PDA

View Full Version : சக்தி! சக்தி!



பிரியன்
02-05-2005, 06:46 PM
சிரித்து சிரித்து
நொடிகள் தோறும்
புதுமை செய்திடும்
மலரைக் கண்டேன்

முத்துப்பல் முளைக்க
காத்திருக்கும்
இதழைக் கண்டேன்..

உன் பார்வையால்
தென்றல் எனைத்
தழுவக் கண்டேன்

இதழ் பிரித்து
நீ பொழியப்போகும்
தமிழுக்காக
காத்திருக்கிறேன்
சக்தி..

அன்புடன்
பிரியன் மாமா....

பரஞ்சோதி
03-05-2005, 08:23 PM
ப்ரியன் மாமாவுக்கு எனது நன்றிகள்.

- உங்கள் ப்ரிய சக்தி

அறிஞர்
05-05-2005, 03:50 AM
சக்தியை கண்டு.... கவிதை வடித்த பிரியனுக்கு வாழ்த்துக்கள்...

சக்தியை காண ஆவலுடன் இருக்கிறேன்...

poo
05-05-2005, 10:53 AM
அந்தத் தமிழ் தரணியாளும் கனவைக் கண்டேன்..
அந்தக்கனா நனவாகும் நாளைக் கேட்கிறேன்...

- சக்திக்கு வாழ்த்துக்கள்....

அறிஞர்
05-05-2005, 11:14 AM
அந்தத் தமிழ் தரணியாளும் கனவைக் கண்டேன்..
அந்தக்கனா நனவாகும் நாளைக் கேட்கிறேன்...

- சக்திக்கு வாழ்த்துக்கள்....
வாருங்கள் பூ...... எப்படி இருக்கிறீர்கள்.....

பிரியன்
05-05-2005, 11:48 AM
சிரித்து சிரித்து
நொடிகள் தோறும்
புதுமை செய்திடும்
மலரைக் கண்டேன்
முத்துப்பல் முளைக்க
காத்திருக்கும்
இதழைக் கண்டேன்..
உன் பார்வையால்
தென்றல் எனைத்
தழுவக் கண்டேன்
இதழ் பிரித்து
நீ பொழியப்போகும்
தமிழுக்காக
காத்திருக்கிறேன்
சக்தி..
அன்புடன்
பிரியன் மாமா....

அன்பு நண்பர் இனியனுக்கு...

புதிய மன்றத்தில் தங்கள் பங்களிப்பு மிகவும் அருமையானது.,பழைய பதிவுகளை பதிப்பது என்பது மிகவும் சிரம்மான பணியென்றாலும் செய்துவருவதற்கு பாரட்டுக்கள்..

கவிதை கவிஞனின் வடிவத்தில் தான் இருக்க வேண்டும்.. அவன் விடும் இடைவெளிகளுக்குகூட அர்த்தம் உண்டு..எனவே இனிமேல் எடிட் செய்யும் போது வடிவம் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது என் அன்பு வேண்டுகோள்..

அறிஞர், பூ ஆகியோரைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி

மன்மதன்
05-05-2005, 12:26 PM
ஆஹா.. சக்திக்கான கவிதை அபாரம்..
(நண்பா பரம்ஸ்.. நீயும் ஒரு கவிதை கொடேன்..)
அன்புடன்
மன்மதன்

பிரியன்
05-05-2005, 02:02 PM
ஆமாம் பரஞ்சோதி ..
உங்கள் கவிதையை கொடுங்கள்..

இதுவரை இல்லாவிட்டால் சக்திக்காகவாது இருக்கட்டும்

Iniyan
06-05-2005, 08:48 PM
அன்பு நண்பர் இனியனுக்கு...

புதிய மன்றத்தில் தங்கள் பங்களிப்பு மிகவும் அருமையானது.,பழைய பதிவுகளை பதிப்பது என்பது மிகவும் சிரம்மான பணியென்றாலும் செய்துவருவதற்கு பாரட்டுக்கள்..

கவிதை கவிஞனின் வடிவத்தில் தான் இருக்க வேண்டும்.. அவன் விடும் இடைவெளிகளுக்குகூட அர்த்தம் உண்டு..எனவே இனிமேல் எடிட் செய்யும் போது வடிவம் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது என் அன்பு வேண்டுகோள்..

அறிஞர், பூ ஆகியோரைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி

அன்புள்ள பிரியன்,

யுனிகோட் கன்வர்ட்டர் சில நேரங்களில் கொஞ்சம் வித்யாசமாகப் பணி புரிகிற்து. அவ்வளவே. வேண்டும் என்றே தங்கள் கவிதையை நான் திருத்தவில்லை. மன்னித்து அருளுங்கள் இம்முறை. நன்றி

பரஞ்சோதி
06-05-2005, 09:29 PM
சக்தியின் புகைப்படம் இதோ:

பரஞ்சோதி
06-05-2005, 09:31 PM
சக்தியின் புகைப்படம்:

thempavani
07-05-2005, 03:50 AM
அண்ணா......

சக்தி குட்டிக்கு அத்தையின் அன்பு முத்தங்கள் ஆயிரம்....
புகைப்படத்திற்கு நன்றி அண்ணா......

அறிஞர்
07-05-2005, 04:53 AM
அழகான மழழை சிரிப்பு.....

கொள்ளை கொள்ளும் சிரிப்பு...

துன்பத்தை துரத்தும் சிரிப்பு.....

இன்பத்தை கொடுக்கும் சிரிப்பு...
------
நன்றி பரம்ஸ்

பரஞ்சோதி
07-05-2005, 05:02 AM
அயா, நான் ஆராய்ச்சி அறிஞர் மாமாவை கவிதை எழுதும் கவிஞர் ஆக மாற்றி விட்டானே.

நன்றி அறிஞர் மாமா, அத்தான் மெல்கி எப்படி இருக்காக?

-சக்தி

மன்மதன்
07-05-2005, 05:02 AM
கவிதை கேட்டால்
இதோ கவிதை
என்று கவிதைத்துவமான
போட்டோ..
பரம்ஸ்... சரியான ஆளப்பா நீ

அன்புடன்
மன்மதன்

பிரியன்
07-05-2005, 06:50 PM
அன்புள்ள பிரியன்,

யுனிகோட் கன்வர்ட்டர் சில நேரங்களில் கொஞ்சம் வித்யாசமாகப் பணி புரிகிற்து. அவ்வளவே. வேண்டும் என்றே தங்கள் கவிதையை நான் திருத்தவில்லை. மன்னித்து அருளுங்கள் இம்முறை. நன்றி..

மன்னிப்பு என்பதெல்லாம் எதற்கு நண்பரே,..

தொடரட்டும் உங்கள் களப்பணி மற்றும் கவிதைப்பணி

அறிஞர்
09-05-2005, 07:02 AM
அயா, நான் ஆராய்ச்சி அறிஞர் மாமாவை கவிதை எழுதும் கவிஞர் ஆக மாற்றி விட்டானே.

நன்றி அறிஞர் மாமா, அத்தான் மெல்கி எப்படி இருக்காக?

-சக்தி

கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்...

விளையாட்ட கிறுக்கின வரிகள்..

மெல்கி ஜாலியா இந்தியாவில் விளையாடுகிறார்.

(அவன் தோழி, விளையாடும்போது.. மெல்கி கண்களில் பென்சிலால் குத்திவிட்டதால்... சற்று உற்சாகம் குறைந்துள்ளார்)

பரஞ்சோதி
09-05-2005, 07:30 AM
கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்...

விளையாட்ட கிறுக்கின வரிகள்..

மெல்கி ஜாலியா இந்தியாவில் விளையாடுகிறார்.

(அவன் தோழி, விளையாடும்போது.. மெல்கி கண்களில் பென்சிலால் குத்திவிட்டதால்... சற்று உற்சாகம் குறைந்துள்ளார்)

அய்யோ, உடனே மருத்துவமனையில் மெல்கியை அழைத்து சென்று பார்த்தீர்களா?

கண் என்பதால் கவனம் தேவை. உடனடியாக செக்கப் செய்யுங்கள்.

thempavani
09-05-2005, 07:39 AM
கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்...

விளையாட்ட கிறுக்கின வரிகள்..

மெல்கி ஜாலியா இந்தியாவில் விளையாடுகிறார்.

(அவன் தோழி, விளையாடும்போது.. மெல்கி கண்களில் பென்சிலால் குத்திவிட்டதால்... சற்று உற்சாகம் குறைந்துள்ளார்)

அண்ணா..

என்ன இது...ஏதாவது டாக்டரிடம் அழைத்துச் சென்றீர்களா...

இப்போது எப்படி இருக்கிறான் குழந்தை...

அறிஞர்
09-05-2005, 07:42 AM
கடவுளின் அருளால், வெள்ளை விழியில் பட்டதால் பாதிப்பில்லை.. டாக்டரிடம் தினமும் காட்டிவருகிறார்கள்