PDA

View Full Version : மின்மினிகளால் ஒரு கடிதம்



puppy
26-04-2005, 10:01 AM
மின்மினிகளால் ஒரு கடிதம்.....அப்துல் ரகுமான்....இந்தியாவில் இருக்கும் போது வாங்கி படித்தது...மனதில் நின்றவைகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....

காதலியுடன் பேசுதல் :

கஸ்ல் (Ghazal) அரபியில் அரும்பு ஆகி பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.

கஸ்ல் பெரும் பாலும் காதலையே பாடும்...அதுவும் காதலின் சோகத்தை..
அப்துல் ரகுமான் எழுதிய இந்த கவிதைகளே தமிழில் முதல் "கஸல்" தொகுதி...

கஸல் இரண்டு கண்ணிகளால் ஆனது.ஒரு கண்ணிக்கும் அடுத்த
கண்ணிக்கும் தொடர்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனக்கு ஞாபகம் வருவதை அப்ப அப்ப உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

இப்போ கஸல் பார்ப்பாமோ......என்ன எல்லாரும் ரெடியா....

என் உயிரை
காதலில்
ஒளித்துவைத்து விட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?

நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாக கிடைத்தது
காதல்

உன்னை பற்றி
கவிதைகள் எழுதவேண்டும்
இன்னும்
காயங்களை கொடு

உன் விலாசம்
மின்னலா
மழைதுளியா

மீண்டும் இந்த பதிவில் உங்களை சந்திப்பேன்..(என்னோட பதிவு தான் படைப்பு அல்ல.....)

இன்னும் மினுமினுக்கும்.......

puppy
26-04-2005, 10:03 AM
நீ சோகமாக மாறு
அப்போது தான்
என்னை விட்டு
பிரியாமல் இருப்பாய்


இப்போதெல்லாம்
நான் இறைவனிடம்
எதுவும் கேட்பதில்லை
நீ தான் கிடைத்துவிட்டாயே

என்னை பிடித்துண்ண
வலை பிண்ணி காத்திருக்கும்
சிலந்தி நீ

மரணத்தில் இருந்து
பிழைத்து வந்தேன்
உன் நினைவு
வந்தது

----
இன்னும் மினுமினுக்கும்

pradeepkt
26-04-2005, 10:27 AM
மின்னுவதெல்லாம் பொன்னல்ல - பழமொழி

பொய்யாக்குகின்றன இக்கவிதைகள்... ஏனென்றால் எல்லாமே பொன்.

Nanban
02-05-2005, 08:24 PM
பொக்கிசமாக பாதுகாக்க வேன்டிய புத்தகம் - என்னிடத்தில் இருப்பதில் பெருமை அடைகிறேன்....

மன்மதன்
03-05-2005, 05:17 AM
மின்னுவதெல்லாம் பொன்னல்ல - பழமொழி

பொய்யாக்குகின்றன இக்கவிதைகள்... ஏனென்றால் எல்லாமே பொன்.

மிகையல்ல.. என்னுடைய கருத்தும் இதே..

அன்புடன்
மன்மதன்