PDA

View Full Version : உங்களுக்கு மெயில் வந்து இருக்கு



puppy
26-04-2005, 08:23 AM
வாசலில் தனது வண்டியை துடைத்து கொண்டு இருந்தார் ஒருவர்..நம்ம
இளசு மாதிரின்னு நினைச்சுக்குங்க....

பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்,கதவை திறந்துகொண்டு
அவள் வீட்டுக்கு முன்னாடி இருந்த கடிதபெட்டியை திறந்தாள்...
உள்ளே பார்த்தாள்....மூடினாள்..திரும்ப போய்விட்டாள்

கொஞ்ச நேரத்தில் மறுபடியும் வந்தாள்....திறந்தாள்..பார்த்தாள்..
மூடினாள் போய்விட்டாள்.....

மீண்டும் கொஞ்ச நேரத்தில் அதே மாதிரியே.....நம்மாளு உடனே
என்ன ஆச்சு மேடம் என்றார் பவ்யமாக...

அவள் எரிச்சலுடன்..என் கம்ப்யூட்டர் "You've got Mail"-ன்னு
சொல்லுது..ஆனால் இங்கே வந்து பார்த்தால் ஒன்னுமே
இல்லை என்றாள்....

(இளசு உள்ளே கூட்டிட்டு போய் சொல்லி கொடுத்தது வேறு கதை)

pradeepkt
26-04-2005, 09:28 AM
சூப்பர். சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகிப் போச்சு.
அது சரி, சொல்லிக் கொடுத்ததுக்கு மட்டும் என்ன வேற கலர்?
ஒண்ணும் சரியாப் படலையே?
:)

சுவேதா
26-04-2005, 11:50 AM
அது என்ன வேறு கதை ஏன் அவருக்கும் புரியவில்லை போலும் கொம்பியூட்டர் மைலுக்கும் வீட்டு மைலுக்கும் :D :D

Iniyan
28-04-2005, 02:22 AM
இது இங்க பிளாண்ட் ஜோக்கா வந்தது. (Blonde Joke)

அறிஞர்
04-05-2005, 09:04 AM
பப்பியை புதுத்தளத்தில் காண்பது குறித்து சந்தோசம்......

அருமையான சிரிப்பு...... என்ன சொல்லிக்கொடுத்தாலும்.. சரியா சொல்லிக்கொடுத்தா சரிதான்....

sarcharan
21-02-2006, 08:36 AM
அது சரி, சொல்லிக் கொடுத்ததுக்கு மட்டும் என்ன வேற கலர்?....


சூப்பர். சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகிப் போச்சு.
அது சரி, சொல்லிக் கொடுத்ததுக்கு மட்டும் என்ன வேற கலர்?
ஒண்ணும் சரியாப் படலையே?
:)

pgk53
21-02-2006, 02:28 PM
அருமையான சிரிப்பு---நன்றி பப்பி அவர்களே.

aren
22-02-2006, 01:31 AM
இன்னும் சொல்லிக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் போலிருக்கிறது. இளசு அவர்கள் இந்தப் பக்கம்வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன.

இளசு
22-02-2006, 09:52 PM
இன்னும் சொல்லிக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் போலிருக்கிறது. இளசு அவர்கள் இந்தப் பக்கம்வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன.

அடடா அன்பின் ஆரென்,
கொஞ்சம் பணிப்பளுவால் வரவு குறைந்ததில்
பேர் ரிப்'பேராகிடும்போல் இருக்கே..

இனி நேரம் ஒதுக்கியாவது வந்துவிடுகிறேன்.

aren
23-02-2006, 12:28 AM
நண்பர் இளசு அவர்களே, இப்படி சொன்னாலாவது அடிக்கடி இங்கே வருவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். தப்பாக நினைக்கவேண்டாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

மயூ
11-03-2006, 10:37 AM
அய்யோ பப்பி பின்னிட்டீங்கன்னு எல்லார் மாதிரியும் சும்மா பொய்சொல்ல நான் ஒண்டும் கையாலகாத பயல் இல்ல. உண்மையை சொல்லோனும் எண்டா இது வலு சூப்பரோ சூப்பர் ஜோக்கு

தீபன்
16-03-2006, 03:15 PM
அய்யோ பப்பி பின்னிட்டீங்கன்னு எல்லார் மாதிரியும் சும்மா பொய்சொல்ல நான் ஒண்டும் கையாலகாத பயல் இல்ல. உண்மையை சொல்லோனும் எண்டா இது வலு சூப்பரோ சூப்பர் ஜோக்கு
ஏனெண்டா இதில நம்ம இளசு அண்ணர் சம்பந்தப்பட்டிருக்காரில்ல....

பென்ஸ்
16-03-2006, 04:06 PM
யப்பா... இளசு கொஞ்சம் இந்த பக்கம் வரலைனா அவரை ஒரு வழி பன்னிடுவீங்க போல....

பாருங்க நாளை மன்றத்தில் கண்டிபாக இருப்பார்... இதற்க்கு பதிலும் தருவார்...

தீபன்
17-03-2006, 03:38 PM
யப்பா... இளசு கொஞ்சம் இந்த பக்கம் வரலைனா அவரை ஒரு வழி பன்னிடுவீங்க போல....

பாருங்க நாளை மன்றத்தில் கண்டிபாக இருப்பார்... இதற்க்கு பதிலும் தருவார்...
என்ன பென்சமின் சார்... ஏதேதோவெல்லாம் சொன்னியள்... இண்டைக்கும் இதற்கு பதில் சொல்ல இளசு அண்ணரை காணேல்லையே..