PDA

View Full Version : அகழ்வாராய்ச்சியும் அமெரிக்காவும்

Iniyan
26-04-2005, 06:07 PM
ஜெர்மனியச் சேர்ந்த அகழ்வாராய்சியாளர்கள் 50 மீட்டர் ஆழம் தோண்டிப் பார்த்த போது கிடைத்த ஒரு தாமிரக் கம்பியை ஆதாரமாகக் கொண்டு 2000 வருடங்களுக்கு முன்னரே ஜெர்மனியில் டெலிபோன் சர்வீஸ் இருந்ததாக அறிவித்தனர்.

இங்கிலாந்தில் 100 மீட்டர் தோண்டி அங்கு கண்டறிந்த சின்ன உடைந்த கண்ணாடு துகள்களை ஆதாரமாய்க் கொண்டு இங்கிலாந்தில் 3000 வருடங்களுக்கு முன்னரே இங்கிலாந்தில் ஃபைபர் ஆப்டிக் டெக்னாலஜி மூலம் டெலிபோன் இருந்ததாய் அறிவித்தனர்.

பார்த்தார்கள் அமெரிக்கர்கள். தோண்டினார்கள் 300 மீட்டர். 400 மீட்டர். ம்ஹீம். பிரயோசனமில்லை. ஒன்றுமே இல்லை.

இப்போது

அறிவித்தனர் 4000 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் செல்போன் டெக்னாலஜி இருந்ததாய்...

pradeepkt
27-04-2005, 04:05 AM
வயர்லெஸ் சிரிப்பு அருமை இனியன். இன்னும் கொடுங்கள்

பரஞ்சோதி
27-04-2005, 04:06 AM
இனியன் தம்பி,

இந்த சிரிப்பையே முன்பு ஒரு முறை நம்ம ஊரு சர்தார்ஜி நம்ம ஊர் திறமையை சொன்னதாக படித்திருக்கிறேன், காலத்திற்கு ஏற்ப இப்போ அமெரிக்கா. மீண்டும் படிப்பதிலும் தனி சுகமுண்டு தான்.

மன்மதன்
03-05-2005, 01:42 PM
அடடா.. ஒண்ணுமே இல்லைன்னாலும்.. அதையே பெரிய வெற்றியாக மாற்றுவதுதான் அமெரிக்காவின் அறிவே..
அன்புடன்
மன்மதன்

Iniyan
03-05-2005, 02:40 PM
இது படித்து சிரிக்க மட்டுமல்ல. சிந்திக்க வேண்டிய விசயமும் கூட. எனக்குத் தெரிந்து நம்ம திருவனந்த புரம் விலங்கியல் பூங்கா போல பெரியது அமெரிக்காவில் எங்குமே இல்லை. ஆனால் இங்கிருக்கும் சின்ன சின்ன விலங்கியல் பூங்காக்களைக் கூட இவர்கள் மார்க்கட்டிங் பண்ணும் விதமே அலாதி தான். இவர்களிடம் இருப்பது போல இயல்பு வாழ்வில் நம் மக்களிடம் சுத்தமும், ஒழுங்கு முறையும், நேர்மையும் இருந்தாலே நாம் எங்கோ போய் விடலாம். இத்துடன் அஃப் போர்ஸ் பணமும், மார்க்கெட்டிங் திறமையும் அவசியம்.

முத்து
03-05-2005, 08:22 PM

அமெரிக்கா மட்டுமல்ல, மேறகத்திய நாடுகளில் பலவும் கதை இதேதான். நம்மவர்களுக்கு மார்க்கெட்டிங் திறமை பத்தாது. எல்லாத்திலும், அது மட்டும் இருந்தால் உலகத்தையே ஒரு வழி பண்ணிடலாம்.

அறிஞர்
04-05-2005, 09:00 AM
சிந்திக்க வைத்த பதிப்பு வாழ்த்துக்கள்

நம் மக்களிடம் சுத்தமும், ஒழுங்கு முறையும், நேர்மையும் இருந்தாலே நாம் எங்கோ போய் விடலாம். இத்துடன் அஃப் போர்ஸ் பணமும், மார்க்கெட்டிங் திறமையும் அவசியம்.

சரியா சொன்னிங்க....

இதை நம் மக்களிடம்..... எதிர்பார்ப்பது தவறோ எனத்தோன்றும் வகையில் நம் மக்கள் உள்ளனர்...

kiruba_priya
25-11-2005, 08:20 AM
இது எனக்கு மெயிலில் வந்தது. தனிப்பக்கம் இல்லாததால் இங்கே தந்து விட்டேன். மேலும் இதை தமிழில் மொழிபெயர்க்காமைக்கு மன்னிக்க.. தமிழில் இதை சரியாக மொழிபெயர்க்க முடியுமா என்ற சந்தேகத்தில் அந்த 'ரிஸ்க்' எடுக்கல...

The Difference between Focusing on Problems and Focusing on Solutions

Case 1

When NASA began the launch of astronauts into space,they found out that the pens wouldn't work at zero gravity (ink won't flow down to the writing surface). To solve this problem, it took them one decade and $12 million. They developed a pen that worked at zero gravity, upside down, underwater, in practically any surface including crystal and in a temperature range from below freezing to over 300 degrees C.

And what did the Russians do...?? They used a pencil.

Case 2

One of the most memorable case studies on Japanese management was the case of the empty soap box, which happened in one of Japan's biggest cosmetics companies. The company received a complaint that a consumer had bought a soap box that was empty. Immediately the authorities isolated the problem to the assembly line, which transported all the packaged boxes of soap to the delivery department.For some reason, one soap box went through the assembly line empty. Management asked its engineers to solve the problem.
Post-haste, the engineers worked hard to devise an X-ray machine with high-resolution monitors manned by two people to watch all the soap boxes that passed through the line to make sure they were not empty. No doubt, they worked hard and they worked fast but they spent a whoopee amount to do so.

But when a rank-and-file employee in a small company was posed with the same problem, he did not get into complications of X-rays, etc., but instead came out with another solution. He bought a strong industrial electric fan and pointed it at the assembly line. He switched the fan on, and as each soap box passed the fan, it simply blew the empty boxes out of the line.

Moral

Always look for simple solutions. Devise the simplest possible solution that solves the problems.

பென்ஸ்
25-11-2005, 08:36 AM
கிருபா, தாங்கள் இதை தமிழில் பதிக்கலாமே..????

kiruba_priya
25-11-2005, 08:40 AM
முயற்சி செய்தன். சரியான கோர்வை வரல. இருப்பினும் முயற்சிக்கிறேன்...

kiruba_priya
25-11-2005, 11:53 AM
அது 469 - 399 BC காலம். சாக்ரடீஸ் தனது கொள்கைகளை பரப்பிய நேரம்.

ஒரு நாள் ஒரு தத்துவாளர் சாக்ரடீஸ்ஸிடம் சந்தோசமாக வந்தார். "உங்களிடம் உங்கள் மாணவனை பற்றி நான் கேள்விப்பட்டதை சொல்ல வந்தேன்" என்றார்.

"ஒரு நிமிடம் இருங்கள்" என்றார் சாக்ரடீஸ். "என்னிடம் சொல்வதர்க்குமுன் நான் வைக்கும் சிறு தேர்வில் தேர்ச்சி அடையுங்கள். இத்தேர்விற்கு மூன்று வடிகட்டி தேர்வு (Triple Filter Test) என்று பெயர்" என்றார் வந்தவரிடம்.

"மூன்று வடிகட்டி தேர்வா (Triple Filter Test)?"

"ஆம்", சாக்ரடீஸ் தொடர்ந்தார், "என் மாணவனை பற்றி என்னிடம் சொல்வதற்துமுன் நீங்கள் கூறவந்ததை ஒரு நிமிமம் வடிகட்டுங்கள் (Filter What u r going to say)சரியா? முதல் வடிகட்டி (First Filter) 'உண்மை'. உங்களால் நிச்சயமாக சொல்ல முடியுமா நீங்கள் சொல்லவந்தது உண்மைதான் என"

"இல்லை", அவர் சொன்னார் "உண்மையில் நான் கேள்விப்பட்டது என்னன்னா..."

"சரி" என்றார் சாக்ரடீஸ். "அப்படியானால் உங்களால் நிச்சயமாக சொல்லமுடியாது அது உண்மையா, பொய்யா என. இரண்டாவது வடிகட்டியை (Second Filter) முயற்ச்சிப்போம். இரண்டாவது வடிகட்டி (Second Filter)'நல்லவை'. எனது மாணவனை பற்றி நீங்கள் கூறும் விஷயத்தில் ஏதேனும் 'நல்லவை' உள்ளதா?"

"ஆனால்... "

"அப்படியானால் அவனை பற்றி தப்பான விசயம் சொல்ல வந்துள்ளீர்கள், அது உண்மை இல்லை என்று தெரிந்தும்?"

அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது

"மூன்றாவது வடிகட்டி (Third Filter) இன்னும் உள்ளது. அதில்கூட தாங்கள் தேர்ச்சி அடையலாம். மூன்றாவது வடிகட்டி (Third Filter)'உபயோகமானது'. என்ன சொல்ல வருகிறீர்கள், என் மாணவன் எனக்கு 'உபயோகமனவர்' எனவா?"

"இல்லை. அப்படியல்ல.... "

"நன்று" முடிவுக்கு வந்திருந்தார் சாக்ரடீஸ். " நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? உண்மையல்லாத, நல்லதுமல்லாத, பயனில்லாத ஒரு விசயத்தை என்னிடம் ஏன் சொல்ல நினைக்கிறீற்கள்?"

வந்தவர் தன் செயலுக்காக வருந்தினார்

இந்த காரணங்களுக்காகதான் 'சாக்ரடீஸ்' மிகச்சிறந்த தத்துவஞானி என அழைக்கப்பட்டர்.!!

--- எனக்கு வந்த மெயிலின்ஆங்கில பதிப்பை மொழிமாற்றம் செய்துள்ளேன்.

அறிஞர்
28-11-2005, 10:32 AM
தத்துவ ஞானிகளின் அணுகுமுறையே தனிதான்... தொடர்ந்து நல்ல தகவல்களை தாருங்கள் அனபரே....

kiruba_priya
28-11-2005, 11:33 AM
னிச்சயமாக...

allswtester
01-12-2005, 08:26 AM
:) :D :p

pradeepkt
01-12-2005, 08:42 AM
வாங்க ஆல்ஸ்வ்டெஸ்டர்...
பேசாம உங்க பெயரையே சொல்லீருக்கலாம்.
உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்களேன்.

gragavan
01-12-2005, 10:51 AM
அற்புதமான துணுக்கு. பிரமாதம்.

kiruba_priya
02-12-2005, 08:53 AM
இதை கற்பனை செய்யுங்களேன்...

ஒரு பனிப்பொழிகின்ற, அமைதியான இரவு நேரத்தில், நீங்கள் உங்களது காரை ஓட்டி செல்கிறீர்கள். வெளியே பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஒரு பேருந்து நிறுத்தத்தை கடந்து செல்லும்போது, மூன்று மனிதர்கள் பஸ்ஸுக்காக காத்திருப்பதை பார்க்கிறீர்கள்:

1. ஒரு வயதான பெண்மணி, (பார்ப்பதற்க்கு நாளையே சாகிறார்போல் உள்ளவள்).
2. உங்கள் உயிரை காப்பாற்றிய உங்களது பழைய நண்பன்.
3. ஒரு பெண், (நீங்கள் கனவில் கண்டுவரும், உங்களுக்கு அவள்தான் பொருத்தம் என நினைத்த உங்களது கனவு தேவதை)

உங்களது காரில் ஒருவரை மட்டுமே துணைக்கு சேர்த்துக்கொள்ள முடிகிற சூழ்நிலையில் நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?

(இந்த கேள்வி உங்களது வேலை தேடும் விஷயத்திற்கும் பொருந்தும்)
.........
.........
...........
.............
...........
.........

உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்!!

பதில் 'செவ்வாய்' அன்று சொல்கிறேன். சரியோ!!

மதி
02-12-2005, 09:20 AM

எனது கற்பனையில்:
வண்டியை என் நண்பனிடம் கொடுத்து அந்த வயதான பெண்மணியை கூட்டி செல்ல சொல்லி விட்டு...என் கனவு தேவதையுடன் நடந்து செல்வேன்..:D :D :D :D :D

என் அனுமானங்கள்:
1. நண்பனுக்கு வண்டி ஓட்டத் தெரியும்.;)
2. குளிரைத் தாங்கும் உஷ்ண உடைகளை நானும் அவளும் அணிந்திருக்க வேண்டும்.:cool: :cool:

பென்ஸ்
02-12-2005, 09:24 AM
அடப்பாவி ...
இப்படி போட்டு தள்ளிடிங்களே???
கிருபா....இப்ப என்ன பன்னுவிங்க .. இப்ப என்ன பன்னுவிங்க...

pradeepkt
02-12-2005, 09:38 AM
மதி,
ரெண்டு பேரும் சேர்ந்து நடக்குறதுன்னு முடிவு கட்டியாச்சு...
அப்புறம் எதுக்குய்யா குளிரு தாங்குற உடை?

பென்ஸ்
02-12-2005, 09:42 AM
மதி,
ரெண்டு பேரும் சேர்ந்து நடக்குறதுன்னு முடிவு கட்டியாச்சு...
அப்புறம் எதுக்குய்யா குளிரு தாங்குற உடை?

என்ன பிரதிப்.. இமயம் சென்ற போது குளிரைதாங்கும் உடைகள் எடுத்து செல்லவில்லையா???:confused: :confused: :rolleyes: :rolleyes: :D :D

pradeepkt
02-12-2005, 09:46 AM
அதெல்லாம் நிறைய எடுத்திட்டுப் போனேன்...
எனக்குத்தான் நல்ல நேரம் அதிர்ஷ்டம் மழை காரு பஸ் ஸ்டாண்டு எதுவுமே வாய்க்காதே :D

மதி
02-12-2005, 09:46 AM
மதி,
ரெண்டு பேரும் சேர்ந்து நடக்குறதுன்னு முடிவு கட்டியாச்சு...
அப்புறம் எதுக்குய்யா குளிரு தாங்குற உடை?
அதான் சொல்லியிருந்தாருல்ல..
"பனிப்பொழிகின்ற, அமைதியான இரவு நேரம்னு..."
ஒரு முன்னெச்சரிக்கை தான்...:D :D :D :D
:cool: :cool: மேலும் நடக்கத் தானே போறாங்கB) B)

kiruba_priya
07-12-2005, 09:43 AM
Quote:
Originally Posted by kiruba_priya
இதை கற்பனை செய்யுங்களேன்...

ஒரு பனிப்பொழிகின்ற, அமைதியான இரவு நேரத்தில், நீங்கள் உங்களது காரை ஓட்டி செல்கிறீர்கள். வெளியே பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஒரு பேருந்து நிறுத்தத்தை கடந்து செல்லும்போது, மூன்று மனிதர்கள் பஸ்ஸுக்காக காத்திருப்பதை பார்க்கிறீர்கள்:

1. ஒரு வயதான பெண்மணி, (பார்ப்பதற்க்கு நாளையே சாகிறார்போல் உள்ளவள்).
2. உங்கள் உயிரை காப்பாற்றிய உங்களது பழைய நண்பன்.
3. ஒரு பெண், (நீங்கள் கனவில் கண்டுவரும், உங்களுக்கு அவள்தான் பொருத்தம் என நினைத்த உங்களது கனவு தேவதை)

உங்களது காரில் ஒருவரை மட்டுமே துணைக்கு சேர்த்துக்கொள்ள முடிகிற சூழ்நிலையில் நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?

எனது கற்பனையில்:
வண்டியை என் நண்பனிடம் கொடுத்து அந்த வயதான பெண்மணியை கூட்டி செல்ல சொல்லி விட்டு...என் கனவு தேவதையுடன் நடந்து செல்வேன்..

என் அனுமானங்கள்:
1. நண்பனுக்கு வண்டி ஓட்டத் தெரியும்.
2. குளிரைத் தாங்கும் உஷ்ண உடைகளை நானும் அவளும் அணிந்திருக்க வேண்டும்.

ராஜேஸ் சொன்னது மிகச்சரியே.... (வாழ்த்துக்கள் ராஜேஸ்)

எனது பதில்..
1. என் நண்பனிடம் எனது காரை தந்து, அந்த வயதான பெண்மனியை மருத்துவமனையில் சேர்க்க சொல்லுவேன்.
2. எனது கனவு தேவதையுடன் சேர்ந்து பேருந்துக்காக காத்திருப்பேன்.

இந்த option உங்களின் வேலை தேடும் விசயத்திலும் நடக்கலாம். கருத்து என்னவென்றால் நீங்கள் எந்த option-ஐ தேர்ந்து எடுக்கிறீர்கள் என்பதுதான். எப்படியென்றால்..

What won him the job was his ability to think beyond the obvious.
He displayed proficiency in what is generally called, `Thinking Outside of the Box'.

(அப்படியே ஆங்கிலத்தில் தந்துவிட்டேன். பொருள் (அர்த்தம்) மாறிடக்கூடாது அல்லவா.. அதான். மன்னிக்க!!)

- எனது PM எங்களுக்கு சொன்னது

அறிஞர்
08-12-2005, 01:08 AM
அது என்ன இந்த ஜொள்ளூ விடுகதை இங்க ஏன் வந்தது.

தனிப்பதிப்பா கொடுத்து இருக்கலாமே...

kiruba_priya
09-12-2005, 09:26 AM
இது 'ஜொள்ளு கதை' இல்லை அறிஞரே. உங்களுடைய வேலை தேடும் படலம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதர்க்கு உதாரணமாக இந்த கதையை சொன்னேன்.

அதற்க்குத்தான் 'Moral'-ஐ ஆங்கிலத்திலேயெ தந்தேன்.

(ரொம்ப ஜொள்ளாதீங்கப்பா!!)

guru_prasadd
09-12-2005, 10:14 AM
இது வரை நான் இந்த கதை படிததில்லை. மிக அருமையாக இருக்கிரது.

pgk53
09-12-2005, 11:55 AM
இதை கற்பனை செய்யுங்களேன்...

ஒரு பனிப்பொழிகின்ற, அமைதியான இரவு நேரத்தில், நீங்கள் உங்களது காரை ஓட்டி செல்கிறீர்கள். வெளியே பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஒரு பேருந்து நிறுத்தத்தை கடந்து செல்லும்போது, மூன்று மனிதர்கள் பஸ்ஸுக்காக காத்திருப்பதை பார்க்கிறீர்கள்:

1. ஒரு வயதான பெண்மணி, (பார்ப்பதற்க்கு நாளையே சாகிறார்போல் உள்ளவள்).
2. உங்கள் உயிரை காப்பாற்றிய உங்களது பழைய நண்பன்.
3. ஒரு பெண், (நீங்கள் கனவில் கண்டுவரும், உங்களுக்கு அவள்தான் பொருத்தம் என நினைத்த உங்களது கனவு தேவதை)

உங்களது காரில் ஒருவரை மட்டுமே துணைக்கு சேர்த்துக்கொள்ள முடிகிற சூழ்நிலையில் நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?

(இந்த கேள்வி உங்களது வேலை தேடும் விஷயத்திற்கும் பொருந்தும்)
.........
.........
...........
.............
...........
.........

உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்!!

பதில் 'செவ்வாய்' அன்று சொல்கிறேன். சரியோ!!

நண்பரே-----மன்னிக்கவும்---------------------------------------இதை நான் ஏற்கனவே ஒரு புதிராகக் கொடுத்துள்ளேன்.

kiruba_priya
26-12-2005, 12:00 PM
அப்படியா PKG?? உங்களுடைய புதிர் பகுதிகளில் நிறைய பக்கங்களை என்னால் படிக்கமுடியவில்லை. அதனால் நான் உங்களதை காப்பி செய்யல.

எனது PM எனக்கு அனுப்பியது. அதைதான் பகிர்ந்து கொண்டேன்.

தவறுக்கு மன்னிக்க!!!

kiruba_priya
27-12-2005, 06:46 PM
லல்லு பிரசாத் யாதவை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர் தனது காரியங்களை எவ்வாறு செய்கிறார் என்பதர்க்கு ஒரு உதாரணம்....
லாலு தனது மகனிடம் 'கல்யாணம்' செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். மகனோ "எனக்கு பிர்லா க்ருப் கம்பனியில் MD பதவி கிடைத்தால் தான் கல்யாணம் செய்து கொள்வேன்" என்றார் லாலுவிடம்.

பின் லாலு பிர்லா க்ருப் சென்று அதன் தலைவரை சந்தித்து பேசினார். "என்னிடம் உள்ள ஒருவர் உங்கள் கம்பனியின் MD பதவிக்கு மிக பொருத்தமாக இருப்பார். உங்களது பதில் என்ன?" என வினவினார். அதற்க்கு தலைவரோ "யாரென்று தெரியாமல் எப்படி?" என்றார். லாலு "அவர் திரு அம்பானியின் மருமகன்" என்று பதில் தந்தார். தலைவரும் "அப்படியென்றால் சரி" என்றார்.

பின் லாலு அம்பானியை சந்தித்தார். அம்பானியிடம் "உங்கள் மகளுக்கு ஒரு வரன் பார்த்துள்ளேன்" என்றார். "யாரென்று தெரியாமல் எப்படி?" என வினவினார் அம்பானி. "அவர் பிர்லா க்ருப் கம்பனியில் MD ஆக உள்ளர். உங்களுக்கு சரியான மருமகன்" என பதில் தந்தார் லாலு. "அப்படியென்றால் சரி" என்றர் அம்பானி.

கல்யாணம் நன்முறையில் நடந்தது. மகனுக்கு வேலையும் கிடைத்தது. நல்ல மாமனாருடன்!!

இப்படியாக லாலு தானது காரியத்தை செய்து கொண்டிருக்கிறார். இன்னமும்!!!

அறிஞர்
28-12-2005, 02:45 AM
மீண்டும் மன்னிக்கவும் கிருபா.. இது பல மாதங்களுக்கு முன்.. பில்கேட்ஸை வைத்து வந்த ஜோக்
--------
இது தங்கள் தவறல்ல... தொடர்ந்து பதியுங்கள்