PDA

View Full Version : ஆயுட் காப்பிடு : தெரிந்து கொள்ளலாமா



puppy
29-04-2005, 06:03 AM
ஆயுட்காப்பிடு : ஏன் எதற்கு.....நாம் தெரிந்து கொள்ளலாமா.....உரைநடையில் இல்லாமா .....நம்ம பூ,, இளசு இவங்க எல்லாம் கேள்வி கேக்கிற மாதிரி...நான் பதில் சொல்வேன்...அந்த மாதிரி கொஞ்சம் விறுவிறுப்பா எழுதலாம்ன்ன்னு இருக்கேன்......எல்லோரும் தங்கள் கருத்துகளையும் சொல்லாம்.....

அன்புடன்
பப்பி

puppy
29-04-2005, 06:32 AM
இடம் : பாண்டிச்சேரி பஜ்ஜி கடை
நம்ம பூவும், இளசும் எப்போதும் போல பஜ்ஜீ சாப்பிட்டு பேசிட்டு இருக்காங்க....

பூ : அண்ணே என் நண்பனின் அப்பா இறந்து போயிட்டாரு, அவர் இறந்ததுக்கு எங்கிருந்தோ பணம் வந்துச்சுன்னு கதை விடுறான்...இதெல்லாம் உண்மையா..கேட்டா இன்சூரன்ஸ் அது கிதுன்னு சொல்றான்..ஒன்னும் புரியலை.....உங்களுக்கு எதாச்சும் அதை பற்றி தெரியுமா??

[இளசுவின் முகம் கொஞ்சம் மாறுகிறது]

இளசு : என்னடா தெரியுமான்னு கேட்கிறே.....எல்லாம் தெரியும்டா ஆனால் நான் சொன்னா உனக்கு புரியாது, அதுதான் யோசிக்கிறேன்....

பூ : புரியற மாதிரி சொல்லுங்கன்னே

[இளசு மனசுக்குள் விடமாட்டான் போல இருக்கே]

எதையும் அழகாக எடுத்து சொல்லும் நம்ம லாவ்ஸ் [லாவ்ண்யா] அங்கே வர்ற, பூ மறுபடியும் எல்லா விஷயத்தையும் சொல்லி கேக்கிறார்..

லாவ் : இவ்வளவு தானா, நான் இதை பற்றி முழுசா உங்களுக்கு சொல்லி தர்றேன்.....ஓரே நிமிஷத்தில் சொல்லிட முடியாது.....சுருக்கமா சொல்லனும்னா
இன்சூரனஸ் [காப்பிடு] ன்னா பாதுகாப்பு, நஷ்ட ஈடு, சேவை ..

பூ : அப்படின்னா இன்சூரன்ஸ் வச்சு லாபம் பார்க்க முடியாதா ?

லாவ் : ரொம்ப சரி....பூ ..நல்ல விவரமானவாரா இருக்கீங்களே.... இன்சூரன்ஸ் நஷ்டத்தை ஈடு செய்யும்....அவ்வளவே

பூ : அப்போ எப்படி என் நண்பனுக்கு அவ்வளோ பணம் கிடைச்சது ?

லாவ் : இன்சூரண்சில் பல வகைகள் இருக்கு....அதில் ஒன்னு லைப் இன்சூரன்ஸ் [ஆயுட் காப்பிடு] இதில் ஒருவர் ஆயுட் காப்பிடு திட்டத்தில் சேர்ந்து 20 வருடங்களுக்கு பணம் போடலாம்.20 வருடங்களுக்கு அப்புறமா வர்ற பணத்தை sum assured [உறுதியாக வரும் பணம்] என்று சொல்வாங்க...இந்த திட்டத்தை யாரு எடுக்கிறாங்களோ அவங்களை Life assured (வாழ்வு உறுதி ) அப்படின்னு சொல்வாங்க....இந்த உறுதியான பணம் வருவத்ற்க்கான செலவை premium [காப்புறுதி தவணை பணம்] ன்னு சொலவாங்க...இந்த மாதிரி உங்க நண்பனின் அப்பா சேர்ந்து பணம் கட்டிட்டு வந்து இருப்பாரு....இதை யாரு எடுத்தாங்களோ அவர் 20 வருடத்திற்க்கு பின் உயிரோடு இருந்தால் சேமிப்பாக அவருக்கே வந்து விடும்...அவர் இற்ந்து போகும் பட்சத்த்தில் அவர் குடும்பத்துக்கு அவர் இழப்பை ஈடு கட்ட மொத்த பணமும் கொடுக்கபடும்..இப்போ புரியுதா ...

பூ : ஓரளவுக்கு புரியற மாத்ரி இருக்கு லாவ் மேடம்

(இளசு பஜ்ஜி சாப்பிடுவதில் தீவிரமாக இருக்கிறார் .....)

லாவ் : தினமும் கொஞ்ச கொஞ்சமா சொல்றேன்...இப்போ கிளமபனும்....

பூ : நீங்க சொல்லுங்க லாவ், நான் நல்லா தெரிஞ்சுப்பேன்

லாவ் : அடிக்கடி சின்ன பரிட்சை வைப்பேன்......சரியா

பூ : சரி லாவ் ....

தொடரும்

முத்து
29-04-2005, 06:24 PM
பப்பி,
நன்றி. பயனுள்ள தகவல்கள் .

Iniyan
29-04-2005, 11:04 PM
தயவு செய்து தொடருங்கள்.

thempavani
15-05-2005, 02:39 PM
என்ன பப்பி நிறுத்திட்டீங்க...

தொடருங்க.. நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்....

karikaalan
16-05-2005, 07:29 AM
இன்சூரன்ஸ்ல என்டௌமெண்ட் பாலிசின்னு ஒண்ணு. அதுதான் பப்பிஜி (லாவண்யாஜி) சொல்றது மாதிரி ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு இன்சூர் செய்வதென்பது.

ஹோல் லைப் பாலிசி என்றொன்று உண்டு. பாலிசி எடுப்பவர் அவர் காலத்திற்குப் பின் அவரது வாரிசுகளுக்கோ அல்லது அவர் இன்னாருக்குக் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறாரோ அவருக்கு சென்றடையும்.

சமீபகாலமாக மற்றோர் பாலிசியும் நடைமுறையில் உள்ளது. அதாவது எண்டௌமெண்ட் + ஹோல் லைப்.
அதாவது 20 ஆண்டுகளுக்கான பாலிசி எடுத்து, எடுத்தவர் 20 வருடங்கள் உயிருடன் இருந்தால் அவரெடுத்த தொகை அவருக்குக் கொடுக்கப்படும். அவர் இறந்த பின்னர் அதே போன்றதோர் தொகை அவரது வாரிசுகளுக்குக் கிடைக்கும்.

மேலும் விவாதிக்கலாம்.


===கரிகாலன்

இளந்தமிழ்ச்செல்வன்
21-06-2005, 08:07 PM
நல்ல பயனுள்ள செய்திகள். தொடருங்கள் பப்பி, கரிகாலன்

vimal100
30-06-2006, 03:22 AM
பயனுள்ள தகவலுக்கு நன்றி
தே.விமல்.
தமிழ்நாடு

இனியவன்
30-06-2006, 07:04 AM
பயனுள்ள தகவல்களைப் பதிந்தமைக்கு நன்றி,
பப்பி. கரிகாலன்
தொடருங்கள்