PDA

View Full Version : மின்னல் பெண்னே



தீப்ஸ்
24-04-2005, 11:30 PM
மின்னல் பெண்னே


உன் கடக்கண் பார்வையால்
என் இத்யத்தை திருடிய தேவதையே!
உன் பார்வைகள் என்னை கொள்ளுதடி
இரு விழிகளிலும் இருந்து வரும் பார்வை
என் கண்ணில் மின்னலை பாச்சி செல்கின்றது
அந்த பிரம்மன் பூக்களைக் கொண்டோ
உன்னை உருவாக்கினான்?
தாமரை போல் உன் முகம் அதில்
முல்லைப் பூ போல் இரு கண்கள்
மல்லிகை போல் மென்மையான மூக்கு
ரோஜா பூ இதழ் போல் உன் உதடு
மொத்தத்தில் நீ ஒரு பூந்தோட்டம்
இத்தனையும் பூவால் படைத்த பிரம்மன்
உன் மனசையும் பூப்போல் மென்மையாக
படைத்திருப்பான் என நினைக்கிறேன்
என் காதலை ஏற்று உன் மென்மையான
இதயத்தை எனக்கு பரிசாய் கொடுத்துவிடு.

பரஞ்சோதி
25-04-2005, 04:33 AM
வாங்க வாங்க தீப்ஸ்,

உங்கள் கவிதை மிகவும் அருமை. ரசித்து எழுதியிருக்கீங்க.

இன்னேரம் உங்களுக்கு பரிசு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். இதில் மட்டும் பல பரிசுகள் வாங்கும் எண்ணம் வேண்டவே வேண்டாம்.

gragavan
25-04-2005, 07:53 AM
நல்ல காதல் கவிதை. உங்கள் பரிசுக்கு வாழ்த்துகள்.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
25-04-2005, 01:36 PM
அருமையான கவிதை.

சுவேதா
25-04-2005, 08:23 PM
நன்றாக உள்ளது தீப்ஸ். மேலும் இன்னும் இன்னும் எழுத எனது வாழ்த்துக்கள்!

பிரியன்
02-05-2005, 07:13 PM
...
Ȣ ..
š

pradeepkt
03-05-2005, 04:58 AM
ப்ரியன்,
யூனிகோடுக்கு வாங்களேன்.
கீழே இருக்கும் கன்வெர்ட்டரைப் பயன்படுத்துங்கள்.
ஆனால் உங்கள் பதிவை கீழே உள்ள கட்டத்தில் போட்டால் படிக்க முடிகிறது.

அறிஞர்
09-05-2005, 07:12 AM
பூ போன்ற
மென்மையான வரிகள்...
உள்ளத்தை
நெகிழ வைக்கும் வரிகள்
---
தொடருங்கள்.. தோழியே

amudha
09-05-2005, 11:51 PM
நல்லா இருக்கு... இன்னும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்!