PDA

View Full Version : ஏப்ரல் 25 திங்கட்கிழமை மலேசியாவிலிருந்து



Mano.G.
25-04-2005, 11:12 AM
அணிசேரா நாடுகளின் தலைமை பொறுப்பில் மலேசியா

NAM எனப்படும் அணி சேரா நாடுகள் அமைப்புக்குத் தலைமை பொறுப்பு வகிக்கும் மலேசியா, அந்நாடுகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு திட்டங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதி அளித்துள்ளது. இதை நேற்று JAKARTA வில் முடிவடைந்த ஆசிய-ஆப்பிரிக்க உச்சநிலை மாநாட்டில் வரையப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் தங்கள் நாடுகளை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கும் NAM உறுப்பு நாடுகளூக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு NAM அமைப்பு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாக முன்னதாக மலேசிய பிரதமர் DATUK SERI ABDULLAH AHMAD BADAWI கூறினார்.

ஆசிய - ஆப்பிரிக்க கேந்திர கூட்டு ஒத்துழைப்பின் வழி, இரு கண்டங்களுக்கு இடையே அமைதி, சுபிட்சம், முன்னேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து நிலைநிறுத்தும் வகையில் இம்மாநாட்டில் பங்கெடுத்த நாடுகளின் தலைவர்களிடையே புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதையும் பிரதமர் அப்போது சுட்டிக்காட்டினார்.



------------------------------------------
நாட்டின் முதல் தாவர டீசல் தொழிற்சாலை

மலேசியாவில் முதன் முறையாக செம்பனை எண்ணெயில் இருந்து டீசல் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலை negeri sembilan, labu வில் கட்டப்படவுள்ளதாக தோட்டத் துறை மற்றும் மூலத்தொழில் அமைச்சர் DATUK PETER CHIN FAH KUI கூறினார்.

இன்னும் மூன்று மாத காலத்தில் நிறுவப்படவுள்ள இந்த ஆலை முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு ஐயாயிரம் tam metrik தாவரவியல் டீசலை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கவிருக்கும் இத்திட்டத்தை, மலேசிய செம்பனை எண்ணெய் வாரியமும், GOLDEN HOPE PLANTATION BHD நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளவிருக்கின்றன.SEREMBAN னில் நேற்று மலேசிய AMANAH SAHAM வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.

____________________________________
திரங்கானுவில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்

Terengganu மாநிலத்தில் சொத்துடைமை சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடும் வேளையில், இவ்வாண்டு JANUARI முதல் MARCH மாதம் வரை நாட்டில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களிலும் TERENGGANU மாநிலமே முதல் நிலையில் இருப்பதாகவும் மற்றொரு புள்ளிவிவரக் குறிப்புகள் காட்டுகின்றன.

கடந்த மாதத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 70 விழுக்காடு மோட்டார் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் SAC SATU HUSIN ISMAIL கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பழைய இரும்புப் பொருட்களைக் களவாடுதல், வீடு புகுந்து திருடுவது போன்ற குற்றச்செயல்களும் தற்போது இம்மாநிலத்தில் அதிகரித்து வருவதாக அவர் சொன்னார். KEMAMAN நகராண்மைக் கழக ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் HUSIN ISMAIL இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



-----------------------------------------------------------------

பெண்ணைக் கடத்தி பலாத்காரம்

கோலாலம்பூர் PANDAN JAYA வில் 6 பேர் கொண்ட ஆடவர் கும்பல் ஒன்று இம்மாதம் 15 ஆம் தேதி, இளம் பெண் ஒருவரைக் கற்பழித்த சம்பவம் தொடர்பில் போலீஸார் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்ட 5 ஆப்பிரிக்க ஆடவர்களைத் தடுத்து வைத்துள்ளனர்.

வேலை முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்த அப்பெண்ணிடம், வழி கேட்பது போல் பேச்சு கொடுத்து, பின்னர் அப்பெண்ணை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவ்வாடவர்கள் இரு தினங்களுக்கு பிறகு அப்பெண்ணை klCC வளாகத்தில் விட்டு சென்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் AMPANG JAYA வட்டார போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு AMPANG JAYA குற்றப் புலனாய்வுத்துறையின் தலைமை விசாரணை அதிகாரி ASP MOHD AZAM ISMAIL கேட்டுக் கொண்டுள்ளார்.



-----------------------------------------------------------------


Mykad அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு...

MyKad-ட்டை விண்ணப்பிக்க இருக்கும் உடல் ஊனமுற்றவர்கள், உடல் நலம் பாதிப்புற்றவர்கள், கர்ப்பிணி பெண்கள், ஆகியோர் அவர்களுக்கு என்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கும் தனிவரிசையில் சென்று விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாக தேசியப்பதிவு இலாகாவின் இயக்குனர் Datuk Wan Ibrahim Wan Ahmad தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பதிவு இலாகாவின் முக்கிய கிளைகளில் இதுபோன்ற தனி வரிசை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதர சிறிய கிளைகளில் "flexi lane" எனப்படும் வரிசை தயார் படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அங்குள்ள ஊழியர்களிடம், சம்பந்தப்பட்டவர்கள் தங்களது பிரச்சனையை எடுத்துக் கூறி அவ்வரிசைகளில் நின்று சுலபமாக விண்ணப்பிக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

சிறிய கிளைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவும், அங்கு போதிய இட வசதி இல்லை என்பதாலும் மக்கள் இதர பெரிய கிளைகளுக்குச் சென்று MyKad-ட்டை விண்ணப்பிக்கும்படி அவ்வதிகாரி கேட்டுக் கொண்டார்.



-----------------------------------------------------------------


கிளந்தானில் சுற்றுச்சூழல் காக்கும் நடவடிக்கை

கிளந்தான் மாநிலத்தின் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணிக் காப்பதில் அம்மாநில அரசாங்கம் தவறியிருப்பதாகவும், குறிப்பாக சட்ட அமலாக்க ரீதியில் மிதமான போக்கை கடைப்பிடிப்பதாகவும் கூறப்படும் தகவலை அரசாங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனால், இம்மாதம் 3 ஆம் தேதி முதல் அம்மாநிலத்தில் நோய்களின் தாக்கம் அதிகரித்து கொண்டிருப்பதாக பொது நிர்வாக, ஊராட்சி, வீடமைப்பு குழுவின் தலைவர் TAKIYUDDIN HASSAN கூறினார்.

இதன் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்ட அவர் தூய்மைகேடான உணவகங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட வேண்டும் என்று மட்டுமே தற்போது தண்டனை வழங்கப்படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். கிளந்தான் மாநிலத்தின் தூய்மை இன்னும் தரம் உயர்த்தப்படுத்தப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

_________________________________


சித்ரா பவுர்ணமி: கண்ணகி சிலைக்கு ஸ்டாலின் மாலை
சித்ரா பவுர்ணமியையொட்டி திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணகி சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரையோரம் இருந்த கண்ணகி சிலையை அதிமுக அரசு அகற்றி விட்டது. அகற்றப்பட்ட கண்ணகி சிலை தற்போது அருங்காட்சியகத்தில் கோணிப் பையில் மூடப்பட்டு கிடக்கிறது.

கண்ணகி சிலையை அகற்றியதைக் கண்டித்த திமுக, திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகமான அன்பகம் வளாகத்தில், கண்ணகிக்கு சிலை அமைத்துள்ளது. இந்த சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என அறிவித்தது.

அதன்படி நேற்று கண்ணகி சிலைக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

__________________________________

சீனாவில் வெடிவிபத்தில் 21 பேர் பலி

சீனாவில் Kijiyang நகரத்தில் உள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது.

மின்னல் தாக்கியதால் இந்த இரசாயன ஆலையில் உள்ள இரசாயனப்பொருட்கள் மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் அந்த 3 அடுக்கு ரசாயனத் தொழிற்சாலை வெடித்து தரைமாகி விட்டது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 21 ஊழியர்கள் பலியானார்கள்.

16 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



-----------------------------------------------------------------


வியட்நாமில் போதைக்குற்றத்திற்காக ஆஸ்திரேலியருக்குத் தூக்கு

வியட்நாமில் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்துக்காக ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

Nuyan Vaan Sin என்ற அந்த ஆடவருடன் மூன்று பெண்களும் இணைந்து வியட்நாமில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருளைக் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இவர்கள் அனைவருமே ஆஸ்திரேலிய வாழ் வியட்நாமியர்கள். இவ்வழக்கை விசாரித்த Ho-Si-Min நகர நீதிமன்றம் அந்த ஆடவருக்கு மரணதண்டனையும், மூன்று பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது.

அடுத்தடுத்து ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் ஆசிய நாடுகளில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மரணதண்டனை பெற்று வருவது அந்நாட்டு அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


-----------------------------------------------------------------


செவ்வாய் கிரகத்தில் புழுதிப்புயல்

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட புழுதிப்புயல் காட்சிகளை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான Nasa வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் Rover Spirit விண்கலம் மூலம் இக்காட்சிகள் பெறப்பட்டுள்ளன. ஏப்ரல் 15 மற்றும் 18 ஆம் தேதிகளில் இக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்தில் புழுதிப்புயலால் ஏற்படும் விளைவுகள் குறித்து Nasa-விற்கு கிடைத்த மிகச் சிறந்த காட்சி இது தான் என Nasa-வைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.


-----------------------------------------------------------------



அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் மீது குற்றச்சாட்டு

ஈராக் சிறைகளில் கைதிகளைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் Donald Rumsfeld-இன் பங்கு குறித்து விசாரிக்க சிறப்புச்சட்டப் பிரதிநிதி ஒருவரை அமெரிக்க அரசு நியமிக்க வேண்டுமென மனித உரிமை இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Abu Ghraib சிறை அத்துமீறல்கள் விவகாரத்தில் சில பேரை அமெரிக்கா தண்டித்திருந்தாலும், முழு அளவில் விசாரணை நடத்தவில்லை என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன.

அத்துமீறல்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கத் தற்காப்பு அமைச்சரின்
வழிகாட்டுதல்கள் இருந்ததாக வெளிவந்த செய்திகளையும் அவ்வமைப்புகள் மேற்கோள் காட்டி, முழு அளவிலான நீதி விசாரணையைக் கோரி வருகின்றன.


-----------------------------------------------------------------



வடகொரியா அணுஆயுத சோதனை - அமெரிக்கா

வடகொரியா விரைவில் அணுஆயுத சோதனை நடத்தவுள்ளதாகவும், சீனா தலையிட்டு அச்சோதனையை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் அமெரிக்கா வற்புறுத்தியுள்ளது.

தற்காப்புக்காக தாங்கள் அணுஆயுதம் வைத்திருப்பதாக வடகொரியா ஏற்கனவே
அறிவித்திருப்பதை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

வடகொரியா மேற்கொள்ளவிருக்கும் இச்சோதனை மிக நவீனமுறையிலானது என
உளவுத்துறை தங்களுக்கு தகவல் அளித்துள்ளதாகவும் அமெரிக்கப்புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

___________________________________

பாரிஸ் போட்டிக்குத் தயாராகும் சானியா

டென்னிசில் தனக்கு பிடித்த வீரராக சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை கூறியுள்ளார் சானியா மிர்சா.

டபிள்யூ.டி.ஏ., அந்தஸ்து பெற்ற ஐதராபாத் பொது டென்னிஸ் ஆட்ட தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சானியா மிர்சாவுக்கு அடுத்த சவால் காத்திருக்கிறது.

கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் பொதுத் தொடர் பாரிசில் அடுத்த மாதம் (மே 23) துவங்க உள்ளது. இது குறித்து, அவர் டில்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிரெஞ்ச் பொதுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என நினைக்கவில்லை. முதல் சுற்றில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள். இத்தொடரில் என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக விளையாடுவேன்.

தற்போது தரவரிசையில் 73வது இடத்தில் இருக்கிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 25வது இடத்திற்குள் வர வேண்டும் என்பதே எனது லட்சியம். இதற்காக கடுமையான பயிற்சி மேற்கொள்ள உள்ளேன். இதற்கு முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இரட்டையர் போட்டியில் விளையாட விருப்பமில்லை. ஒற்றையர் பிரிவில் எனது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். இதற்கு வெளிநாட்டுப்பயிற்சியாளர் இருப்பது நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரஞ்சோதி
26-04-2005, 04:24 AM
செய்திகளுக்கு நன்றி அண்ணா.

தாவர டீசல் வெளிவருவது நல்ல செய்தி தான். அப்படியே எங்கள் ஊருக்கும் அனுப்பி வையுங்க.