PDA

View Full Version : விடுமுறையில் செல்பவர்கள் பதிவேடு

Pages : [1] 2 3

mania
28-04-2005, 06:50 AM
:) அடுத்து அடுத்து இரு விசேஷங்கள் என் வீட்டில் நடைபெற இருப்பதால் (மே 2- என் 60 கலயாணம் ,மே 5- என் பேரனின் ஆண்டு நிறைவு ) மே 6ம் தேதி வரை என்னால் மன்றம் அடிக்கடி வர இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...
அன்புடன்
மணியா...:)

பரஞ்சோதி
28-04-2005, 08:22 AM
ஆகா, தலைக்கு 60ம் கல்யாணமா, வாழ்த்த வயதில்லை தலை, என் தலை வணங்குகிறேன்.

ஊரில் இருந்திருந்தால் ஒரு கலக்கு கலக்கியிருக்கலாமே.

யார் யார் எல்லாம் அங்கே ஆஜர் ஆக போறாங்க என்ற பட்டியல் விரைவில் கொடுங்க.

சுவேதா
28-04-2005, 11:30 AM
வாழ்த்துக்கள் மனிய அண்ணா என்று கூறவா இல்லை நன்பரென கூறவா இல்லை தாத்தா எனக் கூறவா புரியவில்லை எனக்கு.

mania
19-05-2005, 03:55 AM
பணி நிமித்தம் இன்று மதியம் பயணம் மேற்கொள்ளுவதால் திங்கள் கிழமைதான் மீண்டும் உங்களை சந்திக்க இயலும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
அன்புடன்
மணியா

பரஞ்சோதி
19-05-2005, 04:27 AM
எங்கள் தலையின் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.

தலை, இது தான் சாக்கு என்று அறிஞர் போக்கு காட்டாமல் நாங்க பார்த்துக் கொள்கிறோம்.

mania
19-05-2005, 04:52 AM
எங்கள் தலையின் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.

தலை, இது தான் சாக்கு என்று அறிஞர் போக்கு காட்டாமல் நாங்க பார்த்துக் கொள்கிறோம்.

ஏதாவது போக்கு காட்டினார் என்றால் சாக்கிலே கட்டு.... உங்களுக்கு இதுவும் சாக்கு....இன்னுமும் சாக்கு (இது கன்னட சாக்கு )என்று சொல்
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
19-05-2005, 04:54 AM
ஏதாவது போக்கு காட்டினார் என்றால் சாக்கிலே கட்டு.... உங்களுக்கு இதுவும் சாக்கு....இன்னுமும் சாக்கு (இது கன்னட சாக்கு )என்று சொல்
அன்புடன்
மணியா...:D

சரி தலை,

முன்பு உருளைக்கிழங்கு மூட்டையில் பூவை கட்டி வைத்த மாதிரி தானே.

mania
19-05-2005, 05:00 AM
சரி தலை,

முன்பு உருளைக்கிழங்கு மூட்டையில் பூவை கட்டி வைத்த மாதிரி தானே.

:D :D :D
அன்புடன்
மணியா...

அறிஞர்
19-05-2005, 07:11 AM
ஹி ஹி.... வாழ்த்துக்கள்.. நல்லபடியா போயிட்டு வாங்க...

பாரதி
19-05-2005, 07:55 AM
அண்ணாவின் பயணம் வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும், உற்சாகமானதாகவும் :cool: அமைய வாழ்த்துக்கள்.

சுவேதா
19-05-2005, 08:46 PM
தாத்தாவின் பயணம் நல்ல படியாக அமைய எனது வாழ்த்துக்கள்!

அறிஞர்
20-05-2005, 03:42 AM
தாத்தாவின் பயணம் நல்ல படியாக அமைய எனது வாழ்த்துக்கள்!

தாத்தவை விட மாட்டீர் போல....

சுவேதா
20-05-2005, 01:33 PM
பின்ன நான் தாத்தாவ விடுவனா என்ன?

majara
21-05-2005, 05:22 AM
எல்லோரும் வால்த்துச் சொன்னால் மட்டும் எப்படி

விசேஷத்தில் உள்ள்வற்ரை எமக்கும் எடுத்து வரவும்... மறக்காமல்

பிரியன்
21-05-2005, 07:35 PM
எல்லோரும் வால்த்துச் சொன்னால் மட்டும் எப்படி

விசேஷத்தில் உள்ள்வற்ரை எமக்கும் எடுத்து வரவும்... மறக்காமல்

தட்டச்சில் கவனம் செலுத்துங்கள் நண்பரே.....

mania
19-06-2005, 04:04 AM
சொந்த வேலையாக வெளியூர் செல்வதனால் மன்றத்துக்கு மீண்டும் புதன் காலையில்தான் வரமுடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்....
அன்புடன்
மணியா

மன்மதன்
19-06-2005, 04:32 AM
நல்ல படியாக சென்று வாருங்கள் தலை..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
19-06-2005, 04:58 AM
அலுவலக வேலையை சொந்த வேலையாக மாற்றி பயணம் செய்யும் எங்கள் தலையின் பயணம் வெற்றிக்கரமாக அமைய வாழ்த்துகள்.

விடுமுறை காலக்கட்டத்தில் ஐவர் அணியினை நடத்தும் பொறுப்பை இராகவன் அண்ணாவிடம் கொடுக்க வேண்டுகிறேன்.

அவர் பாட்டு பாடியே ...... விடுவார்/

சுவேதா
19-06-2005, 01:52 PM
நல்ல படியாக போய் வாருங்கள் தாத்தா!

பாரதி
19-06-2005, 02:07 PM
அன்பு மணியா அண்ணாவின் பயணம் மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.

அறிஞர்
20-06-2005, 03:17 AM
பயணங்கள்.. இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்

gragavan
29-06-2005, 06:15 AM
வருகின்ற வெள்ளி...அதாவது நாளை மறுநான் சென்னைக்குச் செல்கிறேன். சகோதரியும் குழந்தைகளும் ஊரிலிருந்து வந்திருப்பதால் செல்கிறேன். ஐந்து நாட்கள் சென்னையில் தங்கல். புதன் கிழமை இரவு புறப்பட்டு திரும்பவும் பெங்களூர் வந்து விடுவேன். ஆகையால் இந்த ஐந்து நாட்களில் மன்றத்தில் பங்களிப்பு குறைவாக இருக்கும்.

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
29-06-2005, 06:17 AM
பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் மாம்ஸ்.. சென்னை சென்றால் தலையை பார்ப்பீங்கதானே..
அன்புடன்
மன்மதன்

gragavan
29-06-2005, 06:21 AM
பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் மாம்ஸ்.. சென்னை சென்றால் தலையை பார்ப்பீங்கதானே..
அன்புடன்
மன்மதன்கண்டிப்பாக பார்க்கனும். ஆனால் அவர் ஓய்வாக இருக்க வேண்டுமே!

mania
29-06-2005, 06:31 AM
கண்டிப்பாக பார்க்கனும். ஆனால் அவர் ஓய்வாக இருக்க வேண்டுமே!

:D நான் ஓய்வாக இருக்கணும் என்றால் கொஞ்சம் கஷ்டம்தான்.....( நான் தேனி போல சுறு சுறுப்பானவன் ).....ஹி....ஹி....ஹி....:rolleyes: இப்போதைக்கு வெளியூர் பயணம் எதுவும் இல்லை. அதனால் உனக்கு ஒழிந்த நேரத்தில்.....???? எனக்கு ஃபோன் செய்தால் நாம் சந்திக்கலாம்.....:D
அன்புடன்
மணியா......;)
( தொலைபேசி எண் தனிமடலில் )

pradeepkt
29-06-2005, 06:35 AM
தேனி, போடிநாயக்கனூரு போல தலை சுறுசுறுப்பு!!!

நானும் இந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சென்று அன்றைக்கு இரவு சென்னைக்குச் செல்கிறேன்.
சென்னையில் இரண்டு நாள் இருப்பதாகத் திட்டம்.
தலை, ராகவா, நம்ம பேசித் தீர்த்துக்குவோம், சரியா?

உங்க ரெண்டு பேரு எண்ணுமே என்கிட்ட இருக்கு.

gragavan
29-06-2005, 06:38 AM
பிரதீப் சென்னைக்கு வர்ரீங்களா? ரொம்ப சந்தோசம். முப்பெருங் கூட்டணி அமைச்சிருவோம்.

மன்மதன்
29-06-2005, 06:43 AM
ஆஹா.. ரெண்டு வாரம் தள்ளிபோட்டிங்கன்னா நானும் சுதியில கலந்துக்கிடுவேனே..
அன்புடன்
மன்மதன்

gragavan
29-06-2005, 06:48 AM
ஆஹா.. ரெண்டு வாரம் தள்ளிபோட்டிங்கன்னா நானும் சுதியில கலந்துக்கிடுவேனே..
அன்புடன்
மன்மதன்மம்ஸ் நீயும் சென்னைக்கு வர்ரியா? வா வா. நான் ஆகஸ்டு நாலாந்தேதி மாலை சென்னையில் இருப்பேன். திரும்பக் கிளம்புவது ஆறாந்தேதி இரவுதான்.

pradeepkt
29-06-2005, 06:48 AM
அதனால என்னப்பு... ராகவனுக்கும் எனக்கும் சென்னை வரது ஒரு பெரிய விஷயமா என்ன? வந்து கலக்கிருவம் கலக்கி.

gragavan
29-06-2005, 06:51 AM
அதனால என்னப்பு... ராகவனுக்கும் எனக்கும் சென்னை வரது ஒரு பெரிய விஷயமா என்ன? வந்து கலக்கிருவம் கலக்கி.அதான! இந்தா இருக்கு ரெண்டு எட்டுல வந்துற மாட்டோம்.

pradeepkt
29-06-2005, 06:54 AM
அதென்னங்க ரெண்டு எட்டு... பதினாறு - ஏதாச்சும் ஸ்பெஷலா? :)
எனக்கே தெரியாம ... ?

மன்மதன்
29-06-2005, 07:19 AM
ஆகஸ்ட் வந்து கொடியேற்றிர வேண்டியதுதான். தலையின் பாடு திண்டாட்டம்தான்..ஹிஹி.
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
29-06-2005, 07:51 AM
எல்லாம் மணியாவை பிஸியாக்குகிறீர்கள்.. நண்பர்களின் பயணங்கள் நன்றாக அமைய வாழ்த்துக்கள்...

gragavan
29-06-2005, 08:32 AM
அதென்னங்க ரெண்டு எட்டு... பதினாறு - ஏதாச்சும் ஸ்பெஷலா? :)
எனக்கே தெரியாம ... ?அதொன்னும் பெரிய விசயம் இல்லீங்க. நம்ம தெருக்குள்ளுவரு சொன்ன "எட்டுக எட்டற்றான் எட்டை அவ்வெட்டை எட்டுக எட்டு விடத்து" தான்.

mania
29-06-2005, 08:34 AM
ஆகஸ்ட் வந்து கொடியேற்றிர வேண்டியதுதான். தலையின் பாடு திண்டாட்டம்தான்..ஹிஹி.
அன்புடன்
மன்மதன்

:D கரீட்டா எத்தினி பேரு வரீங்கன்னு முன்னங்காட்டியே சொல்லிபுடுங்க......சட்டைலே குத்திக்க கொடியும் குண்டூசியும் பல்லி மிட்டாயும் வாங்கனும்லே.....:D
அன்புடன்
மணியா....:D

mania
29-06-2005, 08:37 AM
அதொன்னும் பெரிய விசயம் இல்லீங்க. நம்ம தெருக்குள்ளுவரு சொன்ன "எட்டுக எட்டற்றான் எட்டை அவ்வெட்டை எட்டுக எட்டு விடத்து" தான்.

:confused: என்னமோ ஸ்கூட்டர் டிரைவிங் லைசென்ஸ் வாங்குற இடத்திலே மாட்டின போர்ட் மாதிரி இருக்கே.....!!!:D
அன்புடன்
மணியா...:D

gragavan
29-06-2005, 08:49 AM
:confused: என்னமோ ஸ்கூட்டர் டிரைவிங் லைசென்ஸ் வாங்குற இடத்திலே மாட்டின போர்ட் மாதிரி இருக்கே.....!!!:D
அன்புடன்
மணியா...:Dரொம்பச் சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே! அதான் ஒங்களத் தலைங்குறோம்.

gragavan
29-06-2005, 08:50 AM
எல்லாம் மணியாவை பிஸியாக்குகிறீர்கள்.. நண்பர்களின் பயணங்கள் நன்றாக அமைய வாழ்த்துக்கள்...நன்றி அறிஞரே உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.

மன்மதன்
29-06-2005, 08:58 AM
:D கரீட்டா எத்தினி பேரு வரீங்கன்னு முன்னங்காட்டியே சொல்லிபுடுங்க......சட்டைலே குத்திக்க கொடியும் குண்டூசியும் பல்லி மிட்டாயும் வாங்கனும்லே.....:D
அன்புடன்
மணியா....:D

உஹூம்பா. நான் வரலை....பல்லி விழுந்த மிட்டாயெல்லாம் சாப்பிட கூடாதுன்னு மைதிலி சொல்லியிருக்கா :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

gragavan
29-06-2005, 09:06 AM
உஹூம்பா. நான் வரலை....பல்லி விழுந்த மிட்டாயெல்லாம் சாப்பிட கூடாதுன்னு மைதிலி சொல்லியிருக்கா :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்மிட்டாய்ல பல்+ஈ உக்காரலாம். விழுமோ?

mania
29-06-2005, 09:20 AM
மிட்டாய்ல பல்+ஈ உக்காரலாம். விழுமோ?

:D இந்த பயத்துக்குத்தான் "ஈறுகெட்ட எதிர் மறை பெயர் அச்சம்" என்பார்களோ.....???:rolleyes:
அன்புடன்
மணியா....:D

pradeepkt
29-06-2005, 09:25 AM
:D இந்த பயத்துக்குத்தான் "ஈறுகெட்ட எதிர் மறை பெயர் அச்சம்" என்பார்களோ.....???:rolleyes:
அன்புடன்
மணியா....:D
போகப் போக கேடுகெட்ட பல்லி எச்சம் ஆகிறப் போகுது.
பல்லி மிட்டாய் பத்திரம்.

gragavan
29-06-2005, 09:45 AM
:D இந்த பயத்துக்குத்தான் "ஈறுகெட்ட எதிர் மறை பெயர் அச்சம்" என்பார்களோ.....???:rolleyes:
அன்புடன்
மணியா....:Dஅச்சம் என்பது நம்மிடம் கொஞ்சம் கொஞ்சம் கூட மிச்சம் இல்லையே! எதிரணியிடம் இருக்கலாம்.

mania
29-06-2005, 09:55 AM
அச்சம் என்பது நம்மிடம் கொஞ்சம் கொஞ்சம் கூட மிச்சம் இல்லையே! எதிரணியிடம் இருக்கலாம்.

:D சொச்சம் தான் இருக்கும் இல்லையா.....மச்சம்தான் போ...... ஏதோ எச்சம் படாம பாத்துக்கோங்க....:D
அன்புடன்
மணியா.....
( இந்த மாதிரி அடுக்கு மொழியிலும் எதுகை மோனையோடும் பேசி எதிரணி இருக்கற இடமே தெரியலையே.........!!!!):D

pradeepkt
29-06-2005, 10:52 AM
சரி, அப்ப நம்மளே களத்தில இருந்து என்ன புண்ணியம்?
எதிரணியில யாராச்சும் பரிதாபப்பட்ட ஜீவன்கள் வருவார்கள்.
அப்ப பாத்துக்கலாம்.

பரஞ்சோதி
29-06-2005, 10:53 AM
யாரப்பா ஊருக்கு போறது, தேடி பார்த்தேன், பிடிபடலையே?

- சந்தேக பரம்ஸ்

gragavan
29-06-2005, 11:13 AM
யாரப்பா ஊருக்கு போறது, தேடி பார்த்தேன், பிடிபடலையே?

- சந்தேக பரம்ஸ்ஒரு ரெண்டு மூனு பக்கம் பின்னால போய்ப் பாரு தம்பி...தெரியும்.

மன்மதன்
04-07-2005, 07:13 AM
நான் வருகிற வியாழன் அன்று 1 மாத விடுப்பில் ஊருக்கு செல்கிறேன்.. இடையில் மன்றம் வர முயற்சிக்கிறேன்.
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
04-07-2005, 07:20 AM
நண்பா, உன் விடுமுறை பயணம் வெற்றிகரமாகவும், இனிமையானதாகவும் அமைய வாழ்த்துகள்.

karikaalan
04-07-2005, 08:20 AM
மன்மதன்ஜி

தில்லி வரும் நோக்கம் உண்டா? தங்களது விடுமுறை மகிழ்ச்சியுடன் கழிய வாழ்த்துக்கள்!

===கரிகாலன்

பிரியன்
04-07-2005, 08:25 AM
மன்மதனுக்கு விடுமுறையை நல்லபடியாய் கழிக்க வாழ்த்துக்கள். மறக்காம தொலைபேசி எண் கொடுங்க.. தொல்லை கொடுக்க....

thempavani
04-07-2005, 08:43 AM
மன்மதன் தொலைபேசி எண் கொடுத்தால் உடனே சோதிச்சு பாருங்க பிரியன்... எண்ணை மாற்றிக் கொடுப்பதில் ஆளு கில்லாடியாக்கும்...

மன்மதன்
04-07-2005, 10:04 AM
தில்லி வர்ர ஐடியா இல்லை கரிகாலன்ஜி.. நீங்கள் சென்னை வாருங்களேன்.. இரண்டு தலைகளுடன் ஒரு சந்திப்பை போட்டுடறேன்.. பார்ட்டி கூட வச்சிடலாம்.. :D
அன்புடன்
மன்மதன்

என்னுடைய நம்பர் +9194441 74202 ..(ஆஹா.. அதே நம்பர்தான்.. என்று தேம்பா தேம்பி தேம்பி அழுதுவது தெரிகிறது. வெள்ளிக்கிழமை கழித்து தொடர்பு கொள்ளுங்க நண்பர்களே..)

அறிஞர்
04-07-2005, 10:16 AM
ரெண்டு பெரிய தலைகளுடன்... சந்திப்பா... அனுபவி ராஜா.. அனுபவி...

thempavani
04-07-2005, 10:47 AM
எப்பு நம்பர் கரீட்டுதானே??????????????????????

பிரியன்
04-07-2005, 11:08 AM
அன்புடன்
மன்மதன்

என்னுடைய நம்பர் +9194441 74202 ..

நன்றி மன்மதன். 16ம் தேதிக்கு பிறகு அழைக்கிறேன்....

பாரதி
04-07-2005, 02:10 PM
விடுமுறை இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள் மன்மதன்.

சுவேதா
04-07-2005, 07:49 PM
நல்ல படியாக போய் வாருங்கள் மன்மதன்.உங்கள் விடு முறை நல்ல படியாக அமையட்டும்.

mania
05-07-2005, 06:54 AM
அதனால என்னப்பு... ராகவனுக்கும் எனக்கும் சென்னை வரது ஒரு பெரிய விஷயமா என்ன? வந்து கலக்கிருவம் கலக்கி.

:mad: அதான் பாத்தோம்லா.....கலக்கி ஆனந்தவிகடன் குங்குமம் எல்லாம் ........:mad:
கோபத்துடன்
மணியா...
(சைதாபேட்டை காவல் நிலயத்தில் புகார் கொடுத்திருக்கிறோம்......ஆளை காணவில்லையென்று....அடுத்த முறை சென்னை வரும்போது ஜாக்கிறதை....சைதாபேட்டை பக்கம் போனால் பிடித்து உள்ளே வைத்துவிடுவார்கள்.....):rolleyes:

மன்மதன்
05-07-2005, 07:01 AM
ஓஹோ.. அப்படின்னா பிரதீப் உங்களை சந்திக்கவில்லையா... இது நியாயமா பிரதீப் :D :D. அப்ப கொண்டு போன கிஃப்ட்டை யாரு குடித்தா :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

mania
05-07-2005, 07:06 AM
ஓஹோ.. அப்படின்னா பிரதீப் உங்களை சந்திக்கவில்லையா... இது நியாயமா பிரதீப் :D :D. அப்ப கொண்டு போன கிஃப்ட்டை யாரு குடித்தா :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

:mad: கிப்டு தெப்டு ஆயிடிச்சாம்.....:mad:
அன்புடன்
மணியா...:mad:

pradeepkt
05-07-2005, 07:16 AM
மன்னிக்க தலை. :(
அன்றைக்கு ஒரு முன்பதிவு குளறுபடியால் நான் அன்று மதியமே பெங்களூர் திரும்ப வேண்டியதாயிற்று.
மொத்தமே 6 மணி நேரம்தான் இருந்தேன். அடுத்த தடவை சைதாப்பேட்டைக்கு முன்னாடியே அண்ணா சாலைக்கு வந்திடுறேன்.

pradeepkt
05-07-2005, 07:17 AM
ஓஹோ.. அப்படின்னா பிரதீப் உங்களை சந்திக்கவில்லையா... இது நியாயமா பிரதீப் :D :D. அப்ப கொண்டு போன கிஃப்ட்டை யாரு குடித்தா :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்
யோவ் போ. கு. மன்மதா,
அடுத்து உங்களைப் பத்தி ஒரு கவிதை எழுதினாதான் என் மனசு நிம்மதியாகும் போல. அவரே கடுப்பில இருக்காரு... நீங்க வேற :mad:

mania
05-07-2005, 07:23 AM
யோவ் போ. கு. மன்மதா,
அடுத்து உங்களைப் பத்தி ஒரு கவிதை எழுதினாதான் என் மனசு நிம்மதியாகும் போல. அவரே கடுப்பில இருக்காரு... நீங்க வேற :mad:

:D சும்மா லோகல் அமீர் பேட்டை ஆளு இப்படி பண்ணினா.....அமீரகத்திலிருந்து வர கொக்குங்க என்ன என்ன பண்ணலாம்....????:rolleyes:
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
05-07-2005, 07:26 AM
:D சும்மா லோகல் அமீர் பேட்டை ஆளு இப்படி பண்ணினா.....அமீரகத்திலிருந்து வர கொக்குங்க என்ன என்ன பண்ணலாம்....????:rolleyes:
அன்புடன்
மணியா...:D

நாங்கலெல்லாம் பெர்ஃபெக்ட் .. 2 தடவை குறுவிடுப்புல (சின்ன விடுப்பு ) வந்தும் 2 தடவையும் விசிட் பண்ணியிருக்கேன்..:) :)
எ.நெ.எ.வி
மன்மதன்

அறிஞர்
05-07-2005, 09:03 AM
மன்மதன் தங்களின் பயணம் எப்பொழுது.... ஆகஸ்ட்டில் நானும் இந்தியா வந்தாலும் வருவேன்....

மன்மதன்
05-07-2005, 09:11 AM
இந்த வார கடைசியில்... ஆகஸ்ட் 10 வரை இருப்பேன். ஆகஸ்ட் முதல் வாரம் வாருங்கள்... பந்தியே போட்டிடலாம்..
அன்புடன்
மன்மதன்

mania
05-07-2005, 09:16 AM
மன்மதன் தங்களின் பயணம் எப்பொழுது.... ஆகஸ்ட்டில் நானும் இந்தியா வந்தாலும் வருவேன்....

நான் வருகிற வியாழன் அன்று 1 மாத விடுப்பில் ஊருக்கு செல்கிறேன்.. இடையில் மன்றம் வர முயற்சிக்கிறேன்.
அன்புடன்
மன்மதன்

அன்புடன்
மணியா

thempavani
05-07-2005, 09:18 AM
யோவ் போ. கு. மன்மதா,
அடுத்து உங்களைப் பத்தி ஒரு கவிதை எழுதினாதான் என் மனசு நிம்மதியாகும் போல. அவரே கடுப்பில இருக்காரு... நீங்க வேற :mad:

அடிபுடி சண்டை போடாதீங்கப்பா...

சமாதன விரும்பி
தேம்பா

அறிஞர்
06-07-2005, 04:18 AM
அன்புடன்
மணியா என்ன மணியா சொல்ல வறீங்க...

mania
06-07-2005, 05:49 AM
என்ன மணியா சொல்ல வறீங்க...

:confused: மன்மதனின் பயண திட்டத்தை நான் கொடுத்திருந்தேன்....?
அன்புடன்
மணியா..:)

மன்மதன்
06-07-2005, 06:00 AM
:confused: மன்மதனின் பயண திட்டத்தை நான் கொடுத்திருந்தேன்....?
அன்புடன்
மணியா..:)

பயண திட்டமா..:confused: :confused: பிரதமர் ரேஞ்சில வச்சிருக்கீங்க போலிருக்கு..:) :)
அன்புடன்
பிரமாதமானவன்..

பிரியன்
06-07-2005, 06:00 AM
அன்பு நண்பர்களே நான் வருகிற 14ம் தேதி ஒருமாத விடுமுறையில் இந்தியா வருகிறேன். சென்னை, பெங்களூர் செல்ல முடிவு செய்துள்ளேன். மன்ற உறவுகளை சந்திக்கவும் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். தொலைபேசி எண்கள் கொடுத்தால் தொடர்பு கொள்ள வசதியாய் இருக்கும்.

gragavan
06-07-2005, 06:03 AM
வாங்க பிரியன் வாங்க. எங்களூராம் பெங்களூர் உங்களை வரவேற்கிறது. ஒரு தனிமடலில் எண்ணை அனுப்புகிறேன்.

மம்ஸ், நான் ஆகஸ்ட் ஐந்தும் ஆறும் சென்னையில் இருப்பேன். கவனி. ஐந்து ஆறு. வார நாட்கள் அவை. அப்பொழுது சந்திப்போம்.

மன்மதன்
06-07-2005, 06:09 AM
சென்னையில் தலை, நான், பிரியன், பிரதீப், இராகவன்.. ஆகஸ்ட் மாதத்தில் 4,5 ம் தேதிகளில் சந்திக்கலாம் என்றிருக்கிறோம்..

மற்றவர்களும் பெயர் கொடுங்க.. ஹிட் லிஸ்ட்ல சேர்க்க வசதியா இருக்கும்.. :D

(இராகவா.. பெங்களூர்லேர்ந்து ஜில்லென்று ஏதாவது எடுத்துகிட்டு வா மாம்ஸ்..:D )

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
06-07-2005, 06:14 AM
அப்படின்னா.. சென்னையில் மிகப்பெரிய பார்ட்டி இருக்கா.... என் திட்டம் இன்னும் தெளிவாகவில்லை... ஜூலை கடைசி வாரத்தில் சொல்கிறேன்...

மன்மதன்
06-07-2005, 06:15 AM
அறிஞர் , சேரன் , பூ, பாலா , கவிதா, மைதிலி, இன்னும் ஒருவர் கலந்து கொண்டால் தலை சொன்ன மாதிரி டர்ட்டி டஜன் பார்ட்டிதான்.. :D
அன்புடன்
மன்மதன்

thempavani
06-07-2005, 06:18 AM
சென்னையில் தலை, நான், பிரியன், பிரதீப், இராகவன்.. ஆகஸ்ட் மாதத்தில் 4,5 ம் தேதிகளில் சந்திக்கலாம் என்றிருக்கிறோம்..

மற்றவர்களும் பெயர் கொடுங்க.. ஹிட் லிஸ்ட்ல சேர்க்க வசதியா இருக்கும்.. :D

(இராகவா.. பெங்களூர்லேர்ந்து ஜில்லென்று ஏதாவது எடுத்துகிட்டு வா மாம்ஸ்..:D )

அன்புடன்
மன்மதன்

இரண்டு துண்டு ஐஸ் கியூப்ஸ் எடுத்துட்டு போங்க ராகவன் அண்ணா...:D

thempavani
06-07-2005, 06:19 AM
அறிஞர் , சேரன் , பூ, பாலா , கவிதா, மைதிலி, இன்னும் ஒருவர் கலந்து கொண்டால் தலை சொன்ன மாதிரி டர்ட்டி டஜன் பார்ட்டிதான்.. :D
அன்புடன்
மன்மதன்

:eek: :eek::eek::eek::eek::eek::eek::eek:

பரஞ்சோதி
06-07-2005, 06:21 AM
இரண்டு துண்டு ஐஸ் கியூப்ஸ் எடுத்துட்டு போங்க ராகவன் அண்ணா...:D

நீயுமா தேம்பா?

- சீசர் பரம்ஸ்

thempavani
06-07-2005, 06:24 AM
அண்ணா "போங்க" என்றுதான் சொல்லியிருக்கிறேன்..."வாங்க" என்று சொல்லவில்லை..

நல்ல பிள்ளையிடம் இப்படியேல்லாம் பேசாதீர்கள்..

mania
06-07-2005, 06:27 AM
அப்படின்னா.. சென்னையில் மிகப்பெரிய பார்ட்டி இருக்கா.... என் திட்டம் இன்னும் தெளிவாகவில்லை... ஜூலை கடைசி வாரத்தில் சொல்கிறேன்...

:confused: பார்ட்டிக்கு முன்னாடியே இப்படியா.....???:rolleyes:
கவலையுடன்
மணியா...:D

மன்மதன்
06-07-2005, 06:34 AM
:eek: :eek::eek::eek::eek::eek::eek::eek:

என்ன தேம்பா.. ஷாக் ஆயிட்டே ?? நீயும் வந்து ஐஸ் க்யூப் பார்ட்டிலே கலந்துக்கொள்ளேன்..:D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
06-07-2005, 06:43 AM
[QUOTE=thempavani]அண்ணா "போங்க" என்றுதான் சொல்லியிருக்கிறேன்..."வாங்க" என்று சொல்லவில்லை..
QUOTE]

நீ முன்னேலே போ, நான் அப்பாலே வாரேன்னு சொல்லலை தானே.

இந்த காலத்து பிள்ளைகளை நம்பவே முடியாதுன்னு எங்க பா(ர் )ட்டி சொல்லுறாங்க.

பரஞ்சோதி
06-07-2005, 06:44 AM
மக்கா இது விடுமுறைக்குன்னு இருக்கிற தலைப்பு, இதிலே ஊத்து ஊத்து என்று பதிவுகளை அள்ளி தெளிக்கிறீங்க, வேற தலைப்பு ஐவர் அணிக்கு மாறுங்க..

mania
08-07-2005, 11:02 AM
ஓய்வுக்காக வந்திருந்த மகளையும் பேரனையும் திருச்சிக்கு கொண்டுவிடவேண்டியிருப்பதால் மீண்டும் திங்களன்றுதான் மன்றம் வரமுடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்....:)
அன்புடன்
மணியா...:)

சுவேதா
08-07-2005, 12:38 PM
நல்ல படியாக போய் வாருங்கள் தாத்தா!

thempavani
08-07-2005, 01:00 PM
;) நீங்களும் போய் நல்லா ஓய்வு எடுங்கள் தாத்தா...;) :rolleyes:

பிரியன்
12-07-2005, 12:12 PM
நண்பர்களே விடுமுறைக்கு இந்தியா வருவதினால் 14ம் தேதி மதியத்திலிருந்து என்னால் தொடர்ந்து பங்களிக்க முடியாது. இடைப்பட்ட நேரங்களில் முடிந்தால் மன்றம் வந்து மகிழ்வேன்.....

மறுபடியும் சுதந்திரதினத்தன்று துபாய் திரும்புகிறேன்..........

பரஞ்சோதி
12-07-2005, 12:21 PM
பிரியமான பிரியன், உங்களின் விடுமுறை இனியதாக அமைய வாழ்த்துகள்.

திரும்பி வரும் போது கவிதை மழை பொழிய மேகங்களோடு வாருங்கள்.

பிரியன்
12-07-2005, 12:27 PM
வந்துட்டா போச்சு...

gragavan
12-07-2005, 12:56 PM
வாங்க பிரியன் வாங்க. பெங்களூர் வந்து போன் போடுங்க.

pradeepkt
12-07-2005, 01:02 PM
ஆமா பிரியன். உங்க எண் என்கிட்ட இருக்கு.
எனினும் நம்ம ஒரு பெங்களூரு டிரிப் போடுவோம்.

பிரியன்
12-07-2005, 01:26 PM
வெள்ளி அல்லது சனி அன்று தொலைபேசி செய்கிறேன். உங்களை கலந்துகொண்டு ராகவனைத் தொடர்பு கொண்டால் அனைவரும் சந்திப்பதற்கு வசதியாக இருக்கும்.

அப்புறம் என்ன நம்ம புகைப்படம் வலைப்பூவுல இருக்கு பார்த்துக்கங்க மக்களே...

பரஞ்சோதி. உங்கள் தாயாரின் தொலைபேசி எண் கேட்டிருந்தேன். என்னாயிற்று

அறிஞர்
12-07-2005, 02:55 PM
தங்களை காண முயலுகிறேன்... பிரியன். ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். மன்றத்தின் தகவல் அதிகாரி மணியாவிடம் தங்கள் கைதொலைபேசி எண்ணை கொடுத்துவிடுங்கள்

பிரியன்
14-07-2005, 09:52 AM
நாமன் இந்தியாவிற்கு கிளம்பிவிட்டேன். நேரம் கிடைக்கும் போது மன்றத்திற்கு வருகிறேன்.

அன்புடன்
பிரியன்

பரஞ்சோதி
14-07-2005, 09:56 AM
பிரியன் இதோ தொலைபேசி எண் தருகிறேன்.

pradeepkt
14-07-2005, 10:01 AM
பிரியன்,
நல்லபடியாக வந்து சேருங்கள்.
வந்து எங்களைத் தொலைபேசியில் கூப்பிடுங்கள்.
அன்புடன்,
பிரதீப்

gragavan
14-07-2005, 10:18 AM
ஆமாமா! வந்து கூப்புடுங்க.

kavitha
20-07-2005, 10:57 AM
நல்வரவு பிரியன். விரைவில் அனைவரும் சந்திப்போம். வாழ்த்துகளுடன்,

கவிதா

சுவேதா
20-07-2005, 11:41 AM
நல்ல படியாக போய் வாருங்கள் ப்ரியன் அண்ணா!

pradeepkt
20-07-2005, 12:51 PM
அவரு இங்க வந்து சேந்து கொள்ள நாளு ஆகிப்போச்சும்மா...

sumathi
20-07-2005, 11:53 PM
விடுமுறை தலைப்பில் தகவல் பரிமாறும் இடமாயிடுச்சிப்பா...........
ஒழங்கா தமிழகத்தில் என்ஞாய் பண்ணாத வயிற்றெரிச்சலொடு சுமா.:mad:

mania
21-07-2005, 04:55 AM
விடுமுறை தலைப்பில் தகவல் பரிமாறும் இடமாயிடுச்சிப்பா...........
ஒழங்கா தமிழகத்தில் என்ஞாய் பண்ணாத வயிற்றெரிச்சலொடு சுமா.:mad:

:rolleyes: :rolleyes: ஏன் தாம்பரம் பஸ் ஸ்டாண்டை நல்லா சுத்தி காமிக்கலையா சகோதரி.....???/:mad:
வருத்தத்துடன்
மணியா....:eek:

kavitha
22-07-2005, 11:16 AM
:rolleyes: :rolleyes: ஏன் தாம்பரம் பஸ் ஸ்டாண்டை நல்லா சுத்தி காமிக்கலையா சகோதரி.....???/:mad:
வருத்தத்துடன்
மணியா....:eek:
நாங்கள் சந்தித்துக்கொண்ட 1 மணி நேரத்தில் அதைத்தான் செய்யமுடிந்தது. ஹஹ்ஹா!

ஊருக்கு செல்வதால் மீண்டும் உங்களனைவரையும் செவ்வாயன்று சந்திப்பேன் என்று கூறி விடைபெறுகிறேன்.
( மணியா : என்னமோ தினமும் வராமாதிரி :D )

அறிஞர்
22-07-2005, 01:17 PM
ஊருக்கு செல்வதால் மீண்டும் உங்களனைவரையும் செவ்வாயன்று சந்திப்பேன் என்று கூறி விடைபெறுகிறேன்.
( மணியா : என்னமோ தினமும் வராமாதிரி :D )
:D :D :D :D :D :D
பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்...
என்ன மணியா ஆகஸ்ட் 4ந்தேதி மன்ற நண்பர்களின் சந்திப்பு இருக்கிறதா.

பாரதி
22-07-2005, 05:37 PM
அன்பு கவிதா, உங்கள் பயணமும், விடுமுறையும் இனிதே கழிய வாழ்த்துக்கள்.

pradeepkt
23-07-2005, 03:54 AM
நான் முன்பதிவு செய்து விட்டேன்.பிரியன் கண்டிப்பாக வருவதாகச் சொல்லியிருக்கிறார்.ராகவன் எப்படியும் வந்துதான் ஆக வேண்டும்.தலை அங்கேதான் இருப்பார்.போதாக்குறைக்கு மன்மதன் வேறு வாக்களித்திருக்கிறார்.அனேகமாக அடுத்த மலேசியச் செய்திகளில் நம்ம மனோ.ஜி எங்களைப் பத்தியும் எழுத வேண்டி இருக்கும் :D

அறிஞர்
23-07-2005, 06:27 AM
நான் முன்பதிவு செய்து விட்டேன்.பிரியன் கண்டிப்பாக வருவதாகச் சொல்லியிருக்கிறார்.ராகவன் எப்படியும் வந்துதான் ஆக வேண்டும்.தலை அங்கேதான் இருப்பார்.போதாக்குறைக்கு மன்மதன் வேறு வாக்களித்திருக்கிறார்.அனேகமாக அடுத்த மலேசியச் செய்திகளில் நம்ம மனோ.ஜி எங்களைப் பத்தியும் எழுத வேண்டி இருக்கும் :D4ந்தேதி பற்றித்தானே சொல்கிறீர்..... சந்திக்கும் நேரம் மாலை நேரமா.. இடம் எங்கே...

karikaalan
23-07-2005, 06:59 AM
அறிஞர் பெயருக்கு அடியில் ஏன் "Junior Member" என்று போட்டிருக்கிறது??!!

அறிஞர்
23-07-2005, 08:30 AM
அறிஞர் பெயருக்கு அடியில் ஏன் "Junior Member" என்று போட்டிருக்கிறது??!!ஆம் நேற்று இனியன் கூட சொன்னார்.. யார் மாற்றியது எனத்தெரியவில்லை. இப்போது மாற்றிவிடுகிறேன்

suma
23-07-2005, 01:55 PM
கலக்குங்க கலக்குங்க ஓவரா கலக்குங்க.........
எல்லாம் ஆகஸ்டு 4 ம் தேதி பத்தி தான் சொல்லறேன்.

pradeepkt
23-07-2005, 02:28 PM
4ந்தேதி பற்றித்தானே சொல்கிறீர்..... சந்திக்கும் நேரம் மாலை நேரமா.. இடம் எங்கே...
தலை ஆகஸ்ட் 6, சனிக்கிழமை பற்றிச் சொல்கிறேன். ப்ரியன், ராகவன் எல்லாரும் வருகிறார்கள், மன்மதனையும் அழைக்கிறேன்.
நீங்கள் சென்னையில்தானே இருக்கிறீர்கள்?

pradeepkt
23-07-2005, 02:28 PM
இடம், நேரம் பற்றி மற்றவர்களைக் கலந்து பேசிச் சொல்கிறேன்.

poo
25-07-2005, 06:24 AM
யப்பா... எத்தனை பேரு ??!

சென்னை தாங்குமா?!!

பரஞ்சோதி
25-07-2005, 06:29 AM
யப்பா... எத்தனை பேரு ??!

சென்னை தாங்குமா?!!

நம்ம பூ, சேரனும் கூட்டத்தில் கலந்து கலக்கலாமே.

(கலக்கல் என்பதற்கு வேறு அர்த்தம் கொள்ள வேண்டாம்).

பரஞ்சோதி
25-07-2005, 06:31 AM
ஆம் நேற்று இனியன் கூட சொன்னார்.. யார் மாற்றியது எனத்தெரியவில்லை. இப்போது மாற்றிவிடுகிறேன்

நம்ம இனியன் பதிவுகள் பதியாமல் செல்கிறாரே!. அவரது அம்மாஞ்சியை காண ஆசையாக இருக்கிறது.

அறிஞர்
25-07-2005, 07:01 AM
தலை ஆகஸ்ட் 6, சனிக்கிழமை பற்றிச் சொல்கிறேன். ப்ரியன், ராகவன் எல்லாரும் வருகிறார்கள், மன்மதனையும் அழைக்கிறேன்.
நீங்கள் சென்னையில்தானே இருக்கிறீர்கள்?இப்போதைய பிளான் படி 3ந்தேதி இரவு சென்னை வருகிறேன். முன்பு 4ந்தேதி எனக்குறிப்பிட்டதால்.... அனைவரையும் சந்திக்க இயலும் என்று எண்ணினேன்.

6ந்தேதி முடியுமா என யோசிக்கிறேன். எனினும் தெளிவான இடம், நேரத்தை தெரிவிக்கவும். அனைவரும் சந்திக்க முயற்சிக்கிறேன்.

அறிஞர்
25-07-2005, 07:01 AM
நம்ம இனியன் பதிவுகள் பதியாமல் செல்கிறாரே!. அவரது அம்மாஞ்சியை காண ஆசையாக இருக்கிறது.தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.. அவரிடம் தங்கள் கருத்தை சொல்கிறேன்...

பரஞ்சோதி
25-07-2005, 07:08 AM
இப்போதைய பிளான் படி 3ந்தேதி இரவு சென்னை வருகிறேன். முன்பு 4ந்தேதி எனக்குறிப்பிட்டதால்.... அனைவரையும் சந்திக்க இயலும் என்று எண்ணினேன்.

6ந்தேதி முடியுமா என யோசிக்கிறேன். எனினும் தெளிவான இடம், நேரத்தை தெரிவிக்கவும். அனைவரும் சந்திக்க முயற்சிக்கிறேன்.

அய்யோ சந்தோசமான செய்தி, கலக்கலில் அறிஞருமா?

gragavan
25-07-2005, 07:44 AM
நான் நாலாந் தேதி மாலை சென்னையை அடைகிறேன். ஐந்தும் ஆறும் இருந்து விட்டு, ஆறாந்தேதி இரவு புறப்படுகிறேன். ஏழாந் தேதி கிளம்பவும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் இனிமேல் டிக்கெட் கிடைக்காது. :-((

pradeepkt
25-07-2005, 08:10 AM
டிக்கட் கிடைத்தால் ஏழாம் தேதி கிளம்புவீர்களா?

அறிஞர்
25-07-2005, 09:35 AM
நான் நாலாந் தேதி மாலை சென்னையை அடைகிறேன். ஐந்தும் ஆறும் இருந்து விட்டு, ஆறாந்தேதி இரவு புறப்படுகிறேன். ஏழாந் தேதி கிளம்பவும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் இனிமேல் டிக்கெட் கிடைக்காது. :-(( ஆ டிக்கெட் கிடைப்பது கடினமா.. எனக்கும் புக் பண்ணச்சொல்லனுமே.....

pradeepkt
25-07-2005, 09:40 AM
அறிஞரே,
www.irctc.co.in (http://www.irctc.co.in) போய்ப் பாருங்கள்
நீங்களே உங்கள் கடன் அட்டை உபயோகித்து முன்பதிவு செய்து சீட்டை உங்கள் வீட்டுக்கே அனுப்பும்படி செய்யலாம்.
ஏதும் உதவி வேண்டுமெனில் சொல்லுங்கள்.

அறிஞர்
25-07-2005, 09:57 AM
அறிஞரே,
www.irctc.co.in (http://www.irctc.co.in) போய்ப் பாருங்கள்
நீங்களே உங்கள் கடன் அட்டை உபயோகித்து முன்பதிவு செய்து சீட்டை உங்கள் வீட்டுக்கே அனுப்பும்படி செய்யலாம்.
ஏதும் உதவி வேண்டுமெனில் சொல்லுங்கள்.நன்றி பிரதீப்... இந்த தளத்தை முன்பே உபயோகித்துள்ளேன்....

இன்னும் பயண தேதிகள் பற்றி தெளிவான எண்ணம் இல்லை.. அதனால் தான்... சற்று குழப்பம். வெள்ளிக்கிழமை எல்லாம் தெளிவாக தெரிய வாய்ப்புள்ளது....

வருவது என முடிவெடுத்துவிட்டால்... எப்படியும் பறந்தாவது.. வந்துவிட மாட்டேனா.....

pradeepkt
25-07-2005, 09:59 AM
அதானே... எப்படியாவது இந்தச் சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்று சேருவோம்.

gragavan
25-07-2005, 10:09 AM
டிக்கட் கிடைத்தால் ஏழாம் தேதி கிளம்புவீர்களா?கண்டிப்பாக. ஏழாந் தேதி டிக்கெட் கிடைக்குமானால் ஏழாந்தேதி கிளம்புவேன். ஆனால் எப்படி? அதுவும் ஞாயிற்றுக் கிழமைக்கு?

pradeepkt
25-07-2005, 10:13 AM
உங்கள் அலுவலக மெயிலைப் பார்த்து எனக்குப் பதில் போடுங்கள்.

poo
25-07-2005, 11:01 AM
இப்போதைய...

..... யோசிக்கிறேன். எனினும் தெளிவான இடம், நேரத்தை தெரிவிக்கவும். அனைவரும் சந்திக்க முயற்சிக்கிறேன்.

சந்திப்பிற்கு பின் விருந்துக்கு செல்லவிருக்கும் பகுதியின் வாயில், அதே.. அதே..சபாபதே..

(தலை.. அறிஞரின் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லியிருக்கிறேனா?!)

mania
26-07-2005, 04:34 AM
:confused: எப்பா.......எனக்கு தலை....!!!! சுத்துது (பார்ட்டிக்கு முன்னாலயே ).:D .யார் யார் வராங்க எப்போ வராங்கன்னு :rolleyes: தகவல் கிளியராக தெரிந்தால்தான் எல்லோருக்கும் சவுகரியமாக இருக்கும்......செய்வீர்களா.....???:D
அன்புடன்
மணியா...:D

(ராகவன், ப்ரதீப் இருவரும் கொஞ்சம் கோஆர்டினேட் பண்ணுங்களேன்.....):)

பரஞ்சோதி
26-07-2005, 04:39 AM
தலை, மன்மதன், இராகவன், பிரதீப், பிரியன், அறிஞர் சந்திப்பது நிச்சயம், வேற யார் எல்லாம் சந்திக்க இருக்கிறீங்க, விரும்புறீங்க என்பதை சொல்லுங்க.

தலை ஒரு தனி தலைப்பு தொடங்கி கலாயுங்க.

pradeepkt
26-07-2005, 05:27 AM
என்னால் இந்த நிர்வாக அறிவிப்புகள், தகவல்கள் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=39) பகுதியில் புதுத்திரி தொடங்க இயலவில்லை.
மன்ற நிர்வாகிகள் தொடங்கினாலும் சரி, வேறெங்கு தொடங்குவது என்று சொன்னாலும் சரி - சென்னைச் சந்திப்பு பற்றிப் பேசலாம்.

mania
26-07-2005, 05:35 AM
வாழ்த்துக்கள் ,இதர தலைப்புகள் பக்கத்தில் தொடங்கலாமே.....:rolleyes:
அன்புடன்
மணியா...:)

அறிஞர்
29-07-2005, 09:05 AM
மன்றத்தின் நண்பர்களே..

முன்பு கூறிய படி இன்று என் பயணம் முடிவாகியுள்ளது.

ஆகஸ்ட் 3 - மலேசியாவில் மனோஜியுடன் சந்திப்பு
ஆகஸ்ட் 3 இரவு - சென்னை.
ஆகஸ்ட் 4 கோவை - செல்லும் வழியில் இதெசெ அவர்களை திருப்பூரில் சந்திக்க வாய்ப்பு
ஆகஸ்ட் 5 வேலூர்
ஆகஸ்ட் 6 சென்னை (மணியா, இராகவன், பிரியன், பிரதீப், மன்மதன், பூ, சேரன்.... இன்னும் பலரை சந்திக்க வாய்ப்பு)

ஆகஸ்ட் 7 திருச்சி
ஆகஸ்ட் 8 புதுகை.... என நீண்டு கொண்டே செல்கிறது என் பயணம்.

ஆகஸ்ட் 24 அமெரிக்க பயணம்

செப்டம்பரில் நண்பர் இனியனை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

pradeepkt
29-07-2005, 09:07 AM
அறிஞரே, இந்தப் பயணம் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கைப் பயணமும் நீண்டு நெடிந்து வளமுடன் இருக்கட்டும்.
உங்களைச் சென்னையில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்...
வாழ்த்துகள்.

அறிஞர்
29-07-2005, 09:14 AM
நன்றி பிரதீப்... நெடுநாள் (7.3 வருடம்) இருந்த தைவானை விட்டு பிரிவது வருத்தம்.. புதிய சூழல்.. புதிய மனிதர்களை சந்திக்க போகிறேன்;.....

gragavan
29-07-2005, 09:51 AM
நன்றி பிரதீப்... நெடுநாள் (7.3 வருடம்) இருந்த தைவானை விட்டு பிரிவது வருத்தம்.. புதிய சூழல்.. புதிய மனிதர்களை சந்திக்க போகிறேன்;.....எந்த சூழலும் நல்ல சூழலாக அமைய இறைவன் அருள் தரட்டும். உங்கள் வாழ்வு வளமாக எனது வாழ்த்துகள்.

சுவேதா
29-07-2005, 01:04 PM
நல்ல படியாக போய் வாருங்கள் அண்ணா!

Iniyan
29-07-2005, 01:38 PM
கட்டாயம் சந்திப்போம் அறிஞரே! வாருங்கள்....

அறிஞர்
30-07-2005, 07:41 AM
கட்டாயம் சந்திப்போம் அறிஞரே! வாருங்கள்....நல்லது அன்பரே.. எந்த பிரச்சனையும் இல்லாமல் எளிதில் விசா கிடைத்துவிட்டது..... அங்கு வந்து செட்டில் ஆனவுடன் வருகிறேன் அன்பரே...

karikaalan
30-07-2005, 10:18 AM
அறிஞர்ஜி

இதைத்தான் புலம்பெயர்தல் என்றனரோ!

எங்கிருந்தாலும் கொடிகட்டிப் பறக்கட்டும் தங்களது விடா முயற்சிகள், வெற்றிகள், இன்ன பிற.

===கரிகாலன்

பரஞ்சோதி
30-07-2005, 10:51 AM
நண்பர்கள் அனைவரையும் சந்திக்கும் அறிஞர் அவர்களுக்கு எல்லாம் அவர் நினைத்தப்படி நல்லபடியாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அறிஞர்
01-08-2005, 03:58 AM
அன்பர்களே... ஆகஸ்ட் 3 முதல் பயணம் ஆரம்பிக்கிறது. என்னால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முழுமையாக இயங்க முடியாது. என்னுடைய பொறுப்புக்களை மற்றவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என எண்ணுகிறேன்.

suma
01-08-2005, 01:32 PM
அறிஞரே எப்ப எங்க பக்கம் வரீங்க!!!!!!!!!

பாரதி
01-08-2005, 05:34 PM
அன்பு அறிஞரே, உங்கள் பயணம் மகிழ்ச்சிகரமானதாகவும், புதிய இடம் இனிமையானதாகவும் அமைய வாழ்த்துக்கள்.

சுவேதா
05-08-2005, 06:50 PM
anaivarukum vanakam enathu key board velai seiya villai nan mouse mulam adikenrean athodu intru montrealuku povathal 4,5 thenam mantram vara mudejathu erukum enpathai therevethu kolkentrean.

karikaalan
06-08-2005, 05:19 AM
மாண்ட்ரியாலுக்குக் கவலையில்லாமல் சென்று வாருங்கள் சுவேதாஜி. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

mania
06-08-2005, 06:08 AM
anaivarukum vanakam enathu key board velai seiya villai nan mouse mulam adikenrean athodu intru montrealuku povathal 4,5 thenam mantram vara mudejathu erukum enpathai therevethu kolkentrean.

:D :D உன்னோட மவுசு அவ்வளவுதானா......????:rolleyes: ஆனா படிக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது....:D .நீ மொழி வேறுபாடு இல்லாமல் கொலை செய்வதைத்தான் சொல்றேன்.....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

pradeepkt
08-08-2005, 06:45 AM
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்....
அப்படின்னு பாடணும் போல இருக்கா தலை?

Mathu
08-08-2005, 10:28 AM
அறிஞரின் புதிய புகலிடம் இன்பமாய் அமையட்டும்.

:) அமெரிக்கா வாழ்வின் வெற்றிக்கு எல்லைகள் இல்லா பல வளிகள்.:p

மன்மதன்
08-08-2005, 11:25 AM
அறிஞருக்கு வாழ்த்துக்கள்..

நான் இன்று காலை நல்லபடியாக துபாய் வந்து சேர்ந்தேன்.. அதிகாலை ஃப்ளைட் என்பதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை..

அன்புடன்
மன்மதன்

thempavani
08-08-2005, 11:26 AM
ஊருக்கு போயாச்சா???????

சுவேதா
08-08-2005, 01:48 PM
நான் மொன்றியல் சென்று வந்துவிட்டேன்!

சுவேதா
08-08-2005, 01:49 PM
:D :D உன்னோட மவுசு அவ்வளவுதானா......????:rolleyes: ஆனா படிக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது....:D .நீ மொழி வேறுபாடு இல்லாமல் கொலை செய்வதைத்தான் சொல்றேன்.....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

:angry: :angry: :angry: :angry: :angry:
தாத்தாஆஆஆஆஆஆஆஆஆ

pradeepkt
08-08-2005, 02:04 PM
வந்துட்டியாம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ பரதேவதே...
உங்க தாத்தாவை விட்டுரு, ஆனா நான் அனுப்பின பதில் சரிதானே...

சுவேதா
08-08-2005, 02:15 PM
இல்லை அண்ணா தவறு..

thempavani
08-08-2005, 02:25 PM
இல்லை அண்ணா தவறு..

:D :D :D :D :D :D :D :D :D :D
ஹா..ஹா..ஹா...

pradeepkt
08-08-2005, 02:35 PM
:D :D :D :D :D :D :D :D :D :D
ஹா..ஹா..ஹா...
என்ன சிரிப்பு...???
என்னமோ நீங்க மட்டும் சரியா பதில் சொல்லீட்ட மாதிரி
நானும் சிரிக்கிறேன் :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D டபிள் மடங்கா...

mania
18-08-2005, 06:52 AM
விடுமுறையாக திருச்சி செல்வதால் மீண்டும் திங்கள் கிழமை தான் மன்றம் வர இயலும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...:)
அன்புடன்
மணியா

பரஞ்சோதி
18-08-2005, 06:58 AM
அண்ணா,

உங்கள் பயணம் வெற்றிக்கரமாக அமைய வாழ்த்துகள்.

கும்சா விடையை (?????) சுவேதாவுக்கு அனுப்பி விட்டு போங்க.

pradeepkt
18-08-2005, 07:24 AM
தலை நல்ல படியாகப் போய் வாருங்கள்.
வீட்டில் அனைவரையும் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.

மன்மதன்
18-08-2005, 07:30 AM
நல்லபடியாக போய் வாருங்கள் தலை.. நீங்க வர்ரதுக்குள் நான் போட்டோக்களை அனுப்பி வைக்கிறேன் .. :D
அன்புடன்
மன்மதன்

gragavan
18-08-2005, 07:56 AM
மணியாட்டா, திருச்சி போய் எப்போழ் திரிச்சி வரும்? நிங்கள் ப்ரயாணம் சுகமாயிட்டிரிக்க ஞான் பிராத்திக்குன்னு.

மன்மதன்
18-08-2005, 08:02 AM
மணியாட்டா, திருச்சி போய் எப்போழ் திரிச்சி வரும்? நிங்கள் ப்ரயாணம் சுகமாயிட்டிரிக்க ஞான் பிராத்திக்குன்னு.

மணியாட்ட திருச்சி போகிறாரா.. புரியலையே..:rolleyes: :rolleyes: (மனசில ஆயல்லல்லோ...:D :D )
அன்புடன்
மன்மதன்

pradeepkt
18-08-2005, 08:23 AM
மணியாட்ட திருச்சி போகிறாரா.. புரியலையே..:rolleyes: :rolleyes: (மனசில ஆயல்லல்லோ...:D :D )
அன்புடன்
மன்மதன்
ஆயாவா?
தேம்பாக்கா உங்க முதுகில விளையாடப் போறாங்க...
போ.கு.
பிரதீப்

சுவேதா
29-08-2005, 01:34 AM
அனைவருக்கும் வணக்கம் நாங்கள் வீடு மாறியதால் கேபிள் பிரச்சனை அதனால் மன்றம் வரமுடியாது உள்ளது எனவே 30ம் திகதி அப்படிதான் என்னால் வரமுடியும் அது வரை நான் வர மாட்டேன் தற்போது என் நன்பி வீட்டில் இருந்து தகவல் அடிக்கின்றேன்

பரஞ்சோதி
29-08-2005, 04:10 AM
நாளை தானே 30ந்தேதி, பரவாயில்லை சகோதரி. நீங்க ஒன்று ஒருநாள் மட்டும் நண்பி வீட்டில் தங்கி விடுங்களேன்.

நாளை உங்க வீட்டிற்கு செல்லுங்களேன்.

- தமிழ்மன்றத்தில் ஒரு அப்பாசாமி

pradeepkt
29-08-2005, 04:45 AM
அண்ணா,
இப்படிப் புரியாமலே அடிக்கிறதுன்னு நீங்களும் கிளம்பி விட்டீர்களா?

மன்மதன்
29-08-2005, 05:03 AM
நாளை தானே 30ந்தேதி, பரவாயில்லை சகோதரி. நீங்க ஒன்று ஒருநாள் மட்டும் நண்பி வீட்டில் தங்கி விடுங்களேன்.

நாளை உங்க வீட்டிற்கு செல்லுங்களேன்.

- தமிழ்மன்றத்தில் ஒரு அப்பாசாமி

வாயக்கொடுத்து நீ மாட்டே போறே பாரு..:rolleyes: :rolleyes:

pradeepkt
31-08-2005, 11:01 AM
நண்பர்களே,

நான் ஒரு குடும்ப விசேஷத்துக்காக (அட, இது நான் சம்பந்தப் பட்டதில்லை) சென்னை மதுரை என்று திக்விஜயம் செய்ய வேண்டி இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்குக் குறைவாகவே பங்களிக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
திங்கட்கிழமை வந்த பிறகு பிரியனுடன் போட்டி போன்ற முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கிறேன்.

அன்புடன்,
பிரதீப்

thempavani
31-08-2005, 11:14 AM
தம்பி நல்லா போயிட்டு வா..வீட்டில் அனைவரையும் விசாரித்ததாகக் கூறு..

இக்பால்
31-08-2005, 11:28 AM
பிரதீப் தம்பி..நல்லபடி போய் வாருங்கள்.

அதற்கு முன்னால் அதென்ன திக்விஜயம்?

மன்மதன்
31-08-2005, 12:12 PM
எங்கே ஒரு வேளை அங்கேயே செட் ஆகிடும் என்ற திக் திக் உணர்வுடன் செல்வதாலோ என்னவோ..:rolleyes: :rolleyes:

mukilan
31-08-2005, 02:49 PM
நீங்கள் திக்கு விஜயம் செல்லும் திக்கெல்லாம் உங்களுக்கு (வி)ஜயமாகட்டும்.

மன்மதன்
31-08-2005, 03:02 PM
நானும் இரண்டு நாட்கள் இங்கே உலவ மாட்டேன்.:) :) இரண்டு நாட்கள் லீவு வருது. கொண்டாட ஒரு தீவு செல்கிறேன்..:cool: :cool: :cool: (அபுதாபி ஒரு காலத்தில் தீவாக இருந்ததாமே.. :rolleyes: :rolleyes: )

mukilan
31-08-2005, 08:16 PM
நான் வேறு வீடு (ஊர்) செல்வதால் வியாழன் இரவு வரை மன்றம் வர இயலாது.

அன்புடன்,
முகிலன்.

mania
01-09-2005, 04:42 AM
நானும் இரண்டு நாட்கள் இங்கே உலவ மாட்டேன்.:) :) இரண்டு நாட்கள் லீவு வருது. கொண்டாட ஒரு தீவு செல்கிறேன்..:cool: :cool: :cool: (அபுதாபி ஒரு காலத்தில் தீவாக இருந்ததாமே.. :rolleyes: :rolleyes: )

:D :D :D நீ , சேரன் , பூ மூவரும் சேர்ந்து அழித்த சஹாரா காடுகள் மாதிரியா....???:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...

mania
01-09-2005, 04:46 AM
தம்பி நல்லா போயிட்டு வா..வீட்டில் அனைவரையும் விசாரித்ததாகக் கூறு..

:rolleyes: :rolleyes: யாரு வீட்டிலே.....????:D :D
சந்தேகத்துடன்
மணியா...

mania
01-09-2005, 04:49 AM
நண்பர்களே,

நான் ஒரு குடும்ப விசேஷத்துக்காக (அட, இது நான் சம்பந்தப் பட்டதில்லை) சென்னை மதுரை என்று திக்விஜயம் செய்ய வேண்டி இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்குக் குறைவாகவே பங்களிக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
திங்கட்கிழமை வந்த பிறகு பிரியனுடன் போட்டி போன்ற முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கிறேன்.

அன்புடன்,
பிரதீப்

:rolleyes: :rolleyes: என்னாப்பா......???? நம்ம பேட்டைக்கெல்லாம் வர....:rolleyes: .ஒரு முன் தாக்கலும் இல்லையே....??? என்னப்பா மேட்டரு....!!!!!:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா....:D :D

poo
01-09-2005, 05:59 AM
பிரதீப்.. நல்லபடி போய்ட்டுவாங்க...

Mathu
01-09-2005, 09:35 AM
பிரதீபின் குடும்ப விசேஷமும் விஜயமும் இனிதாக அமையட்டும்,

மம்முதா தீவுக்கெல்லாம் போகதப்பூ...... நீ தரையில நீச்சலடிப்ப தண்ணீல
என்ன பண்ணுவியோ......! :rolleyes: :confused:

சுவேதா
02-09-2005, 01:17 AM
அப்பாடா ஒரு மாதிரியா வந்திட்டேன்....

mania
02-09-2005, 05:20 AM
அப்பாடா ஒரு மாதிரியா வந்திட்டேன்....

:D :D அதான் எல்லோருக்குமே தெரியுமே......நீ "ஒரு மாதிரி"ன்னு:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

பரஞ்சோதி
02-09-2005, 06:25 AM
:D :D அதான் எல்லோருக்குமே தெரியுமே......நீ "ஒரு மாதிரி"ன்னு:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

பாவம் பச்சப்புள்ள,

வந்ததும் இப்படி சொல்லி சிரிச்சா, பயந்துடப்போகுது. :)

பரஞ்சோதி
02-09-2005, 06:31 AM
நண்பர்களே,

நான் ஒரு குடும்ப விசேஷத்துக்காக (அட, இது நான் சம்பந்தப் பட்டதில்லை) சென்னை மதுரை என்று திக்விஜயம் செய்ய வேண்டி இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்குக் குறைவாகவே பங்களிக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
திங்கட்கிழமை வந்த பிறகு பிரியனுடன் போட்டி போன்ற முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கிறேன்.

அன்புடன்,
பிரதீப்

தம்பி, நல்லபடியாக போயிட்டு வாங்க. புள்ள இளச்சி போயிருக்குது, நல்லா கிடா வெட்டி சாப்பிட்டு வாங்க. அப்படியே விசேஷம் ஏதாவது முடிவு செய்துட்டு வாங்க.

- விருந்து சாப்பிட ஆசையுடன் பரம்ஸ்

சுவேதா
02-09-2005, 11:47 AM
:D :D அதான் எல்லோருக்குமே தெரியுமே......நீ "ஒரு மாதிரி"ன்னு:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

தாத்தாஆஆஆஆ

mukilan
02-09-2005, 07:19 PM
நானும் வந்திட்டேனுங்க!

pradeepkt
06-09-2005, 03:32 AM
நானும் வந்து சேந்திட்டேன்.
தலை சென்னையில் இருந்த 6 மணி நேரமும் விழாவில் கொஞ்சம் பிசியாக இருந்து விட்டேன். மன்னிக்க!
மதுரை சென்றவுடன் உடம்பு கொஞ்சம் படுத்தி விட்டது.
இன்றுதான் தேவலாமாக இருக்கிறது.

mania
06-09-2005, 04:17 AM
நானும் வந்து சேந்திட்டேன்.
தலை சென்னையில் இருந்த 6 மணி நேரமும் விழாவில் கொஞ்சம் பிசியாக இருந்து விட்டேன். மன்னிக்க!
மதுரை சென்றவுடன் உடம்பு கொஞ்சம் படுத்தி விட்டது.
இன்றுதான் தேவலாமாக இருக்கிறது.

:mad: பாவி......6 மணி நேரம் சென்னையில் இருந்தியா......??? நான் இதை உன் ஊருக்கு வரும்போது ஞாபகமா ஞாபகம் வைத்துக்கனும்......:rolleyes:
அன்புடன்
மணியா...:D

pradeepkt
06-09-2005, 05:19 AM
:mad: பாவி......6 மணி நேரம் சென்னையில் இருந்தியா......??? நான் இதை உன் ஊருக்கு வரும்போது ஞாபகமா ஞாபகம் வைத்துக்கனும்......:rolleyes:
அன்புடன்
மணியா...:D
கோவப் படாதீங்க தலை... அந்த ஆறு மணி நேரம் காலை 6 மணியில் இருந்து 12 மணி வரை.
என் உறவினரின் கலியாணம் முடிந்து மதியமே வைகையில் புறப்பட்டு விட்டோம்.
நானும் இன்னும் மாமி கையால் இரண்டு தம்ளர் காப்பி குடிக்க வேண்டி இருக்கிறதே... :D
நீங்க எங்க ஊரையே ஞாபகம் வச்சிக்கலையாம்... :D

மன்மதன்
06-09-2005, 05:34 AM
என்னதான் இருந்தாலும் தலைக்கு போன் பண்ணி சொல்லியிருக்கலாம்.. அவரும் அந்த கலியாணத்திற்கு வந்திருப்பாரில்லே..:rolleyes: :rolleyes:

pradeepkt
06-09-2005, 05:49 AM
என்னதான் இருந்தாலும் தலைக்கு போன் பண்ணி சொல்லியிருக்கலாம்.. அவரும் அந்த கலியாணத்திற்கு வந்திருப்பாரில்லே..:rolleyes: :rolleyes:
ஏம்ப்பா போகு... இப்ப நீ சும்மா இருக்கலை....
நானே டேமேஜ் கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்... நீ வேற

மன்மதன்
06-09-2005, 05:52 AM
தலைக்கு 3 நாள் தொடர்ந்து விருந்து சாப்பாடாமே..??:D :D அதில் இந்த விருந்து அடங்கலையா..:rolleyes: :rolleyes:

mukilan
06-09-2005, 02:17 PM
நான் ஒரு 3 நாளா என்னோட நண்பர்களோட ஒரு சுற்றுலா போய் இருந்தேன்.இன்றுதான் வந்தேன். விரைவில் தனி மடல்கட்கு பதில் அனுப்புகிறேன்.

அறிஞர்
06-09-2005, 09:08 PM
நண்பர்களே என் பயணங்கள் முடிந்து.. புதிய இடத்தில் அமர்ந்துள்ளேன்... இனி என் பங்களிப்புகள் தொடரும் என எண்ணுகிறேன்

மன்மதன்
07-09-2005, 04:06 AM
வாங்க நண்பரே.. வேலை எப்படி போகுது..?? புதிய இடம் செட் ஆகி விட்டதா??

pradeepkt
07-09-2005, 05:19 AM
வாருங்கள் அறிஞரே,
நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தோம்.
நலம்தானே... உங்கள் பணி எப்படி இருக்கிறது?
நேரம் கிடைக்கையில் வந்து பதிவுகளால் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்

mania
08-09-2005, 06:46 AM
வாழ்த்துகள் அறிஞரே......:D ..
அன்புடன்
மணியா...:D

thempavani
08-09-2005, 08:34 AM
அறிஞரே... நலமா..வீட்டில் குட்டீஸ் எப்படி சுகம்...சீக்கிரம் வாருங்கள் இந்த எதிரணியில் லொள்ளு தாங்க முடியவில்லை...

gragavan
08-09-2005, 11:57 AM
அறிஞரே... நலமா..வீட்டில் குட்டீஸ் எப்படி சுகம்...சீக்கிரம் வாருங்கள் இந்த எதிரணியில் லொள்ளு தாங்க முடியவில்லை...ஒங்க தள்ளுமுள்ளுகளைச் சமாளிக்க முடியாமத்தான அவரு கனடாவுக்குப் போனாரு....நீங்க திரும்பவும் கூப்புட்டா ஆர்ட்டிக் அண்டார்டிக்குனுதான் அவரு போகனும். மன்னிச்சு விட்டுருங்க அவர.

பிரியன்
08-09-2005, 12:37 PM
ஒங்க தள்ளுமுள்ளுகளைச் சமாளிக்க முடியாமத்தான அவரு கனடாவுக்குப் போனாரு....நீங்க திரும்பவும் கூப்புட்டா ஆர்ட்டிக் அண்டார்டிக்குனுதான் அவரு போகனும். மன்னிச்சு விட்டுருங்க அவர.

ǡ:) :) :) . â측Ţ....

pradeepkt
08-09-2005, 12:45 PM
கள்ளு நிறை குடிச்சிட்டீங்களா . அவர் இருப்பது அமெரிக்காவில்....

அமெரிக்காவும் கனடாவும் பெரிய ராக்கெட் விடுற தூரமா?
சரி, மாத்துறோம்.
உங்க தொல்லை தாங்காம அவரு அமெரிக்காவில தலை மறைவா இருக்காரு... போதுமா?:)

thempavani
08-09-2005, 12:53 PM
உங்க தலை எங்க தலையை மறைத்து வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

pgk53
09-09-2005, 02:22 AM
அன்பு நண்பர்களே------------அனைவருக்கும் வணக்கங்கள் பல.
நான் ஒரு மாத விடுமுறையில் தாயகம் செல்வதினால் மன்றத்தில் பங்குகொள்ள நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை.விடுமுறை முடிந்து வந்ததும் புதிர்களைத் தொடர்கிறேன்.
அனைவருக்கும் நன்றி-----வணக்கம்.

pradeepkt
09-09-2005, 04:57 AM
பிஜிகே அண்ணாவின் பயணம் இனிதாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகள்.

அறிஞர்
09-09-2005, 01:03 PM
வாழ்த்துக்கள் பிஜிகே... பயணம் நல்லபடியாக அமையட்டும்

மன்மதன்
10-09-2005, 04:44 AM
இந்த தடவையாவது என்னை சந்திக்க இயலுமா பிஜிகே?? துபாய் வருவதாக இருந்தால் போன் பண்ணுங்க..

mania
07-10-2005, 06:18 AM
வரும் விடுமுறை நாட்களை மனதில் கொண்டு மகளுடனுடனும் பேரனுடனும் சிறிது நாட்கள் இருக்கலாம் என்று முடிவு செய்து இன்றிரவு ஊருக்கு கிளம்புகிறேன்.:D மீண்டும் 13.10 அன்று தான் உங்களை சந்திப்பேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.....:D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
07-10-2005, 06:28 AM
சரி தலை,
வீட்டில் எல்லாரையும் கேட்டதாகச் சொல்லுங்கள்.
நல்லபடியாக உங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு வாருங்கள்.
நீங்கள் இல்லையென்று எதிரணியினர் நைசாக எட்டிப் பார்ப்பார்கள், நாங்கள் அவர்களைப் பார்த்துக் கொள்கிறோம் :D

mania
07-10-2005, 06:34 AM

:D நான் இல்லாதபோது ஒரு போட்டிக்கும் முடிவு சொல்லக்கூடாது.....பார்த்துக்கொள்ளுங்கள்...:D
அன்புடன்
மணியா...

gragavan
07-10-2005, 06:36 AM
நானும் விடுமுறையில் செல்கிறேன். பதிமூன்று பதினான்கு ஆகிய நாட்களில் எங்களுக்கு விடுமுறை. ஆகையால் நான்கு நாட்கள் சென்னையில் இருப்பேன். ஞாயிறு மதியம் புறப்பட்டு இரவில் பெங்களூர் வந்தடைவேன். உங்கள் அனைவரையும் முடிந்த வரை மன்றத்தில் சந்திக்க முயல்கிறேன்.

gragavan
07-10-2005, 06:38 AM
வரும் விடுமுறை நாட்களை மனதில் கொண்டு மகளுடனுடனும் பேரனுடனும் சிறிது நாட்கள் இருக்கலாம் என்று முடிவு செய்து இன்றிரவு ஊருக்கு கிளம்புகிறேன்.:D மீண்டும் 13.10 அன்று தான் உங்களை சந்திப்பேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.....:D
அன்புடன்
மணியா...:Dஉங்கள் பயணம் இனிதாக அமைய எனது வாழ்த்துகள்.

gragavan
07-10-2005, 06:41 AM
:D நான் இல்லாதபோது ஒரு போட்டிக்கும் முடிவு சொல்லக்கூடாது.....பார்த்துக்கொள்ளுங்கள்...:D
அன்புடன்
மணியா...ஆமாம். அடுத்த வாரம் முடிவு சொல்லா வாரமாக ஆக்கப் பட வேண்டும். விளையாடுங்கள். தொகுப்பைப் போடுங்கள். ஆனால் முடிவுத் தேதியை அடுத்த செவ்வாய் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் திரும்பி வந்து வடை சுடுகிறோம்.

thempavani
07-10-2005, 07:10 AM
நல்ல வேளை விளையாடவாவது அனுமதி கொடுத்தீர்களே..உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்..

thempavani
07-10-2005, 07:10 AM
தலையும் ராகவன் அண்ணாவும் நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாங்க..மன்றத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..

பிரியன்
07-10-2005, 08:24 AM
மணியா அண்ணாவின் விடுமுறையும் ராகவனின் விடுமுறையும் இனிதே கழிய என் வாழ்த்துகள்... நீங்கள் வரும்வரை எந்தப் போட்டியின் முடிவும் அறிவிக்கபடக்கூடாது என்று நானும் வழி மொழிகிறேன்

பரஞ்சோதி
07-10-2005, 08:40 AM
தலல, மற்றும் இராகவன் அண்ணாவின் விடுமுறை நல்லபடியாக அமைய வாழ்த்துகள்.

பாரதி
07-10-2005, 10:15 AM
மணியா அண்ணாவின் பயணமும், இராகவனின் பயணமும் இனிதே அமைய வாழ்த்துகிறேன்.

gragavan
07-10-2005, 10:20 AM
நன்றி. நன்றி. நன்றி. நன்றி. ஒன்று தேம்பாவுக்கு. ஒன்று பிரியனுக்கு. ஒன்று பரஞ்சோதிக்கு. ஒன்று பாரதி அண்ணாவுக்கு.

அறிஞர்
07-10-2005, 09:19 PM
பயணங்கள் நல்லபடியாக அமையட்டும் அன்பர்களே

மன்மதன்
08-10-2005, 05:07 AM
நானும் விடுமுறையில் செல்கிறேன். பதிமூன்று பதினான்கு ஆகிய நாட்களில் எங்களுக்கு விடுமுறை. ஆகையால் நான்கு நாட்கள் சென்னையில் இருப்பேன். ஞாயிறு மதியம் புறப்பட்டு இரவில் பெங்களூர் வந்தடைவேன். உங்கள் அனைவரையும் முடிந்த வரை மன்றத்தில் சந்திக்க முயல்கிறேன்.
இது 'தலை'க்கும் பொருந்துமா?? :rolleyes: :rolleyes:

இளசு
12-10-2005, 09:17 PM
வாங்க மணியா...
சில நாளாய் உங்களைக்காணாமல் ஏதோ போல் இருக்கு..

mania
13-10-2005, 12:27 AM
வாங்க மணியா...
சில நாளாய் உங்களைக்காணாமல் ஏதோ போல் இருக்கு..

:mad: இந்த சில நாட்களுக்கே இப்படி சொன்னால் நான் பத்து மாதங்கள் உன்னை பிரிந்திருந்தேனே ......:rolleyes: !!! எனக்கு எப்படி இருந்திருக்கும்....?????:rolleyes: சொல்ல முடியாத ஒரு வேதனை தான் போங்க.....
அன்புடன்
மணியா.....:) :)

அறிஞர்
13-10-2005, 01:48 PM
மணியா வந்தாச்சா.... சீக்கிரம் "பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவாவுக்கு" விடை சொல்லுங்கள்.. முடிவுகள் அறிவிக்கனும்

பரஞ்சோதி
13-10-2005, 08:38 PM
அறிஞர் அவர்களே!

நாளை மாலை வரை காத்திருந்து, விடைகளை அறிவித்து விடுங்கள்.

இளசு
13-10-2005, 08:52 PM
தம்பி பரம்ஸூக்கு,
இன்னும் சில நாட்களில் உன் கலகல (லக்கலக்கலக்க) மெகா வெற்றி பதிவுகளின் ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறேன் சரியா? தினசரி இப்போது அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை..

பரஞ்சோதி
13-10-2005, 08:56 PM
அண்ணா,

இப்போ தான் உங்களுக்கு அழைப்பு கொடுத்து தொந்தரவு செய்யலாமா என்று நினைத்தேன். அதற்குள் உங்கள் பதில், என்ன ஆச்சரியம்.

நேரம் கிடைக்கும் போது வாங்க, ஒரு கலக்கு கலக்கிடலாம்.

இளசு
13-10-2005, 09:06 PM
ஒத்த மன ஓட்டம்...

சொல்லாமல் புரியவேண்டுமே என்பது காதலுக்கு மட்டுமல்ல..
புரிதல் உள்ள நட்பு- உறவுகளுக்கும்தான் பரம்ஸ்..

mania
14-10-2005, 06:47 AM
அறிஞர் அவர்களே!

நாளை மாலை வரை காத்திருந்து, விடைகளை அறிவித்து விடுங்கள்.

:D :D திருச்செந்தூரில் திருவிழா........பாஞ்சாலங்குறிச்சி மக்கள் அனைவரும் திரண்டு அங்கு தான் போயிருப்பார்கள்.....இங்கே நம் படை திரண்டால் வெற்றி நமக்குத்தான்.....(வீர பாண்டிய கட்டபொம்மனில் வரும் வசனம் ).....
அதுபோல பரம்ஸ் ராகவன் ஊரிலில்லாத நேரம் பார்த்து :rolleyes: அறிஞரை பயமுறுத்தி :rolleyes: வடைகளை பறிக்கப்பார்க்கிறார் :D (ராகவனை முந்த )....:D :D
நானும் என்னால் முடிந்த அளவு ராகவனிடம் போட்டுக்கொடுத்துவிட்டேன்....:rolleyes: :D :D .இன்று ஒரு நாள் பொறுத்து நாளை முடிவுகளை அறிவிக்கலாமே என்று அவர் கேட்டுக்கொண்டார்......:D ஆகவே அறிஞரே....."இன்று போய் நாளை வாராய் "......:D :D
அன்புடன்
பரோபகாரி
மணியா:D

அறிஞர்
17-10-2005, 02:08 PM

மணியா:D இது கொஞ்சம் ஓவரால்ல இருக்கு... விடுமுறை பதிவில் இப்படி கலாட்டாவா

mania
18-10-2005, 04:43 AM
இது கொஞ்சம் ஓவரால்ல இருக்கு... விடுமுறை பதிவில் இப்படி கலாட்டாவா

:D :D நீங்கள் ஆரம்பித்ததால் இங்கேயே தொடரும் படி ஆயிட்டது.....ஹி.....ஹி....ஹி....:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
24-10-2005, 09:13 AM
தீபாவளி நிமித்தம் நாளை ஊருக்குச் செல்கிறேன்.
அதனால் இன்றும் நாளையும் வேலை நிறைய இருக்கு.
வரும் நவம்பர் 7ம் தேதி வரை அவ்வப்போது வந்து மன்றத்தைப் பார்க்கிறேன், ஆனால் பதிவுகள் அதிகமாக இட இயலாது.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

பிரியன்
24-10-2005, 09:25 AM
தீபாவளிக்காக ஊருக்கா...:p நடக்கட்டும் நடக்கட்டும் :) :)

நல்ல படியாக விடுமுறையை களிக்க வாழ்த்துகள்... வீட்டில் உள்ள அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள்.......பாத்து சூதானமாவே வெடியெல்லாம் போடுங்க........:)

gragavan
24-10-2005, 09:47 AM
தீபாவளி வாரம் நானும் மன்றத்திற்கு வருவது அரிதுதான்.

காரணம் திங்கள் செவ்வாய் வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் விடுமுறை.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி முன்வாழ்த்துகள்.

mania
24-10-2005, 11:06 AM
தீபாவளி நிமித்தம் நாளை ஊருக்குச் செல்கிறேன்.
அதனால் இன்றும் நாளையும் வேலை நிறைய இருக்கு.
வரும் நவம்பர் 7ம் தேதி வரை அவ்வப்போது வந்து மன்றத்தைப் பார்க்கிறேன், ஆனால் பதிவுகள் அதிகமாக இட இயலாது.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

:D நானும் தீபாவளிக்கு திருச்சி செல்கிறேன்....:D .முடிந்தால் திண்டுக்கல்லில் (நடுவான இடம்), பாறையின் மேல் ( ON THE ROCKS) :rolleyes: :D சந்திப்போம். உனக்கு என் தீபாவளி நல் வாழ்த்துகள்.:D
அன்புடன்
மணியா...:D

சுவேதா
24-10-2005, 11:10 AM
அப்போ உங்களுக்கெல்லாம் என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நல்லபடியாக சென்று மகிழ்ச்சியாக இருந்து வர என் வாழ்த்துக்கள்!

mukilan
24-10-2005, 05:39 PM
அப்போ உங்களுக்கெல்லாம் என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நல்லபடியாக சென்று மகிழ்ச்சியாக இருந்து வர என் வாழ்த்துக்கள்!

என்ன சுவேதாவின் பதிவில் ஆஆஆஆஆஆஆஅ இல்லையாஆஆஆஆஅ

சுவேதா
25-10-2005, 11:43 AM
என்ன சுவேதாவின் பதிவில் ஆஆஆஆஆஆஆஅ இல்லையாஆஆஆஆஅ

ஏன் பதிஞ்சா போச்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ

Narathar
26-10-2005, 11:18 PM
அன்பர்களே!!!
நான் பணிபுரியுமிடத்தில் வேலைப்பழு கொஞ்சம் அதிகமாக இருக்கின்றது..... (புதிய பொறுப்புக்க்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது)

அதனால் இப்போதைக்கு கொஞ்சம் இப்பக்கம் தலைகாட்டுவது கஷ்டம்..............
வந்தாலும் எட்டிப்பார்த்து விட்டு ஓடத்தன் முடியும்....

சீக்கிரம் மீண்டு(ம்) வருவேன்.........

பாரதி
27-10-2005, 01:27 AM
அன்பு பிரதீப், இராகவன், மணியா அண்ணா அவர்களின் பயணமும் விடுமுறையும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.

மீண்ட நாரதர் நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளாமல், நேரமும் வாய்ப்பும் அமையும் போது மன்றம் வந்து போக வேண்டுகிறேன். உங்கள் பணிச்சுமையும் விரைவில் குறைய வாழ்த்துக்கள்.

அறிஞர்
27-10-2005, 04:25 AM
நாரதர் மீண்டும் தொடர்ந்து வந்து... அனைவரையும் கல கலப்பாக வைக்க வாழ்த்துக்கள்

இராசகுமாரன்
08-11-2005, 04:05 AM
ஒரு மாத விடுப்பில் சென்று நேற்று தான் திரும்பினேன். பதித்து விட்டு செல்ல முடியவில்லை, அதனால் வந்தவுடன் பதிக்கிறேன்.

எல்லோரும் நலம் தானே? பல நல்ல பதிப்புகளை காண்பதில் மிக்க மகிழ்ச்சி. முதலில் மன்ற வேலைகளை கவனித்துவிட்டு, விரைவில் ஒவ்வொன்றாக படிக்க முயற்சிக்கிறேன்.

அறிஞர்
08-11-2005, 05:42 AM
திரும்ப தங்களை காண்பதில் மகிழ்ச்சி இராசகுமாரனே. விடுப்பில் குடும்பத்துடன் நன்றாக நேரத்தை செலவழித்தது குறித்து சந்தோசம்.

பரஞ்சோதி
08-11-2005, 06:00 AM
தீபாவளி பலகாரங்களை சாப்பிட்டவர்கள் பலரையும் இன்னமும் காணவில்லையே, ஏன்?

(பிரதீப் தம்பி, சொல்லவே வேண்டாம்)

gragavan
08-11-2005, 06:08 AM
பிரதீப் பல காரங்களைச் சாப்பிட்டதால் விவகாரமாக இருக்கிறார் என்று கேள்வி. கேள்வி.

pradeepkt
08-11-2005, 06:47 AM
ஒரு மனுஷன் கொஞ்ச நாளைக்கு இல்லைன்னா என்னா பேச்சு பேசுறீங்க...
வந்திட்டேனய்யா வந்திட்டேன்.
சாப்பிட்ட பலகாரங்களும் பல காரங்களும் சென்னை மழையில் சீரணித்து விட்டன.

சுவேதா
08-11-2005, 11:37 AM
ஓ...பலகாரங்கள் எப்படி இருந்திச்சு அண்ணா!
தீபாவளி எப்படி போச்சு? எல்லோரும் நலம்தானே ஊரில்?

pradeepkt
08-11-2005, 12:32 PM
அனைவரும் நலம்.
நான் சாப்பிடும்போது புரை ஏறிச்சே, நீ நினைச்சியா?

சுவேதா
08-11-2005, 03:29 PM
ஓ அப்படியா இருக்கும் இருக்கும்...:):):)