PDA

View Full Version : Font Setup Help - எழுத்துரு உதவி



admin
26-04-2005, 10:18 AM
[ இந்த பதிப்பு தமிழ் படிப்பதில் பிரச்சனை உள்ளவர்களுக்காக ஆங்கிலத்தில் பதிக்கப் படுகிறது. ]

Dear Friends,

We use : Unicode Tamil Fonts
To Read Tamil Text: Windows 2K or Windows XP
To Write Tamil Text: eKalappai, or Murasu Anjal Pro

eKalapai Tanglish Keyboard: http://thamizha.com/ekalappai-anjal

eKalappai Bamini Keyboard:
http://thamizha.com/ekalappai-bamini

eKalappai tamilnet99 Keyboard:
http://thamizha.com/ekalappai-tamil99

eKalappai-3.0-beta
http://code.google.com/p/ekalappai/downloads/list

Murasu Anjal Pro:
http://www.murasu.com/se/
(The free version will not support Unicode fonts)

I know many of you must be trying to configure to type Tamil Unicode Texts. Our team is always at your service to help you. But we need more information about your system and softwares, then only we can help you.

Please provide following details :

1] What is your Operating System ?
2] If Win98/ME/NT, have you upgraded UPS10.dll successfully?
3] Can you read Unicode Tamil Letters here? தமிழ் எழுத்து தெரிகிறதா?
4] What Tamil Software are you using to type tamil texts? (Murasu Anjal/eKalappai/Kural)
5] What is the Exact Version of that Tamil Software?
6] What Editor are you using to type Tamil Texts?
7] Have you checked the Encoding & Keyboard of the software setting? What are they?
8] When you type using Unicode, what is the result you get?
9] What browser are you using?

If you could give more information on the above question, we can advise you to easily fix your font problem.

Thank you.
---------
தமிழில் மற்றொரு விளக்கம் - நன்றி குருதேவ்

How to Type Tamil in Word Using English Keyboard

முதலில் Unicode சம்பந்தமான சில கட்டுரைகளை கீழ்க்காணும் லிங்கை கிளிக் பண்ணி படித்து அது சம்பந்தமான உங்கள் அறிவை மேம்படுத்துங்கள்.

http://www.tamilnation.org/digital/T...20Software.htm

அடுத்து http://www.ezilnila.com/software.htm. என்ற தளத்தில் மென்பொருட்கள் என்ற பகுதியில் காணப்படும் எ-கலப்பை 2.0 (e-Kalappai 2.0) என்ற மென்பொருளை டவுண்லோட் பண்ணி உங்கள் கணணியில் நிறுவுங்கள்.

அடுத்து TSCu Paranar என்ற Font ஐ கிழ்க்காணும் லிங்கை கிளிக் பண்ணி அத்தளத்திலிருந்து டவுண்லோட் பண்ணி உங்கள் கணனியில் நிறுவுங்கள். அல்லது Google பண்ணி வேறு தளத்திலிருந்தாவது டவுண்லோட் பண்ணிக்கொள்ளவும். இது ஒரு Unicode Font. எந்த செயலியிலும் இந்த Font சிறப்பாக வேலை செய்யும்
http://www.minnalfm.com/font.htm

எ-கலப்பை 2.0 மென்பொருளின் Help ஐ படித்தால் ஆங்கில பலகையில் எப்படி தமிழையும் ஆங்கிலத்தையும் மாறி மாறி type பண்ணுவது என அறிந்து கொள்ளலாம்.

இப்போது Start --> All Programs --> Tavultesoft Keyman for Thamizha என்பவற்றை கிளிக்பண்ண Keyman என்ற மென்பொருள் இயங்க ஆரபிக்கும், அதே நேரம் Task Bar ன் இடது கை மூலையில் K என்ற எழுத்துக்கொண்ட icon காணப்படும். அல்லது டெஸ்க்ரொப்பில் K என்ற எழுத்துக்கொண்ட icon காணப்பட்டால் அதை கிளிக் பண்ணியும் இந்த மென்பொருளை இயக்கலாம்.

Word ஐ திறவுங்கள். Format Tool Bar ல் Font மாற்றும் இடத்தில் TSCu Paranar தேர்ந்துவிடுங்கள். இப்போது ஆங்கில் பலகையில் Amma என தட்ட தமிழிலில் அம்மா என திரையில் தெரியும். எந்த Key ஐ தட்ட எந்த எழுத்து தமிழில் வரும் என்பதை எ-கலப்பை 2.0 மென்பொருளின் Help ஐ படித்து தெரிந்து கொள்ளலாம். Type பண்ணும்போது முதலில் ஆங்கில எழுதுகள் தான் வரும். உடனே ALT+2 Keys ஐ தட்டிவிட்டு தொடர்ந்தால் எழுத்துகள் தமிழில் வரும். ALT+2 Key ஐ தட்டியவுடன் Task Bar ன் இடது கை மூலையில் K என்ற எழுத்துக்கொண்ட Icon இல் உள்ள K மறைந்து ஆ என்ற எழுத்து காணப்படும்.

நான் பல காலமாக Word ல் தமிழில் இதே முறையில் தட்டி பின் அதை கொப்பி பண்ணித்தான் இணையத்தில் Paste பண்ணி பதிவு செய்கின்றேன். போகப்போக தமிழிலும் ஆங்கிலம் போல தட்ட முடியும். இப்படி Word ல் தமிழில் தட்ட வருவது Unicode தமிழ் எழுத்துகள்தான்.

எ-கலப்பை 2.0 மென்பொருளை லோட்பண்ணி வைத்துக்கொண்டு தமிழ்மன்றம் வெப்பக்கத்தின் பதிவு பெட்டியிலும் தமிழில் தட்டலாம். Yahoo, Hotmail ஆகியவற்றின் Compose அல்லது Reply பெட்டிகளிலும் இப்படி தமிழில் தட்டலாம்


சுருக்கம்.
1. எ-கலப்பை 2.0 மென்பொருளை நிறுவுதல்
2. TSCu Paranar என்ற Font ஐ நிறுவுதல்
3. Keyman நிறுவனத்தாரின் எ-கலப்பை 2.0 மென்பொருளை லோட்பண்ணுதல்
4. Word ஐ திறந்து TSCu Paranar என்ற Font ஐ தேர்ந்துவிட்டு Type பண்ணுதல்
5. தமிழிலில் எழுத்து வரவேண்டுமெனில் ALT+2 Keys ஐ தட்டிவிட்டு Typing ஐ தொடர்தல்
6. இடையில் ஆங்கில எழுத்து வேண்டுமெனில் ALT+1 Keys ஐ தட்டிவிட்டு Typing ஐ தொடர்தல்

Nilaa
07-05-2005, 05:27 PM
Hello,

I use Win 2000. I can read Unicode messages here. But I dont know why I cant read when I type in Unicode. The letters look messy.
I use ekalappai 6.0 version.
Can someone help me?

Nilaa
07-05-2005, 05:39 PM
நான்=நிலா

முத்து
09-05-2005, 10:52 AM
நிலா,
நீங்கள் யுனிகோடு எழுத்துரு அந்தக் கணணினியில் இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் இறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். சில சமயம் என்கோடிங் பிரச்சசனைக்குக் காரணமாய் இருக்கலாம். rightclick-----> encoding-->Unicode (UTF-8) செய்தால் என்கோடிங் பிரச்சனையிருந்தால் சரியாகும்.

யுனிகோடில் எழுத கீழேயுள்ள யுனிகோடு கன்வர்டரையும் பயன்படுத்தலாம்.

Iniyan
09-05-2005, 12:46 PM
விண்டோஸ் 2000 ல் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது. எ-கலப்பை 2.0 இறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள். ஏற்கனவே தமிழில் தட்டச்சு செய்யத் தொடங்கியாகி விட்டதே? பிறகென்ன?

பாரதி
10-05-2005, 07:10 AM
வாருங்கள் நிலா... நலமா...?
எத்தனை மாதங்கள் ஆகி விட்டது உங்களை தமிழ்மன்றத்தில் பார்த்து. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. உங்கள் பிரச்சினை விரைவில் தீர்ந்து வழக்கம் போல உலா வர வாழ்த்துகிறேன்.

karikaalan
13-05-2005, 09:20 AM
What I wrote and pasted was all garbled. hence deleted. Please help me to write directly on the screen. I have Windos XP + Murasu anjal TSCII. Shall be glad to receive your advice. Thanks.


===Karikaalan

Iniyan
13-05-2005, 10:00 AM
எ-கலப்பை 2.0 இறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள் கரிகாலன்

பாரதி
13-05-2005, 01:17 PM
What I wrote and pasted was all garbled. hence deleted. Please help me to write directly on the screen. I have Windos XP + Murasu anjal TSCII. Shall be glad to receive your advice. Thanks.


===Karikaalan

Dear Annale...
it is better to write in a notepad in TSCII by using Murasu or E-kalappai .Then copy the TSCII content to the Unicode conveter. It is available in bottom of every page in Tamilmantram . Paste the copied content in the left side. Then select or mark TSCII . The matter will be converted to Unicode automatically. Copy the Unicode matter and paste where you want.

karikaalan
14-05-2005, 09:44 AM
முயற்சி செய்கிறேன் பாரதிஜி. நன்றிகள்.

===கரிகாலன்

puppy
19-05-2005, 05:50 AM
கரிகாலரே

இ-கலப்பை ஒன்றே சரியான வழி...இ-கலப்பை இருந்தால் அப்படியே எழுதலாம்..

இங்கே போய் எடுத்து கொள்ளவும்
http://www.gbizg.com/Tamilfonts/ekalappai.htm..

mania
19-05-2005, 06:31 AM
வாருங்கள் நிலா... நலமா...?
எத்தனை மாதங்கள் ஆகி விட்டது உங்களை தமிழ்மன்றத்தில் பார்த்து. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. உங்கள் பிரச்சினை விரைவில் தீர்ந்து வழக்கம் போல உலா வர வாழ்த்துகிறேன்.

:confused: ராங் நம்பர் பாரதி.....ஹி....ஹி....ஹி...
அன்புடன்
மணியா...:D

rethinavelu
13-06-2005, 12:43 AM
நாம் பயன் படுத்த windows 98 நல்லதா? அல்லது windows 2000 நடல்லதா?
தயவு செய்து கூறுங்களேன்
நன்றி இரத்தினவேலு

அறிஞர்
13-06-2005, 09:13 AM
windows xp ரொம்ப சிறந்தது...

அது இல்லையேல் ME/2000 சரி எனப்படுகிறது...

ஈகலப்பை இறக்கி உபயோகித்து பாருங்கள்..

poo
01-07-2005, 10:15 AM
நான் இன்னமும் தமிழில் தட்ட முடியாமல் தவிக்கிறேன்..

alt+2 or 3 எதை அழுத்தினாலும் நம் பக்கங்கள் சடேரென மேலே ஏறுகிறது..

அந்த ஆப்சன் எனேபிள் ஆவதே இல்லை.

ஏன்??????!

நான் வின் 2000 உபயோகிக்கிறேன் .. இ-கலப்பை - 2

ப்ளீஸ்..

உதவுங்கள்..

அறிஞர்
04-07-2005, 06:09 AM
இதற்கு இராசகுமாரன் தான் பதில் சொல்லவேண்டும் பூ. ஒரு சில நாள் காத்திருங்கள்... அவர்களிடம் கேட்டு சொல்கிறேன்..

poo
06-07-2005, 05:51 AM
சீக்கிரமாக யாரேனும் உதவினால் மட்டுமே என்னால்
மன்றத்தில் உலவமுடியும்போல!

எழுத நினைத்தாலும் எழுத முடியாமல் தவிக்கிறேன்!

இராசகுமாரன்
11-07-2005, 05:15 AM
நண்பர் பூ அவர்களே... எ-கலப்பை இல்லாத போது எங்களுக்கும் இப்படித் தான் alt+2 alt+3 அழுத்தும் போது பக்கங்கள் சட்டென்று மேலே ஏறும்.

இதன் மூலம் உங்கள் கணணியில் இ-கலப்பை சரியாக பதியவில்லை என தெரிகிறது. மீண்டும் பதிப்பது தான் சிறந்தது.


அ) நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ளது சரியான, முழுமையான எ-கலப்பை ver. 2. தானா என பார்த்துக் கொள்ளுங்கள்.
http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=3
ஆ) Control Panel --> Regional Options --> General --> Indic டிக் செய்யப் பட்டிருக்கிறதா என பாருங்கள்


படிப்படியாக நீக்கி பதியும் முறை:

1) முதலில், ஏற்கனவே உள்ள எ-கலப்பையை நீக்குங்கள்.
2) கணணியை மீண்டும் துவங்குங்கள்.
3) தேவையில்லாமல் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் செயலிகளை நிறுத்துங்கள்.
4) பிறகு எ-கலப்பை (வெர்சன் 2) பதியுங்கள்
5) Control Panel --> Regional Options --> General --> Indic டிக் செய்யுங்கள்
6) கணணியை மீண்டும் துவங்குங்கள்

poo
13-07-2005, 06:49 AM
சொன்னபடி செய்து பார்த்தேன் தலைவரே..
இப்போது நோட்பேடில் வேண்டுமானால் தெளிவாக யுனிகோடில்
தட்டச்சு செய்யமுடிகிறது.(மேலும் தலைப்பும் இப்போது தமிழில் தெரிகிறது..
முன்பு கட்டம் கட்டமாக தெரியும்!)
ஆனால் நம் மன்றத்தில் முன்பு இருந்ததுபோலவே
பொத்தானை அழுத்தியதும் பக்கம் மேலேறுகிறது!??
என்ன செய்வது?!
சில மாதம் முன்னர்வரை நான் இங்கேயே நேரிடையாக தட்டினேன்.. சமீபத்தில்
கணனியை மீண்டும் நிறுவினோம்.. அதிலிருந்துதான் இப்பிரச்சினை. ஆனால் முன்பு உபயோகித்த
அதே குறுந்தகடு வைத்து முன்பு எப்படி நிறுவினோமோ அதேபோலத்தான் நிறுவினோம்!?
(முன்பு நான் இண்டிக் டிக் செய்யாமல் இருந்தேன்.. அப்போதும் நோட்பேடில் சரியாக தெரியாது. ஆனால் மன்றத்தில் தட்ட முடிந்தது!)

பாரதி
15-07-2005, 07:22 PM
இது இந்தப்பதிவு சம்பந்தப்பட்டதல்ல.. இனியனின் "Read this first" என்கிற பூட்டப்பட்டப் பதிவைக் குறித்தது.

இந்தப்பதிவை ஏன் பூட்டினீர்கள்..? சந்தேகம் கேட்பவர்கள் அங்கேயே கேட்க வசதியாக இருக்குமே..!

அந்தப் பதிவில் பல தவறுகள் உள்ளன. தயவு செய்து திருத்தவும். முக்கியமாக தேவையற்ற வார்த்தைகளை நீக்கிவிடவும்.

நன்றி.

இராசகுமாரன்
17-07-2005, 03:03 PM
இந்த பகுதி எழுத்துரு சரி செய்து கொள்ள தானே, அதனால் எழுத்துரு பிரச்சனையுள்ளவர்கள் தனி தலைப்புகள் துவங்கினாலும் பரவாயில்லை.

ஆம், இங்குள்ள தேவையற்ற பதிப்புகள், உரையாடல்கள் மாதம் தோறும் நீக்கப் படும்.

பாரதி
17-07-2005, 07:57 PM
நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது இராசகுமாரன். தயவு செய்து கீழ்க்கண்ட சுட்டியில் உள்ளவற்றை முழுமையாக படித்துப் பாருங்கள். நன்றி.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330

Iniyan
19-07-2005, 09:16 AM
பாரதி, பிரச்சனை புரிந்தது. சரி செய்து விட்டேன்.

பாரதி
19-07-2005, 10:25 AM
விண்டோஸ்98-க்காக உள்ள கட்டளைகளில் சில தேவையற்றதாகவும், ஒரு இடத்தில் சுட்டி வர வேண்டிய இடத்தில் எதுவும் இல்லை என்றும் தோன்றுகிறது. நன்றி.

பாரதி
21-07-2005, 05:25 PM
அன்பு இனியன், உங்களுக்கு ஒரு தனிமடல் அனுப்பி இருக்கிறேன். பரிசீலனைக்குப்பின் விண்டோஸ் 98 உபயோகிப்பவர்களுக்கான உதவிப்பகுதியில் பதிவு செய்யவும். நன்றி.

Iniyan
22-07-2005, 11:00 AM
பதிந்தாச்சு பாரதி

பாரதி
22-07-2005, 01:11 PM
பதிந்தாச்சு பாரதி

நன்றி இனியன்.
அதில் புதிய usp10.dll கோப்பு பெறுவதற்கான சுட்டி இணைக்கப்படவில்லை. அதை சரி செய்தால் நன்றாக இருக்கும்.

gragavan
25-07-2005, 08:46 AM
மன்றத்துல கீழ ஃபாண்ட்டு கன்வெர்டர் வருமே....அதக் காணமே இப்போ....நான் போட வேண்டியதெல்லாம் முரசுல எழுதி வெச்சிருக்கேன். எப்படி மாத்திப் போடுவேன்?

karikaalan
25-07-2005, 10:32 AM
இப்போது எப்படி எழுதுகிறீர்கள்!

gragavan
25-07-2005, 10:39 AM
அது ஆல்ட்-2 போட்டு. ஆனால் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் சொல்ல சொல்ல....மற்றும் திருவாசக விமர்சனங்களை எப்படி இடுவது? அவைகளை முரசில் எழுதி வைத்திருக்கிறேன். முறையான யுனிகோடு எடிட்டர் இல்லாத வினையிது! இல்லை இருந்தும் எனக்குத் தெரியாத வினையிது!

pradeepkt
25-07-2005, 10:42 AM
ஆல்ட் 2 போட்டே நோட்பேடிலும் எழுதலாமே, ஏன் நீங்கள் முரசில் எழுதினீர்கள்... ???

karikaalan
25-07-2005, 10:44 AM
இன்னும் ஓரிரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்று அசரீரி கேட்டது! கவலைப் படேல்.

gragavan
25-07-2005, 10:44 AM
ஆல்ட் 2 போட்டே நோட்பேடிலும் எழுதலாமே, ஏன் நீங்கள் முரசில் எழுதினீர்கள்... ???நோட்பேடுலயா! ஆமா....எழுதுது......ஐயா சொல்லச் சொல்ல எல்லாம் முன்னாடியே எழுதி முடிச்சிட்டேன். கிட்டத்தட்ட ரெண்டு மூணு மாசமாச்சி. திருவாசகத்தை இப்பத்தான் எழுதினேன். சரி. இனிமே.....நோட்பேடுல எழுதுறேன். ம்ம்ம்ம்ம்...முரசு பாசம் விட மாட்டேங்கே....சரி. எழுதி வெச்சதுகளுக்கு என்ன பதில்?

gragavan
25-07-2005, 10:45 AM
இன்னும் ஓரிரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்று அசரீரி கேட்டது! கவலைப் படேல்.ஓரிரு நாளா? ஐயா நாளைக்குச் செவ்வாக் கெழமை......அநுபூதியும் முடியுற வேளைக்கு வந்துருச்சி. ஒரு வருசமா நிக்காம வந்த திரி ஐயா.......

pradeepkt
25-07-2005, 10:50 AM
ம்ம்ம் முரசில பாத்துப் பாத்து இங்க அடிங்க...

ஐயா, யூனிகோடு கன்வர்ட்டரை வேற எங்கேயோ வலையில பார்த்தேன்.
அவசரத்துக்கு இங்கே (http://www.suratha.com/reader.htm) போய் மாத்திக்கிருங்க.
ஆமா, நீங்க வந்தே ஒரு வருசம் ஆகலை... அருமையான தொடருங்கறதால இந்த பில்டப்பு ஓகே :D

gragavan
25-07-2005, 11:20 AM
ம்ம்ம்ம்......மாத்தி வெச்சிக்கிட்டேன். மாத்தி வெச்சுக்கிட்டேன். நன்றி பல.

Iniyan
25-07-2005, 02:55 PM
ராகவன் !

மென்பொருள் மேம்படுத்தலின் போது சில பிரச்சனைகள் காரணமாக தற்காலி கமாக நம் தளத்தில் இருந்த மாற்றி முடக்கப்பட்டுள்ளது. விரைவில் திரும்ப வரும். அது வரை இங்கே போய் மாற்றிப் பதிக்கலாம். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

http://www.jaffnalibrary.com/tools/tamilconverter.htm

நன்றி.

gesh
01-05-2006, 07:38 AM
'Word'ல் தட்டச்சு செயும்பொழுது அஞ்சல் 'இகலப்பை' உபயோகப்படுத்தும்பொழுது 'ஸ்ரீ' தட்டச்சு செய்யமுடியவில்லை. டிஸ்கி அஞ்சல் தேர்வு செய்தலும் சரி யூனிகோட் அஞ்சல் தேர்வு செய்தாலும் சரி இந்த பிரச்சினை வருகிறது. இதைத்தவிர யூனிகோட் அஞ்சல் உபயோகப்படுதும்பொழுது உயிர்மெய்யெழுத்துகளான 'கை' 'கொ, கோ' போன்றவற்றையும் தட்டச்சு செய்வதில் பிரச்சினை வருகிறது. ஆனால் யூனிகோட் அஞ்சல் உபயோகப்படுத்தி இங்கு பதிப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை; யூனிகோட் மாற்றி உபயோகப்படுத்தவேண்டிய அவசியமும் ஏற்பட்வில்லை.

வழிகாட்ட வேண்டுகிறேன். நன்றி.

பாரதி
01-05-2006, 06:07 PM
'Word'ல் தட்டச்சு செயும்பொழுது அஞ்சல் 'இகலப்பை' உபயோகப்படுத்தும்பொழுது 'ஸ்ரீ' தட்டச்சு செய்யமுடியவில்லை. டிஸ்கி அஞ்சல் தேர்வு செய்தலும் சரி யூனிகோட் அஞ்சல் தேர்வு செய்தாலும் சரி இந்த பிரச்சினை வருகிறது. இதைத்தவிர யூனிகோட் அஞ்சல் உபயோகப்படுதும்பொழுது உயிர்மெய்யெழுத்துகளான 'கை' 'கொ, கோ' போன்றவற்றையும் தட்டச்சு செய்வதில் பிரச்சினை வருகிறது. ஆனால் யூனிகோட் அஞ்சல் உபயோகப்படுத்தி இங்கு பதிப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை; யூனிகோட் மாற்றி உபயோகப்படுத்தவேண்டிய அவசியமும் ஏற்பட்வில்லை.

வழிகாட்ட வேண்டுகிறேன். நன்றி.

அன்பு நண்பரே,

கேரக்டர் மேப் உதவி கொண்டு கொண்டு வர முடியும் அல்லது Alt+0130 உபயோகப்படுத்தி பாருங்கள். "கை" கொ" "கோ" போன்றவற்றில் பிரச்சினை வர வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

gesh
02-05-2006, 06:39 AM
அன்பு நண்பரே,

கேரக்டர் மேப் உதவி கொண்டு கொண்டு வர முடியும் அல்லது Alt+0130 உபயோகப்படுத்தி பாருங்கள். "கை" கொ" "கோ" போன்றவற்றில் பிரச்சினை வர வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

நண்பரே, ☺ஆல்ட்0130 உபயோகப்படுத்தினாலும் 'ஸ்ரீ' தட்டச்சு செய்ய இயலவில்லை. நகலெடுத்துத்தான் பதிப்பிக்கவேண்டியுள்ளது.

அறிஞர்
02-05-2006, 03:10 PM
நண்பரே, ☺ஆல்ட்0130 உபயோகப்படுத்தினாலும் 'ஸ்ரீ' தட்டச்சு செய்ய இயலவில்லை. நகலெடுத்துத்தான் பதிப்பிக்கவேண்டியுள்ளது.

sr = ஸ்ரீ

அன்பரே ஈகலப்பையில் sr டை பண்ணுங்கள் ஸ்ரீ வரும்.

http://i13.photobucket.com/albums/a282/aringar/anjalkbd.gif

gesh
03-05-2006, 09:29 AM
sr = ஸ்ரீ

அன்பரே ஈகலப்பையில் sr டை பண்ணுங்கள் ஸ்ரீ வரும்.

http://i13.photobucket.com/albums/a282/aringar/anjalkbd.gif

நன்றி அறிஞர் அவர்களே. மன்றத்தில் பதிப்பதில் எந்த தடங்கலும் இல்லை. 'Word'ல் தட்டச்சு செய்யும்பொழுது இந்த பிரச்சினை.

அறிஞர்
03-05-2006, 04:17 PM
நன்றி அறிஞர் அவர்களே. மன்றத்தில் பதிப்பதில் எந்த தடங்கலும் இல்லை. 'Word'ல் தட்டச்சு செய்யும்பொழுது இந்த பிரச்சினை. நான் அப்படி செய்வதில்லை..... word pad முயற்சித்து பாருங்கள்

SathyaThirunavukkarasu
20-03-2008, 11:10 AM
hello
i have Windows vista premium version. In this operating system how can i write in Tamil
I tried many times but ?????????
:smilie_abcfra::smilie_abcfra:

க.கமலக்கண்ணன்
20-03-2008, 11:14 AM
நீங்கள் Windows XP க்கு மாறுங்கள்.... Mursu Anjal என்னும் மென்போருளை நிறுவி பின் தமிழில் அடிக்க கற்றுக்கொள்ளுங்கள்... உதவிக்கு கொடுத்துள்ள சுட்டியை பாருங்கள்...

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2

அன்புரசிகன்
20-03-2008, 11:36 AM
நன்றி அறிஞர் அவர்களே. மன்றத்தில் பதிப்பதில் எந்த தடங்கலும் இல்லை. 'Word'ல் தட்டச்சு செய்யும்பொழுது இந்த பிரச்சினை.

யுனிக்கோட் செயலி மூலம் பதியும் போது (word இல்) LATHA, ARIAL UNICODE MS போன்ற எழுத்துருக்களை தெரிந்துவி்ட்டு எழுதுங்கள்.


hello
i have Windows vista premium version. In this operating system how can i write in Tamil
I tried many times but ?????????
:smilie_abcfra::smilie_abcfra:

NHM செயலி பயன்படுத்துங்கள். பாரதி அண்ணாவின் திரியை பாருங்கள்.

புதிய தமிழ் ரைட்டர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13959)

விஸ்டாவிற்கு சூப்பர் செயலி

உதயா
21-04-2008, 04:39 AM
hello
i have Windows vista premium version. In this operating system how can i write in Tamil, I tried many times but
என்னிடமும் விஸ்டா பிரிமியம் தான். ஈகலப்பை இஸ் த பெஸ்ட்.

பாரதி
08-04-2009, 01:21 PM
தமிழ்மன்றத்தில் தமிழ் எண்களை தட்டச்சி பயன்படுத்த விழைகிறேன். அதற்குரிய எழுத்துருக்களும் இருக்கிறவா? இல்லையெனில் அதற்கான எழுத்துருக்களையும் மன்றத்தில் இணைக்க இயலுமா..?

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=38&pictureid=201

நன்றி.

அறிஞர்
08-04-2009, 01:39 PM
அந்த வசதி இது வரை இங்கு இருப்பதாக தெரியவில்லை பாரதி அண்ணா..

மன்ற நண்பர்கள் உதவுவார்கள் என நம்புகிறேன்.

praveen
08-04-2009, 01:56 PM
தமிழ்மன்றத்தில் தமிழ் எண்களை தட்டச்சி பயன்படுத்த விழைகிறேன். அதற்குரிய எழுத்துருக்களும் இருக்கிறவா? இல்லையெனில் அதற்கான எழுத்துருக்களையும் மன்றத்தில் இணைக்க இயலுமா..?

http://www.tamilmantram.com/vb/picture.php?pictureid=201&albumid=38&dl=1239196330&thumb=1

நன்றி.

உங்கள் படத்திற்கான சரியான சுட்டி
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=38&pictureid=201

இதோ எப்படி தமிழ் எழுத்துக்கள் பதிவது என்பதை பாருங்கள்

ALT+3047 = ௧ இப்படி வரிசையாக டைப் செய்தால் வரும், நான் இனைத்துள்ள படத்தை பாருங்கள்.

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/tamilnumberinunicode.jpg

இல்லாவிட்டால் அவசரத்திற்கு கேரக்டர் மேப்பை திறந்தும் அதனை காப்பி செய்து பதிக்கலாம்.

ஆனால், நிஜ வாழ்க்கையில், உண்மையிலே இதனை உபயோகப்படுத்துபவர் அரிதிலும் அரிது, சிலர் வீம்பிற்கு மோட்டார் வாகன பதிவெண் பட்டையில் எழுதியிருக்கிறார்கள் :).

பாரதி
08-04-2009, 02:31 PM
மிக்க நன்றி பிரவீண். நீங்கள் கூறியபடி படத்திற்கான இணைப்பை மாற்றி விட்டேன்.

தமிழ் எண்கள் குறித்து, நம் மொழிக்கே சொந்தமாக உள்ள எண்களையும் நாம் மறப்பது சரியல்ல என்ற எண்ணத்தில்தான் அதை பயன்படுத்த நினைத்தேன். காலப்போக்கில் நாம் தொலைத்த எத்தனையோ கலைச்செல்வங்களில் அதுவும் ஒன்றாகி விடக்கூடாதே என்பதும் ஒரு காரணம். தமிழ் எண்களைக் கற்றுக்கொள்வோம். தேவைப்படும் இடங்களில் பயன்படுத்துவோம்.

அழகி போன்ற மென்பொருளில் குறிப்பிட்ட எழுத்துரு கொண்டு... உதாரணமாக...SaiIndira மற்றும் SaiVrishin போன்றவற்றைக்கொண்டு Ma, Mb, Mc, Md, Me, Mf, Mg, Mh, Mi என தட்டச்சினால் தமிழ் எண்கள் நேரடியாக வரும்.

தமிழுக்கான ஒருங்குறி ஒதுக்கீட்டில் அவ்விதம் உண்டா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. எழுத்துருக்களை மட்டும் சேர்ப்போமெனில் நேரடியாக தட்டச்ச வாய்ப்பு இருக்குமோ என எண்ணியே இந்த வினாவையும் எழுப்பினேன்.

உடன் பதிலளித்தமைக்கு நன்றி பிரவீண்.

சரண்யா
21-11-2009, 02:17 AM
நான் ekalappai தட்டச்சு மூலம் தட்டச்சு செய்கிறேன்...photoshop மென்பொருளில் தமிழில் வர என்ன செய்ய வேண்டும் சொல்லுவீர்களா....நான் இந்த தட்டச்சு உள்ள எழுத்துகளில் நன்கு பயின்றதால்...புதிதாய் வேறு font வேண்டாம்...ekalappai தட்டச்சில் உள்ளது போல வேண்டும்....அதற்கு என்ன செய்ய வேண்டும்....நன்றிகள்..

அன்புரசிகன்
21-11-2009, 07:28 AM
PS ல் இகலப்பையால் தட்டச்சும் போது PS ல் எழுத்துருவை Latha அல்லது Arial Unicode MS என்று வைத்துக்கொண்டு தட்டச்சினால் தமிழில் தெரியும். அல்லது ஏதாவது தமிழ் ஒருங்குக்குறிக்கு சம்மதிக்கும் எழுத்துருவினை கொண்டு தமிழில் வரவைக்கலாம்.

ஒருங்குக்குறி எழுத்துருக்களுக்கு
http://www.wazu.jp/gallery/Fonts_Tamil.html
http://www.azhagi.com/freefonts.html

சரண்யா
22-11-2009, 11:01 AM
இவை இரண்டும் இதே தட்டச்சு எழுத்துக்கள் வருமா....நன்றிகள்...அன்புரசிகன் அவர்களே...

குணமதி
22-11-2009, 02:14 PM
தமிழ் எண்கள் தட்டச்ச உள்ள ஏற்பாடு சிறப்பு.

நன்றி.

ஜனகன்
22-11-2009, 03:13 PM
நானும் இதைதான் தேடிக்கொண்டிருந்தேன்.இந்த முறையை முயற்சித்து பார்க்கின்றேன்.நன்றி

நூர்
22-11-2009, 05:18 PM
நான் ekalappai தட்டச்சு மூலம் தட்டச்சு செய்கிறேன்...photoshop மென்பொருளில் தமிழில் வர என்ன செய்ய வேண்டும் சொல்லுவீர்களா....நான் இந்த தட்டச்சு உள்ள எழுத்துகளில் நன்கு பயின்றதால்...புதிதாய் வேறு font வேண்டாம்...ekalappai தட்டச்சில் உள்ளது போல வேண்டும்....அதற்கு என்ன செய்ய வேண்டும்....நன்றிகள்..

ekalappai தட்டச்சில் உள்ளதுபோல்...

tscu parnar செலக்ட் செய்து,

Alt+3 கிளிக் செய்து டைப் செய்யுங்க சகோதரி.

படம் 1
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/1-82.jpg

படம் 2
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/untitled1.jpg

படம்3
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/20-1.jpg
நன்றி.

சரண்யா
23-11-2009, 11:11 AM
நன்றிகள் நூர் அவர்களே....செய்து பார்த்தேன் சந்தோஷம்...

richard
12-12-2009, 09:49 AM
தமிழ் தட்டச்சு மற்றும் தமிழ் எழுத்துரு மாற்றி அனைத்துக்கும் இது பயன்படும்,

NHM Writer என்ற இந்த தமிழ் சாப்ட்வேர் இண்டெர்நெட் 8 ல் நன்கு வேலைசெய்கிறது,மற்றும் எக்ஸ்பி,விஸ்டா,விண்டோ 7,அனைத்திலும் மாஸ்டர்

NHM Writer இது இந்தியன் அனைத்து மொழிகளையும் டைப்செய்யலாம்,

NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.

மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.

இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.

தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.

ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.

ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.



NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

http://software.nhm.in/products/writer

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21926&page=3


தமிழ் எழுத்துருவுகளையூனிக்கோட் எழுதியில் கீழ் கண்ட பலபாண்ட் களை உருமாற்ற்ம் செய்து கொள்ளளாம்http://suratha.com/
http://www.suratha.com/reader.htm
Indoweb, Murasoli, Webulagam, Thinathanthi, Dinamani ,Thinaboomi, Anjal, Thatstamil(LIBI) Amudham/Dinakaran, Mylai, Vikatan(old)Tab Tam(kumudam/vikatan)Bamini TSC Romanised koeln Anu Graphics (Pallavar) ஆகிய யூனிக்கோட் எழுதியில் மாற்றலாம்
எந்த ஒரு தெரிந்த அல்லது தெரியாத எழுத்துருவாகவிருந்தாலும் அதனை மேல் தட்டில் உள்ளிட்டு கீழே உள்ள ஏதாவதொரு துவாரங்களை சுட்டுவதன் மூலம் நீங்கள் உள்ளிட்டதை சீராக தமிழில் வாசிக்கமுடியும்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டமான பொங்கு தமிழின் நினைவாக இந்த செயலிக்கு பொங்கு தமிழ் எனப் பெயரிடப்படுகிறது.
இந்த தானிறங்கி எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு ஸ்ரீவாஸிற்கு எனது நன்றிகள்
நெற்ஸ்கேப் பதிப்புகளில் இந்த செயலி தானிறங்கி எழுத்துரு இல்லாமையினால் முழுமையாக வேலைசெய்யாது என்பதை கருத்திலெடுக்கவும்.
தமிழை சர்வதேசஇணையத்துடன் முன்னோக்கி நகர்த்த ஓர் உந்து சக்தி உதவியாக இந்த புதுவை யூனிக்கோட் உருமாற்றியை வடிவமைத்துள்ளேன்.தமிழில் இன்று அதிகமாக பாவனையிலிருக்கும்
எழுத்துருக்களை யூனிக்கோட் எழுத்துருவிற்கு மாற்றவும்,இணைய இணைப்பிலிருந்தபடியே
எந்தவித தரவிறக்கமும் செய்யாமலேயே உங்கள் ஆவணங்களை உருமாற்றவும் இதன்மூலம் முடியும்.
இந்தப் பக்கத்தை இலகுவாக உங்கள் கணனியில் சேமிப்பதன் மூலம் இதனை உங்களது ஆக்கிக்கொள்ளலாம்.
http://www.suratha.com/reader.htm

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21926

பூமகள்
06-10-2010, 09:23 AM
eKalapai Tanglish Keyboard: http://thamizha.com/modules/mydownlo...hp?cid=3&lid=3 (http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3)

eKalappai Bamini Keyboard:
http://thamizha.com/modules/mydownlo...hp?cid=3&lid=4 (http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=4)

eKalappai tamilnet99 Keyboard:
http://thamizha.com/modules/mydownlo...hp?cid=3&lid=5 (http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=5)

Murasu Anjal Pro:
http://www.murasu.com/se/
(The free version will not support Unicode fonts)


இதில் உள்ள சுட்டிகள் வேலை செய்யவில்லை... சரி பார்க்கவும்.

அன்புரசிகன்
06-10-2010, 10:08 AM
ஐந்து வருடங்களுக்கு முன்னர் பதிந்தது. தமிழா இணையத்தின் முகப்பிற்கு சென்றால் அந்த செயலிகளுக்கான சுட்டிகள் உண்டு...

அமரன்
06-10-2010, 06:16 PM
இதில் உள்ள சுட்டிகள் வேலை செய்யவில்லை... சரி பார்க்கவும்.

கவனத்துக்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி பூமகள்.

இந்த இணைப்புகளை அந்த இணையத்தளத்தினர் அடிக்கடி மாற்றுவதாக அறிய முடிகிறது. அங்கே இப்போது கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளை இணைத்துள்ளேன். புதிதாக பீட்டா வெளியீட்டினையும் சேர்த்துள்ளேன்.

ஆன்டனி ஜானி
27-10-2010, 05:13 PM
இது ரெம்ப உதவியா இருக்கும் என்று நம்புகிரேன் எல்லாரும் இதில் பயனடைய வாருன்கள் நன்றி:mini023::mini023:

srisha
15-11-2010, 12:01 PM
First the fonts were installed. recently i formatted os. now using win xp. iam unable 2 read unicode tamil fonts. please help.

ஆன்டனி ஜானி
18-11-2010, 03:13 PM
இந்த தமிழ் எழுத்துருவியை அனைவரும் படித்து பயன் பெற வாழ்த்துக்கள்

srisha
23-11-2010, 09:43 AM
Thanks for ur reply. But iam not able 2 see the link. anyway thanks now the problem is solved

அமரன்
23-11-2010, 05:34 PM
Thanks for ur reply. But iam not able 2 see the link. anyway thanks now the problem is solved

பிறகேன் இன்னும் ஆங்கிலம்.:)

OscarEi
19-03-2015, 05:26 PM
It is remarkable, the valuable information