PDA

View Full Version : சாதி இரண்டு ஒழிய வேறில்லை..தமிழ்குமரன்
16-04-2003, 03:41 AM
சாதி இரண்டு ஒழிய வேறில்லை
மேதினியில்
சாற்றுங்கால்
கணினி பயின்றோர் உயர் குலத்தார்,
கல்லார் இழி குலத்தார்

அண்மையில் நான் படித்த கவிதை

Mano.G.
16-04-2003, 04:40 AM
தமிழ்குமரா கணனி படிக்காதவர்
வாழ்க்கையில் பின் தள்ளப்படுவர்
என் தெள்ள தெளிவாக கூறும்
பாட்டு அருமை அருமை

மனோ.ஜி

இளசு
16-04-2003, 06:21 AM
அருமை தமிழ்க்குமரன்
பிறந்தநாள் சிறப்புப் படைப்பு அருமை.

நான் கொஞ்சம் போல உயர்குலத்தோன் , அப்பாடி!

Dinesh
16-04-2003, 07:22 AM
ம்ம்ம்..
காலத்திற்கேற்ப மாறிக்கொள்ளவேண்டியதுதான்.
நல்ல கவிதை தமிழ்குமரன் அவர்களே!
வாழ்த்துக்கள்.

தினேஷ்.

நிலா
16-04-2003, 09:58 PM
கவிதை நன்றாக உள்ளது!
கருத்து ஏற்பதாயில்லை!
எல்லோரும் கனிணி நாடினால் பிறதுறைகள் என்னாவது?
அதுவும் தெரியவேண்டும் பிற துறைகளோடு!
சரிதானே?
நிலா

kaathalan
17-04-2003, 02:02 AM
என்னைப்பொருத்தவரை பிரிவினைதான் சாதிக்கு மூலகாரணமே. சாதியை அழிக்கமுடியவில்லை, ஆனால் அது கொஞ்சம் தேய்ந்துவருகிறது. அதற்குள் இன்னோரு பிரிவினையா மனித இனத்தில். வேண்டாம் ஐயா!!!

எனக்கு சிங்களவரில் மிகவும் பிடித்த செயல் நீர்கொழும்பில் அவர்களின் விழாக்களுக்கு போனால் அங்கே வைத்திய அதிகாரியும் கணக்கியல் நிபுணரும் சந்தையில் கடைவைத்திருப்பவரும் ஆசிரியரும் சாதரண தொழிலாளியும் ஒரே மேசையில் இருந்து உணவு உண்ணுவார்கள். அத்துடன் அவர்களின் சம்பாசனைகளும் தங்கள் துறையில் என்ன நடக்கிறது என்பதை மற்றவருக்கு விளங்காது என்ற எண்ணம் இல்லாமல் பேசி பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் தமிழர்கள் இலங்கையில், படித்தவர்கள் ஒருபக்கம் அதிலும் மருத்துவம், பொறியியலாளர்கள் ஒரு பகுதியிலும், கணக்காளர்கள் ஒருபக்கம், வியாபாரிகள் ஒருபக்கம், சாதாரண தொழிலாளிகள் ஒருபக்கம் இப்படி தான் இருப்பார்கள். இங்கே மற்றவர்களின் அனுபவங்களைப்பற்றியோ நிலமையைப்பற்றியோ மற்றத்துறையில் இருப்பவர்களுக்கு தெரியாது. இந்த பிரிவினையும் சாதியைப்போல் ஒரு புற்றுநோய்தான்.

எனவே இந்த பிரச்சனைகள் எல்லாமே ஆபத்தானது என்பது என் கருத்து. சமூகம் ஒரு கூட்டுக்குடும்பம் என்று தெரியும் தானே.

madhuraikumaran
17-04-2003, 04:08 AM
காதலன் சொன்ன விஷயம் யோசிக்கப் பட வேண்டியது. இத்தகைய பிரிவினை வந்து விடக் கூடாது.
நிலாவுக்கு,
கணிணி என்பது ஒரு தனித் துறை அல்ல. அது கணிதம் போல, மொழிக்கல்வி போல எல்லாத் துறையிலும் பிண்ணிப் பிணைந்துள்ளது. அது வருங்காலத்தில் இன்றியமையாதது என்பதைத்தான் இக்கவிதை சொல்ல வருகிறது.

தஞ்சை தமிழன்
17-04-2003, 08:44 AM
முதலில் கணணி என்பது என்ன?
பாமரனுக்கும் எளிதாக பயன்படுத்தும் வகையில் தன்னை மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு கருவி. அதை ஏன் படிக்க வேண்டும். படிக்காமலேயே அதை பயன் படுத்தும் காலம் தூரத்தில் இல்லை.

இப்போதே பல இடங்களில் ஸ்கிரீன் டச் முறையில் எவரும் பயன் படுத்தும் முறையில் கணணி வந்து விட்டதை மறந்து விட்டீர்களா?

தஞ்சை தமிழன்
17-04-2003, 08:45 AM
முதலில் கணணி என்பது என்ன?
பாமரனுக்கும் எளிதாக பயன்படுத்தும் வகையில் தன்னை மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு கருவி. அதை ஏன் படிக்க வேண்டும். படிக்காமலேயே அதை பயன் படுத்தும் காலம் தூரத்தில் இல்லை.

இப்போதே பல இடங்களில் ஸ்கிரீன் டச் முறையில் எவரும் பயன் படுத்தும் முறையில் கணணி வந்து விட்டதை மறந்து விட்டீர்களா?

poo
17-04-2003, 01:05 PM
கணிணி அவசியமான ஒன்றுதான்... இப்போதுதான் ஆரம்பப்பள்ளிகளில் இருந்தே கணிணிப்பாடம் கற்றுத் தரப்படுகிறதே... ஆதலால் எதிர்காலத்தில் எல்லோரும் உயர்குலத்தோர்தான்... குறைந்தபட்சம் அடிப்படை அறிவுமட்டும் போதுமானது.. மற்ற துறைகளிலும் கவனம் செலுத்த அப்போதுதான் முடியும்!!!

unwiseman
17-04-2003, 06:31 PM
சாதி இரண்டு ஒழிய வேறில்லை
மேதினியில்
சாற்றுங்கால்
கணனி பயின்றோர் உயர் குலத்தார்,
கல்லார் இழி குலத்தார்

அன்மையில் நான் படித்த கவிதை

இப்படித்தான் முதலில் சொல்லுவார்கள். பிறகு மைக்ரோசாப்ட் ஜாதி, ஜாவா கோத்திரம், ஆரக்கிளார், லினக்சார், ரெட்ஹாட் லினக்சார், சைவ இன்போசிஸ் என்று பல ஜாதிகளும், உபஜாதிகளும் வந்துவிடும் (ஏற்கனவே வந்துவிட்டதென்று யாரோ சொல்வது கேட்கிறது).

poo
18-04-2003, 06:27 PM
அஞ்ஞானி எதைக் கூறினாலும் சுவை... (எப்படிங்கய்யா இதெல்லாம்?!!)

poo
18-04-2003, 06:27 PM
அஞ்ஞானி எதைக் கூறினாலும் சுவை... (எப்படிங்கய்யா இதெல்லாம்?!!)

தாசன்
22-04-2003, 11:08 AM
ஆண்
பெண்

இரு சாதி போதுமே.......

கற்றார்
கல்லார்
ஏன் இப் பேதம் ??

poo
23-04-2003, 08:27 PM
ஆண்
பெண்

இரு சாதி போதுமே.......

கற்றார்
கல்லார்
ஏன் இப் பேதம் ??

நாட்டாமை தீர்ப்பு !!!

தாசன்
24-04-2003, 10:11 AM
கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு னு
சொல்லாமல் போனீரே.....
நன்றி..

handsome
06-05-2003, 09:48 AM
கல்வியில் பிரிவினையேது. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு. ஒருவர் எல்லா விஷயங்களையும் தெரிந்திருந்தால் மட்டுமே சிறக்க முடியும். ஈசனின் பாட்டிலேயே பொருட் குற்றம் கண்ட புலவரின் வழிவந்த நாம் பொருள் குறைபடாத கவிதை படைத்தல் நன்று.

M.Jagadeesan
29-03-2012, 01:43 PM
ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டி இருப்பதுபோல, ஒவ்வொரு வீட்டிலும் கணினி இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இனி உலகை ஆளப்போவது கணினிதான். ஆங்கிலம் பேசுவோர் உயர்குலத்தோர் என்ற எண்ணம் எவ்வாறு தமிழ்நாட்டில் வேர் ஊன்றிவிட்டதோ , அதே போல கணினி பயின்றோர் உயர்குலத்தோர் என்ற எண்ணம் மக்கள் மனதில் மெல்ல மெல்ல வந்துகொண்டு இருக்கிறது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
29-03-2012, 02:04 PM
இவ்வளவு வருடங்களுக்கு முன்பே இப்படியோர் அருமையான திரி. இதை வெளிக்கொணர்ந்த ஐயாவுக்கு நன்றி:)