PDA

View Full Version : பொருளாதார ஜாம்பவான்கள் - டாப் 10



முத்து
01-05-2005, 10:43 PM
பொருளாதார ஜாம்பவான்கள் - டாப் 10


கடந்த சில ஆண்டுகளாகவே ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலை ஆசிய நாடுகளை ஒப்பிடும்போது இறங்குமுகமாகவே இருந்துவருகிறது. பழங்காலத்திலிருந்தே பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்து வந்த ஆசிய நாடுகள் சில நூற்றாண்டுகளாய்ப் பல காரணங்களால் கொஞ்சம் பின் தங்கி இருந்துவந்தன. வரும் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாகவே இருக்கும் என்பதற்கான வலுவான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன என்பது உலகெங்குமுள்ள பொருளாதார, அரசியல் நோக்கர்களின் கருத்து.

கீழேயுள்ள பட்டியலில் காண்பது நாடுகளின் மொத்த உற்பத்தி gross domestic product (GDP) அமெரிக்க டாலர்களில் ( 2004 நிலவரம், CIA World Fact Book ).

சில ஆண்டுகளுக்கு முன்புவரை நான்காம் இடத்தில் இருந்த ஜெர்மனி ஐந்தாமிடத்துக்குத் தள்ளப்பட்டு நான்காமிடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.

பூமியின் மொத்த உற்பத்தி 55.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்

பூமி - $ 55,500,000,000,000

1. அமெரிக்கா - $ 11,750,000,000,000
2. சீனா - $ 7,262,000,000,000
3. ஜப்பான் - $ 3,745,000,000,000
4. இந்தியா - $ 3,319,000,000,000
5. ஜெர்மனி - $ 2,362,000,000,000
6. இங்கிலாந்து - $ 1,782,000,000,000
7. பிரான்ஸ் - $ 1,737,000,000,000
8. இத்தாலி - $ 1,609,000,000,000
9. பிரேசில் - $ 1,492,000,000,000
10. ரஷ்யா - $ 1,408,000,000,000

பரஞ்சோதி
02-05-2005, 04:22 AM
முத்து அவர்களே!

எனக்கு இது புதிய தகவல், அருமையான தகவல் கொடுத்த உங்களுக்கு நன்றி.

மக்கள் தொகையில் சீனாவை மிஞ்ச இருக்கும் இந்தியா பொருளாதாரத்தில் விஞ்சுமா? கண்டிப்பாக நடக்கும் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தை பிடிக்க நாம் பாடுபடுவோம்.

முத்து
02-05-2005, 01:13 PM
முத்து அவர்களே!

எனக்கு இது புதிய தகவல், அருமையான தகவல் கொடுத்த உங்களுக்கு நன்றி.

மக்கள் தொகையில் சீனாவை மிஞ்ச இருக்கும் இந்தியா பொருளாதாரத்தில் விஞ்சுமா? .

பரஞ்சோதி,
இந்தியா சீனாவை மக்கள்தொகையில் விஞ்சும் முன்பே உலகப் பொருளாதாரத்தில் இரண்டாமிடமோ அல்லது மூன்றாமிடமோ பெறும் வாய்ப்புக்கள் பிரகாசமாகத் தெரிகின்றன.

சீனாவுக்குக் காத்திருக்கும் பெரிய பிரச்சினையும், இந்தியாவுக்குக் காத்திருக்கும் வாய்ப்பும் ஒன்று உண்டு. அது என்னவென்றால்,

1. சீனா பொருளாதாரத்தில் முன்னேறுவதில் காட்டும் வேகத்தைவிட வயதுமூப்பில் வேகம் பெற்று வருகிறது. உற்பத்தியைப் பெருக்கும் வயதினர் சீனாவில் குறைந்துகொண்டே வருகிறார்கள்.

2. ஆனால் இந்தியாவில் நிலை அப்படி இல்லை. இன்னும் கொஞ்சநாளில் உலகிலேயே மிக அதிக அளவிலான இளைஞர்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள். அவர்களை முற்றிவிளைந்த நற்கதிர்களாக வளர்த்தெடுத்தால் இந்தியா முதலிடம் பிடிப்பது கடினமான காரியம் இல்லை. இரண்டாமிடம் பிடிப்பது நிகழப்போகிறது. எது எப்படி இருந்தாலும் மூன்றாமிடம் பிடிப்பதை நாம் சில ஆண்டுகளிலேயே பார்க்கப்போகிறோம்.

Iniyan
02-05-2005, 03:53 PM
ஆகா....நம்பிக்கை சுடர் விடுகிறது. அப்துல் கலாம் சொன்னது போல 'இளைஞர்களே! கனவு காணுங்கள்'

pradeepkt
03-05-2005, 04:56 AM
அத்துடன் கனவு மட்டும் கண்டுவிட்டு சும்மா இருக்காதீர்கள்.
அக்கனவை நிறைவேற்ற எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள்.
வாழ்க பாரதம்

அறிஞர்
05-05-2005, 11:58 AM
நல்ல தகவல்கள் தம்பி....

இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.....

மன்மதன்
05-05-2005, 12:23 PM
உலக அளவில் பொருளாதாரத்தில் 4ம் இடம் இருக்கும் இந்தியா ஏன் உலக வங்கியில் கடன் வாங்குகிறது???

அன்புடன்
மன்மதன்

pradeepkt
05-05-2005, 06:01 PM
கடன் வாங்காத நாடுதான் எது?

பரஞ்சோதி
06-05-2005, 08:27 PM
உலக அளவில் பொருளாதாரத்தில் 4ம் இடம் இருக்கும் இந்தியா ஏன் உலக வங்கியில் கடன் வாங்குகிறது???

அன்புடன்
மன்மதன்

யப்பா மன்மதா, அது ஒரு அரசியல் விளையாட்டு.

நம்ம ஊரில் கூட பணக்காரன் பணம் இருப்பதாக சொல்ல மாட்டான், அங்கே கடனை வாங்கினேன், இங்கே கடனை வாங்கினேன் என்று சொல்லுவான், அப்போ தான் அவன்கிட்ட எவனும் கடன் கேட்டு போக மாட்டான்.

முத்து
09-05-2005, 11:13 AM
உலக அளவில் பொருளாதாரத்தில் 4ம் இடம் இருக்கும் இந்தியா ஏன் உலக வங்கியில் கடன் வாங்குகிறது???

அன்புடன்
மன்மதன்

மன்மதன்,
கடன் வாங்காத நாடு எது ?.
அமெரிக்காவின் கடன் எவ்வளவு என்று தெரிந்தால் இந்தியாவின் கடனைப் பற்றி அலட்டிக்கொள்ள மாட்டோம்.

அட,
அமெரிக்காவின் மொத்தக் கடனை விடுங்க, அமெரிக்காவின் சமீபத்திய பட்ஜெட்டின் ***பற்றாக்குறை*** எவ்வளவு தெரியுமா ?
சுமார் ***இந்திய பட்ஜெட்டின் மொத்த அளவைப் போல் எடடு மடங்கு + இரண்டு மடங்கு பாகிஸ்தான் பட்ஜெட் ***

வேறு வார்த்தையில் சொன்னால் இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து பட்ஜெட் போடும் மொத்தப் பணத்தை ஏழுவருஷம் சேர்த்தால் அது சமீபத்திய அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறைக்குச் சமம். கவனியுங்கள், இது அமெரிக்காவின் பற்றாக்குறை மட்டுமே.

இப்பொது கற்பனை செய்து பாருங்கள் எவ்வளவு பெரிய அளவு இது என.

karikaalan
14-05-2005, 10:00 AM
முத்துஜி

அருமையான கட்டுரை.

மற்ற நாடுகள் கையில் உள்ள டாலர் கையிருப்பு அனைத்தும் அமெரிக்கா பட்டிருக்கும் கடன்தான், ஒரு வகையில்.

இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் கடன் வாங்குகின்றன உலக வங்கியிடம் -- மத்திய அரசின் அனுமதி பெற்ற பின். அப்போதுதான் தெரிகிறது உலகவங்கியின் கெடுபிடிகள். மாநிலங்களும் செவிசாய்க்க வேண்டி நேருகிறது.

===கரிகாலன்

மன்மதன்
14-05-2005, 10:24 AM
இப்பத்தான் புரியுது.. கடனுக்கும் பொருளாதாரத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லைன்னு..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
14-05-2005, 10:26 AM
கரிகாலன் அண்ணா,

ஒரு நாடு உலக வங்கியிடம் கடன் வாங்குகிறது, ஒரு கால கட்டத்தில் அதனால் திருப்பி கட்ட முடியாத சூழ்நிலை வரும் போது உலக வங்கியின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தான், அரசாங்கமே நினைத்தாலும் வாங்கிய கடனை அடைக்க முடியாதே?

karikaalan
16-05-2005, 07:18 AM
பரஞ்சோதிஜி!

ஸ்வாஹாதான்!!

என்னதான் தீரவிசாரணை செய்து, கெடுபிடிகள் கொடுத்து உலகவங்கியும், IMF-ம் பொருள் உதவி செய்தாலும் சிலசமயம் தாங்கள் சொல்லியுள்ளது போல் ஆகிவிடுகின்றது.

கடன்கொடுத்தார் நெஞ்சம்போல் கலங்கினார் என்று சொல்லலாம்!

சமீபகாலத்தில் சில தென்னமெரிக்கநாடுகளின் கதி உலகவங்கியையும், IMF-ஐயும் கலங்க வைத்திருக்கின்றன. 1998-ல் சில கிழக்காசிய நாடுகள் -- குறிப்பாக இந்தோனேசியா, தாய்லாந்து, தென்கொரியா தடுமாறியபோதும் உலகவங்கியின் மீதும், IMF-ன் மீதும் கண்டனங்கள் குவிந்தன.

===கரிகாலன்

பரஞ்சோதி
17-05-2005, 07:16 PM
நன்றி அண்ணா.

உலக வங்கி என்பது எவரால் நிர்வகிப்பபடுகிறது, அதில் எந்த எந்த நாடுகள் முதலீடு செய்துள்ளது?

விபரம் தெரிந்தால் சொல்லுங்களேன்.

karikaalan
18-05-2005, 08:29 AM
பரஞ்சோதிஜி

கேள்வி மிகச் சிறியதாகக் கேட்டுவிட்டீர்கள்! விடை எழுத முயல்கிறேன் -- தனிப்பதிவாக.

===கரிகாலன்

பரஞ்சோதி
18-05-2005, 09:05 AM
அண்ணலின் கட்டுரை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.