PDA

View Full Version : 7. நிபந்தனைகள் - பதுமைகள் சொல்லாத.....gragavan
28-04-2005, 05:11 AM
முந்தய பாகத்திற்கு இங்கே சொடுக்கவும்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4790

7. நிபந்தனைகள்
காட்டில் காலைப்பொழுது காவியம்போலிருந்தது. தடித்த பனிப்போர்வை மூடியிருக்க பறவைகள் அடிவயிற்றைப் பற்றிய பசியினால் மெல்ல எழுந்தன. வயிற்றில் எரிந்த தீயினால் உண்டான வெப்பத்தைப் போக்க வாயைத் திறந்து ஓவென்றன. ஒலியேதும் வரவில்லை. வெறும் வெப்பக் காற்றுதான் வந்தது.
முதலில் துயிலெழுந்த சேவல் மற்றவர்கள் சோம்பிக்கிடப்பதைப் பார்த்து வருத்தம் கொண்டது. தான் பெற்ற இஇன்பம் பெறுக இஇவ்வையம் என்று தனது ஓங்காரத் தொண்டையைக் கனைத்துக் கூறலாயிற்று. "கொக்கு அறு கோ! கொக்கு அறு கோ! நன்னீர்க்குளத்திலே பூக்கின்ற தாமரை மலரை ஒத்த திருவடிகள்! திருச்செந்தூர்க் கடலிலே விளைகின்ற மிகச் சிறந்த பவழங்களைப் போலச் செக்கச் சிவந்த மேனி! உலகத்திலேயே மிகச் செம்மையானது என எதைக்காட்டினாலும் அதைப் பழிக்கும் செம்மையான ஆடை! குன்றாகி நின்ற குணமில்லாமல் குன்றிய மாயமாம் தாரகனை அழித்த அறிவாகிய வேல்! இஇத்தகைய பண்பு நலன்களை உடைய தமிழ்க்கடவுளாகிய கந்தவேளை யாவரும் எந்தவேளையும் துதிக்க வேண்டும் என்று அவனுடைய கொடியில் அமரும் பெறற்கரிய பேறு பெற்ற நான் உங்களுக்கு ஆற்றுப்படுத்துகிறேன்.
கொக்கு எனப்படும் மாமரம் என்றாகி நின்ற சூரனாகிய ஆணவத்தை அழித்த இறைவனுடைய அருளாலே இஇந்த உலகம் உய்கின்றது. அனைவரும் எழுக. அவனைத் தொழுக. பெறும் பயன் பெறுக. கொக்கு அறு கோ! கொக்கு அறு கோ!"
இஇந்த அறிவிப்பைக் கேட்டு நன்றி உணர்ச்சியும் நற்பண்பும் உடைய விலங்கினங்களும் பறவைகளும் எழுந்து இஇறைவணக்கம் செய்து தத்தமது அலுவல்களைத் தொடங்கின.
காட்டிலேயே இஇருந்ததால் மாரப்பனும் சேவல் கூவியதும் எழுந்து நீராடி நீறாடி நின்றான். மற்றவர்கள் மெல்ல எழுந்து காலைக்கடன்களை முடித்து காலை உணவையையும் முடித்தனர். பின்னர் ஒருவன் ஓரிடத்தில் பெரிய போர்வையை விரித்தான். அதில் மாரப்பனும் ஆவின்பாலும் அமர்ந்து பேச்சைத் தொடங்கினார்கள். பேச்சு ஒருவிதமாகச் சென்றது. மற்றவர்கள் அனைவரும் ஓரமாக இஇருந்து கவனிக்கலானார்கள்.
"வணக்கம்."
"வணக்கம்."
"நான் ஆவின்பால். செந்நாடு மற்றும் கருநாடு ஆகிய இஇருநாடுகளின் தூதுவனாக வந்திருக்கின்றேன். தாங்கள் கருநாட்டுக் கண்களின் கருமணியான அரசகுமாரை தங்களோடு வைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். அவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு வந்திருக்கிறேன்."
"தம்பி. நீ நல்லவன். நம்மவன். நம்மவர்களின் நலனுக்காக நானிதைச் செய்தேன். அதை நீ புரிந்துகொள்ள வேண்டும். அவரை மிக்க மதிப்பாக நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு வேண்டியதைக் கொடுத்தால் நான் அவரை விட்டுவிடுகிறேன்."
"சரி. உங்களுக்கு என்னதான் வேண்டும்."
மாரப்பன் ஒரு கட்டு ஓலையைக் கொடுத்தான். "இஇவற்றில் எல்லாவற்றையும் எழுதியிருக்கிறேன். அவர்களிடம் கொடுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் இஇப்பொழுதே புறப்படுங்கள். அப்பொழுதுதான் அரசகுமாரை விரைவாக விடுவிக்கயியலும்."
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு மாரப்பன் கட்டிக்கொடுத்த கட்டுச் சொற்றை வாங்கிக்கொண்டு புறப்பட்டார் ஆவின்பால். வழியில் ஓடைக்கரையில் கட்டுச் சோற்றின் கதையை முடித்தார். ஆர்வக் கோளாறு ஆரை விட்டது. ஆவின்பால் மெல்ல ஓலைக்கட்டை எடுத்தார். அதில் எழுதியிருந்தவற்றைப் படித்தார். அதில் எழுதியிருந்ததாவது.
"செந்நாட்டு மற்றும் கருநாட்டு மன்னர்களுக்கு எனது வணக்கங்கள். நான் எனக்காக எதையும் செய்யவில்லை. நாட்டு மக்களின் நலனுக்காகத்தான் இஇதைச் செய்தேன். கீழ்க்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப் படுமாயின் அரசகுமார் விடுவிக்கப்படுவார்.
1. செந்நாட்டில் அனைவருக்கும் செம்மொழியே செப்புமொழியாக இஇருக்கவேண்டும்.
2. கருநாட்டில் வாழும் செந்நாட்டவர் கருமொழியைக் கற்றவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கக்கூடாது.
3. பிறக்கின்ற பிள்ளைகளுக்கு அன்னையர் தாய்ப்பால்தான் கொடுக்கவேண்டும்.
4. சத்திரங்களில் இஇனிமேல் துவையல் அரைக்கையில் தேங்காய்க்குப் பதிலாக தேங்காய்ப் பிண்ணாக்கு போட்டு ஆட்டக்கூடாது.
5. ஆட்டு உரலில் இதுவரை ஆடிக்கொண்டிருந்த குழவி இஇனி ஆடக்கூடாது. வேண்டுமாயின் உரல் ஆடிக்கொள்ளலாம்.
6. திருக்கோயில்களில் பிரசாதம் என்ற பெயரில் இஇனிமேல் வழித்து வழித்துக் கொடுக்கக்கூடாது. அள்ளி அள்ளிக் கொடுக்க வேண்டும்.
7. கருநாட்டுச் சிறையில் உள்ள ஐம்பது அப்பாவிகளும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்.
8. செந்நாட்டிலுள்ள மேநிலைத் தண்ணீர்த் தொட்டியை இஇடித்து உடைத்ததற்காக சிறையிலடைக்கப்பட்ட அசரீரி விநாயகனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
நன்றி.
செந்நாட்டு மொழிப் பித்தன்,
மாரப்பன்.
(பி.கு அடுத்த முறை ஆவின்பாலார் வரும்வேளையில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, மணிமேகலை, அகநானூறு மற்றும் புறநானூறு ஆகிய நூல்களின் ஏடுகளைக் கொடுத்து விடுக.)
(தொடரும்..

பரஞ்சோதி
28-04-2005, 06:01 AM
இராகவன் அண்ணா,

8 நிபந்தனைகளையும் படித்து அதிர்ச்சி அடைந்தேன், நல்லவேளை மேலும் நிபந்தனைகள் மாரப்பன் சொல்லவில்லையே என்று சந்தோசம் தான்.

இனிமேல் இருநாட்டு அரசர்களின் மண்டை உருள போகிறது, நாமும் வேடிக்கை பார்க்க போகிறோம்.

pradeepkt
02-05-2005, 05:45 AM
அது சரி ..
இப்பத்தானய்யா நான் "சந்தனக் காட்டுச் சிறுத்தை" யைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
சும்மா மாரப்பனும் அவனது நகலும் அடிக்கும் கூத்துகள் இன்னும் பதினாயிரம் கூத்துக் கட்டுமளவு செய்திகள் கொண்டவை.

முத்து
03-05-2005, 10:05 PM
ராகவன் அவர்களே,
நகைச்சுவை உங்களுக்கு இயல்பாய் வருகிறது. பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

gragavan
04-05-2005, 01:59 PM
நன்றி முத்து. உங்கள் பாராட்டு ஊக்கம் தருகிறது.

பிரதீப்....அது புத்தகமா வந்திருச்சா! எல்லாம் ஒரே கூத்துதான். என்ன சொல்ல. இப்ப யாரோ ஆதிகேசவுலுவாம்..........

அன்புடன்,
கோ.இராகவன்