PDA

View Full Version : நீங்களும் கடிக்கலாமே ... ?

Pages : [1] 2 3

முத்து
26-04-2005, 07:49 PM
நீங்களும் கடிக்கலாமே ... ?

முந்தைய திஸ்கிமன்றத்தில் அனைவரையும் வெறுப்பேற்றிக்கொண்டிருந்த பதிவினை இங்கும் நானே ஆரம்பித்துவைக்கிறேன்.

காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?

பதில் அடுத்த பதிவில்.

முத்து
26-04-2005, 07:51 PM
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull

pradeepkt
27-04-2005, 04:06 AM
ஆ.. இதுக்கு மும்பை எக்ஸ்பிரஸ் பசுபதி மாதிரி குதிரைக் கடியே வாங்கி இருக்கலாம் போல.

சூப்பர்.

பரஞ்சோதி
27-04-2005, 04:16 AM
பட்டரை மேலே தூக்கி போட்டால் என்ன ஆகும்?

சொல்லுங்க நண்பர்களே!

mania
27-04-2005, 05:41 AM
பட்டரை மேலே தூக்கி போட்டால் என்ன ஆகும்?

சொல்லுங்க நண்பர்களே!]

கீழே விழும்.....ஹி....ஹி....ஹி.
அன்புடன்
மணியா...:rolleyes:

mania
27-04-2005, 05:47 AM
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull

ஹா....ஹா....ஹா.......முத்து எங்கள் சொத்து.....
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
27-04-2005, 07:27 AM
]

கீழே விழும்.....ஹி....ஹி....ஹி.
அன்புடன்
மணியா...:rolleyes:

ஹி...ஹீ.ஹீ

தப்பு அண்ணா,

வேற யாராவது சொல்லுறாங்களான்னு பார்ப்போம்.

பரஞ்சோதி
27-04-2005, 07:29 AM
ஹா....ஹா....ஹா.......முத்து எங்கள் சொத்து.....
அன்புடன்
மணியா...:D

எங்கள் முத்தை உங்கள் சொத்தை, மன்னிக்கவும் சொத்து என்று சொன்ன தலைக்கு நன்றி..

முத்து, இந்த தலைப்பு இங்கேயும் ஒரு கலக்கு கலக்கும், வாழ்த்துகள்.

சுவேதா
27-04-2005, 11:58 AM
பட்டரை மேலே தூக்கி போட்டால் என்ன ஆகும்?

சொல்லுங்க நண்பர்களே!

பட்டரை மேலே தூக்கி போட்டால் வெண்ணையாகும்.

பரஞ்சோதி
27-04-2005, 01:24 PM
பட்டரை மேலே தூக்கி போட்டால் வெண்ணையாகும்.

அய்யோ சகோதரி, விடை இதுவல்ல, சின்ன பிள்ளை கூட சரியான பதில் சொல்லுமே.

- ஆச்சரியத்துடன் பரம்ஸ்

thempavani
27-04-2005, 02:16 PM
கீழே விழும் அண்ணா...

சரியா

Iniyan
27-04-2005, 02:27 PM
பஸ்ஸ பின்னால தள்ளினா என்ன ஆகும்?

வாணி
27-04-2005, 03:00 PM
பஸ்ஸ பின்னால தள்ளினா என்ன ஆகும்?

பஸ்ஸ பின்னால தள்ளினா பின் நெளிந்துபோகும். சரியா அண்ணா?

பரஞ்சோதி
27-04-2005, 08:13 PM
பட்டரை மேலே தூக்கி போட்டால் என்ன ஆகும்?

சொல்லுங்க நண்பர்களே!

தேம்பா சகோதரி நீங்க சொன்ன விடை தவறு.

வேற யாரும் முயற்சி செய்யவில்லையா?

Iniyan
27-04-2005, 08:14 PM
வாணித் தங்காய் !

கலக்குறேள். சரியாச் சொன்னாய்.

பரம்ஸ் அண்ணா!

பட்டர் உருகி நெய்யாகிரும் போல இருக்கே? பதில சொல்லீறப்படாதா?

பரஞ்சோதி
27-04-2005, 08:29 PM
வாணித் தங்காய் !

கலக்குறேள். சரியாச் சொன்னாய்.

பரம்ஸ் அண்ணா!

பட்டர் உருகி நெய்யாகிரும் போல இருக்கே? பதில சொல்லீறப்படாதா?

இனியன் தம்பி, எப்படியும் திட்டு விழ போகிறது, அதனால் அனைவரிடமும் மொத்தமாக திட்டு வாங்கலாம் என்று காத்திருக்கிறேன், வேற யாரும் பதில் சொல்லவில்லை என்றால் நானே சொல்கிறேன்.

Iniyan
27-04-2005, 10:32 PM
திட்டு விழுந்தா பரவாயில்லை. ஆட்டோல ஆள் வராம இருந்தா சரி.

சுவேதா
28-04-2005, 01:00 AM
கோயிலின் நடுவில் என்ன இருக்கும்
கூறுங்கள் நண்பர்களே!

Iniyan
28-04-2005, 01:05 AM
கோயிலின் நடுவில் என்ன இருக்கும்
கூறுங்கள் நண்பர்களே!

யி

வேறென்ன?

சுவேதா
28-04-2005, 02:07 AM
ஆகா இனியன் அண்ணா!
சரியாக தான் கூறியிருக்கிறீர்கள்

Iniyan
28-04-2005, 02:09 AM
நீங்க அப்ப நம்ம அம்மாஞ்சி மேட்டர் எல்லாம் படிக்கலியா ஸ்வேதா???

சுவேதா
28-04-2005, 02:25 AM
ஆமாம் நான் சிலவற்றைத்தான் படித்தேன் காரணம் எனக்கு நேரம் கிடைக்கவில்லை இதோ மிகுதியையும் படிக்கின்றேன்.

முத்து
28-04-2005, 02:27 AM
பட்டரை மேலே தூக்கி போட்டால் என்ன ஆகும்?

சொல்லுங்க நண்பர்களே!

பரஞ்சோதி,
பட்டர் கோவிச்சுக்கமாட்டாரா ?
அவருக்கு அடிபடப்போகிறது பாவம்.:)
அது சரி நீங்கள் கோவில்பட்டரைத்தானே சொன்னீர்கள் ?

Iniyan
28-04-2005, 02:30 AM
ஆமாம் நான் சிலவற்றைத்தான் படித்தேன் காரணம் எனக்கு நேரம் கிடைக்கவில்லை இதோ மிகுதியையும் படிக்கின்றேன்.

ஏன் கேட்டேன்னா நம்ம அம்மாஞ்சி இப்படி கொஞ்சம் இடக்கு மடக்கா சிந்திக்கிற ஆளு. அதாம்

சுவேதா
28-04-2005, 03:09 AM
1. இரண்டு ஒட்டகம் இருந்திச்சாம் அவைக்கு வெளியூர் போக விரும்பி
தயாராகிச்சினமாம் அங்கு குளிர் அதனால் பழக்கப்படுவதற்காக குளிர்ச்சாதனப் பெடிக்குள் இருப்பதாக முடிவு செய்திச்சினம் அவை எப்படி
அதனுள் போய் இருப்பினம்?

2 . இரண்டு யானை பஸ்சில் போக ஏறிச்சினமாம் ஆனா ஒன்று பஸ்சை விட்டு கீழே இறங்கிச்சாம் ஏன்?

3 . கொக்கு ஏன் ஒரு காலை குளத்தில் தூக்கிக் கொண்டு நிற்கிறது?

4. திருமணவீட்டில் ஏன் வாழை கட்டுகிறார்கள்?

pradeepkt
28-04-2005, 03:12 AM
1. குளிர்சாதனப் பெட்டியைத் திறந்துதான் உள்ளே போயிருக்கணும்
2. அது லேடீஸ் ஸ்பெஷல் பஸ். இறங்கின யானை ஆண்

pradeepkt
28-04-2005, 03:14 AM
அதானே பட்டரை மேல தூக்கிப் போட்டா கீழ விழும்போது நெய்யாத்தானே விழுவாரு :)

சுவேதா
28-04-2005, 03:27 AM
1. குளிர்சாதனப் பெட்டியைத் திறந்துதான் உள்ளே போயிருக்கணும்
2. அது லேடீஸ் ஸ்பெஷல் பஸ். இறங்கின யானை ஆண்

ஆஹா! ஆஹா!

பரஞ்சோதி
28-04-2005, 04:04 AM
3 . கொக்கு ஏன் ஒரு காலை குளத்தில் தூக்கிக் கொண்டு நிற்கிறது? - அடுத்த காலையும் தூக்கினால் கீழே விழுந்து விடுமே அதான்.

4. திருமணவீட்டில் ஏன் வாழை கட்டுகிறார்கள்? - வாழை மரம் கட்டவில்லை என்றால் கீழே விழுந்து விடும் தானே, அதான்.

பரஞ்சோதி
28-04-2005, 04:08 AM
பரஞ்சோதி,
பட்டர் கோவிச்சுக்கமாட்டாரா ?
அவருக்கு அடிபடப்போகிறது பாவம்.:)
அது சரி நீங்கள் கோவில்பட்டரைத்தானே சொன்னீர்கள் ?

பட்டரை மேலே தூக்கி போட்டால் அது பட்டர்-பிளை ஆகும்.

ஹாஹா.. ஹாஹா.

அய்யோ ஆட்டோ சப்தம் கேட்கிறதே, அம்மாஞ்சியே ஆள் வைத்து அடிக்க வருகிறாரா?

சுவேதா
28-04-2005, 11:33 AM
3 . கொக்கு ஏன் ஒரு காலை குளத்தில் தூக்கிக் கொண்டு நிற்கிறது? - அடுத்த காலையும் தூக்கினால் கீழே விழுந்து விடுமே அதான்.

4. திருமணவீட்டில் ஏன் வாழை கட்டுகிறார்கள்? - வாழை மரம் கட்டவில்லை என்றால் கீழே விழுந்து விடும் தானே, அதான்.

அட அட அடடா

வாணி
28-04-2005, 03:30 PM
ஒருவர் 15 ம் மாடியில் இருந்து யன்னல் வழியாக குதித்தார். ஆனால் அவர் உயிர் தப்பிவிட்டார் எப்படி? சொல்லுங்க நண்பர்களே

Iniyan
28-04-2005, 04:16 PM
ஒருவர் 15 ம் மாடியில் இருந்து யன்னல் வழியாக குதித்தார். ஆனால் அவர் உயிர் தப்பிவிட்டார் எப்படி? சொல்லுங்க நண்பர்களே

ஏன்னா அவர் பாராசூட் கட்டி இருந்தாரா???

Iniyan
28-04-2005, 04:17 PM
பட்டரை மேலே தூக்கி போட்டால் அது பட்டர்-பிளை ஆகும்.

ஹாஹா.. ஹாஹா.

அய்யோ ஆட்டோ சப்தம் கேட்கிறதே, அம்மாஞ்சியே ஆள் வைத்து அடிக்க வருகிறாரா?

அண்ணாச்சி!

அளப்பற தாங்கலியே. என்ன குசும்பு?

வாணி
28-04-2005, 04:50 PM
ஏன்னா அவர் பாராசூட் கட்டி இருந்தாரா???
இல்லை அண்ணா முயற்சிசெய்யுங்கள்

சுவேதா
28-04-2005, 11:07 PM
ஒரு பையன் 10 மாடி கொண்ட வீட்டில் இருந்தான். அவன் ஒரு நாள் வழக்கம் போல பாடசாலை முடிந்து வீட்டிற்க்கு வர லிப்டில் ஏறினான்.. ஏறி 8 மாடியில் இறங்கி 2 மாடி படியால் ஏறிச்சென்றான் ஏன் அவன் அவ்வாறு செய்தான் கூறுங்கள் பாப்போம்

Iniyan
29-04-2005, 10:00 AM

ஏன்னா அந்த பில்டிங்ல எட்டு மாடிக்குத் தான் லிப்ட் இருந்துச்சி.

சுவேதா
29-04-2005, 10:57 AM
இல்லை இனியன் அண்ணா!
10 மாடிக்கும் இருக்கின்றது. அதுகும் 10 மாடிக்கும் வேலை செய்யும் லிப்ட் அனா அவன் ஏறிச் சென்றான் ஏன்? முயற்சிசெய்யுங்கள் அண்ணா.

பரஞ்சோதி
29-04-2005, 06:11 PM
ஒருவர் 15 ம் மாடியில் இருந்து யன்னல் வழியாக குதித்தார். ஆனால் அவர் உயிர் தப்பிவிட்டார் எப்படி? சொல்லுங்க நண்பர்களே

கீழே நீச்சல் குளம் இருந்திருக்கும்.

அல்லது அவரது பெயருக்கும் அவர் தப்பியதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்.

முத்து
29-04-2005, 06:18 PM
கீழே நீச்சல் குளம் இருந்திருக்கும்.

அல்லது அவரது பெயருக்கும் அவர் தப்பியதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்.

சன்னல் வழியாய் உள்ளே குதித்தாரோ ? ;)

முத்து
29-04-2005, 06:20 PM
ஒரு பையன் 10 மாடி கொண்ட வீட்டில் இருந்தான். அவன் ஒரு நாள் வழக்கம் போல பாடசாலை முடிந்து வீட்டிற்க்கு வர லிப்டில் ஏறினான்.. ஏறி 8 மாடியில் இறங்கி 2 மாடி படியால் ஏறிச்சென்றான் ஏன் அவன் அவ்வாறு செய்தான் கூறுங்கள் பாப்போம்

ஏன்னா அது அவன் இஷ்டம் :)

வாணி
29-04-2005, 06:37 PM
கீழே நீச்சல் குளம் இருந்திருக்கும்.

அல்லது அவரது பெயருக்கும் அவர் தப்பியதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்.

இல்லை அண்ணா!
பெயருக்கும் உயிர் தப்பியதற்கும் எந்த சம்மதமும் இல்லை.
முயற்சி செய்யுங்கள் அண்ணா!

வாணி
29-04-2005, 06:43 PM
சன்னல் வழியாய் உள்ளே குதித்தாரோ ? ;)

இல்லை வெளியேதான் குதித்தார்.

பரஞ்சோதி
29-04-2005, 06:45 PM
ஒரு பையன் 10 மாடி கொண்ட வீட்டில் இருந்தான். அவன் ஒரு நாள் வழக்கம் போல பாடசாலை முடிந்து வீட்டிற்க்கு வர லிப்டில் ஏறினான்.. ஏறி 8 மாடியில் இறங்கி 2 மாடி படியால் ஏறிச்சென்றான் ஏன் அவன் அவ்வாறு செய்தான் கூறுங்கள் பாப்போம்

எட்டாத (8) இடத்திற்கு போன பின்பு படிப்படியாக தான் முன்னேற வேண்டும் என்று ஆசிரியர் பாடம் நடத்தியிருப்பார்.

சுவேதா
29-04-2005, 07:49 PM
ஏன்னா அது அவன் இஷ்டம் :)

இல்லை அவன் அவ்வாறு செய்தமைக்கு காரணம் ஒன்று இருக்கிறது கண்டுபிடியுங்கள் அணணா!

சுவேதா
29-04-2005, 08:11 PM
எட்டாத (8) இடத்திற்கு போன பின்பு படிப்படியாக தான் முன்னேற வேண்டும் என்று ஆசிரியர் பாடம் நடத்தியிருப்பார்.

அதுவும் இல்லை அண்ணா!

பரஞ்சோதி
30-04-2005, 04:05 AM
அதுவும் இல்லை அண்ணா!

இதுக்கு மேலேயும் என்னால் தாங்க முடியலை,
அவன் 8வது மாடி சென்று அங்கே அவனது கேர்ள்பிரண்டை பார்த்து பேசி விட்டு திரும்பும் போது லிப்ட் கீழே போய் விட்டது, அது வருவதற்குள் நடந்தே போய் விடலாம் என்று படியில் ஏறி நடந்திருப்பான். (இது நம்ம வழக்கம் தானே).

முத்து
30-04-2005, 12:57 PM
இதுக்கு மேலேயும் என்னால் தாங்க முடியலை,

அவன் 8வது மாடி சென்று அங்கே அவனது கேர்ள்பிரண்டை பார்த்து பேசி விட்டு திரும்பும் போது லிப்ட் கீழே போய் விட்டது, அது வருவதற்குள் நடந்தே போய் விடலாம் என்று படியில் ஏறி நடந்திருப்பான். (இது நம்ம வழக்கம் தானே). .:) :cool:

பரஞ்சோதி,
உங்க குட்டு எல்லாம் வெளியே வருது போல தெரியுது :)

பரஞ்சோதி
01-05-2005, 04:02 AM
பரஞ்சோதி,
உங்க குட்டு எல்லாம் வெளியே வருது போல தெரியுது :)

குட்டு வெளிப்பட்டு, தலை குட்டு வாங்கியது தனிக்கதை, அதை சொல்ல மாட்டேன். :cool:

சுவேதா
01-05-2005, 12:04 PM
இதுக்கு மேலேயும் என்னால் தாங்க முடியலை,
அவன் 8வது மாடி சென்று அங்கே அவனது கேர்ள்பிரண்டை பார்த்து பேசி விட்டு திரும்பும் போது லிப்ட் கீழே போய் விட்டது, அது வருவதற்குள் நடந்தே போய் விடலாம் என்று படியில் ஏறி நடந்திருப்பான். (இது நம்ம வழக்கம் தானே).

இல்லை பரம்ஸ் அண்ணா! அவனுக்கு கேர்ள்பிரண் எண்டு யாரும் அங்கு இல்லை. அதோடு அவன் மேலே யாரயும் சந்திக்கவில்லை. நேர வீட்டுக்குத்தான் சென்றான். முயச்சித்துப் பாருங்களேன்.

முத்து
01-05-2005, 03:46 PM
ஸ்வேதா,
பலர் முயற்சித்தும் சரியாகாததால் நீங்களே சொல்லிவிடுங்கள்.

சுவேதா
01-05-2005, 07:02 PM
சரி கூறுகின்றேன். அவன் ஏன் அவ்வாறு செய்தான் என்றால் அவன் சிறியவன் அவனுக்கு 8 மாடி மட்டும்தான் கை எட்டும் அதனால் 8 மட்டும் லிப்டில் சென்று மிகுதி 2 மாடியும் ஏறிச்சென்றான்.

Iniyan
01-05-2005, 08:00 PM
சரி கூறுகின்றேன். அவன் ஏன் அவ்வாறு செய்தான் என்றால் அவன் சிறியவன் அவனுக்கு 8 மாடி மட்டும்தான் கை எட்டும் அதனால் 8 மட்டும் லிப்டில் சென்று மிகுதி 2 மாடியும் ஏறிச்சென்றான்.

அடங்கொக்க மக்கா. நம்மூரு மக்க சேட்ட தாங்கலடா சாமி [கவுண்டன் ஸ்டைலில் படித்துக் கொண்டால் தான் எஃபெக்ட் கிடைக்கும்]

Iniyan
01-05-2005, 08:01 PM
ஒருவர் 15 ம் மாடியில் இருந்து யன்னல் வழியாக குதித்தார். ஆனால் அவர் உயிர் தப்பிவிட்டார் எப்படி? சொல்லுங்க நண்பர்களே

வாணித் தங்கை !

நீ என்னம்மா சொல்லப் போறே? சொல்லிடும்மா. கண்ணுல்ல.

வாணி
01-05-2005, 10:09 PM
வாணித் தங்கை !

நீ என்னம்மா சொல்லப் போறே? சொல்லிடும்மா. கண்ணுல்ல.

சரி சொல்கிறேன் அவர் யன்னல் வழியாக பெல்கனியில் குதித்தார்.

முத்து
01-05-2005, 10:36 PM
சரி சொல்கிறேன் அவர் யன்னல் வழியாக பெல்கனியில் குதித்தார்.

அட.. இதை நான் அப்போதே யூகித்தேன், ஆனால் சொல்லவில்லை :cool:

Iniyan
02-05-2005, 02:53 AM
அட.. இதை நான் அப்போதே யூகித்தேன், ஆனால் சொல்லவில்லை :cool:

அடடே இது என்ன என்.எஸ்.கேயின் அதான் எனக்குத் தெரியுமே ? - பூரி சுட்ட கதை மாதிரீ இல்ல இருக்கு?

பரஞ்சோதி
02-05-2005, 04:28 AM
சரி சொல்கிறேன் அவர் யன்னல் வழியாக பெல்கனியில் குதித்தார்.

அடாடா, இத்தனை எளிதா? மூளைக்கு அதிக வேலை கொடுத்து விட்டீங்களே, பாராட்டுகள்.

மேலும் கேளுங்களேன்.

பரஞ்சோதி
02-05-2005, 04:30 AM
சரி கூறுகின்றேன். அவன் ஏன் அவ்வாறு செய்தான் என்றால் அவன் சிறியவன் அவனுக்கு 8 மாடி மட்டும்தான் கை எட்டும் அதனால் 8 மட்டும் லிப்டில் சென்று மிகுதி 2 மாடியும் ஏறிச்சென்றான்.

அய்யோ அய்யோ, இது கூட தெரியலையே, உம் மண்டை மரமண்டையாகி வருகிறது.

அருமையான அதே நேரம் எளிதான புதிர், பாராட்டுகள். அடுத்தது எங்கே?

gragavan
02-05-2005, 05:04 AM
சரி கூறுகின்றேன். அவன் ஏன் அவ்வாறு செய்தான் என்றால் அவன் சிறியவன் அவனுக்கு 8 மாடி மட்டும்தான் கை எட்டும் அதனால் 8 மட்டும் லிப்டில் சென்று மிகுதி 2 மாடியும் ஏறிச்சென்றான்.அடடா! அடட டட டடடா! என்ன அறிவு என்ன அறிவு! புல்லரிக்குதுப்பா!
சுருளிராசன் பாணியில் (சாம்பலப் பூசிக்கிட்டு கெணத்துல குதி).
நல்ல துணுக்கு சகோதரி. சற்று அறிவு சார்ந்த துணுக்கும் கூட.
அன்புடன்,
கோ.இராகவன்

முத்து
03-05-2005, 08:19 PM
அடடே இது என்ன என்.எஸ்.கேயின் அதான் எனக்குத் தெரியுமே ? - பூரி சுட்ட கதை மாதிரீ இல்ல இருக்கு?

இனியன்,
இது தங்கவேலு கதை இல்ல ? :)

பரஞ்சோதி
03-05-2005, 08:53 PM
அடுத்த கடி புதிர் எங்கே?

முத்து
03-05-2005, 09:14 PM
நமது நண்பர்களில் ஒருத்தரை கட்டெறும்புக்கு ரொம்ப பிடிக்குமாம் யாரை ?

சுவேதா
03-05-2005, 09:29 PM
நமது நண்பர்களில் ஒருத்தரை கட்டெறும்புக்கு ரொம்ப பிடிக்குமாம் யாரை ?

இனியனை
சரியா?

முத்து
03-05-2005, 09:39 PM
ஸ்வேதா.. மிகச் சரி.

வாணி
04-05-2005, 03:07 AM
இலை ஏன் பச்சைநிறமாக இருக்கின்றது?
சொல்லுங்கள் பார்ப்போம்.

Iniyan
04-05-2005, 04:38 AM
இனியன்,
இது தங்கவேலு கதை இல்ல ? :)

அதே அதே. தவறுக்கு மன்னிக்கவும். சுட்டிக்காடியமைக்கு நன்றி

thempavani
04-05-2005, 04:43 AM
இலை ஏன் பச்சைநிறமாக இருக்கின்றது?
சொல்லுங்கள் பார்ப்போம்.

பச்சை தண்ணீர் ஊற்றுவதால்......

பரஞ்சோதி
04-05-2005, 04:58 AM
காக்கா ஏன் கருப்பாக இருக்கிறது?

pradeepkt
04-05-2005, 05:32 AM
ஏன்னா அது வெள்ளையா இல்லை.
அண்ணா நான் எஸ்கேப்பு

பரஞ்சோதி
04-05-2005, 06:13 AM
ஏன்னா அது வெள்ளையா இல்லை.
அண்ணா நான் எஸ்கேப்பு

விடை தவறு.

அறிஞர்
04-05-2005, 08:39 AM
ஆரம்பிச்சுட்டாங்கய்யா...... ஆரம்பிச்சுட்டாங்கய்யா.........

தொடருங்கள்.. நண்பர்களே....

வாணி
04-05-2005, 03:29 PM
பச்சை தண்ணீர் ஊற்றுவதால்......
சரியான பதில்
வாழ்த்துக்கள் தேம்பா

Iniyan
04-05-2005, 05:24 PM
நமது நண்பர்களில் ஒருத்தரை கட்டெறும்புக்கு ரொம்ப பிடிக்குமாம் யாரை ?

இனியனை
சரியா?

ராசாவே!

கட்டெறும்பு என்னை கடிக்குது....

pradeepkt
04-05-2005, 08:32 PM
அட அது சித்தெறும்பு இல்லையா?
யாரு கண்டது காலப்போக்கில சித்தெறும்பு தேஞ்சி கட்டெறும்பாப் போச்சு.

பரஞ்சோதி
04-05-2005, 08:59 PM
மக்கா,

காக்கா ஏன் கருப்பாக இருக்கிறது, விடை சொல்லுங்கப்பா?

முத்து
05-05-2005, 12:49 AM
மக்கா,

காக்கா ஏன் கருப்பாக இருக்கிறது, விடை சொல்லுங்கப்பா?

சரியா அது குளிக்கிறதில்லை.

அறிஞர்
05-05-2005, 03:37 AM
சரியா அது குளிக்கிறதில்லை.

அனுபவத்தில் வந்த பதில் மாதிரி தெரியுது தம்பி.....

(மீண்டும் தளத்தில் நீங்கள் இறங்குவது சந்தோசமளிக்கிறது)

பரஞ்சோதி
05-05-2005, 04:08 AM
அனுபவத்தில் வந்த பதில் மாதிரி தெரியுது தம்பி.....

(மீண்டும் தளத்தில் நீங்கள் இறங்குவது சந்தோசமளிக்கிறது)

அறிஞரே! எப்படி சரியாக சொன்னீங்க, இனம் இனத்தோடு சேருகிறதே. :cool:

பரஞ்சோதி
05-05-2005, 04:09 AM
சரியா அது குளிக்கிறதில்லை.

முத்து விடை இதுவல்ல.

ஆமாம் எங்கே ஸ்வேதா, வாணி, மைதிலி, தேம்பா, மன்மதன், இனியன், பிரதீப், இராகவன் அண்ணா, பெரி, யாரும் பதில் சொல்ல வரவில்லையே ஏன்?

அறிஞர்
05-05-2005, 04:11 AM
முத்து விடை இதுவல்ல.

ஆமாம் எங்கே ஸ்வேதா, வாணி, மைதிலி, தேம்பா, மன்மதன், இனியன், பிரதீப், இராகவன் அண்ணா, பெரி, யாரும் பதில் சொல்ல வரவில்லையே ஏன்?

அவங்க நிறத்துக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ.....

gragavan
05-05-2005, 05:57 AM
காக்க முட்ட கருப்பாயிருக்கு...அதுனாலதான் காக்கா கருப்பாயிருக்கு.

என்னவோ தோணிச்சி....சொல்லீட்டேன். என்னென்னவோ நெனச்சேன். சீருடைல இருக்கு. எந்தக் காக்கா திருட்டுக் காக்கான்னு கண்டுபிடிக்க விடாம கருப்பாயிருக்குன்னு நெனச்சிப் பாத்தேன். காக்காவும் கரையும். கண்மையும் கரையும்ன்னு எல்லாம் யோசிச்சேன். ஆனா விடைல நகைச்சுவையே பெருசா இருக்கனுங்கறதனால இப்படிச் சொல்லியிருக்கேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
05-05-2005, 06:11 AM
முத்து விடை இதுவல்ல.

ஆமாம் எங்கே ஸ்வேதா, வாணி, மைதிலி, தேம்பா, மன்மதன், இனியன், பிரதீப், இராகவன் அண்ணா, பெரி, யாரும் பதில் சொல்ல வரவில்லையே ஏன்?

அண்ணா நாந்தான் ஒரு தடவை உளறி மாட்டிக்கிட்டேனே? அப்புறம் என்ன?
காக்கா ஏன் கருப்பா இருக்குதுன்னா... அதோட அப்பா,அம்மால்லாம் கருப்பு அதான்.
இதுவும் இல்லைன்னு வச்சிக்குங்களேன். அது கருப்பா இருக்கறதுதான் கருப்பா இருக்கறதுக்குக் காரணம்.

பரஞ்சோதி
05-05-2005, 08:36 AM
விடை தவறு,

விடையை நானே சொல்லட்டுமா? கொஞ்ச பேர் வரட்டுமே? அப்போ தான் ரவுண்டு, கிரவுண்டு, வூடு, ஷாப்பிங்க் செண்டர் கட்டி அடிக்க முடியும்.

babu4780
05-05-2005, 08:44 AM
எங்க,கருப்பாத்தானே இருக்கனும், குடும்பத்துல குழப்பத்தை உண்டுபன்னிராதீங்க..அப்புறம் எல்லாரோட சட்டையும் நாஸ்த்தி !!!

சுவேதா
05-05-2005, 05:25 PM
காகம் சாக்கடையில குளிக்கிற படியா கறுப்பா இருக்கு சரியா?

முத்து
05-05-2005, 07:10 PM
விடை தவறு,

விடையை நானே சொல்லட்டுமா? கொஞ்ச பேர் வரட்டுமே? அப்போ தான் ரவுண்டு, கிரவுண்டு, வூடு, ஷாப்பிங்க் செண்டர் கட்டி அடிக்க முடியும்.

பரஞ்சோதி,
நீங்களே சொல்லிருங்க

முத்து
06-05-2005, 01:51 AM
அனுபவத்தில் வந்த பதில் மாதிரி தெரியுது தம்பி.....

(மீண்டும் தளத்தில் நீங்கள் இறங்குவது சந்தோசமளிக்கிறது)

அண்ணா,
இது அனுபவத்தில் வந்த பதிவில்லை.
நானும் தினமும் குளித்து குளித்துத்தான் பார்க்கிறேன், வெள்ளைக்காரங்க கலர் வந்துரலாமுன்னு.. ம்ஹூம் , நடக்கமாட்டேங்குதே. இன்னும் அப்படியேதான் இருக்கு. நான் ஒரிஜினலா என்ன கலர்ன்னு மட்டும் யாரும் கேட்காதீங்க. :)

முத்து
06-05-2005, 01:54 AM
ஒரு காகம் குளித்துக்கொண்டிருந்தது திடீரெனக் காணாமல் போய்விட்டது. ஏன் ??

gragavan
06-05-2005, 05:41 AM
ஒரு காகம் குளித்துக்கொண்டிருந்தது திடீரெனக் காணாமல் போய்விட்டது. ஏன் ??காகம் கரைந்தது. சரிதானா முத்து?
அது சரி. காகம் ஏன் கருப்பாக இருக்கிறது?
அன்புடன்,
கோ.இராகவன்

அறிஞர்
06-05-2005, 05:50 AM
காகம் கரைந்தது. சரிதானா முத்து?
அது சரி. காகம் ஏன் கருப்பாக இருக்கிறது?
அன்புடன்,
கோ.இராகவன்

கரைந்து கரைந்து காணம போயிடுச்சா... சூப்பர் ஆராய்ச்சிதான்....

அறிஞர்
06-05-2005, 05:52 AM
நானும் தினமும் குளித்து குளித்துத்தான் பார்க்கிறேன், வெள்ளைக்காரங்க கலர் வந்துரலாமுன்னு.. ம்ஹூம் , நடக்கமாட்டேங்குதே. இன்னும் அப்படியேதான் இருக்கு. நான் ஒரிஜினலா என்ன கலர்ன்னு மட்டும் யாரும் கேட்காதீங்க. :)

இது சரிப்படாது.... ஒரு ஜெர்மனி பொண்ணா பார்த்து திருமணம் செய்... உம் சந்ததியாவது.... வெள்ளைக்காரர்கள் போல் இருப்பார்கள்.......தண்ணீர் செலவழிக்காமல் வெள்ளையா இருக்கலாம்...

பரஞ்சோதி
06-05-2005, 08:15 AM
பரஞ்சோதி,
நீங்களே சொல்லிருங்க

காக்கா ஏன் கருப்பாக இருக்கிறது?

ஏண்ணா, ஏண்ணா, ஏண்ணா, மன்மதா ஆட்டோவை ஸ்டார்ட் செய்து வை.

காக்கா ஏன் கருப்பாக இருக்குதுன்னா, அது இன்னமும் உஜாலாவுக்கு மாறலை.

வுடு ஜீட், டேய் மன்மதா ஒரு கால் இன்னமும் வெளியே இருக்குலே, பார்த்து போலே.

அறிஞர்
06-05-2005, 08:49 AM
ஊருல.. இன்னும் உஜாலா கிடைக்குதா பரம்ஸ்.....

pradeepkt
06-05-2005, 10:28 AM
காக்கா ஏன் கருப்பாக இருக்கிறது?

ஏண்ணா, ஏண்ணா, ஏண்ணா, மன்மதா ஆட்டோவை ஸ்டார்ட் செய்து வை.

காக்கா ஏன் கருப்பாக இருக்குதுன்னா, அது இன்னமும் உஜாலாவுக்கு மாறலை.

வுடு ஜீட், டேய் மன்மதா ஒரு கால் இன்னமும் வெளியே இருக்குலே, பார்த்து போலே.

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ....
எனக்கு அப்படியே கமலஹாசன் மாதிரி அழுகணும் போல இருக்குது.

gragavan
06-05-2005, 12:52 PM
காக்கா ஏன் கருப்பாக இருக்கிறது?

ஏண்ணா, ஏண்ணா, ஏண்ணா, மன்மதா ஆட்டோவை ஸ்டார்ட் செய்து வை.

காக்கா ஏன் கருப்பாக இருக்குதுன்னா, அது இன்னமும் உஜாலாவுக்கு மாறலை.

வுடு ஜீட், டேய் மன்மதா ஒரு கால் இன்னமும் வெளியே இருக்குலே, பார்த்து போலே.அடங்!!!!!!!!!!!! கல்லக் கண்டா காக்காயக் காணோம். காக்காயக் கண்டா கல்லக் காணம். தப்பிச்சுட்டாங்கய்யா! தப்பிச்சிட்டாங்க!
அன்புடன்,
கோ.இராகவன்

முத்து
07-05-2005, 12:42 AM
காகம் கரைந்தது. சரிதானா முத்து?
அது சரி. காகம் ஏன் கருப்பாக இருக்கிறது?
அன்புடன்,
கோ.இராகவன்

மிகச் சரி.
காகம் கரையும் எனப் படித்திருக்கிறேன்.

மன்மதன்
07-05-2005, 05:06 AM
காக்கா ஏன் கருப்பாக இருக்கிறது?

ஏண்ணா, ஏண்ணா, ஏண்ணா, மன்மதா ஆட்டோவை ஸ்டார்ட் செய்து வை.

காக்கா ஏன் கருப்பாக இருக்குதுன்னா, அது இன்னமும் உஜாலாவுக்கு மாறலை.

வுடு ஜீட், டேய் மன்மதா ஒரு கால் இன்னமும் வெளியே இருக்குலே, பார்த்து போலே.

நல்ல வேளை , உஜாலா என்பதை கலர் கொடுத்து படிக்க வைச்சே.. இல்லேன்னா நம்ம பசங்க 'கஜாலா'ன்னுல்ல படிச்சிருப்பாங்க.. :D :D
அன்புடன்
நானும் உ( க )ஜாலவுக்கு மாறிட்டேன் - மன்மதன்

பரஞ்சோதி
07-05-2005, 05:08 AM
அடுத்து யார் கடிக்க போறீங்க?

அறிஞர்
07-05-2005, 12:36 PM
உஜாலாவுக்கும், கஜலாவுக்கும் என்ன வித்தியாசம்?

முத்து
07-05-2005, 03:48 PM
உஜாலாவுக்கும், கஜலாவுக்கும் என்ன வித்தியாசம்?
உஜாலா தெரியும், அதென்ன கஜாலா ?

சுவேதா
08-05-2005, 12:23 AM
ஒரு மீன் தொட்டியில் 100 மீன்கள் இருந்தன அதில் ஒரு மீன் இறந்தால் தண்ணீர் கூடுமா? இல்லை குறையுமா? ஏன் கூடும் or ஏன் குறையும்?

Iniyan
08-05-2005, 12:53 AM
மீன் இறந்தால் நீர் எப்படி குறையவோ கூடவோ செய்யும்?

பரஞ்சோதி
08-05-2005, 04:15 AM
ஒரு மீன் தொட்டியில் 100 மீன்கள் இருந்தன அதில் ஒரு மீன் இறந்தால் தண்ணீர் கூடுமா? இல்லை குறையுமா? ஏன் கூடும் or ஏன் குறையும்?

கண்டிப்பாக நீர்மட்டம் உயரும், காரணம் இறந்த மீனின் உடம்பு காற்று ஏறி ஊதி போய்விடும், எனவே மீனின் எடை கூடி விடும்.

சுவேதா
08-05-2005, 01:01 PM
கண்டிப்பாக நீர்மட்டம் உயரும், காரணம் இறந்த மீனின் உடம்பு காற்று ஏறி ஊதி போய்விடும், எனவே மீனின் எடை கூடி விடும்.

அண்ணா! நீங்கள் கூறினீர்கள் கண்டிப்பாக நீர்மட்டம் உயரும் என்று அது சரி ஆனால் காரணம்தான் பிழை.

மன்மதன்
08-05-2005, 01:06 PM
அந்த மீன் இறந்தவுடன் , எல்லா மீன்களும் அழுமே .. உடனே நீர் மட்டம் அதிகரிக்கும்.. பிறகு உப்பு கரிக்கும் .. :D :D
அன்புடன்
மன்மதன்

சுவேதா
08-05-2005, 01:12 PM
அந்த மீன் இறந்தவுடன் , எல்லா மீன்களும் அழுமே .. உடனே நீர் மட்டம் அதிகரிக்கும்.. பிறகு உப்பு கரிக்கும் .. :D :D
அன்புடன்
மன்மதன்

:D வாழ்த்துக்கள் மன்மதன்

பரஞ்சோதி
08-05-2005, 08:43 PM
கலக்கீட்டீங்க மன்மதன்.

எப்படி தலைவா? இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது.

அறிஞர்
09-05-2005, 03:38 AM
அட மக்கா நன்ன யோசிக்கிறீங்க...

பரம்ஸ் புத்திசாலியா பதில் இது... பொது அறிவு இடமில்லை.... கடி ஏரியா....

மன்மதன்
09-05-2005, 04:26 AM
கலக்கீட்டீங்க மன்மதன்.

எப்படி தலைவா? இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது.

கிட்னி.. நண்பா.. கிட்னி.... அறிர் சொன்னது போல புத்திசாலியா யோசிக்க கூடாது.. அவரை மாதிரியே யோசிக்கணும் .ஹி..ஹி.. :D :D

அன்புடன்
மன்மதன்

pradeepkt
09-05-2005, 04:32 AM
உஜாலா தெரியும், அதென்ன கஜாலா ?

ஐயையோ முத்து... கஜாலா தெரியாதா?
போச்சு. உங்க வாழ்க்கையில் போன வருஷத்தை வீணாக்கிட்டீங்க :)
இப்போ ராம் படத்தில் நடித்த லேட்டஸ்ட் கண்ணா லேட்டஸ்ட் பிகர் கஜாலா. பெரி சண்டைக்கு வந்திருவான்.

pradeepkt
09-05-2005, 04:34 AM
அந்த மீன் இறந்தவுடன் , எல்லா மீன்களும் அழுமே .. உடனே நீர் மட்டம் அதிகரிக்கும்.. பிறகு உப்பு கரிக்கும் .. :D :D
அன்புடன்
மன்மதன்

அப்படியே சிலிர்த்துட்டேன் மன்மதன். கலக்கிட்டீங்க.
இங்கே இதைப் படிச்சு நான் அழுது என் அலுவலக அறையில் நீர் மட்டம் அதிகரித்து விட்டது.

மன்மதன்
09-05-2005, 04:42 AM
அப்படியே சிலிர்த்துட்டேன் மன்மதன். கலக்கிட்டீங்க.
இங்கே இதைப் படிச்சு நான் அழுது என் அலுவலக அறையில் நீர் மட்டம் அதிகரித்து விட்டது.

அழுதது நீங்கள் இல்லை.. உங்க கூட வேலை பார்ப்பவர்கள் என்று கேள்விப்பட்டேன்.. உங்க கடி தாங்காம.. :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
09-05-2005, 04:53 AM
ஐயையோ முத்து... கஜாலா தெரியாதா?
போச்சு. உங்க வாழ்க்கையில் போன வருஷத்தை வீணாக்கிட்டீங்க :)
இப்போ ராம் படத்தில் நடித்த லேட்டஸ்ட் கண்ணா லேட்டஸ்ட் பிகர் கஜாலா. பெரி சண்டைக்கு வந்திருவான்.

யூ டூ பெரி.

யாரைத் தான் நம்புவதோ .....

"இப்படியே எல்லாத்தையும் நீங்களே எடுத்துக் கொண்டால் நாங்க எங்கே போறதாம்" - கேட்பது மன்மதன், கேட்க சொன்னது பரம்ஸ்.

பரஞ்சோதி
09-05-2005, 05:10 AM
மக்கா இந்த கடையில் பொருட்களே வாங்க முடியாது, அது என்ன கடை?

pradeepkt
09-05-2005, 05:16 AM
பகடை சரியா அண்ணா?

பரஞ்சோதி
09-05-2005, 05:23 AM
பகடை என்பது கடி(சரி ) யான விடை அல்ல.

மன்மதன்
09-05-2005, 06:17 AM
மக்கா இந்த கடையில் பொருட்களே வாங்க முடியாது, அது என்ன கடை?

சாக்கடை.. :D :D

அன்புடன்
மன்மதன்

gragavan
09-05-2005, 06:47 AM
சாக்கடை.. :D :D

அன்புடன்
மன்மதன்அட மம்முதனா இந்த விடயச் சொல்லனும்?
அன்புடன்,
கோ.இராகவன்

அறிஞர்
09-05-2005, 06:50 AM
சூப்பரா பதில் சொல்றார் மன்மதன்....

பரஞ்சோதி
09-05-2005, 07:16 AM
சாக்கடை.. :D :D

அன்புடன்
மன்மதன்

சரியான பதில். பாராட்டுகள் நண்பா.

மன்மதா என்னமா கலக்குற, பார்த்து ரொம்ப கலக்காத துற்நாற்றம் வந்து விடும். :)

மன்மதன்
09-05-2005, 07:28 AM
அய்யய்யோ.. நான் கலக்கலேங்க.. :D :D
அன்புடன்
மன்மதன்

pradeepkt
09-05-2005, 09:54 AM
மன்மதா, உங்க அலைவரிசை என்ன சட்டுனு அண்ணாவோட ஒத்துப் போகுது...

இது சரியில்லையே?
என்னமோ கலக்குங்கப்பு

அறிஞர்
09-05-2005, 09:58 AM
ரொம்ப கலக்கி இங்க ரொம்ப நாறுது.. வேற பக்கம் போகலாம்

பரஞ்சோதி
09-05-2005, 10:00 AM
ரொம்ப கலக்கி இங்க ரொம்ப நாறுது.. வேற பக்கம் போகலாம்

மன்மதா, அறிஞருக்கு குறும்பு ஜாஸ்தியாகி விட்டது, ஐவர் அணியில் கவனிக்க வேண்டியது தான்.:)

பரஞ்சோதி
09-05-2005, 10:16 AM
அடுத்த மரணக்கடி இதோ:[U]

சீப்புக்கும், வாழைப்பழத் தோலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

முத்து
09-05-2005, 11:01 AM
மக்கா இந்த கடையில் பொருட்களே வாங்க முடியாது, அது என்ன கடை?

புழக்கடை
சகடை

முத்து
09-05-2005, 11:03 AM
அடுத்த மரணக்கடி இதோ:[U]

சீப்புக்கும், வாழைப்பழத் தோலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

ஒன்று தலை வாரும், மற்றொன்று காலை வாரும்... :D

முத்து
09-05-2005, 11:04 AM
செருப்பும் நாயும் ஒன்று ஏன் ?

அறிஞர்
09-05-2005, 11:12 AM
செருப்பும் நாயும் ஒன்று ஏன் ?

ரெண்டுமே உம்மை மாறி கடிக்குமா தம்பி......

(ஜிமெயிலில் என் மெயில் பார்த்தீரா)

முத்து
09-05-2005, 11:18 AM
மிகச் சரியாய்ச் சொன்னீர்கள்.
இரண்டும் எனது காலைக் கடித்திருக்கிறது.

(நீங்கள் சொன்னபிறகுதான் ஜிமெயில் பார்த்தேன்)

அறிஞர்
10-05-2005, 02:41 AM
இரண்டும் எனது காலைக் கடித்திருக்கிறது.

கடிக்கே கடியா..... :)

பரஞ்சோதி
10-05-2005, 04:15 AM
மிகச் சரியாய்ச் சொன்னீர்கள்.
இரண்டும் எனது காலைக் கடித்திருக்கிறது.

(நீங்கள் சொன்னபிறகுதான் ஜிமெயில் பார்த்தேன்)

இந்த லிஸ்டில் அறிஞரை விட்டு விட்டீங்களே :)

அறிஞர்
10-05-2005, 04:30 AM
இந்த லிஸ்டில் அறிஞரை விட்டு விட்டீங்களே :)

விடப்படவேண்டியவர் என்றறிந்து.. விட்டுவிட்டார்கள் நண்பா...

பரஞ்சோதி
10-05-2005, 06:22 AM
பதில் சொல்லுங்க:

கடுமையான மழைக்காலம், இரைக்கிடைக்காமல் மூன்று எறும்புகள் இருப்பிடத்தை விட்டு வெளியே வர, அந்த நேரம் பார்த்து மின்னல் அடிக்க, அதில் இரண்டு எறும்பு செத்து போக, ஒன்று மட்டும் தப்பியது? அது எப்படி?

pradeepkt
10-05-2005, 06:34 AM
அது கட்ட எறும்பா ?
என்ன கட்டைன்னு மன்மதன் கேக்குறது வெளங்குது. :)

பரஞ்சோதி
10-05-2005, 06:36 AM
அது கட்ட எறும்பா ?
என்ன கட்டைன்னு மன்மதன் கேக்குறது வெளங்குது. :)

அருமை தம்பி அருமை.

அது கட்ட எறும்பு, மீதி இரண்டும் சுட்ட எறும்பு.

pradeepkt
10-05-2005, 06:46 AM
அருமை தம்பி அருமை.

அது கட்ட எறும்பு, மீதி இரண்டும் சுட்ட எறும்பு.
என்ன அண்ணா? உங்க தம்பியா இருந்திட்டு இது கூட சொல்ல மாட்டேனா?

அறிஞர்
10-05-2005, 07:59 AM
கடி மன்னர்கள் ஏதோ பேசிக்கிற மாதிரி தெரியுது....

gragavan
10-05-2005, 08:10 AM
கடி மன்னர்கள் ஏதோ பேசிக்கிற மாதிரி தெரியுது....அதுக்காக நசுக்கீறாதீக.

mania
10-05-2005, 10:15 AM
இந்த பக்கம் வலையில்லாமல் நுழையமுடியாது போலிருக்கே......ஐய்யய்யோ எல்லாம் மரணகடியாயிருக்கே.....ஜமாய்ங்க......
ஆனந்தத்துடன்
மணியா...

pradeepkt
10-05-2005, 10:48 AM
தலை எங்க கடியோட நீங்களும் சேந்துக்கிறது?

அறிஞர்
10-05-2005, 03:20 PM
இந்த பக்கம் வலையில்லாமல் நுழையமுடியாது போலிருக்கே......ஐய்யய்யோ எல்லாம் மரணகடியாயிருக்கே.....ஜமாய்ங்க......
ஆனந்தத்துடன்
மணியா...

கடிகளின் தலைக்கே கடியா.........

பரஞ்சோதி
10-05-2005, 06:26 PM
கடிகளின் தலைக்கே கடியா.........

இது தான் அறிஞரின் சிறப்பு கடி.

gragavan
11-05-2005, 08:09 AM
கடிக்க கசடற கடித்தவை கடித்தபின்
குதற அதற்குத் தக

ரொம்பக் கடிக்கிறவங்களுக்கு இதுதான் எச்சரிக்கை.

அன்புடன்,
கோ.இராகவன்

இட்டலிக்குத் தேங்காய்ச் சட்டினி கிடைத்ததா?
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=100687#post100687

அறிஞர்
11-05-2005, 08:25 AM
கடிக்க கசடற கடித்தவை கடித்தபின்
குதற அதற்குத் தக

ரொம்பக் கடிக்கிறவங்களுக்கு இதுதான் எச்சரிக்கை.

அன்புடன்,
கோ.இராகவன்

சூப்பர் குறள்....

யாராவது...
துப்பார்க்கு தூப்பாய என துப்ப போறாங்க.....

பரஞ்சோதி
11-05-2005, 08:36 AM
இந்த குறள் விளையாட்டை இத்துடன் விடுவோம்.

அடுத்த கடி யார் கடிக்க போறீங்க?

பரஞ்சோதி
11-05-2005, 08:37 AM
என் கிட்ட ஒரு கீ இருக்குது ஆனால் அதால் கதவை திறக்க முடியாது, அது என்ன கீ?

pradeepkt
11-05-2005, 08:58 AM
கதவைத் திறக்க முடியாத கீயா?
இந்தப் பக்கீக்குப் புரிய மாட்டேங்குதே. :)
இதுக்கெல்லாம் மன்மதன் தான் ஃபுல் ரைட்ஸ் வாங்கி வச்சிருக்காப்புல. அவரு வந்து சொல்லுவாரு.

மன்மதன்
11-05-2005, 09:18 AM
சூப்பர் குறள்....

யாராவது...
துப்பார்க்கு தூப்பாய என துப்ப போறாங்க.....

என்ன அறிரே,, ஏதோ துபாய்ன்னு சொன்ன மாதிரி இருந்தது.. :D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
11-05-2005, 09:22 AM
என் கிட்ட ஒரு கீ இருக்குது ஆனால் அதால் கதவை திறக்க முடியாது, அது என்ன கீ?

லக்'கீ' .???

ராக்'கீ' ???

'கீ' போர்டு ??

அறிஞர்
11-05-2005, 09:32 AM
என்ன அறிரே,, ஏதோ துபாய்ன்னு சொன்ன மாதிரி இருந்தது.. :D :D
அன்புடன்
மன்மதன்

ஆமாம்.. தூபாய் வைச்சு நீங்க கடிக்க போறீங்கன்னு சொன்னேன்

அறிஞர்
11-05-2005, 09:32 AM
நீங்க சொல்ற.. "கீ" நெய்யா அண்ணா.....

மன்மதன்
11-05-2005, 09:39 AM
நீங்க சொல்ற.. "கீ" நெய்யா அண்ணா.....

கேள்வி கேட்டது பரம்ஸ்.. அவர் எப்படி உங்களுக்கு அண்ணா ஆனார் ..
குழப்பத்துடன்
மன்மதன்

mania
11-05-2005, 10:11 AM
கேள்வி கேட்டது பரம்ஸ்.. அவர் எப்படி உங்களுக்கு அண்ணா ஆனார் ..
குழப்பத்துடன்
மன்மதன்

பாவம் மன்மதன் ....அவரை கொஞ்ச நாள் விட்டுடு....சென்னை வந்து என்னை பார்த்துவிட்டு போனதிலிருந்து அவர் ஒரு மாதிரியாத்தான் ஆயிட்டார்....நம்ம அணி பலம் வேறு அதிகமாயிடிச்சு....அப்பப்போ ஜகா வாங்கிக்கறார் பாத்தியா....
அன்புடன்
மணியா....:D

மன்மதன்
11-05-2005, 10:16 AM
அப்படியே அப்ப சரி.. அவரின் லேட்டஸ்ட் ஆராய்ச்சி பத்தி ஏதாவது கட்டுரை கொடுக்கலாமா தலை :D :D
அன்புடன்
மன்மதன்

mania
11-05-2005, 10:17 AM
கல்யாணத்திற்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் பெண் வீட்டுக்காரர்கள் பையன் ஒரு கேள்வி கேட்டதுமே அவனுக்கு பைத்தியம் நம் பெண்ணுக்கு அவன் வேண்டவே வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள் அந்த பையன் அப்பிடி என்ன கேட்டிருப்பான்......???
அன்புடன்
மணியா

மன்மதன்
11-05-2005, 10:20 AM
பெண்ணுக்கு சமைக்க தெரியுமா?? என்றா ???? :D :D
முன் அனுபவம் இருக்கான்னு கேட்டிருப்பானோ??
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
11-05-2005, 10:35 AM
பெண்ணுக்கு சமைக்க தெரியுமா?? என்றா ???? :D :D
முன் அனுபவம் இருக்கான்னு கேட்டிருப்பானோ??
அன்புடன்
மன்மதன்

ஏலே குறும்பா..

pradeepkt
11-05-2005, 10:39 AM
ஏலே குறும்பா..
போச்சு மன்மதன், நீங்க எறும்பு புத்துல கைய வச்சிட்டீங்க.
சமைக்கிறது என்ன அவ்வளவு கேவலமா? ஹும்

மன்மதன்
11-05-2005, 10:41 AM
போச்சு மன்மதன், நீங்க எறும்பு புத்துல கைய வச்சிட்டீங்க.

கரும்பு தின்ன எறும்பு புத்துல கால வச்சுதானே ஆகணும்.. :D :D
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
11-05-2005, 11:40 AM
கரும்பு தின்ன எறும்பு புத்துல கால வச்சுதானே ஆகணும்.. :D :D
அன்புடன்
மன்மதன்

என்னது எறும்பு கிட்ட கரும்பு புடுங்கி தின்னுறீயா........ ??????

Iniyan
11-05-2005, 01:12 PM
பத்து எறும்பு வட்டமா சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்துச்சி.

1ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 9 எறும்பு வருதுன்னு"

2ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 8 எறும்பு வருதுன்னு"

3ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 7 எறும்பு வருதுன்னு"

4ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 6 எறும்பு வருதுன்னு"

5ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 5 எறும்பு வருதுன்னு"

6ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 4 எறும்பு வருதுன்னு"

7ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 3 எறும்பு வருதுன்னு"

8ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 2 எறும்பு வருதுன்னு"

9ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 1 எறும்பு வருதுன்னு"

10ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 11 எறும்பு வருதுன்னு"

இது எப்படி?

மன்மதன்
11-05-2005, 01:26 PM
அது பொய் சொல்லுது. :D :D

சுவேதா
11-05-2005, 01:49 PM
அது மன்மதனின் நன்பராச்சே அதுதான் மன்மதனை போலவே அதுவும் அப்படி பொய் சொல்லியிருக்கு....

அறிஞர்
12-05-2005, 02:01 AM
அது மன்மதனின் நன்பராச்சே அதுதான் மன்மதனை போலவே அதுவும் அப்படி பொய் சொல்லியிருக்கு....

அப்ப.... நீ மன்மதனின் நண்பர் இல்லை என்கிறாயா.....

pradeepkt
12-05-2005, 04:13 AM
அது மன்மதனின் நன்பராச்சே அதுதான் மன்மதனை போலவே அதுவும் அப்படி பொய் சொல்லியிருக்கு....

அது எப்படி ஸ்வேதா இந்த சின்ன வயசில இப்படி ஒரு தீர்க்க தரிசனம்?

மன்மதன்
12-05-2005, 04:19 AM
அப்ப.... நீ மன்மதனின் நண்பர் இல்லை என்கிறாயா.....

அப்ப ஸ்வெதாவை எறும்பு என்கிறீர்களா..?? :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
12-05-2005, 04:39 AM
அடுத்த கடி:

இனியன் ஏன் எப்போவும் படிக்கும் போது கிணற்றில் இறங்கி படிக்கிறார்?

பரஞ்சோதி
12-05-2005, 04:43 AM
அது மன்மதனின் நன்பராச்சே அதுதான் மன்மதனை போலவே அதுவும் அப்படி பொய் சொல்லியிருக்கு....

எறும்புக்கு கரும்பு பிடிக்கும், மன்மதனும் கரும்பை பிடித்தவர், அதான் இந்த ஒற்றுமை.

mania
12-05-2005, 04:59 AM
எறும்புக்கு கரும்பு பிடிக்கும், மன்மதனும் கரும்பை பிடித்தவர், அதான் இந்த ஒற்றுமை.

அடடா........புல்லரிக்குது... (எறும்பு கடிச்ச மாதிரி ) ....என்ன புலமை....என்ன வார்த்தை விளையாட்டு.....வாய்ப்பு கொடுத்த அறிஞருக்கு நன்றி......
அன்புடன்
கவிநயம் புரிந்த
மணியா...

மன்மதன்
12-05-2005, 05:13 AM
அடுத்த கடி:

இனியன் ஏன் எப்போவும் படிக்கும் போது கிணற்றில் இறங்கி படிக்கிறார்?

அப்பத்தான் கையில இருக்கிற பாட்டில் யாருக்கும் தெரியாது .. :D :D
(பெப்சி பாட்டில்மா.. :D )
அன்புடன்
மன்மதன்

ஆழமா படிக்கிறாரோ..??

முத்து
12-05-2005, 05:31 AM
அடுத்த கடி:

இனியன் ஏன் எப்போவும் படிக்கும் போது கிணற்றில் இறங்கி படிக்கிறார்?
இனியன் எப்பவும் ஆழமாப் படிக்கிற ஆளாச்சே ... :)

thempavani
12-05-2005, 05:42 AM
Originally Posted by பரஞ்சோதி
என் கிட்ட ஒரு கீ இருக்குது ஆனால் அதால் கதவை திறக்க முடியாது, அது என்ன கீ?

---------

அண்ணா இதற்குப் பதிலைக் காணோம்...

thempavani
12-05-2005, 05:44 AM
கல்யாணத்திற்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் பெண் வீட்டுக்காரர்கள் பையன் ஒரு கேள்வி கேட்டதுமே அவனுக்கு பைத்தியம் நம் பெண்ணுக்கு அவன் வேண்டவே வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள் அந்த பையன் அப்பிடி என்ன கேட்டிருப்பான்......???
அன்புடன்
மணியா
---------

ஏலே.. மம்முதா... பதில் தெரியலைன்ன பேச்சை மாத்தாதே...

தலை இதுக்கு பதில் சொல்லுங்க..

thempavani
12-05-2005, 05:46 AM
பத்து எறும்பு வட்டமா சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்துச்சி.

1ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 9 எறும்பு வருதுன்னு"

2ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 8 எறும்பு வருதுன்னு"

3ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 7 எறும்பு வருதுன்னு"

4ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 6 எறும்பு வருதுன்னு"

5ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 5 எறும்பு வருதுன்னு"

6ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 4 எறும்பு வருதுன்னு"

7ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 3 எறும்பு வருதுன்னு"

8ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 2 எறும்பு வருதுன்னு"

9ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 1 எறும்பு வருதுன்னு"

10ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 11 எறும்பு வருதுன்னு"

இது எப்படி?

கடைசி எறும்பு திரும்பி நின்னுகிட்டு பதில் சொன்னதோ..

அப்படின்னாலும் 9 தானே கணக்கு வரும்...

அப்படின்னா மன்மதன் கூட்டணிதான்... பொய் சொல்லி புடிச்சி..

mania
12-05-2005, 05:48 AM
பத்து எறும்பு வட்டமா சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்துச்சி.

1ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 9 எறும்பு வருதுன்னு"

2ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 8 எறும்பு வருதுன்னு"

3ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 7 எறும்பு வருதுன்னு"

4ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 6 எறும்பு வருதுன்னு"

5ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 5 எறும்பு வருதுன்னு"

6ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 4 எறும்பு வருதுன்னு"

7ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 3 எறும்பு வருதுன்னு"

8ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 2 எறும்பு வருதுன்னு"

9ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 1 எறும்பு வருதுன்னு"

10ம் எறும்பு சொன்னது - "எனக்குப் பின்னாடி 11 எறும்பு வருதுன்னு"

இது எப்படி?

10 ம் எறும்புக்கு 1 , 2 சரியாக எண்ண தெரியாது.....
அன்புடன்
மணியா....

thempavani
12-05-2005, 05:50 AM
ஆகா.. என்னே ஞானம்..என்னே ஞானம்..

தலை....புல்லரிக்குது

பரஞ்சோதி
12-05-2005, 05:52 AM
Originally Posted by பரஞ்சோதி
என் கிட்ட ஒரு கீ இருக்குது ஆனால் அதால் கதவை திறக்க முடியாது, அது என்ன கீ?

---------

அண்ணா இதற்குப் பதிலைக் காணோம்...

அய்யோ சகோதரி, அதை ஏன் கேட்கிறீங்க.

அந்த கீயை தொலைத்து விட்டேம்மா.

பரஞ்சோதி
12-05-2005, 05:55 AM
அடடா........புல்லரிக்குது... (எறும்பு கடிச்ச மாதிரி ) ....என்ன புலமை....என்ன வார்த்தை விளையாட்டு.....வாய்ப்பு கொடுத்த அறிஞருக்கு நன்றி......
அன்புடன்
கவிநயம் புரிந்த
மணியா...

நன்றி தலை நன்றி.

அச்சூம் அச்சூம் - ஜல்ப் பிடிச்சிடுச்சு தலை

பரஞ்சோதி
12-05-2005, 05:56 AM
ஆகா.. என்னே ஞானம்..என்னே ஞானம்..

தலை....புல்லரிக்குது

அய்யோ, அப்போ உங்க தலையில் மூளை, முடி எல்லாம் இல்லையா?

புல் தான் இருக்குதா?

பார்த்து சகோதரி அசந்த நேரத்தில் மாடு மேய்ந்து விடப்போகிறது.

ஏலே மன்மதா இப்பொ சந்தோசமாலே.

பரஞ்சோதி
12-05-2005, 05:57 AM
இனியன் எப்பவும் ஆழமாப் படிக்கிற ஆளாச்சே ... :)

பாராட்டுகள் மன்மத முத்து.

mania
12-05-2005, 06:07 AM
நன்றி தலை நன்றி.

அச்சூம் அச்சூம் - ஜல்ப் பிடிச்சிடுச்சு தலை

மறைமுகமா என்னை கிழவன் என்று சொல்கிறாய்.....ம்ம்ம்ம்ம்ம்ம்....பரவாயில்லை.....
(ஓடுற நரியில் ஒரு நரி கிழ நரியாம்...அச்சூம்...அச்சூம்....)
அன்புடன்
மணியா...:rolleyes: :D

பரஞ்சோதி
12-05-2005, 06:12 AM
நம்ம இராகவன் அண்ணா, கோயிலுக்கு போனா பொய் பொய்யா பேசுவார் ஏன்?

மன்மதன்
12-05-2005, 06:21 AM
அவர் மெய் மறந்துடுவார்.. நாங்கெலெல்லாம் காதலில்தான் மெய் மறப்போம்.. :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
12-05-2005, 06:31 AM
அவர் மெய் மறந்துடுவார்.. நாங்கெலெல்லாம் காதலில்தான் மெய் மறப்போம்.. :D :D
அன்புடன்
மன்மதன்

சரியான பதில் மன்மதா. பாராட்டுகள்.

காதலில் மெய் மறந்தால் என்ன ஆகும் தெரியும் தானே.

pradeepkt
12-05-2005, 06:33 AM
சரியான பதில் மன்மதா. பாராட்டுகள்.

காதலில் மெய் மறந்தால் என்ன ஆகும் தெரியும் தானே.

ஏதாச்சும் கிளைக்கதை இருக்குதா என்ன?
மன்மதன், அப்படி என்னப்பு மெய் மறந்தீக?

மன்மதன்
12-05-2005, 07:00 AM
அய்யய்யோ.. நாங்கலெல்லாம் என்று குறிப்பிட்டது.. நம்ம எல்லோரையும்தான் மக்கா :D :D
அன்புடன்
எஸ்கேப் மன்மதன்

gragavan
12-05-2005, 07:49 AM
சரியான பதில் மன்மதா. பாராட்டுகள்.

காதலில் மெய் மறந்தால் என்ன ஆகும் தெரியும் தானே.காதல்லதான் மெய் மறக்கக் கூடாது. மம்முதா நீ UKG பெயிலு.
அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
12-05-2005, 07:51 AM
நம்ம இராகவன் அண்ணா, கோயிலுக்கு போனா பொய் பொய்யா பேசுவார் ஏன்?ஏந்தம்பி என்ன கோயிலுக்குத்தான அனுப்பனும்....ம்ம்ம்ம்ம்...அப்படி அனுப்புனாலும் கச்சுராகோ கோயிலுக்கு அனுப்பக் கூடாதா?

pradeepkt
12-05-2005, 08:28 AM
ஏந்தம்பி என்ன கோயிலுக்குத்தான அனுப்பனும்....ம்ம்ம்ம்ம்...அப்படி அனுப்புனாலும் கச்சுராகோ கோயிலுக்கு அனுப்பக் கூடாதா?

ஆசையப் பாரு.
அங்கல்லாம் போனீகன்னா இருக்கிற இருப்புக்கு மெய் மறக்காமலே பொய்தான் பேசுவீரு.

பரஞ்சோதி
12-05-2005, 08:28 AM
ஏந்தம்பி என்ன கோயிலுக்குத்தான அனுப்பனும்....ம்ம்ம்ம்ம்...அப்படி அனுப்புனாலும் கச்சுராகோ கோயிலுக்கு அனுப்பக் கூடாதா?

அங்கனதாமுன்னே போயி மெய்யி மறந்துபுட்டீங்கன்னு சொன்னேன்னே.

அறிஞர்
12-05-2005, 09:49 AM
ஏந்தம்பி என்ன கோயிலுக்குத்தான அனுப்பனும்....ம்ம்ம்ம்ம்...அப்படி அனுப்புனாலும் கச்சுராகோ கோயிலுக்கு அனுப்பக் கூடாதா?

அது என்ன கச்சுராகோ கோயில்...

பரஞ்சோதி
12-05-2005, 10:12 AM
அது என்ன கச்சுராகோ கோயில்...

எப்பூ மன்மதா, அறிஞருக்கு சந்தேகமுல்லே, சீக்கிரம் வாலே.

மன்மதன்
12-05-2005, 10:18 AM
எப்பூ மன்மதா, அறிஞருக்கு சந்தேகமுல்லே, சீக்கிரம் வாலே.

கஜ்ஜூராகோன்னா ஒரு சைனீஸ் கரோகே மியூஸிக் பேண்ட் அறிரே .. சும்மா கஜ்ஜு, புஜ்ஜூன்னு கத்துவாங்க.. நான் கேள்விப்பட்டத சொன்னேன் . :D :D
அன்புடன்
மன்மதன்

Iniyan
12-05-2005, 10:20 AM
அறிஞரே!

மன்மதன் சொல்லும் கஜிரோகா கோவில் காமசூத்திர கலைகள் அனைத்திஅயும் கல்லில் வடித்த சிற்பங்கள் உள்ள ஒரு கோவில்.

mania
12-05-2005, 10:27 AM
அறிஞரே!

மன்மதன் சொல்லும் கஜிரோகா கோவில் காமசூத்திர கலைகள் அனைத்திஅயும் கல்லில் வடித்த சிற்பங்கள் உள்ள ஒரு கோவில்.

....அப்படியா.....!!!!?????
ஆச்சர்யத்துடன்
மணியா........:rolleyes: :D

மன்மதன்
12-05-2005, 10:35 AM
அட :rolleyes: :rolleyes: ..அப்படியும் இருக்கா.. :D :D
அன்புடன்
மன்மதன்

Mathu
12-05-2005, 10:47 AM
Quote:
Originally Posted by முத்து
நானும் தினமும் குளித்து குளித்துத்தான் பார்க்கிறேன், வெள்ளைக்காரங்க கலர் வந்துரலாமுன்னு.. ம்ஹூம் , நடக்கமாட்டேங்குதே. இன்னும் அப்படியேதான் இருக்கு. நான் ஒரிஜினலா என்ன கலர்ன்னு மட்டும் யாரும் கேட்காதீங்க. :)

இது சரிப்படாது.... ஒரு ஜெர்மனி பொண்ணா பார்த்து திருமணம் செய்... உம் சந்ததியாவது.... வெள்ளைக்காரர்கள் போல் இருப்பார்கள்.......தண்ணீர் செலவழிக்காமல் வெள்ளையா இருக்கலாம்...

ஆகா..... சீனா போய் இப்போ ஜேர்மனிக்கு தாவியாச்சா முத்து.....
சரி சரி யமாயுங்க...... :) ;)

Mathu
12-05-2005, 11:06 AM
மக்கா ரொம்ப கடிக்கிறீங்க மக்கா.......
தொடருங்கள் நான் எஸ்கேப். :p

பரஞ்சோதி
12-05-2005, 11:37 AM
அறிஞரே!

மன்மதன் சொல்லும் கஜிரோகா கோவில் காமசூத்திர கலைகள் அனைத்திஅயும் கல்லில் வடித்த சிற்பங்கள் உள்ள ஒரு கோவில்.

மன்மதா! நம்ம இனியன் ரொம்பவும் அப்பாவியாக இருக்கிறாரே!

எது எப்படியே அறிஞர் விரித்த வலையில் விழுந்து விட்டார். அடுத்த முறை ஏமாறாமல் இருக்க அவருக்கு வழி சொல்.

மன்மதன்
12-05-2005, 12:03 PM
சைனீஸ் பேண்டு, அது இதுன்னு எவ்வளவோ சொல்லி பார்த்தேன் :D :D.. இசையும் ஒரு கலைதானே :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
12-05-2005, 12:32 PM
நன்றி நண்பர் இனியனே......

வலையா யாருக்கு யாரு விரிச்சா......

Iniyan
12-05-2005, 12:49 PM
....அப்படியா.....!!!!?????
ஆச்சர்யத்துடன்
மணியா.......

அட ..அப்படியும் இருக்கா..
அன்புடன்
மன்மதன்

மன்மதா! நம்ம இனியன் ரொம்பவும் அப்பாவியாக இருக்கிறாரே!

எது எப்படியே அறிஞர் விரித்த வலையில் விழுந்து விட்டார். அடுத்த முறை ஏமாறாமல் இருக்க அவருக்கு வழி சொல்.
மக்களே! வலை விரிக்கிறீங்களா? இல்ல உண்மையிலேயே தெரியாதான்னு எனக்கு புரியல. இருந்தாலும் என் கடமைய நான் செஞ்சிர்றேன்.

இந்த கோவிலைப் பற்றிய விவரங்களுக்கு,

http://www.indiatravelog.com/khajuraho/khajuraho-temples.html

http://www.orientalarchitecture.com/khajuraho/vishvanathindex.htm

அறிஞர்
12-05-2005, 12:55 PM
நீங்க தொடருங்க.. இனியன்.... (அவுங்கள கண்டுக்காதீங்க)........

தகவல்களுக்கு நன்றி நண்பரே...

சுவேதா
12-05-2005, 02:04 PM
அப்ப.... நீ மன்மதனின் நண்பர் இல்லை என்கிறாயா.....

அய்யோ... நான் அப்படி கூறவில்லை
எல்லோரும் எனது நன்பர்கள்தான்!
ஆனால் எறும்புகள் என் நன்பர்கள் இல்லை அவை மன்மதனின் நன்பர்கள் :D

பரஞ்சோதி
12-05-2005, 07:16 PM
மக்களே! வலை விரிக்கிறீங்களா? இல்ல உண்மையிலேயே தெரியாதான்னு எனக்கு புரியல. இருந்தாலும் என் கடமைய நான் செஞ்சிர்றேன்.

இந்த கோவிலைப் பற்றிய விவரங்களுக்கு,

http://www.indiatravelog.com/khajuraho/khajuraho-temples.html

http://www.orientalarchitecture.com/khajuraho/vishvanathindex.htm

நன்றி இனியன். உடனடியாக கோயில் பற்றிய தகவல்களை சேகரித்து கொடுத்து இருக்கீங்க.

நான் அறிஞருக்கு தெரிந்தும், மன்மதனிடம் கேட்கிறார், பின்னர் கிண்டல் செய்ய வலை விரிக்கிறார் என்று நினைத்தேன். தவறாக நினைக்க வேண்டாம்.

mania
13-05-2005, 04:58 AM
நீங்க தொடருங்க.. இனியன்.... (அவுங்கள கண்டுக்காதீங்க)........

தகவல்களுக்கு நன்றி நண்பரே...

நானும் மன்மதனும் எய்த அம்புகள் உங்களை நோக்கி அல்ல....நீங்கள் உங்களின் ந்ல்ல பங்களிப்பை தொடருங்கள்....அறிஞர் சொல்வதையும் கொஞ்சம் கவனியுங்கள்....இதுவரை எங்களிடம் 2965 முறை ஏமாந்திருக்கிறாராம்....!!!????
அன்புடன்
மணியா........:D

Iniyan
13-05-2005, 05:00 AM
அடடா! இவ்வளவு விளக்கங்கள் எதுக்கு? நட்புகளுக்கிடையில் கிண்டலும் கேலியும் சகஜம் தானே?

mania
13-05-2005, 05:10 AM
அடடா! இவ்வளவு விளக்கங்கள் எதுக்கு? நட்புகளுக்கிடையில் கிண்டலும் கேலியும் சகஜம் தானே?

சபாஷ்.....பாராட்டுக்கள் இனியன்....
அன்புடன்
மணியா...;)

அறிஞர்
13-05-2005, 08:31 AM
சபாஷ்.....பாராட்டுக்கள் இனியன்....
அன்புடன்
மணியா...;)

என்ன பெரிய வலை விரிக்கிறது மாதிரி இருக்கு

முத்து
13-05-2005, 04:10 PM
Quote:
Originally Posted by முத்து
நானும் தினமும் குளித்து குளித்துத்தான் பார்க்கிறேன், வெள்ளைக்காரங்க கலர் வந்துரலாமுன்னு.. ம்ஹூம் , நடக்கமாட்டேங்குதே. இன்னும் அப்படியேதான் இருக்கு. நான் ஒரிஜினலா என்ன கலர்ன்னு மட்டும் யாரும் கேட்காதீங்க.

ஆகா..... சீனா போய் இப்போ ஜேர்மனிக்கு தாவியாச்சா முத்து.....
சரி சரி யமாயுங்க...... ;)

மது,
பழைய சோகத்தையெல்லாம் கிளப்பி விடாதீங்க ..... :( :)

மன்மதன்
14-05-2005, 09:37 AM
அய்யோ... நான் அப்படி கூறவில்லை
எல்லோரும் எனது நன்பர்கள்தான்!
ஆனால் எறும்புகள் என் நன்பர்கள் இல்லை அவை மன்மதனின் நன்பர்கள் :D

கடிக்காதவை அவர்கள் என் அன்பர்கள்..:D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
14-05-2005, 09:38 AM
இது கடி பகுதி.. சும்மா அப்படித்தான் கடிப்போம். தப்பா எடுத்துக்காதிங்க இனியன்..
அன்புடன்
மன்மதன்

mania
16-05-2005, 05:22 AM
கல்யாணத்திற்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் பெண் வீட்டுக்காரர்கள் பையன் ஒரு கேள்வி கேட்டதுமே அவனுக்கு பைத்தியம் நம் பெண்ணுக்கு அவன் வேண்டவே வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள் அந்த பையன் அப்பிடி என்ன கேட்டிருப்பான்......???
அன்புடன்
மணியா
---------

ஏலே.. மம்முதா... பதில் தெரியலைன்ன பேச்சை மாத்தாதே...

தலை இதுக்கு பதில் சொல்லுங்க..

உடம்பை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு..."ஹி....ஹி...ஹி... நான் கொஞ்ச நேரம் தனியாக பேசவேண்டும் "
என்றானாம்.....
அன்புடன்
மணியா...

முத்து
16-05-2005, 08:37 PM
உடம்பை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு..."ஹி....ஹி...ஹி... நான் கொஞ்ச நேரம் தனியாக பேசவேண்டும் "
என்றானாம்.....
அன்புடன்
மணியா...

அடப்பாவமே,
பொண்ணுடன் தனியாய்ப் பேசவேண்டும் என்று சொன்னதை இப்படித் தவறாய்ப் புரிந்துகொண்டார்களா ? ,,:...:)

அறிஞர்
17-05-2005, 02:46 AM
அடப்பாவமே,
பொண்ணுடன் தனியாய்ப் பேசவேண்டும் என்று சொன்னதை இப்படித் தவறாய்ப் புரிந்துகொண்டார்களா ? ,,:...:)

பார்த்து முத்து.. நீர் பொண்ணு பார்க்க போகும்போது...... பொண்ணுடன் பேசவேண்டும் எனத்தெளிவா சொல்லுங்க....

pradeepkt
17-05-2005, 04:22 AM
அடப்பாவமே,
பொண்ணுடன் தனியாய்ப் பேசவேண்டும் என்று சொன்னதை இப்படித் தவறாய்ப் புரிந்துகொண்டார்களா ? ,,:...:)

பாத்தீங்களா முத்து, நீங்க தலைய தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.
அங்க பொண்ணோட தனியாப் பேசுறது மேட்டர் இல்லை. அஷ்டகோணல்-னு ஒண்ணு சேத்திருக்கார் பாருங்க. அங்க இருக்கு மேட்டரு.

gragavan
17-05-2005, 05:09 AM
பாத்தீங்களா முத்து, நீங்க தலைய தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.
அங்க பொண்ணோட தனியாப் பேசுறது மேட்டர் இல்லை. அஷ்டகோணல்-னு ஒண்ணு சேத்திருக்கார் பாருங்க. அங்க இருக்கு மேட்டரு.அப்ப நவகோணலா வெச்சுக்கிட்டு கேக்கலாமா?
அன்புடன்,
கோ.இராகவன்

தன்னைப் பற்றியே வீண்பெருமை பேசுகின்றவர்களுக்குத் தமிழில் என்ன பெயர்?
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=101290#post101290

mania
17-05-2005, 07:11 AM
அப்ப நவகோணலா வெச்சுக்கிட்டு கேக்கலாமா?
அன்புடன்,
கோ.இராகவன்

தன்னைப் பற்றியே வீண்பெருமை பேசுகின்றவர்களுக்குத் தமிழில் என்ன பெயர்?
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=101290#post101290

அத்தோட நிறுத்திக்கோங்க.....தசகோணலா வைச்சிகிட்டு எங்கேயவது தசை....சதையெல்லாம் சுளிக்கக்கபோவுது.....????
அன்புடன்
மணியா...:D

gragavan
17-05-2005, 08:10 AM
அத்தோட நிறுத்திக்கோங்க.....தசகோணலா வைச்சிகிட்டு எங்கேயவது தசை....சதையெல்லாம் சுளிக்கக்கபோவுது.....????
அன்புடன்
மணியா...:Dதானாட மறந்தாலும் சதையாடும் என்பார்கள்.........

pradeepkt
17-05-2005, 08:56 AM
தானாட மறந்தாலும் சதையாடும் என்பார்கள்.........

தசைக்குச் சதை என்ன திரிபா?

இலக்கணக் குறிப்பு வரைக.

pradeepkt
17-05-2005, 09:00 AM
தானாட மறந்தாலும் சதையாடும் என்பார்கள்.........

அடாடா... 1000 ஐ தொட்டுட்டீங்களே!

ஆயிரம் பதித்த ராகவன் வாழ்க! ஏற்கனவே இருக்கிற ஆயிரவர்கள் வரிசையில் உங்களையும் சேத்துட்டீங்க ஐயா.

gragavan
17-05-2005, 09:12 AM
அடாடா... 1000 ஐ தொட்டுட்டீங்களே!

ஆயிரம் பதித்த ராகவன் வாழ்க! ஏற்கனவே இருக்கிற ஆயிரவர்கள் வரிசையில் உங்களையும் சேத்துட்டீங்க ஐயா.அட....ஆயிரமாயிருச்சா! அத நாங் கவனிக்கலையே. நம்ம கணக்கு வெச்சிக்கிற மறந்தாலும் மன்றம் மறக்கல பாத்தீகளா! அதக் கண்டுபிடிச்ச பிரதீப்புக்கு நன்றி. அடுத்த ஆயிரத்தில் ஒருவன் நீங்கதான்.
அன்புடன்,
கோ.இராகவன்

majara
21-05-2005, 07:39 AM
அருமை அண்ணன் மார்களே

இந்த் சின்ன தம்பியின் பணிவான வேண்டுகோள், ஆசை, அபிப்பிராயம்

யாதெனில்

ஒவ்வொரு கடியையும்
தனித் தனியாக
post செய்யலாமே

karikaalan
21-05-2005, 08:37 AM
தசைக்குச் சதை என்ன திரிபா?

இலக்கணக் குறிப்பு வரைக.

தசை -- Muscle
சதை -- Fat

பரஞ்சோதி
21-05-2005, 09:03 AM
அருமை அண்ணன் மார்களே

இந்த் சின்ன தம்பியின் பணிவான வேண்டுகோள், ஆசை, அபிப்பிராயம்

யாதெனில்

ஒவ்வொரு கடியையும்
தனித் தனியாக
post செய்யலாமே

அருமை தம்பி,

ஒவ்வொரு கடிக்கும் தனித்தனி தலைப்பு என்றால் நன்றாக இருக்காது, இங்கே கடியை கொடுத்து, அதற்கு சிவப்பு நிறம் கொடுங்க, அல்லது கடி எண்: கொடுங்க, எல்லோரும் மாற்றி மாற்றி கடித்து ரத்த களரியாக்கலாம்.

amudha
22-05-2005, 02:50 AM
அச்சோ.....எல்லோரும் இப்படி செகப்பு செகப்பா, குண்டு குண்டா எழுதி இருக்கறதப் பார்த்தா இந்தப் பக்கம் வரும்போது ஒரு பெரிய கருப்பு கண்ணாடி போட்டுட்டுதான் வரனும் போல இருக்கு... :)

pradeepkt
23-05-2005, 05:33 AM
தசை -- Muscle
சதை -- Fat

அண்ணா, கொழுப்புக்கு இன்னொரு பெயர் சதையா? :confused:

gragavan
23-05-2005, 06:01 AM
அண்ணா, கொழுப்புக்கு இன்னொரு பெயர் சதையா? :confused:கொழுப்பு வேறு. சதை வேறு. தசையும் சதையும் ஒன்றே.

karikaalan
23-05-2005, 09:10 AM
இரண்டு மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவர் குண்டு; இன்னொருவர் முன்னவருடைய எடையே இருந்தாலும் குண்டாகத் தெரிவதில்லை.

குண்டாக இருப்பவர் சதை போட்டிருக்கிறார்.

பின்னவர் தனது சதையைத் தசையாக மாற்றிக் கொண்டுள்ளார் -- உடற்பயிற்சி செய்து.

சாதாரணமாக சதை போட்டிருப்பவரை Fat-ஆக இருப்பதாக, Obese-ஆக இருப்பதாகக் கூறுகிறோம். உடற்பயிற்சி செய்து ஆணழகன் போட்டிக்குத் தயார் செய்துகொண்டிருப்பவரை அவ்வாறு சொல்வதில்லை.

ஆகையினால், தசையும் சதையும் வெவ்வேறு கோணங்களில் காணப்படுகின்றன. எனவே வேறுதான்.

=====கரிகாலன்

அறிஞர்
23-05-2005, 10:15 AM
ஆஹா.. அருமையான விளக்கம் கரிகாலன்......

சுவேதா
27-05-2005, 11:26 PM
பாடசாலை ஆசிரியர் பரீட்சை ஒன்று வைத்தார். அதில் கலந்து கொன்ட மானவர்களில் ஒருவன் ஒரு வினாவுக்கு $1 வீதம் 100 வினாவுக்கும் $100 பேப்பருடன் குத்தி வைத்தான். விடையை திருத்தும் போது ஆசிரியர் என்ன செய்வார்?

முத்து
28-05-2005, 02:18 AM
ஒருவர்: ஒரு வேலையாகணும்னா கழுதை காலில் கூட விழ வேண்டி வரும்...
மற்றவர்: அதுக்கு இப்ப என்ன?
ஒருவர்: உங்களாலே எனக்கு ஒரு வேலை ஆகணும்!

முத்து
28-05-2005, 02:20 AM
பாடசாலை ஆசிரியர் பரீட்சை ஒன்று வைத்தார். அதில் கலந்து கொன்ட மானவர்களில் ஒருவன் ஒரு வினாவுக்கு $1 வீதம் 100 வினாவுக்கும் $100 பேப்பருடன் குத்தி வைத்தான். விடையை திருத்தும் போது ஆசிரியர் என்ன செய்வார்?

முதலில் குத்தியிருக்கும் குண்டூசியை ஆசிரியர் எடுப்பார்........:)

பரஞ்சோதி
28-05-2005, 04:17 AM
ஒருவர்: ஒரு வேலையாகணும்னா கழுதை காலில் கூட விழ வேண்டி வரும்...
மற்றவர்: அதுக்கு இப்ப என்ன?
ஒருவர்: உங்களாலே எனக்கு ஒரு வேலை ஆகணும்!

மற்றவர்: முதலில் காலில் விழு, அப்புறம் பார்க்கலாம்.

அறிஞர்
28-05-2005, 04:42 AM
மற்றவர்: முதலில் காலில் விழு, அப்புறம் பார்க்கலாம்.
ஒருவர் : எனக்கு கழுதைகள் காலில் விழுந்து பழக்கம் இல்லை.. அதான் யோசிக்கிறேன்

mania
28-05-2005, 04:59 AM
இந்தியாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் இடையே என்ன இருக்கிறது......?
அன்புடன்
மணியா...:rolleyes:

karikaalan
28-05-2005, 05:10 AM
இந்தியாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் இடையே என்ன இருக்கிறது......?
அன்புடன்
மணியா...:rolleyes:

அவநம்பிக்கை

thempavani
28-05-2005, 07:57 AM
கமா (,) இருக்கிறது தலை

பரஞ்சோதி
28-05-2005, 08:10 AM
கமா (,) இருக்கிறது தலை

தவறு சகோதரி

( , ) இருக்கிறது. :)

சுவேதா
28-05-2005, 01:12 PM
முதலில் குத்தியிருக்கும் குண்டூசியை ஆசிரியர் எடுப்பார்........:)

இல்லை அண்ணா விடை தவறு அவர் குண்டூசியை முதலில் எடுக்க மாட்டார் வேறு ஏதோ செய்வார் அது என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

thempavani
28-05-2005, 02:49 PM
தவறு சகோதரி

( , ) இருக்கிறது. :)

உங்க தலைக்கு மேல இருக்கீங்கப்பா... ரெம்ப மோசம்...:mad: :mad::mad:

உங்க தலைகூட "தலையை" ஆட்டிவிடுவார் போலும்.. உங்க மாதிரி ஆளுங்ககிட்ட "தலையாட்டு" வாங்குறது ரெம்ப கஷ்டம்டா சாமி...:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:

Mathu
28-05-2005, 03:15 PM
இந்தியாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் இடையே என்ன இருக்கிறது......?
அன்புடன்
மணியா...:rolleyes:

கமா இல்லாவிடால், பூசல் இருக்கிறது :mad:

பரஞ்சோதி
28-05-2005, 08:01 PM
பாடசாலை ஆசிரியர் பரீட்சை ஒன்று வைத்தார். அதில் கலந்து கொன்ட மானவர்களில் ஒருவன் ஒரு வினாவுக்கு $1 வீதம் 100 வினாவுக்கும் $100 பேப்பருடன் குத்தி வைத்தான். விடையை திருத்தும் போது ஆசிரியர் என்ன செய்வார்?

நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்பதை பார்க்க பணத்தை எடுத்திருப்பார்.

சுவேதா
28-05-2005, 11:50 PM
நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்பதை பார்க்க பணத்தை எடுத்திருப்பார்.

இல்லை அண்ணா விடை தவறு. முயற்சி செய்யுங்கள்.

முத்து
29-05-2005, 12:40 AM
இந்தியாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் இடையே என்ன இருக்கிறது......?
அன்புடன்
மணியா...:rolleyes:

பகை இருக்கிறது.

முத்து
29-05-2005, 12:42 AM
நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்பதை பார்க்க பணத்தை எடுத்திருப்பார்.

முதலில் விடைத் தாளைக் கையில் எடுத்திருப்பாரோ ?

பரஞ்சோதி
29-05-2005, 04:08 AM
விடையை திருத்தும் போது ஆசிரியர் சரியான விடைக்கு மதிபெண்கள் போட்டிருப்பார்.

அய்யோ சகோதரி, தயவு செய்து விடையை சொல்லுங்களேன்.

சுவேதா
29-05-2005, 01:17 PM
சரி சரி கூறுகின்றேன்.
அந்த ஆசிரியர் முதலில் பேப்பரை திருத்தியிருப்பார் அவருக்கு கிடைத புள்ளி 10 ஆகவே அவர் 10 புள்ளியை அவரது பேப்பரில் போட்டு விட்டு பின் $100 சிலிருந்து $10 எடுத்துவிட்டு மிகுதி $90 அதிலயே குத்திவைத்துவிட்டார்.