்கள் பேசும் புத்தகம் வாங்குபவர்களுக்கு மன்மதன் கவிதைகள் இலவசமாக தர இருக்கிறேன்....

நன்றி ப்ரியன்.. இலவசமா கொடுத்தாதான் வேலைக்கு ஆவும் :D :D
அன்புடன்
மன்மதன்

சுவேதா
17-05-2005, 05:20 PM
பதினொன்றாவது கவிதை

நகைக்கடை -
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்,
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்...,

மிகவும் நன்றாக உள்ளது. ப்ரியன் மேன்மேலும் எழுத எனது வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி
17-05-2005, 07:50 PM
கவிதையும், எதிர்கவிதையும் கொடுக்கும் இருவருக்கும் என் பாராட்டுகள்.

பிரியன்
18-05-2005, 03:42 AM
பனிரண்டாவது கவிதை.....

ஊடலால்
இடைவெளி விட்டு அமர்ந்திருந்தோம்.
தூரத்தில் சிரித்த
சின்ன குழந்தையின் உதட்டில்
அனிச்சையாய் கூடின
நம் உயிர்கள்..

மன்மதன்
18-05-2005, 04:59 AM
பனிரண்டாவது கவிதை.....

ஊடலால்
இடைவெளி விட்டு அமர்ந்திருந்தோம்.
தூரத்தில் சிரித்த
சின்ன குழந்தையின் உதட்டில்
அனிச்சையாய் கூடின
நம் உயிர்கள்..

காதலில்
எங்கேயாவது
எதிலேயாவது
இருவரையும்
பொருத்தி பார்ப்பது
வழக்கம்தானே..


சின்ன குழந்தையின்
உதட்டில்
இருக்கும்
கள்ளமில்லா சிரிப்பு போல
நம் காதலும்
மெள்ள மெள்ள
வளர வேண்டும் என்ற
கர்வம் எனக்கிருக்கு...


காதலின் இறுக்கத்தை
அதிகமாக்கும்
காரணியில்
கூடலை விட
ஊடலுக்குத்தான்
சக்தி அதிகம்...


ஒவ்வொரு
முறையும் சண்டை முடிந்து
காதல் வலுப்பட
தருவாயே ஒரு முத்தம்
கண்டிப்பாய் வேண்டும்
காதலில் லஞ்சம் ....


அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
18-05-2005, 05:05 AM
கண்டிப்பாய் வேண்டும்
காதலில் லஞ்சம் ....


அன்புடன்
மன்மதன்

கவிஞரே தங்களின் கவிதையிடம் நாங்கள் தஞ்சம்.

pradeepkt
18-05-2005, 05:43 AM
கவிஞரே தங்களின் கவிதையிடம் நாங்கள் தஞ்சம்.
இனிமேலும் கவிதைக்கென்ன பஞ்சம்?
கொடுத்துக் கொண்டிருங்கள் தினமும் கொஞ்சம்!

ப்ரியன், உங்கள் அனுபவங்கள் கவிதைகளாகின்றனவா, அல்லது கவிதைகள் அனுபவிக்கவா என்று குழம்ப வைக்குமளவு காதல் கொப்பளிக்கிறது.

பிரியன்
18-05-2005, 11:08 AM
அனுபவங்கள் அல்ல கனவுகள்..

கவிதையை அனுபவியுங்கள் உங்கள் காதலோடு....

மன்மதா தொடரட்டும் உன் அசத்தல் கவிதைகள்....

மன்மதன்
18-05-2005, 11:12 AM
நல்லது ப்ரியன்..அப்படியே ஆகட்டும்.
அன்புடன்
மன்மதன்

பிரியன்
18-05-2005, 12:14 PM
பதிமூன்றாவது கவிதை

தென்றல் கலைத்த
கூந்தலை சரிசெய்யவா என்றேன்
கைகளை உதறி நடந்தாய்

முறைத்தவேறே
நம்மருகே வந்த
நாயாருக்கு
நன்றி!!!

பரஞ்சோதி
18-05-2005, 12:31 PM
முருகனுக்கு யானை
நம்ம ப்ரியனுக்கு நாயா?

எனக்கு ஒரு குரங்கு கூட கிடைக்கவில்லையே?

pradeepkt
18-05-2005, 01:07 PM
அண்ணா போதும்.
அண்ணிகிட்ட சொன்னா உங்களையே மாத்திருவாங்க ஆமாம் :)

மன்மதன்
18-05-2005, 01:16 PM
பதிமூன்றாவது கவிதை

தென்றல் கலைத்த
கூந்தலை சரிசெய்யவா என்றேன்
கைகளை உதறி நடந்தாய்

முறைத்தவேறே
நம்மருகே வந்த
நாயாருக்கு
நன்றி!!!

முதல் மூணு வரிகளுக்கும்

அடுத்த நான்கு வரிகளுக்கும்

துளியும் சம்பந்தமில்லாமல் இருக்குதே...ஏன் ??

அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
18-05-2005, 01:18 PM
முதல் மூணு வரிகளுக்கும்

அடுத்த நான்கு வரிகளுக்கும்

துளியும் சம்பந்தமில்லாமல் இருக்குதே...ஏன் ??

அன்புடன்
மன்மதன்

நடுவில் நடந்தது என்ன என்பது தான் ரகசியம் நண்பா.

மன்மதன்
18-05-2005, 01:20 PM
அப்படியா.. நான் கொஞ்சம் வீக்.. புரிஞ்சுக்கறதிலே..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
18-05-2005, 01:22 PM
என்ன கேள்வி இது?
நாய் மேல் இருக்கும் பயத்தால.....

பரஞ்சோதி
18-05-2005, 01:25 PM
நாங்க எத்தனை நாய்களை பயன்படுத்திருக்கிறோம்.

மன்மதன் ஆட்டோவை மட்டுமே உபயோகித்ததால் இது புரியலை.

மன்மதன்
18-05-2005, 01:47 PM
நாய் மேல் இருக்கும் பயத்தால் கையை உதறி நடந்தாள்.. அதான் குழப்பமே.. சரி..சரி..போனிலே பேசிக்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
18-05-2005, 02:27 PM
மன்மதா, இதற்கு பதில் கவிதை கிடையாதா?

மன்மதன்
18-05-2005, 02:53 PM
பதிமூன்றாவது கவிதை

தென்றல் கலைத்த
கூந்தலை சரிசெய்யவா என்றேன்
கைகளை உதறி நடந்தாய்

முறைத்தவேறே
நம்மருகே வந்த
நாயாருக்கு
நன்றி!!!

தென்றலுக்கு
நன்றி...
அவள்
கூந்தல் தொட
கலைதது கொடுத்ததற்கு...

கூந்தலுக்கு
நன்றி..
என்னவள்
ஸ்பரிசத்தை உணர
வாய்ப்பளித்ததற்கு....

அன்புடன்
மன்மதன்

பரம்ஸ் ரசிகரே.. நல்லா இருக்கா??

பிரியன்
19-05-2005, 03:45 AM
பதினான்காவது கவிதை

பிரிந்திருந்த பொழுதெல்லாம்
மனதோடு பேசிப் பேசி
கூடல் பொழுதுகளிலும்
மொழியை மறந்துவிடும்
நம் இதழ்கள்.....

பிரியன்
19-05-2005, 03:48 AM
நாய் மேல் இருக்கும் பயத்தால் கையை உதறி நடந்தாள்.. அதான் குழப்பமே.. சரி..சரி..போனிலே பேசிக்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

முதலில் கையை உதறி நடந்தாள்... அதன்பிறகுதான்....

போங்கய்யா இதையெல்லாமாவா விளக்கவுரை, பதிப்புரை எல்லாம் கொடுத்துக்கிட்டு இருக்கிறது..

thempavani
19-05-2005, 05:03 AM
அப்படியா.. நான் கொஞ்சம் வீக்.. புரிஞ்சுக்கறதிலே..
அன்புடன்
மன்மதன்

ஆகா..ஆகா..

amudha
20-05-2005, 12:09 AM
அனுபவங்கள் அல்ல கனவுகள்..

கவிதையை அனுபவியுங்கள் உங்கள் காதலோடு....

மன்மதா தொடரட்டும் உன் அசத்தல் கவிதைகள்....

அச்சோ...கனவே இப்படியெல்லாமா?? :)

பிரியன்
20-05-2005, 09:08 AM
பதினைந்தாவது கவிதை......

கால்கள் தழுவிய
சலங்கைகள் களவாடி
முகம் பதித்தேன்

மணி( கண் ) ஒன்று
கன்னம் கிழித்தது
வந்தது குருதியல்ல

ம்ம்ம் ம்ம்ம்

எத்தனை மென்மையடி
உன் மனம்-
மருந்தாய்
வியர்வைத் துளிகள்..........

karikaalan
20-05-2005, 11:51 AM
உங்கள்ப்ரியன்ஜி

இன்றுதான் இக்கவிதை மாலையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபாரம் .... தங்கள் கவிதைகளும் சரி, எதிர்க்கவிதை, துணைக்கவிதை என்று நண்பர்கள் எழுதுவதும் சரி. மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

பிரியன்
21-05-2005, 03:44 AM
உங்கள்ப்ரியன்ஜி

இன்றுதான் இக்கவிதை மாலையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபாரம் .... தங்கள் கவிதைகளும் சரி, எதிர்க்கவிதை, துணைக்கவிதை என்று நண்பர்கள் எழுதுவதும் சரி. மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

நன்றி கரிகாலன். கண்டிப்பாக தொடர்வேன்,
நான் பழைய பிரியன் தான். புது மன்றத்தில் நுழைய முடியாமல் உங்கள் பிரியன் ஆகி விட்டேன்.

மன்மதன்
21-05-2005, 09:51 AM
பதினான்காவது கவிதை

பிரிந்திருந்த பொழுதெல்லாம்
மனதோடு பேசிப் பேசி
கூடல் பொழுதுகளிலும்
மொழியை மறந்துவிடும்
நம் இதழ்கள்.....

இதழோட
இதழ் சேர்த்து
புது மொழி உண்டாக்கும்
இலக்கிய திறமை
காதலுக்கு உண்டு..

எத்தனை மொழிகள்
உண்டானாலும்
அதை
ஊமையாக்கும்
சக்தி கொண்டது
அதே காதல்..

அன்புடன்
மன்மதன்

ப்ரியன்ஜி .. போனில் விளக்கியதற்கு நன்றி.. ;)

மன்மதன்
21-05-2005, 09:59 AM
பதினைந்தாவது கவிதை......

கால்கள் தழுவிய
சலங்கைகள் களவாடி
முகம் பதித்தேன்

மணி( கண் ) ஒன்று
கன்னம் கிழித்தது
வந்தது குருதியல்ல

ம்ம்ம் ம்ம்ம்

எத்தனை மென்மையடி
உன் மனம்-
மருந்தாய்
வியர்வைத் துளிகள்..........


நித்தம் நித்தம்
உன்னை காண
பல மைல்கள்
நடந்து திரிந்து...

வியர்க்க விறுவிறுக்க
ஒரு மரத்தின் மறைவில்
நின்று கொண்டு
காத்திருக்கையில்...

தோழியர் படை சூழ
நடிகர்களை பற்றி
அரட்டை
அடித்தவண்ணம்
நீ
என்னை கடந்து
செல்கையில்..

என்னையும்
ஒரு நடிகனாக கற்பனை
பண்ணி.. உன்னிடம் சொன்ன
அடுத்த கணம்..

'நீ எனக்கு
மட்டும்தான்'
என்று சொல்லி
வைத்தாயே ஒரு குட்டு..

காதலில்
தேசிய விருது பெற்றேன்..
அப்பொழுது...

அன்புடன்
(நடிகன் - காதலில் அல்ல ;) ) மன்மதன்

பி.கு : ப்ரியன்ஜி .. உங்க கவிதைக்கு சும்மா வார்த்தையாக கருத்து எழுத தோணாமல் கவிதையாக எனக்கு என்ன தோணியதோ அதை எழுதினேன்.. தப்பாக நினைக்க வேண்டாம்.. வேணும்னா குட்டு வைத்திடுங்க..ஹிஹி..

பரஞ்சோதி
21-05-2005, 10:08 AM
மன்மதா, எத்தனை ரதிகளப்பா உனக்கு.

பிரியனில் கவிதை தேனில் ஊறிய பலா என்றால் உங்க கவிதை மாம்பலம் போட்ட பதநீர் மாதிரி இனிமையோ இனிமை.

இதை எல்லாம் பார்க்கும் போது காதலித்த நேரத்தில் காதலிக்கு கால் கடுக்க காத்திருப்பதற்கு பதில் கவிதை எழுதியிருந்தால் ஒரு வேளை என் காதல் வெற்றி பெற்றிருக்குமோ.

(மக்கா, குடும்பத்தில் குழப்பம் உண்டாக்க நினைக்க வேண்டாம்).

பிரியன்
21-05-2005, 10:44 AM
நித்தம் நித்தம்
உன்னை காண
பல மைல்கள்
நடந்து திரிந்து...

வியர்க்க விறுவிறுக்க
ஒரு மரத்தின் மறைவில்
நின்று கொண்டு
காத்திருக்கையில்...

தோழியர் படை சூழ
நடிகர்களை பற்றி
அரட்டை
அடித்தவண்ணம்
நீ
என்னை கடந்து
செல்கையில்..

என்னையும்
ஒரு நடிகனாக கற்பனை
பண்ணி.. உன்னிடம் சொன்ன
அடுத்த கணம்..

'நீ எனக்கு
மட்டும்தான்'
என்று சொல்லி
வைத்தாயே ஒரு குட்டு..

காதலில்
தேசிய விருது பெற்றேன்..
அப்பொழுது...
அன்புடன்
(நடிகன் - காதலில் அல்ல ) மன்மதன்

உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...


இந்த வார்த்தையில் காதல் அழகான கவிதையாய் துள்ளி விளையாடுகிறது

பரஞ்சோதி
காதலிக்கு கவிதை கொடுப்பது மாதிரி ஒரு முட்டாள்தனம் இந்த உலகத்தில் இல்லை...

காதலன் கவிதையை விரும்புவதைக்கூட பல பெண்கள் விரும்புவதில்லை

ஆகையால் மகிழ்ந்து கொள்ளுங்கள்

மன்மதன்
21-05-2005, 10:48 AM
உங்கள் கவிதை மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது...


இந்த வார்த்தையில் காதல் கவிதையாய் துள்ளி விளையாடுகிறது



நன்றி பரம்ஸ் (லூஸ் டாக் விடாதே. ஃபேக்ஸ் :D வந்திட போகுது..)

நன்றி ப்ரியன் ..
அன்புடன்
மன்மதன்

thempavani
21-05-2005, 12:50 PM
மன்மதா, எத்தனை ரதிகளப்பா உனக்கு.

உங்க கவிதை மாம்பலம் போட்ட பதநீர் மாதிரி இனிமையோ இனிமை.

.

அண்ணா மாம்பழம் போட்ட "மாலைப் பதநீர்" என்றிருக்கணுமோ..

எனது அனுபவம் இது...
மாலைப் பதநீரின் சுவையோ சுவை...

தவறாக எண்ணவேண்டாம்...

பிரியன்
21-05-2005, 07:20 PM
பதினாறவது கவிதை....

சின்ன பிரிவிற்காக
சமாதானமாகமல்
மெளனம் வளர்கிறேன்


கண்ணீரோடு நீ செல்ல
வருந்திய என்னை
கேலியாகச் சிரிக்கிறது
நீ விட்டுப் போன

கரடி பொம்மை.....

மன்மதன்
22-05-2005, 02:29 PM
பதினாறவது கவிதை....

சின்ன பிரிவிற்காக
சமாதானமாகமல்
மெளனம் வளர்கிறேன்


கண்ணீரோடு நீ செல்ல
வருந்திய என்னை
கேலியாகச் சிரிக்கிறது
நீ விட்டுப் போன

கரடி பொம்மை.....


சின்ன சின்ன
பிரிவுகளுக்காக
எத்தனை முறை
வேண்டுமானாலும்
உன்னுடன் சண்டை போட
தயார்...

பிரிவு
நம்முடைய
உறவை
பலப்படுத்தும் என்பதால்..

அன்புடன்
மன்மதன்

பிரியன்
22-05-2005, 07:25 PM
நன்றி மன்மதன்...

கிட்டதட்ட தனி மடல்கள் போலாகிவிட்டதே....

படிப்பவர்கள் கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.

கவிதைகள் நன்றாக இல்லாத பட்சத்தில் திருத்தி கொள்ளவாவது உதவிகரமாக இருக்கும்.....

இரண்டும் இல்லாமல் இருப்பது சோர்வைத்தான் தருகிறது....

மன்ற கவிஞர்களே வாருங்கள்.....

( சில நாட்களாகவே கவிதை தளத்தில் புதிய பதிவுகள் ஏதும் இல்லை....அருமை நண்பர் ராம்பால், கவிதா, பூ, முத்து, இனியன் மற்றும் பலரை காணவே இல்லையே...... அதனால்தான் இந்த வேண்டுகோள்... )

மன்மதன்
23-05-2005, 04:25 AM
ப்ரியனின் வேண்டுகோளில் நியாயம் இருக்கிறது.. வேணும்னே சில ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்தாலும் அதையும் கண்டுக்காம இருக்கிங்களே மக்கா.. கவிதா .. எங்கேம்மா இருக்கே..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
23-05-2005, 07:17 PM
பதினேழாவது கவிதை ....

என்னைப் பார்த்தபடியே
படியிறங்க
தவறி விழுந்தாய்.
பதட்டத்தோடு கை கொடுக்க
சட்டையை பற்றி
கண்களில் முத்தமிட்டாய்

என்ன செய்ய
இன்றும் வெற்றி
உனக்குத்தான்........

Iniyan
23-05-2005, 07:59 PM
மன்னிக்கனும். கொஞ்ச நாளாய் கருத்துகள் சொல்லாததற்கு. இனி ஒவ்வொன்றையும் பார்த்து படித்து அவசியம் கருத்து சொல்கிறேன்.

பரஞ்சோதி
24-05-2005, 04:35 AM
காதலில்
கொடுப்பதை விட
வாங்குவதில்
உண்டு
தனி சுகம்

pradeepkt
24-05-2005, 05:37 AM
வெற்றி கொள்வதும்
வெற்றியைக் கொடுப்பதும்
இருப்பதைக் கொடுப்பதும்
கொடுப்பதை எடுப்பதும்
சரி சமம்
காதலில் மட்டும்!
சூப்பர் ப்ரியன்.

மன்மதன்
24-05-2005, 05:45 AM
காதலில்
கொடுப்பதை விட
வாங்குவதில்
உண்டு
தனி சுகம்

நிறைய வாங்கிய அனுபவமோ.. :D
போ.கு
மன்மதன்

பிரியன்
24-05-2005, 10:29 AM
நன்றி இனியன், பிரதீப், பரஞ்சோதி, மன்மதன்....

karikaalan
24-05-2005, 12:31 PM
காதல்வயப்பட்டால் ஒவ்வொரு அசைவும் ஒரு அனுபவம்தான்.
வாழ்க உங்கள்பிரியன்ஜி.

===கரிகாலன்

amudha
24-05-2005, 09:04 PM
உ.பிரியன்,

உங்க கவிதைகள் எல்லாமே படிக்க இனிமையா இருக்கு...சினிமாவில் காதல் காட்சிகளில் வரும் சின்ன சின்ன சம்பவங்கள் மாதிரி...வாழ்த்துக்கள்!! :)
உங்களோட இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு:


//சின்ன பிரிவிற்காக
சமாதானமாகமல்
மெளனம் வளர்கிறேன்


கண்ணீரோடு நீ செல்ல
வருந்திய என்னை
கேலியாகச் சிரிக்கிறது
நீ விட்டுப் போன

கரடி பொம்மை.....//


__________________

பிரியன்
25-05-2005, 07:59 PM
பதினெட்டாவது கவிதை....

மின்சாரமில்லா
மழை இரவில்
இமை மூடாமலே
அருகிலமர்ந்து
இதழ் பிரிக்காமலே
பேசிக் கொள்கிறோம்
அங்கே நானும்
இங்கே நீயுமாகி......

அறிஞர்
26-05-2005, 08:15 AM
பதினெட்டாவது கவிதை....

மின்சாரமில்லா
மழை இரவில்
இமை மூடாமலே
அருகிலமர்ந்து
இதழ் பிரிக்காமலே
பேசிக் கொள்கிறோம்
அங்கே நானும்
இங்கே நீயுமாகி......

அருமை அன்பரே

மழைத்துளிகளின்
சத்தமே...
பரிமாறும்
வார்த்தைகளோ......

karikaalan
26-05-2005, 08:19 AM
மின்சாரமில்லா மழையிரவு.....

ஆஹா.... எண்ணம் எங்கெங்கோ ஓடுகிறது. நன்றிகள் உங்கள்பிரியன்ஜி!

===கரிகாலன்

பிரியன்
26-05-2005, 08:43 AM
அருமை அன்பரே

மழைத்துளிகளின்
சத்தமே...
பரிமாறும்
வார்த்தைகளோ......

ஆமாம்.

மழை நின்ற அமைதியிலும்கூட வார்த்தைகள் பரிமாறிக் கொள்வதுண்டு..


நன்றி கரிகாலன்ஜி

மன்மதன்
26-05-2005, 09:40 AM
பதினெட்டாவது கவிதை....

மின்சாரமில்லா
மழை இரவில்
இமை மூடாமலே
அருகிலமர்ந்து
இதழ் பிரிக்காமலே
பேசிக் கொள்கிறோம்
அங்கே நானும்
இங்கே நீயுமாகி......

என்
குளிர்கால
இரவுகளின்....
கதகதப்பான
உன் நினைவுகள்..
சுட்டெறிக்கும்
உன் பார்வையை
மீறி...
என் பார்வைகள்
எங்கோயெல்லாம்
சென்று
கடைசியில்
உன் உதட்டருகில்
வந்து நிற்கும்..

பேச வேண்டாம்
என்று
நீ இருந்தாய்...
பேசவே வேண்டாம்
என்று
நானிருந்தேன்..

கடைசியில்
நம்
உள்ளம்
பேசிக்கொண்டதை..
கண்கள் அறியும்....


அன்புடன்
மன்மதன்

பிரியன்
26-05-2005, 09:43 AM
உணர்ச்சி பூர்வமான கவிதை மன்மதன். வாழ்த்துக்கள்

thempavani
26-05-2005, 09:44 AM
எப்பா... மன்மதா ரெம்ப அனுபவமோ... வார்த்தை கொட்டுது...

அருமை நண்பா ... தொடரு...

மன்மதன்
26-05-2005, 09:49 AM
நன்றி ப்ரியன், தேம்பா..

கவிதைக்கு அனுபவம் தேவையில்லை.. ஆனாலும் அனுபவிக்காம கவிதை எழுத எனக்கு ரொம்ப கடினம்.. அனுபவம் பாதி, கற்பனை மீதி கலந்து செய்த அல்வாதான்..

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
26-05-2005, 10:44 AM
பேச வேண்டாம்
என்று
நீ இருந்தாய்...
பேசவே வேண்டாம்
என்று
நானிருந்தேன்..

கடைசியில்
நம்
உள்ளம்
பேசிக்கொண்டதை..
கண்கள் அறியும்....




அருமை மன்மதா...... இன்னும் தொடருங்கள்.... அழகாக எழுதுகிறீர்கள்

மன்மதன்
26-05-2005, 10:45 AM
நன்றி அறிஞரே
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
26-05-2005, 10:46 AM
இன்னும் எழுதுங்கள்...

என்ன நாளை எழுத எண்ணமா...

சுவேதா
26-05-2005, 05:35 PM
நித்தம் நித்தம்
உன்னை காண
பல மைல்கள்
நடந்து திரிந்து...

வியர்க்க விறுவிறுக்க
ஒரு மரத்தின் மறைவில்
நின்று கொண்டு
காத்திருக்கையில்...

தோழியர் படை சூழ
நடிகர்களை பற்றி
அரட்டை
அடித்தவண்ணம்
நீ
என்னை கடந்து
செல்கையில்..

என்னையும்
ஒரு நடிகனாக கற்பனை
பண்ணி.. உன்னிடம் சொன்ன
அடுத்த கணம்..

'நீ எனக்கு
மட்டும்தான்'
என்று சொல்லி
வைத்தாயே ஒரு குட்டு..

காதலில்
தேசிய விருது பெற்றேன்..
அப்பொழுது...

அன்புடன்
(நடிகன் - காதலில் அல்ல ;) ) மன்மதன்

பி.கு : ப்ரியன்ஜி .. உங்க கவிதைக்கு சும்மா வார்த்தையாக கருத்து எழுத தோணாமல் கவிதையாக எனக்கு என்ன தோணியதோ அதை எழுதினேன்.. தப்பாக நினைக்க வேண்டாம்.. வேணும்னா குட்டு வைத்திடுங்க..ஹிஹி..

ஆகா மன்மதன் எத்தனையாவது ரதி கூறினா 'நீ எனக்கு
மட்டும்தான்'
என்று சொல்லி
வைத்தாயே ஒரு குட்டு என்று


(மிகவும் நன்றாக இருக்கிறது மன்மதன் தொடர்ந்து எழுதுங்கள்)

சுவேதா
26-05-2005, 05:37 PM
பதினாறவது கவிதை....

சின்ன பிரிவிற்காக
சமாதானமாகமல்
மெளனம் வளர்கிறேன்


கண்ணீரோடு நீ செல்ல
வருந்திய என்னை
கேலியாகச் சிரிக்கிறது
நீ விட்டுப் போன

கரடி பொம்மை.....

மிகவும் நன்றாக இருக்கிறது பிரியன் அண்ணா!

சுவேதா
26-05-2005, 05:46 PM
பிரியன் அண்ணா உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக உள்ளது முலுவதும் படித்துவிட்டேன் மிகவும் அருமை. அத்துடன் மன்மதன் உங்கள் கவிதைகளும் நன்றாக உள்ளது நல்ல அனுபவத்துடன் எழுதியுள்ளீர்கள் போல் வாழ்த்துக்கள். மீண்டும் மீண்டும் எழுதுங்கள் எழுத எனது வாழ்த்துக்கள்!

Iniyan
26-05-2005, 05:59 PM
காதலில் தேசிய விருது பெற்ற மன்மதனுக்கு வாழ்த்துக்கள். ப்ரியன் கரடி பொம்மை கூட நம்மைப் பார்த்து சிரிக்க வைக்கும் காதல் காலத்தில் கண்ணீர்த்துளிகளின் வலிமை தான் என்ன?

பிரியன்
28-05-2005, 12:47 PM
பத்தொன்பதாவது கவிதை...

விரல் தொடவே அனுமதிக்காதவள்
நீ - இன்று
சுகமற்று கிடந்த என்னை
தோளோடு சாய்த்துக் கொண்ட
வேளையில்

என்னைத் தழுவும் உன் மூச்சுக் காற்றின்
பரிதவிப்பில் துடித்த அன்பில்
இளகிப் போன
இக்கணம் போல்
என்றும்
இருந்திடக் கூடாதா!!

பரஞ்சோதி
29-05-2005, 04:50 AM
ப்ரியன் என்று காதல் வயப்பட்டோமோ அன்றே நாம் நிரந்தர சீக்காளி ஆகி விட்டோமே.

Nanban
29-05-2005, 06:51 PM
.............அத்துடன் மன்மதன் உங்கள் கவிதைகளும் நன்றாக உள்ளது நல்ல அனுபவத்துடன் எழுதியுள்ளீர்கள் போல்

நல்ல அனுபவம் கிடைக்கும் முன்னதாக எழுதி இருக்கிறார், சுவேதா....

அனுபவத்திற்காக காத்திருந்து, காத்திருந்து காலவிரயத்தை விரும்பாதவர் மாதிரி இருக்கிறது, அவரது கவிதைகள்....

சரி, நீங்கள் நல்ல அனுபவம் என்று குறிப்பிட்டது எதை?

பிரியன்
29-05-2005, 07:34 PM
ப்ரியன் என்று காதல் வயப்பட்டோமோ அன்றே நாம் நிரந்தர சீக்காளி ஆகி விட்டோமே.

பரஞ்சோதி கவிதை சொல்ல வந்த செய்தி அதுவல்ல..... இன்னும் கொஞ்சம் உள்சென்று பாருங்கள்.தாங்கள் என்ன உணர்ந்தீர்கள் என்பதைச் சொல்லுங்கள்

பிரியன்
30-05-2005, 09:03 PM
இருபதாவது கவிதை

உள்ளே செல்லத் தடுக்கும்
கூச்சத்தால்
கல்லூரி வாசலிலே
காத்திருக்கிறேன.

பார்வை கண்டு
என்னருகே நீ வர
என்னை மறித்து
நலம் விசாரிக்கும்
உன் தோழிக்ளோடும்
பொறுமையாய் பேசுகிறேன்
ஆண்டவன் வரம் கொடுத்தாலும்
இந்தப் பூசாரிகள்....
என உள்ளுக்குள்
முணகிக் கொண்டே

பிரியன்
01-06-2005, 02:03 PM
இருபத்தொன்றாவது கவிதை

துப்பட்டாவைக் கட்டிக் கொண்டு
கை பற்றி இழுத்து
ஓர் இருக்கை ஊஞ்சலில்
மடியில் வைத்து
கூந்தல் விலக்கி
காது கடித்து
உதட்டோடு
உயிர் சேர்க்க
கணா கானண்கிறேன்.

அணைத்தால்
சூரியன் பார்க்கும்
பனியின் ஆசையென
அறியாமல்

pradeepkt
02-06-2005, 04:18 AM
சூரியன் பார்க்கும் பனியல்ல உங்கள் ஆசை ப்ரியன்.
தொடர்ந்து படித்து வருகிறேன்.
காதல் சொட்டுகிறது உங்கள் நடையில்.

பிரியன்
02-06-2005, 05:12 AM
நன்றி பிரதீப் .......

பிரியன்
03-06-2005, 02:18 PM
இருபத்திரண்டாவது கவிதை.....

பேசிக்கொண்டே
உன் கைப்பையிலிருக்கும்
கைக்குட்டை,
சின்னப் பொட்டுகள்,
வண்ணத் தோடுகள்,
கொண்டை ஊசிகள்,
சாமி படங்கள் நடுவே
பிறந்த நாள் பரிசை
ஒளித்ததைக் கண்டு சிரிக்கிறது
என் முகம் பார்த்தாலும்
உன்னைக் காட்டிய
கண்ணாடி.....

பிரியன்
04-06-2005, 06:36 PM
இருபத்தி மூன்றாவது கவிதை....

என் மேல் கோபம்
பேச மாட்டேன்,
பிடிக்கவில்லை,
போகிறேன்,
கடைசி சந்திப்பிது-
ஒட்டுக் கேட்டவர்கள்
ஆறுதல் சொல்லுகிறார்கள்
எதிர்பதங்களே
அருஞ்சொற்பொருளாகும்
நம் கூட்டின்
அகராதி தெரியாமல்...

அறிஞர்
07-06-2005, 03:38 AM
இருபத்தி மூன்றாவது கவிதை....
எதிர்பதங்களே
அருஞ்சொற்பொருளாகும்
நம் கூட்டின்
அகராதி தெரியாமல்...
எதிபதங்களும்
அருஞ்சொற்களாவது
காதலில்
இயற்கையென்று..
ஒட்டு கேட்பவர்களுக்கு...
புரியவா
போகிறது...
-=-------
அருமை நண்பரே தொடருங்கள்...

பிரியன்
07-06-2005, 03:40 AM
புரிந்தால் காதல் நெருக்கமாகாதே......
கருத்துக்கு நன்றி அறிஞரே

அறிஞர்
08-06-2005, 02:06 AM
புரிந்தால் காதல் நெருக்கமாகாதே......
கருத்துக்கு நன்றி அறிஞரே
புரியாவிட்டால்...
காதலே வராதே....
...
அது என்னவோ...
புரிந்தும்
புரியாமல்
இருப்பதில்
தனி சுகம்...

பிரியன்
08-06-2005, 04:47 AM
இருபத்தி நான்காவது கவிதை

ஒதுங்கிப் போகும்
என் தம்பியின் கூச்சம் கலைத்து
அன்பைப் பொழிகிறாய்
ஆகாயமாய்
கூந்தலை உன்னிடம் தந்து
மடியில் உறங்கும் தங்கையிடம்
பங்கு கேட்கையில்
அவன் காதத் திருகியும்
சிரிக்கையில்தான் கண்டேன்
உனக்குள் இருக்கும்
தாயை.......

pradeepkt
08-06-2005, 05:58 AM
உங்கள் அனுமதி பெறாமலே தொடர்ச்சி!

நம்பினேன் இன்று முதல்
என்றும் என்வாழ்வில் ஆண்டவன்
தீர்ப்பாய் வந்துதித்த நீ
தீர்ப்பாய் என் நோயை!

காதலி முதலில் தீர்ப்பது உங்களுக்கு உள்ளிருக்கும் தாய்மேல் வரும் ஏக்கத்தைத்தான் என்று மனவியலாளர்கள் கூறுகின்றனர். அதை அனாயசமாக சின்னஞ்சிறு நிகழ்வுகள் மூலம் உணர்த்தியிருக்கிறீர்கள்.
பாராட்டுகள்

அன்புடன்,
பிரதீப்

பிரியன்
08-06-2005, 06:03 AM
அன்பைத் தொடர அனுமதி எல்லாம் தேவையில்லை பிரதீப். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே...நல்ல கவிதை நல்ல முடிவு,

தாரமும் தாய்தான்....

புரிந்தவர்களுக்கு வாழும் ஒவ்வொரு நொடியும் சொர்க்கமே

மன்மதன்
08-06-2005, 06:49 AM
இருபதாவது கவிதை

உள்ளே செல்லத் தடுக்கும்
கூச்சத்தால்
கல்லூரி வாசலிலே
காத்திருக்கிறேன.

பார்வை கண்டு
என்னருகே நீ வர
என்னை மறித்து
நலம் விசாரிக்கும்
உன் தோழிக்ளோடும்
பொறுமையாய் பேசுகிறேன்
ஆண்டவன் வரம் கொடுத்தாலும்
இந்தப் பூசாரிகள்....
என உள்ளுக்குள்
முணகிக் கொண்டே


எத்திராஜ்
பெயரை நினைத்தாலே
எத்தனை நாள்
நியாபகங்கள்
மனதில் ஓடி மறையும்...

உன்
கல்லூரி வாசலில்
காவலாளியுடன்
நட்பு
கொண்டாடியதை..

பக்கத்து டீக்கடை
பெஞ்சில்
பதுங்கி நின்று
சிகரெட்டை
பத்த வைக்கையில்..

எதிரே இருக்கும்
இண்டர்நெட்
செண்டரில்
நின்று கொண்டு
எஸ்.எம்.எஸ் அனுப்புகையில்...

நீ
உன்
பார்வையாலேயே
என்னை போகச்
சொல்லி மிரட்டியதை..

மொத்தத்தில்
உன் கல்லூரி பக்கம்..
இருந்தது
என்னுடைய
சொர்க்கம்......


அன்புடன்
மன்மதன்

pradeepkt
08-06-2005, 06:54 AM
அடேயப்பா ஒரே ஆட்டோகிராப் மழையா இருக்கு.
இப்பத்தானய்யா புரியுது ஏன் உங்களை தலை "ஆட்டோ" மன்மதன்னு கூப்பிடுறாருன்னு. எத்தனை ஆட்டோ அந்த நாளில உங்களைத் துரத்தியதோ, அந்த இண்டர்நெட் சென்டருக்கே வெளிச்சம்.

பிரியன்
08-06-2005, 07:00 AM
மன்மதா இதெல்லாம் சொல்லவே இல்லையே...கடைக்கண் பார்வையால் எப்போதும் வீழ்பவர்கள் ஆன்களே

மன்மதன்
08-06-2005, 07:04 AM
இருபத்தொன்றாவது கவிதை

துப்பட்டாவைக் கட்டிக் கொண்டு
கை பற்றி இழுத்து
ஓர் இருக்கை ஊஞ்சலில்
மடியில் வைத்து
கூந்தல் விலக்கி
காது கடித்து
உதட்டோடு
உயிர் சேர்க்க
கணா கானண்கிறேன்.

அணைத்தால்
சூரியன் பார்க்கும்
பனியின் ஆசையென
அறியாமல்

என்
குறும்பு
பிடிக்கும் என
அடிக்கடி நீ
சொல்லக்கேட்டு..

ஒரு தினம்
உன்
துப்பட்டாவை
நான்
இழுக்க...

நிலை தடுமாறி.
என் மீது
நீ
விழுந்த கணம்...

என் மனம்
தடுமாறி
போனதை
யார் அறிவார்....

என்
குறும்பையெல்லாம்
நிறுத்திய
அந்த கணம்..

என்
காதலை
வளர்த்த
காதல் தினம்...

-
மன்மதன்

பிரியன்
08-06-2005, 07:09 AM
நிலை தடுமாறி.
என் மீது
நீ
விழுந்த கணம்...

என் மனம்
தடுமாறி
போனதை
யார் அறிவார்....

என்
குறும்பையெல்லாம்
நிறுத்திய
அந்த கணம்..

இந்த கணங்கள்தானே நம் காதலை, காதலின் ஆழத்தை உணர்த்திவிட்டுச் செல்கிறது. மிகவும் இயல்பான காதல்கவிதை...

மன்மதன்
08-06-2005, 07:09 AM
மன்மதா இதெல்லாம் சொல்லவே இல்லையே...கடைக்கண் பார்வையால் எப்போதும் வீழ்பவர்கள் ஆன்களே

திருத்திக்கொள்ளுங்கள் பிரியன்.. சில நேரம் பெண்களும்.. (கடைக்கண் என்றால் என்ன ?? )
அன்புடன்
மன்மதன்

பிரியன்
08-06-2005, 07:26 AM
மாறுகண்ணா?கடைக்கண்ணா என்பதெல்லாம் பார்ப்பவர் உணர்வதில் இருக்கிறது . நான் ஒன்றும் சொல்ல முடியாது

கவனிக்க - இது என்னுடைய 200வது பதிப்பு :D :D :D :)

மன்மதன்
08-06-2005, 07:29 AM
இருபத்திரண்டாவது கவிதை.....

பேசிக்கொண்டே
உன் கைப்பையிலிருக்கும்
கைக்குட்டை,
சின்னப் பொட்டுகள்,
வண்ணத் தோடுகள்,
கொண்டை ஊசிகள்,
சாமி படங்கள் நடுவே
பிறந்த நாள் பரிசை
ஒளித்ததைக் கண்டு சிரிக்கிறது
என் முகம் பார்த்தாலும்
உன்னைக் காட்டிய
கண்ணாடி.....


என்னவள்
பிறந்த
நாள் பரிசாக
என்ன
கொடுக்கலாம்..
என்று
சிந்தித்து சிந்தித்து...

கடைசியில்
நான்
வாங்கி
கொடுத்தது
ஸ்டிக்கர் பொட்டு

சரியான
கஞ்சூஸ் நீ
என்று கடிந்து
கொண்டாலும்..

அந்த
பொட்டை
நீ
உன் முகம்
பார்க்கும்
கண்ணாடியில்
ஒட்டி வைத்து

தினம் தினம்
அதற்கு முன்
உன்
நெற்றியை
தோதாக வைத்து
என்னை நினைத்து
பொட்டு வைத்து
கொண்டதை

சொல்லிவிட்டு
போனது
உன்
பிம்பம்...

-
மன்மதன்

பிரியன்
08-06-2005, 07:34 AM
என் கவிதைகளோடு உங்கள் காதல் பக்கங்களையும் புரட்டுவது இதமாய் இருக்கிறது

மன்மதன்
08-06-2005, 07:50 AM
மாறுகண்ணா?கடைக்கண்ணா என்பதெல்லாம் பார்ப்பவர் உணர்வதில் இருக்கிறது . நான் ஒன்றும் சொல்ல முடியாது

கவனிக்க - இது என்னுடைய 200வது பதிப்பு :D :D :D :)

வாழ்த்துக்கள் ப்ரியன்..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
08-06-2005, 08:24 AM
இருபத்தி நான்காவது கவிதை
உனக்குள் இருக்கும்
தாயை.......
தாரத்தினுள்..
தாயை
கண்டால்...
வாழ்வில் இன்பமே.....
-----------
நன்றாக இருக்கிறது தொடருங்கள்...

அறிஞர்
08-06-2005, 08:26 AM
எத்திராஜ்
பெயரை நினைத்தாலே
-;;;
உன்
பார்வையாலேயே
என்னை போகச்
சொல்லி மிரட்டியதை..

மொத்தத்தில்
உன் கல்லூரி பக்கம்..
இருந்தது
என்னுடைய
சொர்க்கம்......


அன்புடன்
மன்மதன்
கன்னியின்
பார்வைக்கு
எத்தனை அர்த்தங்கள்........
--
வாழ்துக்கள்.. இன்னும் தொடருங்கள்

அறிஞர்
08-06-2005, 08:28 AM
என்னை நினைத்து
பொட்டு வைத்து
கொண்டதை

சொல்லிவிட்டு
போனது
உன்
பிம்பம்...

-
மன்மதன்
அப்படியா
சொன்னது..
அந்த பொய்
பிம்பம்.....
---
உன்னை....
வந்து
கவனித்து
கொள்கிறேன்....
----------
கலக்குங்கள்.. மன்மதா.....

பிரியன்
12-06-2005, 02:26 PM
இருபத்தைந்தாவது கவிதை....

உ‎ன்னை இன்னொரு மகளெ‎ன்ற
என் பெற்றோரும் திகைக்கிறார்கள்
தாலி பொருத்தம் இல்லா
நட்சத்திரக் குறிப்பால்...

நா‎ன் இல்லாமலே
உனக்கு தண்டனையாவதா?
காலத்திற்கும் சுமையாக ‏இருப்பதா?
நேசத்ததற்காக ‏இருளைத் தருவதா?

பதிலில்லா கேள்விகள்
தைக்க‎
வளர்ந்த சூழலி‎‎ன்
நம்பிக்கை சுழலில்
நேசத்தி‎ன் ழத்தில்
சிக்கி தத்தளிக்கிறது
மனம்.

பிரிவி‎ன் வலிகளை
தாங்கிடுவாய் எ‎ன்றே
வேறொருவனை
என வாயெடுக்க
அதிராமல் கேட்டாய்.
நா‎ன் பிணமாய்
வாழ்வதுதான்
உன் விருப்பமா?
நா‎ன் உறைந்து போனேன்

மன்மதன்
12-06-2005, 03:04 PM
வெள்ளி (25 )வது கவிதை..


கடைசி வரிகள்

ரொம்பவே பாதிக்குது..


பதில் கவிதை

எழுத மனம்

முற்பட்டாலும்...


கடைசி வரியாக


எதை எழுத... ??


அன்புடன்
மன்மதன்

பிரியன்
13-06-2005, 04:29 AM
தங்களுக்கு தோன்றுவதை எழுதுங்கள். இனிமேல் வரும் கவிதைகளுக்குத்தான் தங்கள் பதில் கவிதைகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்

பிரியன்
13-06-2005, 04:34 AM
இருபத்தி ஆறாவது கவிதை

உன் அன்பை உறுதியாய்ச் சொல்லிவிட்டு
போய் விட
எனக்கு சுவாசமே
சிரமமாகிப்போனது.
உன் அன்பின் ஆழத்தில் மூழ்கி கிடப்பதாலே
துயரமேதும் நேர்ந்திடுமோ என்ற
அச்சத் திரையை
உதறமுடியாமல்
கிரகணம் பிடித்த நிலவாய்
நீள்கிறது
இந்த இரவும்
என் தவிப்பும்

பிரியன்
13-06-2005, 05:37 AM
இருபத்தி ஏழாவது கவிதை

கனவில்
திருமணமண்டபம்,
எங்கும் ஆரவார சத்தம்

என் உறவுகள் மனம் கலங்கி
போலிப் புன்‎னகை செய்கிறது,
ஆறுதல் சோல்ல என்னை
தேடி அலையும் கண்களோடு,

நானும் நுழைகிறே‎ன்.
தளர்ந்தே நடந்தேன்.
ஒவ்வொரு நொடியும்
மனவலியாய்
என்னை சுற்றி கடக்கிறது..

சடங்குகள் ஆரம்பிக்கி‎ன்‎றன.
நெஞ்சம் நெருப்பாய் எரிய
சாட்சியாய் நிற்கிறே‎ன்.
கண்‎ணீர் மறைக்க
முய‎ன்று முடியாமல்
கைகுட்டையால் மறைத்து
அலைகிறேன் அங்குமிங்கும்...

வெறித்து வெறித்து பார்க்கிறே‎ன்
அதிசியம் எதுவும் நிகழாதா
என்ற ஏக்கத்துடன்...

‏இன்னும் சிறிது நொடியில்
திருமணம் முடியப்போகிறது...
அட்சதையோடு நிற்கிறே‎ன்
நொறுங்கிபோ‎ன பூமியி‎ன் மேல்

தாலியும் எடுத்தாகிவிட்டது‏.
கட்டிய காட்சி கண்டு
ச‎ன்னமாய் ஒரு பெருமூச்சு.
அம்மா-அப்பா!!
மணப்பெண்ணாய்
வேறொருவள்

மன்மதன்
13-06-2005, 07:50 AM
இருபத்தி ஆறாவது கவிதை

உன் அன்பை உறுதியாய்ச் சொல்லிவிட்டு
போய் விட
எனக்கு சுவாசமே
சிரமமாகிப்போனது.
உன் அன்பின் ஆழத்தில் மூழ்கி கிடப்பதாலே
துயரமேதும் நேர்ந்திடுமோ என்ற
அச்சத் திரையை
உதறமுடியாமல்
கிரகணம் பிடித்த நிலவாய்
நீள்கிறது
இந்த இரவும்
என் தவிப்பும்

நீ
என் மனதில்
குடியேறிய
பிறகு

எனக்கு
கிரகணம்தான்
பிடிச்சிருக்கு போல..

யாரைப்
பார்த்தாலும்
அவர்
முகம்
இருண்டு
போய் நீயெல்லவா
தெரிகிறாய்
பிரகாசமாய்...


-
மன்மதன்

மன்மதன்
13-06-2005, 07:59 AM
நொறுங்கிபோ‎ன பூமியி‎ன் மேல்

தாலியும் எடுத்தாகிவிட்டது‏.
கட்டிய காட்சி கண்டு
ச‎ன்னமாய் ஒரு பெருமூச்சு.
அம்மா-அப்பா!!
மணப்பெண்ணாய்
வேறொருவள்

சினிமாவில் தெரியும் பிம்பங்களின் காதல் தோல்வியையே தாங்காத இதயம். தனக்கே தனக்கான காதலை தொலைத்து விட்டு புலம்பி திரியும் மனதுக்கு ஒரே ஆறுதல், கிடைக்கும் மனைவியின் காதலில்தான் இருக்கிறது..

இங்கே அப்பா-அம்மா கட்டாயத்தின் பேரில் மட்டுமே இன்னொருவளுக்கு தாலியை கட்டுகிறான் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது.. தீர்ப்பை மாற்றி சொல்லுங்க பிரியன். கவிதையிலேயாவது அட்லீஸ்ட்..

அன்புடன்
மன்மதன்

பிரியன்
13-06-2005, 08:22 AM
மன்மதன் நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.காதலின் ஆழத்தை வெளிப்படுத்தவே இக்கவிதையை இங்கு இணைத்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் அல்ல. இத்தொகுப்பில் இதுவும் ஒரு முக்கியமான கவிதை. உங்கள் தவறான புரிதலுக்கு நான்தான் காரணம்.

என் கவிதையில் மூன்றாம் அணி கிடையாது.

கவிதையின் தொடக்கத்தில் கனவில் என்று சேர்த்துக் கொண்டு படியுங்கள் முந்தைய கவிதையின் தொடர்சியே என்பது தெரியும்.

மன்மதன்
13-06-2005, 08:45 AM
விளக்கத்திற்கு நன்றி பிரியன்.
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
13-06-2005, 11:43 AM
இருபத்தி ஆறாவது கவிதை
துயரமேதும் நேர்ந்திடுமோ என்ற
அச்சத் திரையை
உதறமுடியாமல்
கிரகணம் பிடித்த நிலவாய்
நீள்கிறது
இந்த இரவும்
என் தவிப்பும்

கை பிடிக்கும் வரை
அச்சத்துடன்
கிரகணம் பிடித்த நிலவாய்
இரவுகள்...
தவிப்புடன்
கழிய வேண்டும்
என்பது நியதியோ....

அறிஞர்
13-06-2005, 11:44 AM
இருபத்தி ஏழாவது கவிதை

கனவில்

அட்சதையோடு நிற்கிறே‎ன்
நொறுங்கிபோ‎ன பூமியி‎ன் மேல்

தாலியும் எடுத்தாகிவிட்டது‏.
கட்டிய காட்சி கண்டு
ச‎ன்னமாய் ஒரு பெருமூச்சு.
அம்மா-அப்பா!!
மணப்பெண்ணாய்
வேறொருவள்

கனவை கலைக்க...
தேவதை நேரில்
வந்தாளோ......

பிரியன்
13-06-2005, 11:53 AM
கை பிடிக்கும் வரை
அச்சத்துடன்
கிரகணம் பிடித்த நிலவாய்
இரவுகள்...
தவிப்புடன்
கழிய வேண்டும்
என்பது நியதியோ....

அன்பிருக்குமிடங்களிலெல்லாம் இந்த தடுமாற்றங்கள் நிகழ்ந்துவிடுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. என்ன செய்ய

பிரியன்
13-06-2005, 11:55 AM
கனவை கலைக்க...
தேவதை நேரில்
வந்தாளோ......

தேவதை ( கவிதை ) வரத்தானே வேண்டும்.. பழைய உளறல்கள் தொகுப்பில் வெளிவந்த சில கவிதைகளை நீக்கிவிட நினைத்திருப்பதால் இனி எப்படி வரவேண்டுமென்று கொஞ்சம் யோசித்து கொண்டிருக்கிறேன்...

karikaalan
13-06-2005, 12:56 PM
25-வது கவிதை மெய்யாலுமே அருமை. சொன்னது போல் 'தைக்கிறது'.

நாள் நட்சத்திரம் பார்த்தா காதல் கொள்ளமுடியும்?!

===கரிகாலன்

அறிஞர்
14-06-2005, 02:54 AM
தேவதை ( கவிதை ) வரத்தானே வேண்டும்.. பழைய உளறல்கள் தொகுப்பில் வெளிவந்த சில கவிதைகளை நீக்கிவிட நினைத்திருப்பதால் இனி எப்படி வரவேண்டுமென்று கொஞ்சம் யோசித்து கொண்டிருக்கிறேன்...
என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.. உதவுகிறோம்... பழையதை இங்கு மாற்றி தரவா...

பிரியன்
14-06-2005, 05:05 AM
இல்லை. இந்த தொகுப்பு யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வர வேண்டும் என்பது என் பெற்றோரின் விருப்பம். அதனால் சில மாறுதல்களை செய்ய எண்ணி இருக்கிறேன். அதனால் தான் அப்படி சொல்லியிருந்தேன்.

பிரியன்
15-06-2005, 04:41 AM
இருபத்தி எட்டாவது கவிதை

தனித்தனி
நேசம் நமக்கில்லை
நிருபித்த உ‎ன்முன்
சிறுமை உணர்வில்
நெஞ்சம் குறுகுறுக்க
முகம் பார்க்க முகமில்லாமல்
ச‎ன்னல் கம்பிகளில் புதைந்திருந்தே‎ன்

கை பற்றி அருகே
அமரவைக்க
மெளனம் உடைத்து
உன் உள்ளங்கால்களை
நனைக்கிறேன்.
க‎ன்னம் பிடித்து
நீ பார்த்த பார்வையில்
கரைகிறது
எ‎ன் கறைகள்

pradeepkt
15-06-2005, 05:01 AM
காதல் காலங்களில் சிறுமை உணர்வுக்கேது இடம்? இருந்தாலும் அதை ஒரு சொட்டுக் கண்ணீர், ஒரு கடைக்கண் கரைத்து விடுமே! நல்ல கவிதை பிரியன்.

நீ பார்த்த பார்வையில்
கரைகிறது
எ‎ன் கறைகள்

இதில் கரைகின்றன என்று இருக்க வேண்டுமோ?

அல்லது
கரைகிறது
என் கறை

என்றிருந்தாலும் இனிக்கும் என்பது என் கருத்து. ஏனெனில் எத்தனை கறைகள் இருந்தாலும் அவற்றின் இயல்பு ஒன்றே!

அறிஞர்
15-06-2005, 05:21 AM
இருபத்தி எட்டாவது கவிதை
க‎ன்னம் பிடித்து
நீ பார்த்த பார்வையில்
கரைகிறது
எ‎ன் கறைகள்
நீ பார்த்த
பார்வையில்தான்
எத்தனை
அர்த்தங்கள்...

கறைகள்
கரைந்து......
வெண்மையாய்
உண்மையாய்...
உன்னுடன்
நான்......

மன்மதன்
15-06-2005, 05:25 AM
நீ பார்த்த
பார்வையில்தான்
எத்தனை
அர்த்தங்கள்...

கறைகள்
கரைந்து......
வெண்மையாய்
உண்மையாய்...
உன்னுடன்
நான்......

அறிஞரே.. அசத்திட்டிங்க.. தனி தலைப்பில் கவிதை எதிர்பார்க்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
15-06-2005, 05:45 AM
இருபத்தி எட்டாவது கவிதை

தனித்தனி
நேசம் நமக்கில்லை
நிருபித்த உ‎ன்முன்
சிறுமை உணர்வில்
நெஞ்சம் குறுகுறுக்க
முகம் பார்க்க முகமில்லாமல்
ச‎ன்னல் கம்பிகளில் புதைந்திருந்தே‎ன்

கை பற்றி அருகே
அமரவைக்க
மெளனம் உடைத்து
உன் உள்ளங்கால்களை
நனைக்கிறேன்.
க‎ன்னம் பிடித்து
நீ பார்த்த பார்வையில்
கரைகிறது
எ‎ன் கறைகள்

மோதிரம்
இடுவது
நம்முடைய
பண்பாடு
இல்லையே என்றாய்...

நீ
அடிக்கடி
என் முன்
நாணத்தால்
உன்
கைகள் கொண்டு
முகத்தை மூட

என் மோதிரம்
உன் கன்னம்
தொட்டு
வைக்கும்
முத்தத்தை
நீ
எப்பொழுது அறிவாய்....

-
மன்மதன்

பிரியன்
15-06-2005, 06:22 AM
[QUOTE=pradeepkt]காதல் காலங்களில் சிறுமை உணர்வுக்கேது இடம்? இருந்தாலும் அதை ஒரு சொட்டுக் கண்ணீர், ஒரு கடைக்கண் கரைத்து விடுமே! நல்ல கவிதை பிரியன்.

நீ பார்த்த பார்வையில்
கரைகிறது
எ‎ன் கறைகள்

இதில் கரைகின்றன என்று இருக்க வேண்டுமோ?

அல்லது
கரைகிறது
என் கறை

என்றிருந்தாலும் இனிக்கும் என்பது என் கருத்து. ஏனெனில் எத்தனை கறைகள் இருந்தாலும் அவற்றின் இயல்பு ஒன்றே![/QUOTE ]

மனப்போராட்டங்களளுக்கு, தவிப்புகளுக்கு தன் அன்பு நிறைந்த பார்வையாலே ஆறுதல் சொல்லிடவே கறைகள் என்று பயன்படுத்தினேன். கரைகின்றன என்பதை விட கரைகிறது அழகாக இருப்பதாக தோன்றியதால் அப்படி வைத்துள்ளேன். கரைகின்றன என கறைகள் என்றாலும் நன்றாகவே இருக்கும்..

பிரியன்
15-06-2005, 06:25 AM
நீ பார்த்த
பார்வையில்தான்
எத்தனை
அர்த்தங்கள்...

கறைகள்
கரைந்து......
வெண்மையாய்
உண்மையாய்...
உன்னுடன்
நான்......

நான் கரைகிறேன் என்றேன். நீங்கள் கரைந்து கலந்துவிட்டதையே கவிதையாக்கியிருக்கிறீர்கள்....

அறிஞர்
15-06-2005, 06:29 AM
அறிஞரே.. அசத்திட்டிங்க.. தனி தலைப்பில் கவிதை எதிர்பார்க்கிறேன்..
அன்புடன் மன்மதன்ஏதோ சும்மா நினைச்சதை கிறுக்கிறது நண்பா.. தங்கள் அளவுக்கு எதுவும் இல்லை....

அறிஞர்
15-06-2005, 06:31 AM
நான் கரைகிறேன் என்றேன். நீங்கள் கரைந்து கலந்துவிட்டதையே கவிதையாக்கியிருக்கிறீர்கள்....இது சும்மா கிறுக்கல்கள் பிரியன்... நீங்கள் தங்கள் பாணியில் தொடருங்கள்.... நன்றாக வருகிறது....
(ஒரு சில தினங்களில் தங்கள் பழைய உளறல்கள் இங்கு வந்து விடும்)

பிரியன்
15-06-2005, 07:40 AM
மோதிரம்
இடுவது
நம்முடைய
பண்பாடு
இல்லையே என்றாய்...

நீ
அடிக்கடி
என் முன்
நாணத்தால்
உன்
கைகள் கொண்டு
முகத்தை மூட

என் மோதிரம்
உன் கன்னம்
தொட்டு
வைக்கும்
முத்தத்தை
நீ
எப்பொழுது அறிவாய்....

-
மன்மதன்

ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும், நடக்கட்டும்.. :D :D

எளிமையான ஆனால் இனிமையான கவிதை மன்மதன்

அறிஞர்
15-06-2005, 09:45 AM
கைகள் கொண்டு
முகத்தை மூட

என் மோதிரம்
உன் கன்னம்
தொட்டு
வைக்கும்
முத்தத்தை
நீ
எப்பொழுது அறிவாய்....

-
மன்மதன்
இயல்பான செயலை அழகாய் வர்ணித்துள்ளீர்... வாழ்த்துக்கள் மன்மதன்...

தனிப்பக்கம் தொடங்குங்கள்....

மன்மதன்
15-06-2005, 09:57 AM
நன்றி பிரியன் ,அறிஞர்..

தனி பக்கம் போடுற அளவுக்கு இன்னும் எழுதும் எழுத ஆரம்பிக்கலை.. அப்பால பார்க்கலாம்.
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
15-06-2005, 11:07 AM
நன்றி பிரியன் ,அறிஞர்..

தனி பக்கம் போடுற அளவுக்கு இன்னும் எழுதும் எழுத ஆரம்பிக்கலை.. அப்பால பார்க்கலாம்.
அன்புடன்
மன்மதன்முடியும் நண்பா... முடியாதது எதுவுமில்லை... இந்த வாரக்கடைசியில் தனியா போய் உட்கார்ந்து.. ஏதாவது யோசி... எல்லாம் தன்னால வரும்.....

பிரியன்
21-06-2005, 07:32 AM
இருபத்தொன்பதாவது கவிதை

உடைபடாத நம் உள்ளங்கள்
சொற்களாய் உதடுகளிடையே
உடைபடாமல் வெளிவர
நடக்குதிங்கொரு
மெளனப் போராட்டம்....

வலி தந்த இறுக்கம் கலைக்க
சில தூரம் நடந்த வேளையில்
வலுத்துப் பெய்த
மழையிலும்
தொடர்கிறது நமது பயணம்
விரல் கோர்த்து
நனைந்தவாறே

மன்மதன்
21-06-2005, 07:56 AM
இருபத்தொன்பதாவது கவிதை

உடைபடாத நம் உள்ளங்கள்
சொற்களாய் உதடுகளிடையே
உடைபடாமல் வெளிவர
நடக்குதிங்கொரு
மெளனப் போராட்டம்....

வலி தந்த இறுக்கம் கலைக்க
சில தூரம் நடந்த வேளையில்
வலுத்துப் பெய்த
மழையிலும்
தொடர்கிறது நமது பயணம்
விரல் கோர்த்து
நனைந்தவாறே


நாம்
பேசிக்கொண்டே
தொலை தூரத்து
போயிருக்க
வேண்டும்..

நம்மை
பின் தொடர்ந்த
மழை கூட
தொடர முடியாமல்
நின்று விட்டது பார்..

-
மன்மதன்

பிரியன்
21-06-2005, 08:12 AM
நாம்
பேசிக்கொண்டே
தொலை தூரத்து
போயிருக்க
வேண்டும்..

நம்மை
பின் தொடர்ந்த
மழை கூட
தொடர முடியாமல்
நின்று விட்டது பார்..

-
மன்மதன்

அசத்தல் கவிதை மன்மதன். நான் நினைத்தை அழகாக சொல்லிவிட்டீர்கள்,
உங்கள் எழுத்துக்கள் மெருகேறி வருகிறது. வாழ்த்துக்கள்....

pradeepkt
21-06-2005, 08:27 AM
ஜுகல்பந்தி மாதிரி கவிதை மழை.
தொடருங்கள் நண்பர்களே.

gragavan
21-06-2005, 09:05 AM
நாம்
பேசிக்கொண்டே
தொலை தூரத்து
போயிருக்க
வேண்டும்..

நம்மை
பின் தொடர்ந்த
மழை கூட
தொடர முடியாமல்
நின்று விட்டது பார்..

-
மன்மதன்மம்ஸ் அருமையோ அருமை.......எனக்குப் பெருமையோ பெருமை.....

மன்மதன்
21-06-2005, 09:59 AM
ஆகா.. நல்லா இருக்கா.. நீங்க எல்லாம் சேர்ந்து பாராட்டுறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு...
அன்புடன்
மன்மதன்

kavitha
22-06-2005, 11:09 AM
பதில் எழுத நேரம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது வந்து படித்துக்கொண்டிருக்கிறேன். இத்தொடர் அருமை என்று நான் சொல்லத்தேவையில்லை. நீளும் பக்கங்களே அதன் சாட்சி.

அனைவரும் எழுதுகையில் என் கையும் துறுதுறுக்கிறது.. பொறு பொறு என்கிறது நேரம்... நேரமின்மையால் வாழ்த்து மட்டும் கூறி மீண்டும் வருகிறேன் பிரியன்.
புதுக்கவிஞர் அறிஞருக்கும் வாழ்த்துகள்! :)

பிரியன்
22-06-2005, 11:51 AM
பதில் எழுத நேரம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது வந்து படித்துக்கொண்டிருக்கிறேன். இத்தொடர் அருமை என்று நான் சொல்லத்தேவையில்லை. நீளும் பக்கங்களே அதன் சாட்சி.

அனைவரும் எழுதுகையில் என் கையும் துறுதுறுக்கிறது.. பொறு பொறு என்கிறது நேரம்... நேரமின்மையால் வாழ்த்து மட்டும் கூறி மீண்டும் வருகிறேன் பிரியன்.
புதுக்கவிஞர் அறிஞருக்கும் வாழ்த்துகள்! :)


வாழ்த்துக்கு நன்றீ கவிதா- நேர பூதம் உங்கள் கட்டுக்களையும் அவிழ்த்துவிடும் என்று காத்திருக்கிறோம்.

அறிஞர்
23-06-2005, 08:36 AM
இருபத்தொன்பதாவது கவிதை
உடைபடாத நம் உள்ளங்கள்
சொற்களாய் உதடுகளிடையே
உடைபடாமல் வெளிவர
நடக்குதிங்கொரு
மெளனப் போராட்டம்....

வலி தந்த இறுக்கம் கலைக்க
சில தூரம் நடந்த வேளையில்
வலுத்துப் பெய்த
மழையிலும்
தொடர்கிறது நமது பயணம்
விரல் கோர்த்து
நனைந்தவாறேவிரல்களின் இறுக்கம் கண்டு...
மழையே வியந்ததாம்....
"என்னே மனிதர்கள்.. இவர்கள்...
சொற்களை கொண்டு வர
மெளனப் போராட்டம் நடத்தி....
வெற்றி கண்டவுடன்...
இத்தனை இறுக்கம் காட்டுகிறார்கள்...
உண்மையிலே இவர்கள்...
நவீன.. அகிம்சாவாதிகள்..." என....

அறிஞர்
23-06-2005, 08:39 AM
நாம்
பேசிக்கொண்டே
தொலை தூரத்து
போயிருக்க
வேண்டும்..

நம்மை
பின் தொடர்ந்த
மழை கூட
தொடர முடியாமல்
நின்று விட்டது பார்..

-
மன்மதன்வெற்றியின்
பின்னனி அறிந்து...
தொடராமல்...
தோல்வியை
ஒத்துக்கொண்டதோ....
மழை.....

பிரியன்
04-07-2005, 02:38 PM
அப்பாடா நிழற்படம் வேலை முடிந்தது. இனிமேல் இங்கு தொடர்வேன்

அறிஞர்
05-07-2005, 04:39 AM
அப்பாடா நிழற்படம் வேலை முடிந்தது. இனிமேல் இங்கு தொடர்வேன் ஆவலுடன் காத்திருக்கிறோம் அன்பரே.... அருமையயன் நிழற்படம் தந்தீர் நன்றி...

பிரியன்
15-08-2005, 01:03 PM
ஒரு வழியாக இந்த தொகுப்பைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அதனால் இதற்கு மேல் எழுதுபவை எல்லாம் பெரும்பாலும் புதிய கவிதைகளாகவே இருக்கும். இந்த ஆண்டு இறூதியிலாவது தொகுப்பை வெளியிட வேண்டும் என எண்ணி இருக்கிறேன். நண்பர்களின் வழக்கமான அன்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

அடுத்த கவிதை மிக விரைவில்

மன்மதன்
15-08-2005, 01:30 PM
ஆஹா.. இதைத்தான் எதிர்பார்த்தேன்.. தொடருங்க பிரியன்.
அன்புடன்
மன்மதன்

pradeepkt
15-08-2005, 01:57 PM
ஏன்யா கரும்பு தின்னக் கூலியா?
எங்கள் ஆதரவும் அன்பும் என்றைக்குக்கும் உங்களுக்கு உண்டு.
உங்கள் கவிதைகள் புத்தகமாக வந்து பலரும் படித்து மகிழ வாழ்த்துகள்.

பிரியன்
15-08-2005, 02:06 PM
நன்றி மன்மதன் பிரதீப்.. உணர்வின் உச்சங்களை கவிதையாக்க முயற்சி செய்கிறேன். ஏனென்றால் காதலைப் பற்றி எல்லோரும் எழுதமுடியும். அதில் தனித்து தெரிய தேவை அதிகமான தேடல்...

கவிதை சிறப்பாக வரவேண்டுமென்று எனக்குள்ளே அதிகம் பேசிக்கொள்வதாலே. பிறருடன் பேசும் போது அதிகமாக பேசமுடிவதில்லை. எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம். அதுதான். மடை திறந்த வெள்ளமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும் பழகுபவர்களை ஆத்மார்த்தமாகவே நேசிப்பவன் நான். இது குறித்து எனது விடுமுறை கணங்களில் விளக்கமாக சொல்கிறேன்

பிரியன்
22-08-2005, 01:35 PM
முப்பதாவது கவிதை

படபடப்போடு என்
சமையலெப்படியென
கேட்க
ஒரு துளி உப்பு
கூடிவிட்டதென்றேன்.
புடவைக்குள் மறைத்த
கொப்பளங்களை
பார்த்த
என்விழிகளால்.....

மன்மதன்
22-08-2005, 02:16 PM
சமையலெப்படியென நீ
துறுதுறுக்க
ஒரு துளி உப்பு
கூடிவிட்டதென்றேன்.
புடவைக்குள் மறைத்த
கொப்பளங்களை
பார்த்த
என்விழிகளால்.....

அருமை ... அருமை... வாழ்த்துக்கள்.. திரும்ப தொடங்கியதற்கு...

பிரியன்
22-08-2005, 02:21 PM
திரும்ப எழுதுகிறேன் என்று சொன்னாலும் உடனடியாக எழுதமுடியவில்லை. இன்று காலை கவிதாவின் கவிதை தொகுப்பிற்கு ஜீவா பதிலளித்த பின்பு அடுத்தடுத்து காதல் பற்றிய பதிவுகளினாலும், காதல் திருமணங்கள் பற்றி விவாதங்கள் இன்று அதிகம் வந்தாலும் இந்தக் கவிதையை எழுத முடிந்தது

ஜீவா
22-08-2005, 02:45 PM
தொடர்ந்து எழுதுங்கள் (அனுபவியுங்கள்) பிரியன்..

மன்மதனும் காதல் டைரி என்ற தலைப்பில் கலக்கி கொண்டிருந்தார்.. அதுவும் இப்போது காண முடியவில்லை..

பிரியன்
23-08-2005, 09:54 AM
முப்பத்தொன்றாவது கவிதை...

உறவினர்கள்தான் என்றாலும்
தலை குனிந்த வந்து
நாணத்தோடு
வணக்கம் சொல்லி
ஓரக்கண்ணால்
என்னைக் காணாது
தவிக்கிறாய்.

முட்டிக் கிளம்பிய
கண்ணீர் துடைத்து
நீ கதவடைத்துக் கொண்ட
உன் அறையில்
நானிருந்தேன்
உன் புகைப்படதோடு
பேசிக் கொண்டு

pradeepkt
23-08-2005, 10:02 AM
ஏன்?
இந்தத் தவிப்பிற்கும் கண்ணீருக்கும் காரணம் என்ன?

பிரியன்
23-08-2005, 10:40 AM
அது ஒரு கண்ணாம்பூச்சி விளையாட்டு அவ்வளவுதான்

gragavan
23-08-2005, 10:45 AM
ஏன்?
இந்தத் தவிப்பிற்கும் கண்ணீருக்கும் காரணம் என்ன?அந்தப் பிள்ளைக்கு வேற மாப்பிள்ளை பாத்திருப்பாங்க.....இல்லையா பிரியன்?

பரஞ்சோதி
23-08-2005, 10:46 AM
அது ஒரு கண்ணாம்பூச்சி விளையாட்டு அவ்வளவுதான்

இந்த ஆட்டம் இனிதே முடிந்தால், மற்ற ஆட்டம் தொடங்கலாமே! :D

பிரியன்
23-08-2005, 10:47 AM
அடப்பாவிகளா அவன் தான் மாப்பிள்ளை. பெண்பார்க்க வந்தபோது அவள் அறையில் ஒளிந்து கொண்டு விளையாட்டு காட்டுகிறான், கொஞ்சம் காட்சிப் படுத்தி பாருங்கள். இது காதலர்களுக்கிடையான சிறு ஊடல்

பரஞ்சோதி
23-08-2005, 10:50 AM
அடப்பாவிகளா அவன் தான் மாப்பிள்ளை. பெண்பார்க்க வந்தபோது அவள் அறையில் ஒளிந்து கொண்டு விளையாட்டு காட்டுகிறான், கொஞ்சம் காட்சிப் படுத்தி பாருங்கள். இது காதலர்களுக்கிடையான சிறு ஊடல்

நாங்களும் அதை தாம்லே சொல்றோம். :D

பிரியன்
23-08-2005, 10:52 AM
நாங்களும் அதை தாம்லே சொல்றோம். :D
ம்ம்ம்ம்....அனுபவம் பேசுது..

நான் சொன்னது ராகவனுக்கும் பிரதீபுக்கும்... பாவம் அவுக எல்லாம் பச்சப்புள்ளைகதான

gragavan
23-08-2005, 11:02 AM
ம்ம்ம்ம்....அனுபவம் பேசுது..

நான் சொன்னது ராகவனுக்கும் பிரதீபுக்கும்... பாவம் அவுக எல்லாம் பச்சப்புள்ளைகதானவிளையாட்டுக் காட்டுறவருக்கும் ஏன் கண்ணீரு அப்புறம்? அதான் அப்படிச் சொன்னோம். ஊசி போடுற டாக்குடரே அழுதாப்புல.

பிரியன்
23-08-2005, 11:11 AM
விளையாட்டுக் காட்டுறவருக்கும் ஏன் கண்ணீரு அப்புறம்? அதான் அப்படிச் சொன்னோம். ஊசி போடுற டாக்குடரே அழுதாப்புல.

ஒரு எழுத்து விடுபட்டுப் போனதால்தான் இத்தனை குழப்பமும். இப்போது சரி செய்துவிட்டேன்.

gragavan
23-08-2005, 11:20 AM
ஒரு எழுத்து விடுபட்டுப் போனதால்தான் இத்தனை குழப்பமும். இப்போது சரி செய்துவிட்டேன்.ஒரு எழுத்து விட்டுப் போனதால எத்தனை குழப்பம் பாருங்கள்.

அப்புறம் வாழ்த்துகள். எப்போ கலியாணம்? அடுத்த வாட்டி ஊருக்கு வரும் போதா?

பிரியன்
23-08-2005, 11:22 AM
யாருக்கு எனக்கா? கவிதையின் நாயகனுக்கா?

கவிதையின் நாயகனுக்குதான் பெண்பார்க்கும்படலுமும் முடிஞ்சாச்சுல அடுத்து கல்யாணம்தான்..

நமக்கு ஒரு இரண்டு மூன்று கவிதை தொகுப்பு போட்ட பின்னாடிதான் இந்த கல்யாணம்லா

pradeepkt
23-08-2005, 03:03 PM
யாருக்கு எனக்கா? கவிதையின் நாயகனுக்கா?

கவிதையின் நாயகனுக்குதான் பெண்பார்க்கும்படலுமும் முடிஞ்சாச்சுல அடுத்து கல்யாணம்தான்..

நமக்கு ஒரு இரண்டு மூன்று கவிதை தொகுப்பு போட்ட பின்னாடிதான் இந்த கல்யாணம்லா
இப்பத்தான் இந்த மாற்றத்தைப் படித்தேன்... அடடா ... என்ன நயம்?
இரண்டு மூன்று கவிதைத் தொகுப்புன்னா அனேகமா உங்க கல்யாணம் இந்த வருடக் கடைசியில்தான் இருக்கும் போல.....

pradeepkt
23-08-2005, 03:05 PM
நாங்களும் அதை தாம்லே சொல்றோம். :D
இருக்கட்டும் இருக்கட்டும்... :D :D
அண்ணாச்சி என்னென்ன கூத்து பண்ணியளோ... இதையெல்லாம் நேரில அண்ணிகிட்ட கேட்டு இன்னொரு பாராயணம் எழுதிற மாட்டேன்...

பிரியன்
23-08-2005, 03:07 PM
இப்பத்தான் இந்த மாற்றத்தைப் படித்தேன்... அடடா ... என்ன நயம்?
இரண்டு மூன்று கவிதைத் தொகுப்புன்னா அனேகமா உங்க கல்யாணம் இந்த வருடக் கடைசியில்தான் இருக்கும் போல.....

நான் இந்த தொகுப்பே கிட்டத்தட்ட பத்து மாதங்களாக எழுதி வருகிறேன். இன்னும் முடிந்தபாடில்லை. மூன்று தொகுப்பு முடிக்க வேண்டும் என்றால் உங்க பிள்ளைக்கு மூணு வயசாகும் போதுதான்னு வச்சுக்கங்களேன்

kavitha
24-08-2005, 03:54 AM
நீ கதவடைத்துக் கொண்ட
உன் அறையில்
நானிருந்தேன்
உன் புகைப்படதோடு
பேசிக் கொண்டு


அருமை பிரியன். தவிக்க வைத்துப்பார்ப்பது காதலுக்கு ஒன்றும் புதிதல்ல. அதை நீங்கள் கவிதையில் வடிப்பது அழகான புதுமை. தொடருங்கள். நன்றி

பிரியன்
24-08-2005, 05:23 AM
நன்றி கவிதா. இது போன்ற காதலின் நுண்ணிய தருணங்களையே கவிதையாக்கியிருக்கிறேன். கவிதையாக்கவும் விரும்புகிறேன். எந்த அளவிற்கு சரியாக வரும் என்று தெரியவில்லை,

பரஞ்சோதி
24-08-2005, 05:34 AM
இருக்கட்டும் இருக்கட்டும்... :D :D
அண்ணாச்சி என்னென்ன கூத்து பண்ணியளோ... இதையெல்லாம் நேரில அண்ணிகிட்ட கேட்டு இன்னொரு பாராயணம் எழுதிற மாட்டேன்...

யப்பூ, நம்ம கிட்ட உங்க பருப்பு வேகாதுலே.

அண்ணியை அப்படி கவர் பண்ணி வைத்திருக்கோமுல்ல.

- கில்லாடியாங் கில்லாடி பரம்ஸ்

பரஞ்சோதி
24-08-2005, 05:35 AM
நன்றி கவிதா. இது போன்ற காதலின் நுண்ணிய தருணங்களையே கவிதையாக்கியிருக்கிறேன். கவிதையாக்கவும் விரும்புகிறேன். எந்த அளவிற்கு சரியாக வரும் என்று தெரியவில்லை,

பிரியன், எங்களுக்கும் ஆசை தான், ஆனால் கவிதை, கவிதை, அதான் வரவே மாட்டேங்குது, மனசு ஏங்குது, நீங்க கொடுப்பதால் அது தீருது.

மன்மதன்
24-08-2005, 05:38 AM
எழுத எழுததாம்ல கவிதை வரும்.. இதோ பாரு.. நான் கூட கவிதை எழுதறேன். ஏன் நீ எழுத முடியாது..??
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
24-08-2005, 06:08 AM
எழுத எழுததாம்ல கவிதை வரும்.. இதோ பாரு.. நான் கூட கவிதை எழுதறேன். ஏன் நீ எழுத முடியாது..??
அன்புடன்
மன்மதன்

ஏலே கல்யாணம் ஆகி, புள்ளையும் பெத்தாச்சு, இனிமேல் என்னலே கவிதை, நான் இங்கே கதை அடிக்கிறதுக்கே வீட்டில் சப்பாத்தி கட்டை பறக்குது. கவிதை எழுத தொடங்கினால் அவ்வளவு தான். சரி சரி தலைப்பு திசை மாறுது, பிரியன் தனிமடலில் விளாசி விடுவார்.

பிரியன்
24-08-2005, 06:11 AM
ஏலே கல்யாணம் ஆகி, புள்ளையும் பெத்தாச்சு, .
அதுக்கு பேரு என்னவாம்.
அதுதானய்யா உயிருள்ள கவிதை...
நானெல்லாம் வெறும் காகிதக் கவிதானே...

kavitha
25-08-2005, 10:58 AM
பிரியன், எங்களுக்கும் ஆசை தான், ஆனால் கவிதை, கவிதை, அதான் வரவே மாட்டேங்குது, மனசு ஏங்குது, நீங்க கொடுப்பதால் அது தீருது.

தலைக்கு நீஙக எழுதிய கவிதை சூப்பர் அண்ணே.. அது போல முயற்சியுங்கள். அண்ணி கிட்டேயும் அடி வாங்க வேணாம். காதல் கவிதைகள் எழுதினாலும் ஆட்சேபணை இல்லை. "உனக்கு தான் கண்ணே எழுதினேன்"னு அண்ணி கிட்ட சொல்லிடுங்க.. :)

பிரியன்
17-09-2005, 08:03 PM
முப்பத்திரண்டாவது கவிதை

நெத்தியில் பொட்டு வைத்து,
தேங்காய் உருட்டி விளையாடி
தலையில் அப்பளம் உடைத்து
பொம்மையைப் போட்டு தாலட்டி
மோதரத்திற்க்காக
பானைக்குள் சடுகுடு என
நம் திருமணத்திலும்
வழக்கமான சடங்குகள்...

எல்லோரும் களைத்து ஓய்ந்துவிட்ட தருணத்தில்
என்னருகே அமர்ந்து
சுண்டுவிரலோடு
பின்னிக் கொண்டு
தோளில் சாய்ந்துகொள்ள
என் காதல் முத்தங்கள்
பனிமழையாய்
உன் உச்சந்தலையில்

Nanban
18-09-2005, 05:58 PM
பிரியன் கலக்குங்க.

என் இளமை நாட்களை மீண்டும் திரும்பி பார்க்க உங்கள் கவிதைகள் உதவுகின்றன.

என்ன பரஞ்சோதி - குழந்தைக்கு ஆறு மாதம் கூட ஆகலை அதற்குள்ளே இளமையைத் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமாயிடுத்தா?

இளமை மனதில் இருக்கின்றது அன்பரே....

Nanban
18-09-2005, 06:01 PM
இரண்டாவது கவிதை...

கோலம் போட்டுச் செல்கிறாய்.
வைக்கப்பட்ட
ஒவ்வொரு புள்ளியிலும் கைதியாய்
நான்

இந்த அருமையான கவிதையை கண்டுக்காமல் போய்விட்ட அனைவரும் மனைவியிடத்தில் சிக்கி அவஸ்தைப்படுவார்களாக,,,,,,

Nanban
20-09-2005, 07:15 PM
முதல் மூணு வரிகளுக்கும்

அடுத்த நான்கு வரிகளுக்கும்

துளியும் சம்பந்தமில்லாமல் இருக்குதே...ஏன் ??

அன்புடன்
மன்மதன்

முதல் மூன்று வரிகளில் விலகிச் சென்றவள் அடுத்த நான்கு வரிகளில் நெருங்கி வந்து இழைவது புரியவில்லையா? - நாயின் உபயத்தால். முறைத்தாவாறே என்றிருந்திருக்க வேண்டும். முறைத்தவேற என்று எழுத்துரு அல்லது தட்டச்சு பிழைகளால் எழுதிவிட்டார் என்றே நினைக்கிறேன்.

சில சமயங்களில் அன்பு காட்ட விலங்குகள் கூட துணை புரியும்.

Nanban
20-09-2005, 07:37 PM
பிரியன்

ஏற்கனவே எல்லாவற்றையும் முற்றிலுமாகப் படித்து விட்டாலும் - உங்களுக்காக நான் வாசித்து காட்டிய சில கவிதைகளைக் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள். கைபற்றி அமர்ந்திருக்கும் காதலர்களுக்காக மனுஷ்யப் புத்திரன் எழுதிய அத்வைதம் என்ற கவிதையைப் போல ஆழமான, இதமான நேர்மையான காதல் வெளிப்பாடுகளை வெளிக் கொண்டு வர முயற்சியுங்கள்.

ஒரு ஆரம்ப நிலையிலுள்ள கவிஞனுக்கான ஆர்வம் உங்கள் கவிதையில் காணப்பட்டாலும் கவிதையின் அனைத்து வெளிப்பாடுகளும் காதலின் ஆழத்தைக் காட்டும் முயற்சியை விட வாசிக்க எளிதாக எல்லோரையும் கவர்வதாக அமைய வேண்டுமே என்ற கவலையில் அதிக அக்கறை எடுத்து மன்றத்தில் வாசிக்கும் சிலருக்கு திருப்தி தரவேண்டும் என்ற நோக்குடன் எழுதப்பட்டது போன்றிருக்கிறது.

இன்னமும் கூட இந்த கவிதைகளை கொஞ்சம் திருத்தி தேவையற்ற சொல்லாடல்களை அல்லது வெளிப்பாட்டை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும் என்றே கருதுகிறேன். அதற்கு முன்னதாக நிறையப் படியுங்கள். மேலும் காதல் ஒன்றைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருக்காதீர்கள். அதிலேயே உழன்று கொண்டிருக்கும் பொழுது சிந்தனை திறன் கொஞ்சம் திணரத்தான் செய்யும். நிறைய இடைவெளி கொடுங்கள். மீண்டும் சிந்தியுங்கள்.

புத்தகமாக வெளி வந்த பின்பு எந்த மாற்றமும் செய்ய இயலாது. மேலும் எழுதக் கூடிய அனைத்து புதுமுக எழுத்தாளார்களும் எடுத்துக் கொள்ளக் கூடிய அதே கருப்பொருள் - காதல். வித்தியாசம் காட்டவில்லையென்றால் - பிறகு வந்தவைகளில் இதுவும் ஒன்று என்றாகி விடும்.

வாங்கி வைத்திருக்கும் - சங்க இலக்கியங்களை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள். சொற்களை புதுமையான முறையில் கையாளக் கற்றுக் கொடுக்கும்.

அன்புடன்

பிரியன்
20-09-2005, 08:15 PM
பிரியன்

ஏற்கனவே எல்லாவற்றையும் முற்றிலுமாகப் படித்து விட்டாலும் - உங்களுக்காக நான் வாசித்து காட்டிய சில கவிதைகளைக் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள். கைபற்றி அமர்ந்திருக்கும் காதலர்களுக்காக மனுஷ்யப் புத்திரன் எழுதிய அத்வைதம் என்ற கவிதையைப் போல ஆழமான, இதமான நேர்மையான காதல் வெளிப்பாடுகளை வெளிக் கொண்டு வர முயற்சியுங்கள்.

ஒரு ஆரம்ப நிலையிலுள்ள கவிஞனுக்கான ஆர்வம் உங்கள் கவிதையில் காணப்பட்டாலும் கவிதையின் அனைத்து வெளிப்பாடுகளும் காதலின் ஆழத்தைக் காட்டும் முயற்சியை விட வாசிக்க எளிதாக எல்லோரையும் கவர்வதாக அமைய வேண்டுமே என்ற கவலையில் அதிக அக்கறை எடுத்து மன்றத்தில் வாசிக்கும் சிலருக்கு திருப்தி தரவேண்டும் என்ற நோக்குடன் எழுதப்பட்டது போன்றிருக்கிறது.

இன்னமும் கூட இந்த கவிதைகளை கொஞ்சம் திருத்தி தேவையற்ற சொல்லாடல்களை அல்லது வெளிப்பாட்டை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும் என்றே கருதுகிறேன். அதற்கு முன்னதாக நிறையப் படியுங்கள். மேலும் காதல் ஒன்றைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருக்காதீர்கள். அதிலேயே உழன்று கொண்டிருக்கும் பொழுது சிந்தனை திறன் கொஞ்சம் திணரத்தான் செய்யும். நிறைய இடைவெளி கொடுங்கள். மீண்டும் சிந்தியுங்கள்.

புத்தகமாக வெளி வந்த பின்பு எந்த மாற்றமும் செய்ய இயலாது. மேலும் எழுதக் கூடிய அனைத்து புதுமுக எழுத்தாளார்களும் எடுத்துக் கொள்ளக் கூடிய அதே கருப்பொருள் - காதல். வித்தியாசம் காட்டவில்லையென்றால் - பிறகு வந்தவைகளில் இதுவும் ஒன்று என்றாகி விடும்.

வாங்கி வைத்திருக்கும் - சங்க இலக்கியங்களை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள். சொற்களை புதுமையான முறையில் கையாளக் கற்றுக் கொடுக்கும்.

அன்புடன்

காதலின் ஆழத்தை தேடித்தான் இந்தக் கவிதைகளை எழுதுகிறேன். எல்லாமே கற்பனைகளாக எழுதுகின்ற போது மிகவும் கடினமாகவே இருக்கிறது. முழுத்தொகுப்பும் முடிந்த பின்பு அதன் பிற்பகுதி முழுவதும் நீக்க வேண்டி சூழல் வந்ததால் தொகுப்பு செல்லும் பாதையை இறுதி செய்ய முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். அதன் வெளிப்பாடு கடைசி சில கவிதைகளில் தோன்றியிருக்கிறது என்று கருதுகிறேன்.

உண்மையைச் சொல்லப்போனால் இந்த தொகுப்பை ஆரம்பித்துவிட்டு முடிக்கவும் முடியாமல் தொடரவும் முடியாமல் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். யாரையும் திருப்தி படுத்த எழுதவில்லை. எனக்கு பிடித்ததை எழுதுகிறேன். வடிவத்திலும் சொல்லும் விதத்திலும் இன்னும் நிறைய தெளிவு தேவையாய் இருக்கிறது என்பதை நானும் உணர்கிறேன்.நல்ல முறையில் கவிதை வெளிப்பட தொடர்ந்து முயற்சி செய்கிறேன்...

பத்தோடு ஒன்றாக எனது கவிதைதொகுப்பு ஆகி விடக்கூடாது என்ற தங்கள் அக்கறைக்கு நன்றி.

தொடர்ந்து வாசியுங்கள்...

கருத்துகளைச் சொல்லுங்கள்....

பிரியன்
22-09-2005, 08:48 AM
முப்பத்தி மூன்றாவது கவிதை

திருமணத்துக்கு பி‎ன்
‏முதல் ஊடல்
நீண்ட தாமதத்திற்காக,
எப்போதும் வீழ்த்தும்
எதிர் எதிர் ஆயுதங்கள்...
மொழி திறக்கா
மெளனம்
இமை சுருக்கி
எ‎ன்‎னை உருக்கும்
விழிகள்...

தலையோடு தலை முட்டி
‏இமையோடு இதழ் உரச
சொ‎ன்னாய் கவிதை..
சுமக்கிறே‎ன்
மடியிலும்,வயிற்றிலும்
கணக்காத
பிள்ளைகளிரண்டு

பிரியன்
22-09-2005, 08:50 AM
முப்பத்தி நான்காவது கவிதை

பண்டிகை நாள்
மேகக் கூந்தல் விரித்து
சாம்பிராணி புகையிட்டு
சிறுக்கணிக்கியால்
சிக்கெடுத்து,
ஒற்றைச் சடை பி‎ன்னி
கொத்து மல்லிகை
அள்ளி வைத்தே‎ன்...

க‎ன்னம் பிடித்து
புருவமிடையே
பூத்திருந்த
வேர்வை பூக்களை
குங்குமம் சிதறாமல்
உலர்த்துகிறே‎ன்

எ‎ன் வாசத்தில் தெரிந்த
பசியறிந்து
நீ ஊட்டிய
பத்திய சாப்பாட்டி‎‎ன்
பருக்கைகள் போல்
அமுதுண்டதில்லை
இதுவரை

pradeepkt
22-09-2005, 09:10 AM
மடியிலும்,வயிற்றிலும்
கனக்காத
பிள்ளைகளிரண்டு

நல்லாச் சொன்னீங்கய்யா! ஊடலிலும் ஒரு சிற்றின்பத்தோடு கலந்த பேரின்பம் ஒளிந்திருக்கிறது என்று காட்டி விட்டீர்.

மனைவிக்குச் செய்யும் கணவனின் பணிவிடைகள் காதலுக்கு தற்பெருமை சேர்ப்பவை. அதற்குப் பரிசாகக் கிடைப்பவை போலும் உலகில் இல்லை.

பிரியன்
22-09-2005, 09:11 AM
நன்றி பிரதீப்

பிரியன்
24-09-2005, 05:37 AM
முப்பத்தைந்தாவது கவிதை

ஒருவருக்கொருவர்
குழந்தையாய்
இன்பத்தி‎ன் உச்சத்தில்
கழிகிறது நாட்கள் ...

ஈருயிர் இன்பத்தை
ஓருயிரில் தரும் வலியில்
நீ துடித்து அலற
இதயம் துளைத்தவானாய்
குழந்தையின் அழுகைக்கும்
உன் தொடுகைகுக்குமாய்
‏இரு தவிப்பில்
காத்திருக்கிறே‎ன்.
நம் மறுபிறப்பிற்காக,,,,,,,,

அருகிலமர்ந்து
உ‎ன் தாய்மைச் சூட்டை
உள்வா‎ங்கி
‏நம் செல்லத்தி‎ன்
பிஞ்சுக்கரத்தோடு
உ‎ன்னையும்
இறுக பற்றுகிறே‎ன்
மெலிதாய் நீ சிரிக்க
எனக்குள்
மழை

thempavani
24-09-2005, 07:29 AM
முப்பத்தைந்தாவது கவிதை
ஓருயிரில் தரும் வலியில்
நீ துடித்து அலற
இதயம் துளைத்தவானாய்
குழந்தையின் அழுகைக்கும்
உன் தொடுகைகுக்குமாய்
‏இரு தவிப்பில்
காத்திருக்கிறே‎ன்.
நம் மறுபிறப்பிற்காக,,,,,,,,



மனைவி மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க அவருக்காக வெளியே தவித்துப் போயிருக்கும் ஆண்மகனின் அவஸ்தையை நன்கு கூறிவிட்டிருக்கிர்கள் பிரியன்...அருமை..

மன்மதன்
24-09-2005, 08:09 AM
முப்பத்தைந்தாவது கவிதை

ஒருவருக்கொருவர்
குழந்தையாய்
இன்பத்தி‎ன் உச்சத்தில்
கழிகிறது நாட்கள் ...

ஈருயிர் இன்பத்தை
ஓருயிரில் தரும் வலியில்
நீ துடித்து அலற
இதயம் துளைத்தவானாய்
குழந்தையின் அழுகைக்கும்
உன் தொடுகைகுக்குமாய்
‏இரு தவிப்பில்
காத்திருக்கிறே‎ன்.
நம் மறுபிறப்பிற்காக,,,,,,,,

அருகிலமர்ந்து
உ‎ன் தாய்மைச் சூட்டை
உள்வா‎ங்கி
‏நம் செல்லத்தி‎ன்
பிஞ்சுக்கரத்தோடு
உ‎ன்னையும்
இறுக பற்றுகிறே‎ன்
மெலிதாய் நீ சிரிக்க
எனக்குள்
மழை


மிக நன்றாக இருக்கிறது.. கடைசி வரிகள் அருமை,,

காதல், தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது என்ற வரிகள் இந்த கவிதையில் உணர்ந்தேன்...

பிரியன்
24-09-2005, 08:15 AM
நன்றி தேம்பா, மன்மதன்,,,,,,

ரட்சகனில் வரும் அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்......

பிரியன்
24-09-2005, 08:20 AM
முப்பத்தாறாவது கவிதை

இருவரின் நேசமும்
விகிதங்களி‎ன்‎றி
நம் குழந்தைக்குள்....
சி‎ன்ன சின்ன அசைவுகளுக்காக
ஆனந்த கூத்தாட்டம்..

முத்துப்பல் தெரிய சிரிக்க ..
அள்ளி நீ கொஞ்சிடும் நேரம்
.---ங்கே ---ங்கே
---ம்மா ----ம்ம்மா என
‏இதழ் பிரிகையில்
இதயங்களில்
குளிர்ச்சி..

தவழ்வதை ரசித்திருக்க
வடியும் எச்சிலை
ஓடிப்போய் துடைக்கிறாய்
எங்கே வழுக்கிடுமோ எ‎ன்று.

சுகமாய் சுமந்து
நிலவை காட்டி
நானும் பிள்ளையாகிறே‎‎ன்
நீ ஊட்ட போகும்
பிள்ளைச்சோற்றின்
கடைசி வாய்க்காக

பிரியன்
24-09-2005, 02:26 PM
முப்பத்தேழாவது கவிதை

எச்சில் வடிய
உறங்கிக் கொண்டிருப்பே‎ன்.
சேலையால் துடைத்துவிட்டு
பழிப்பு காட்டுவாய் ..

கள்ளனாய் கண்விழித்து
கை பற்ற நினைத்தால்
கூந்தலி‎ன் ஈரம் தெளித்து
நழுவிடுவாய்.
கலங்கிய வேளைகளில்
வாரியணைத்து
நேசமாய் தலை கோதி
உச்சியில் இதழ் பதிப்பாய்
கண்கள் சொருக
நா‎ன்
மரணம் விரும்பும்
கணங்கள் .

என்னுள் எல்லாமும் ஆ‎ன
உ‎‎ன் உயிரை முகர்ந்து
உறக்கம் கலைக்காமல்
சொடுக்கெடுத்து,
விரல்களில்
மருதாணி வைத்தே‎ன்
விடியலில் சிவப்பாய்
என் முகம்

மன்மதன்
25-09-2005, 04:51 AM
நல்ல ஃபார்மில் இருக்கீங்க.. வார்த்தை விளையாடுது..

என்னுள் எல்லாமும் ஆ‎ன
உ‎‎ன் உயிரை முகர்ந்து
உறக்கம் கலைக்காமல்
சொடுக்கெடுத்து,
விரல்களில்
மருதாணி வைத்தே‎ன்
விடியலில் சிவப்பாய்
என் முகம்

ரசித்தேன்.. நன்றாக இருக்கிறது பிரியன்..

thempavani
25-09-2005, 05:17 AM
அருமையாய் சொல்றீங்க பிரியன்..மன்றத்துல நிறைய பேரை கவிஞனாக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க போல...வாழ்த்துக்கள்

பிரியன்
25-09-2005, 05:45 AM
முப்பத்தெட்டாவது கவிதை.......

நம்மிலும் சில நரைமுடிகள்..
விழிகளும்,மனங்களும்
உணர்ந்து கொள்வதால்
வார்த்தைகளாய் ‏
பேசுவதில்லை ..

இயந்திரத்தன தேடல்
முடித்த
ஓய்வெனும்
இளவேனிற்கால..
ஞாயிறு மாலையில்
‏உ‎ன்னை தோளில்
சாய்த்து கொண்டு
பழைய கவிதைகள் சொல்ல
சிரிக்கிறாய்..

மயக்கம் தீரலியா அப்பாவுக்கு!!
நடுவில் அமர்ந்த
மகளி‎ன் க‎ன்னம் வருடி
சொன்னேன்
எங்களுக்கு நீ‏
செல்ல பிள்ளை .
அவளுக்கு நா‎ன்தா‎ன்
முதல் பிள்ளை

பிரியன்
25-09-2005, 05:50 AM
முப்பத்தொன்பதாவது கவிதை.......

உ‎ன்னுட‎ன் வாழ்ந்த
ஒவ்வொரு கணத்திலும்
வேர்களை பிடித்திருந்த நிலமாய்
உயிரோடு கலந்திருந்தாய்.
உதிரும் போதெல்லாம்
மறுபடி மறுபடி
முளைக்க செய்தாய்...

உடல் பிரியும் மு‎ன்
ஏதேதோ பேச
நினைக்கிறே‎ன்.
எதுவுமே பேசமல்
உனக்காக காத்திருப்பேன்..
அதுவரை காத்து இருப்பேன்
கண்களாலே சொல்லி
உன் மடியிலே
எ‎ன்
எழும்பாத் துயில்

பிரியன்
25-09-2005, 05:59 AM
இத்துடன் தீபங்கள் பேசும் கவிதைத் தொகுப்பின் முதல்(முழு?)பாகம் முடிவடைகிறது. இரண்டாம் பாகங்களை திருத்திய பின்பு பதிகிறேன்....

அதுவரை இந்தத் திரியிலிருந்து உங்களிடம் விடை பெறுகிறேன்...

தொடர்ந்து உற்சாகப்படுத்திய பிரதீப், கவிதைகளால் மகிழ்வித்த மன்மதன், தொடர்ந்து வாசித்து கருத்துகள் சொன்ன ராகவன், பரஞ்சோதி அறிஞர், கவிதா, கரிகாலன்,முத்து இனியன் தேம்பா, சுவேதா, ஜீவா, அமுதா, வாணிஆகியோருக்கும்

விமர்சனங்கள் தந்த நண்பன், ராம்பாலுக்கும் எனது மனமர்ந்த நன்றி.

பிரியன்
29-09-2005, 04:57 AM
நாற்பதாவது கவிதை....

உன் திருமணம் முடியும்வரை
தவறாகவே எண்ணியிருந்தேன்
காதலென்னவென்பதை
கனவுகளின் விருப்பத்தை
உடல்களின் சேர்க்கையை
எல்லை என்றிருந்ததையே
காதலென்றிருந்தேன்..

விலகியும்
நேசம் மாறாது
எதிர்பார்ப்புகளற்று
இன்று
உன் மீதிருப்பதும்
காதல்தான்

கொஞ்ச காலத்திற்கு( இப்போதைக்கு )இதுதான் எனது கடைசி கவிதை.........

தமிழ்ப்பிரியன்
25-10-2006, 07:33 PM
நான் எங்கோ படித்து ரசித்த கவிதை இது..சரியாக நினைவு இல்லை..

என் தெமிஸ் தேவதையே !
நம் காதல் வழக்கின் தீர்ப்பு எப்போது..
உன்னால் தீர்க்கபடாத வழக்குகளால்
என் காலம் கறைகிறது
ஆயுள் தண்டனையாய்..
பிடியானை கொடுத்து
விழிகள் அனுப்பியவளே
வழக்கின் கைதி வாசலில் நிற்கிறேன்
தீர்ப்புகளயே யாசிக்கிறான்
ஓர் மூடக்கவிஞன்
உன் மெளனங்கள் வரையும்
தள்ளிவைப்பு தீர்மானங்களாய்..

அறிஞர்
04-01-2007, 09:56 PM
பிரியாமனவர்களின் கவிதைகள் இங்கு இன்னும் தொடரட்டுமே...

ரிஷிசேது
04-07-2007, 04:39 PM
அருமை பிரியன்.