PDA

View Full Version : யுனிக்கோடுக்கு மாற்ற உதவுங்கள்.



Iniyan
28-04-2005, 02:28 AM
அன்பு நண்பர்காள்!

இராசகுமாரனிடம் வேண்டி அனுமதி பெற்று இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் பழைய திஸ்கி பதிவுகளை யுனிகோடில் மாற்றிக் கொண்டுள்ளேன்.

இதில் இப்போதைக்கு புதிரோ புதிர், புத்தகக் களஞ்சியம் மற்றும் திரைப்படப்பாடல்களில் வினாடி வினா ஆகிய தலைப்புகளை மாற்றத் தொடங்கி உள்ளேன்.

இந்த தலைப்புகள் எல்லாம் இப்போது யுனிகோட் மன்றத்தில் பாதி திஸ்கியிலும், பாதி யுனிகோடிலுமாக உள்ளன. இவற்றில் அவரவர் பதிப்பை எடிட் செய்யும் வசதி இருப்பதால் தங்கள் திஸ்கி பதிவுகளை யுனிகோடில் கன்வர்ட்டர் மூலம் மாற்றிப் பதித்தால் என் வேலை கொஞ்சம் சுளுவாக இருக்கும்.

மேலும் பழையவைகளில் எது முதலில் வேண்டும்? என தெரிவித்தால் அடுத்தடுத்து அகழ்வாராய்ச்சி செய்து மாற்றவும் வசதியாக இருக்கும்.

நன்றி.

Iniyan
28-04-2005, 06:36 PM
இத்த யாருமே பாக்கலியா????

சுவேதா
28-04-2005, 11:20 PM
இத்த யாருமே பாக்கலியா????


இனியன் அண்ணா!
நான் பாத்தேன் ஆனால் நான் புதிது. அதனால் எனக்கு வடிவாக விளங்கவில்லை அதுதான் நான் முதலில் எதுவும் கூறவில்லை. மற்றயது வாக்கெடுப்பு பகுதி போட்டால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். ஏன் எனில் அதில் எந்த பதிவும் பதிவாக வில்லை மற்றயது கணணி பற்றிய சந்தேகங்கள் விவாதங்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.

Iniyan
29-04-2005, 09:34 AM
இது உனக்கில்லை தங்காய் உண்மை தான். மேலே குறிப்பிட்ட தலைப்புகள் எதிலும் நீ பங்கு பெறவில்லை. ஆனால் படித்துப் பார்த்து இனி பங்கு கொள்ளலாமே?

சுவேதா
29-04-2005, 10:50 AM
இது உனக்கில்லை தங்காய் உண்மை தான். மேலே குறிப்பிட்ட தலைப்புகள் எதிலும் நீ பங்கு பெறவில்லை. ஆனால் படித்துப் பார்த்து இனி பங்கு கொள்ளலாமே?

ஆமாம் அதில் என்னுடையது இல்லைத்தான் ஆனால் நம் நன்பர்களினது இருக்கின்றதல்லவா அதனால்தான் கூறினேன் நான் பழைய மன்றத்தில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அதனால் கூறினேன் இனிவரும் பகுதிகளில் நானும் பங்குகொள்கிறேன் அண்ணா!

அறிஞர்
07-05-2005, 04:11 AM
தனியாய் செய்வது மிகக்கடினம்...

சிலப்பகுதிகளை பிரித்து உதவிச்செய்ய தயாராக இருப்பவர்களுக்கு அளிக்கலாமே....

Iniyan
08-05-2005, 12:52 AM
தனியாய் செய்வது மிகக்கடினம்...

சிலப்பகுதிகளை பிரித்து உதவிச்செய்ய தயாராக இருப்பவர்களுக்கு அளிக்கலாமே....

அட நீங்க வேற அவங்கவங்க ஆரம்பிச்ச தலைப்ப சொல்லுங்க. அத பழைய இடத்துல இருதி உங்க கொஞ்சம் கொஞ்சமா கொண்டு வரலாம். அவங்கவங்க பதிவுகளை திருத்துனா போதும்னு சொன்னாலே பதில் இல்லை.

அறிஞர்
12-05-2005, 12:48 PM
பெருந்தன்மைக்கு வாழ்த்துக்கள்.. இனியன்.....

poo
16-05-2005, 08:12 AM
தள சுட்டி கொடுங்கள் பூ. நான் முயற்சிக்கிறேன்.

நன்றி இனியன்..

http://pookkal.blogspot.com

mukilan
21-10-2005, 06:40 AM
எனது அவதாரம் மிகச்சிறியதாகிப் போய்விட்டதே ஏன்? விசுவரூபம் எடுக்க வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இளையவன்
21-10-2005, 06:59 AM
யாருக்கும் மாற்றுவதற்கு உதவி தேவைப்பட்டால் என்னையும் கூப்பிடுங்கள் மாற்றித் தருகிறேன்.

சுபன்
28-01-2006, 01:52 PM
என்னுடய பதிப்புகள் பழைய மன்றத்தில் இல்லை. என்றாலும் அங்குள்ள கணணி பற்றிய விடயங்களை மாற்றி தந்தால் மிக நன்று

meera
28-09-2006, 10:24 AM
என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் நானும் உதவி செய்ய காத்திருக்கிறேன்..

அறிஞர்
29-09-2006, 04:03 PM
என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் நானும் உதவி செய்ய காத்திருக்கிறேன்.. முன்பு மன்றத்தில் பதிந்த பதிப்புக்கள் (கவிதை, கதை) tcsii பார்மேட்டில் உள்ளது. அதை இப்பொழுது உள்ள முறையில் பார்க்க இயலாது. எனவே unicode க்கு (கீழே உள்ள கன்வர்ட்டர் மூலம்) மாற்ற வேண்டும்...