PDA

View Full Version : தொழில் முனைவோன்-புதிய தொடர்-பாகம் 1



இராசகுமாரன்
26-04-2005, 06:02 AM
தொழில் முனைவோன்

தமிழ் மன்றத்து சொந்தங்களே.. . எனக்கும் உங்களுடன் சேர்ந்து நிறைய விசயங்களை தோன்றும் போதெல்லாம் பகிர்ந்து கொள் வேண்டும் என்று மிகுந்த ஆவல். ஆனால், எனது பணி நிலைமை தற்போது அதற்க்கு அதிக இடம் கொடுப்பதில்லை. இந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்த தலைப்பு, என்னை வாழ்க்கை படிகளில் தாவ வைத்த தலைப்பு, அவ்வப்போது என் மூளையை துள்ளி எழவைக்கும் தலைப்பு, வாழ்க்கையில் நான் அதிகம் ஆராய்ந்த தலைப்பு. நேரம் போதாமையால் இதை தள்ளி வைத்திருந்த எனக்கு, சமீபத்தில் சில நண்பர்களுக்கு உதவுவதற்க்காக இந்த ஆராய்ச்சிகளை மீண்டும் துவங்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அதனால், இதை இனி எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த தலைப்பில் வந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

இதற்கு முன் நான் ஆரம்பித்த ஒன்றிரண்டு தொடர்கள் ஏற்கனவே பாதியில் நிற்கின்றன. இதற்கும் அதே நிலைமை வருமா என்னால், "இல்லை", எனென்றால், இந்த தலைப்பில் நான் மட்டும் தான் எழுத வேண்டுமென்றில்லை, நீங்களும் இதில் சேர்ந்து கொள்ளலாம். இதை ஒரு சுழற் தொடர் போல வைத்துக் கொள்வோம், அதம் மூலம் நான் தொடர தாமதமானாலும், இந்த தலைப்பில் விருப்பம் உள்ளவர்கள் தொடரலாம்.


யார் இந்த தொழில் முனைவோன்?


முன்பொரு காலம் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் அல்லது குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்து வருபவர்கள் தான் தொழில் முனைவோனாக வருவார்கள், அல்லது இருக்க வேண்டுமென்றிருந்த காலம் போய் விட்டது நண்பர்களே..! இன்று அவன் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறான். ஆம்.. நம் ஒவ்வொருவருள்ளும் இவன் ஒழிந்து கொண்டிருக்கிறான். அவனை தட்டி எழுப்ப நமக்கு நேரம் கிடைப்பதில்லை, அல்லது நாம் விரும்புவதில்லை, அதனால் அவனை நாம் இனம் கண்டு கொள்வதில்லை. இருந்தும் தெரிந்தும் தெரியாமலும் சில சந்தர்ப்ப சூழ்நிலை என்னும் தீப்பொறியால் அவன் வெளிப்பட்டு விடுகிறான். அவனை வெளிக்கொணரும் அந்த சந்தர்ப்ப 'தீப்பொறி', உங்கள் வெறியை தூண்டிய ஒரு சந்தர்ப்பமாக இருந்தால், உங்கள் வெற்றி நிச்சயம், அல்லது கடமைக்காக தொழில் முனைவோனாக மாறினால், வெற்றி உங்களுக்கு நெடுந்தூரம்.

அந்த சந்தர்ப்பங்கள் பின்வருமாறு:

1) உங்களை ஏமாற்றுதல் / வஞ்சித்தலுக்கு பழி வாங்குதல்
2) உங்களை விட்டு சென்றதற்க்கு பழி வாங்குதல்
3) உங்களை, உங்கள் திறமையை தாழ்த்திப் பேசியதற்கு பதிலடி
4) உங்களை கையாலாகாதவன் போல் நடத்துதலுக்கு பாடம் கற்ப்பித்தல்
5) வாழ்க்கையில் வேறு வழியில்லை என வீருகொண்டெழுதல்
6) வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டுமென்ற வெறி
7) இவனை விட நான் நன்றாக முன்னுக்கு வர வேண்டும் என்ற ஒரு வெறி
8) இந்த வேலையை இவனை விட நன்றாக செய்ய முடியும் என்ற வெறி..

'வெறி' என்ற சொல் சிறிது அநாகரீகமாக பட்டாலும், , இது பிறரை தீங்கு விளைவிக்காத ஒரு வெறி.. உங்களை உச்சிக்கு உயர்த்தும் வெறி, உங்களுடைய வெறியின் அளவில் உங்கள் உயர்வு இருக்கும். அது தான் அவனை தட்டி எழுப்பும் தீப்பொறி.. இந்த வெறியில்லாவிடில் ஒருவன் புதிதாக எதையும் சாதிக்க முடியாது.

இந்த வெறி எப்போது கிளம்பும் என்றால், ஒருவருடைய உடல் அல்லது உள்ளம் கஷ்டப் படும்போது, சோர்வுரும் போது, அவன் சிந்திக்க வேண்டும், ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், பாஸிட்டிவ் மைண்ட் செட் என்று கூறும் ஆக்கப் பூர்வமான மனத்துடன் சிந்திக்க வேண்டும். அப்போது எழுபவை தான் இந்த வெறி.. அந்த வெறி உணர்ச்சியில் ஊர்ந்து அவனை எழ வைக்கும்.

இதே சந்தர்ப்பத்தை அவரே 'நெகட்டிவ் மைண்ட் செட்'-டுடன் எடுத்துக் கொண்டால், அவர் வாழ்க்கையின் முடிவுக்கு செல்ல நேரலாம். ஏனென்றால், அப்படி ஒரு கடைசி படிக்கட்டில் இருக்கிறார், அவர் மீண்டு வர வேண்டுமென்றால் அதீத முயற்சி தேவை, அந்த அதீத முயற்சியைத் தான் நாம் இங்கே வெறி என குறிப்பிடுகிறோம்.

இந்த சந்தர்ப்பங்களை நாம் ஒவ்வொன்றாக அலசப் போகிறோம்.

எனக்கும் இது போல ஒரு சந்தர்ப்பம் வந்து வெறி பிடித்தது, எனக்கு தெரிந்த சில நண்பர்களுக்கு நபர்களுக்கும் அவ்வாறே நடந்தது. அவர்கள் என்ன ஆனார்கள், என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

( இன்னும் வரும் )

puppy
26-04-2005, 08:12 AM
நல்லதொரு தொடர்...இந்த மாதிரி தொடர்களே மற்றவர்களுக்கு ஒரு உந்துதல் சக்தியை கொடுக்க முடியும்...உன்னால் முடியும் தம்பி தொடர் போல இருக்கும் என நினைக்கிறேன்.....சொந்தங்களே....தலைவர் கொடுப்பதை மட்டும் படிக்காம்ல் நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்....நானும் பகிர்ந்து கொள்வேன்......

எல்லோரும் படிப்போம்..பங்களிப்போம்..பயன்பெறுவோம்....

வாழ்க் தமிழ் மன்றம்

அன்புடன்
பப்பி

பரஞ்சோதி
27-04-2005, 11:08 AM
நன்றி நண்பர் இராஜ்குமார்!

அருமையான தலைப்பு, அனைவருக்கும் பயன் கொடுக்கும் தலைப்பு.

மன்றத்தில் திறமையான தொழிலதிபர்கள், மேலதிகாரிகள் இருக்கிறார்கள்.

குறிப்பாக சொல்லப் போனால் மணியா அண்ணா, ஆரென் அண்ணா, கரிகாலன் அண்ணா, இளந்தமிழ் செல்வன், பிரியன் மற்றும் பலர் தங்களது அனுபவங்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாம், வருங்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும்.

என்னுடைய அனுபவங்களையும், கற்ற பாடங்களையும், சந்தித்த நபர்களையும் பற்றி பின்னர் சொல்கிறேன்.

Iniyan
27-04-2005, 10:33 PM
ஆகா. வெறும் கதை கவிதை என்று பொழுது போக்காக மட்டுமில்லாமல் உபயோகமான கட்டுரை. வரட்டும் வரட்டும்

viju
24-01-2007, 04:58 PM
காத்து இருக்கிற்றொம்....

leomohan
24-01-2007, 05:13 PM
அருமையான தொடர் இராஜகுமார். தொடருங்கள்.

மனோஜ்
25-01-2007, 05:07 PM
நான் விரைவில் ஒரு தொழில் தொடங்க இருக்கிறோன் அதற்கு இந்த பகுதி மிகவும் உந்து கொலாகவும் உதவியாகவும் இருக்கும் என்று நினைக்கிறோன்
மிக அதிக எதிர்பார்புடன்...............

namsec
13-05-2007, 02:59 PM
சித்த மருந்து பொருள்களை சந்தை படுத்தலாம் என்று என்னியுள்ளேன் தங்களின் கருத்துக்களை எனக்கு தெரியபடுத்துங்கள்

அறிஞர்
16-05-2007, 12:26 PM
பழைய தொடர் புதுப்பிக்கப்பட்டதில் மகிழ்ச்சி... பலருக்கு பிரயோஜனமாக இருக்கும்..

இன்னும் தொடருவீர்கள் என நம்புகிறேன்...

muttham
29-06-2007, 06:27 PM
நான் புதியதாக பிட்சா ரெஷ்டாரென்ட் எங்கள் ஊரில் ஆரம்பிக்க விரும்புகிறேன்.அது லாபகரமான தொழிலா தெரிவிக்கவும்

safari
03-06-2008, 02:17 PM
நான் வெகு நாட்கலாய் இனைய தலத்தில் இதுபோல்
ஓன்று கிடைக்காதா என்று சுத்தியவன் இன்று கிடைத்து விட்டது மிகவும் மகிழ்ச்சி

SathyaThirunavukkarasu
03-06-2008, 02:23 PM
மிக மிக நல்லதொடர். மிக்க நன்றி

வெற்றி
16-10-2008, 01:47 PM
திரி ஆரம்பித்த நாள் 26-04-2005, 11:32 AM
இன்று 16-10-2008 அடுத்த பாகம் எனக்கு வேண்டும்...தேவைப்படுகிறது..உதவுங்கள்..
உங்கள் பொன்னான நேரத்தை கொஞ்சம் செலவலித்து உதவுங்கள்....எனக்கும் அந்த வெறி வந்து விட்டதை உணர்கிறேன்..ஆனால் அதிக வேகம் இன்னும் வரவில்லை...

இளந்தமிழ்ச்செல்வன்
20-10-2008, 08:04 PM
வெற்றி வேண்டும் என்றால் அதற்க்குண்டான வழி அந்த வார்த்தையிலேயெ இருக்கிறது.

புரியவில்லையா? நடுவில் உள்ள “ற்”றை எடுத்துவிட்டு பாருங்கள் இராசகுமாரன் அவர்கள் சொன்னதுதான்.

இடைவிடாத உத்வேகத்தைதான் வெறி என்று குறிப்பிடுகிறார்கள். வேலையையோ அல்லது வியாபாரத்தையோ கஸ்டம் என்று எண்ணாமல் இஷ்டப்பட்டு செய்தாலே போதும்.

வெறுப்பாக செய்தால் வேலை.
விருப்புடன் செய்தால் வியாபாரம். நீங்கள் வேலையில் இருந்தாலும் இந்த குணம்தான் உங்களுக்கு முதலீடு என்பதை மறவாதீர்.

ஒவ்வொருவராய் தொடருங்கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
20-10-2008, 08:12 PM
சித்த மருந்து பொருள்களை சந்தை படுத்தலாம் என்று என்னியுள்ளேன் தங்களின் கருத்துக்களை எனக்கு தெரியபடுத்துங்கள்

தற்போது “இயற்கை” என்றோ அல்லது “பயோ ஆர்கானிக் பொருள்” என்றோ கூறினால் அதற்க்கு மதிப்பே தனி, விலையும் கூட.

சித்த மருத்டுஹ்வ பொருட்களை விற்க்கும் போது அஹ்டன் விளக்கத்தையும் சேர்த்தே கொடுங்கள். தற்போது சித்தமருந்துகள் அனேகமான கடைகலீல் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் முன்பு போல் சாரம் இல்லை. சில மருத்துவர்கள் தாங்களே தயாரித்து கொடுக்கிறார்கள். பல நேரங்களில் சித்தா விலை கூடுதலாக உள்ளது.

நீங்கள் தாரளமாக ஆரம்பிக்கலாம். உங்களுக்கு என்று ஒரு தன்மையை வைத்துக்கொள்ளுங்கள். எக்காலத்திலும் உங்கள் தன்மையிலிருந்து மாறவேண்டாம்.

இன்று உள்ள பல பிரச்சினைகளுக்கு சித்தாவில் பூரணகுணமும், குறைந்தபட்சம் பக்கவிளைவுகளின்றி பாதுகாக்கலாம் என்பது அநேகமானவர்களுக்கு புரிந்துள்ளது.

வாழ்த்துக்கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
20-10-2008, 08:13 PM
நான் புதியதாக பிட்சா ரெஷ்டாரென்ட் எங்கள் ஊரில் ஆரம்பிக்க விரும்புகிறேன்.அது லாபகரமான தொழிலா தெரிவிக்கவும்

எந்த ஊரில்? என்னையும் இத்தாலி நண்பர் கேட்டுக்கொண்டு உள்ளார். என் மனதுக்கு பிடிக்காததால் இசையவில்லை.

இளசு
22-10-2008, 06:23 AM
வெற்றி வேண்டும் என்றால் அதற்க்குண்டான வழி அந்த வார்த்தையிலேயெ இருக்கிறது.

புரியவில்லையா? நடுவில் உள்ள “ற்”றை எடுத்துவிட்டு பாருங்கள் இராசகுமாரன் அவர்கள் சொன்னதுதான்.

இடைவிடாத உத்வேகத்தைதான் வெறி என்று குறிப்பிடுகிறார்கள். வேலையையோ அல்லது வியாபாரத்தையோ கஸ்டம் என்று எண்ணாமல் இஷ்டப்பட்டு செய்தாலே போதும்.

வெறுப்பாக செய்தால் வேலை.
விருப்புடன் செய்தால் வியாபாரம். நீங்கள் வேலையில் இருந்தாலும் இந்த குணம்தான் உங்களுக்கு முதலீடு என்பதை மறவாதீர்.

ஒவ்வொருவராய் தொடருங்கள்.


வாருங்கள் இ.த.செ.

நலமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு சாவகாச மன்ற உலா வர
உங்களுக்கு வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி..

உங்களின் தொழில் முன்னேற்ற வாசகங்கள்
உங்களின் சொந்த அணுகுமுறை, அனுபவம் - இல்லையா?

தவம் போன்றதொரு முனைப்பான வெறியுடன்
எது செய்தாலும் வெற்றி நிச்சயம் என்ற
உங்கள் வாசகம் எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும்!

சிவாஜி
28-10-2008, 05:41 PM
அருமையான கட்டுரை நண்பரே ..
அடுத்த பதிப்புக்காக காத்திருக்கிறேன் ...