PDA

View Full Version : ஆனந்தமழை

சுவேதா
24-04-2005, 03:47 PM
ஆனந்தமழை

உனை பார்த்த நிமிஷத்தில் எனை மறந்தேன் நான்.
எந்தன் கண்ணில் இருக்கும் உன்னிடம் என் இதயத்தை பறிகொடுத்தேன் நான்!
அந்நிமிடமே நான் ஒரு பறவையானேன்!
பறவையான நான் எனது நினைவுகளிலே சிறகடித்துப் பறக்கின்றேன். ஏனோ மனது உன்னைக் கண்ட பொழுது காற்றிலிலே கரைந்துபோகிறதே!
ஆனந்த மழையை கண்டதில்லை நான் ஆனால் உன்னை கண்ட முதல் தினம் தினம் நனைகின்றேன் ஆனந்தமழையில்!

பரஞ்சோதி
24-04-2005, 07:11 PM
கவிதை அருமையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். என்னைப் போன்றோருக்கு எளிதாகவும், நாமும் இப்படி எழுதலாமே என்ற ஆர்வமும் தூண்டுகிறது.

இப்படி தான் சகோதரி, ஆனந்த மழை என்று நினைத்து அதிகம் நனைந்து, பின்னர் காய்ச்சலே வந்துவிட்டது.

சுவேதா
25-04-2005, 12:34 AM

நன்றி பரம்ஸ் அண்ணா!
ஆனந்த மழையில் நனைவதாக நினைத்து நிஜ மழையில் நனைந்து விட்டீர்கள் போல் அதுதான் பின்னர் காய்ச்சல் வந்துவிட்டது என நினைக்கிறேன்.

பிரியன்
02-05-2005, 07:18 PM
š. ž Ģ .
. Ţ 츢ȡ Ţ ,

쾢 Ũ 狀

Nanban
14-05-2005, 08:28 PM
ஆனந்தமழை

உன்னை பார்த்த
நிமிடத்தில்
என்னை மறந்தேன் நான்.

என் கண்ணில் இருக்கும்
உன்னிடம்
என் இதயத்தை
பறிகொடுத்தேன் (நான்!)

அந்நிமிடமே
நான் ஒரு பறவையானேன்!
பறவையான நான்
எனது நினைவுகளிலே
சிறகடித்துப் பறக்கின்றேன்.

ஏனோ
மனது உன்னைக் கண்ட பொழுது
காற்றினிலே கரைந்துபோகிறதே!

ஆனந்த மழையை
கண்டதில்லை நான்
ஆனால்
உன்னை கண்டது முதல்
தினம் தினம் நனைகின்றேன்
ஆனந்தமழையில்!

சுவேதா,

நிறைய எழுதுங்கள்.

எழுதும் பொழுது கவனிக்க வேண்டியவற்றுள் சில:

1. இலக்கணத் தமிழைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். இயல்பாக எழுதுங்கள். உனை, எனை என்பது மாதிரி எழுத வேண்டாம். சீர், தளை இதெல்லாம் ஒத்துழைக்க வேண்டுமே என்ற கவலையுடைய மரபுக் கவிஞர்கள் இப்படி ஒரு எழுத்தைக் குறைத்தோ, கூட்டியோ தங்கள் கவிதையின் இலக்கண மரபைக் கட்டிக் காக்க ஏற்படுத்திக் கொண்ட வழக்கம்.

2. புதுக்கவிதை எழுதுவதற்கும் சில விதிகள் உள்ளன. கடை பிடிக்க வேண்டும் என்று யாரும் வந்து கட்டாயப்படுத்தப் போவதில்லை என்றாலும், இது எழுதப்படாத விதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு வரியும், ஒரு பொருள் தாங்கியதாக, அர்த்தம் உடையதாக இருந்தால் போதுமானது. மொத்த கருத்தையும் ஒரே வரியில் கூறிவிடவோ, அல்லது ஒரு வரிக்கும், மற்றதொரு வரிக்கும் தொடர்பு வேண்டுமென்றே வார்த்தைகளை கோர்த்துக் கொண்டு நிற்கவோ தேவையில்லை. ஒவ்வொரு வரியும் ஒரு பொருள் நிறுத்தத்துடன் அமைந்தால், கவிதை சிறப்பாக அமையும்.

3. தளம் - எதைப் பற்றி எழுதுகிறீர்கள் என்பதில் குறிப்பாக இருங்கள். வெறும் உணர்ச்சிக் குவியல் கவிதை ஆகிவிடாது. உணர்வுகளை மட்டும் பகிர்ந்து கொள்வது தான் உங்கள் கவிதையின் குறிக்கோள் என்றால், அதை தொடர்ந்து உபயோகத்தில் இருக்கும் சாதாரண வார்த்தைகளைக் கொண்டு எழுதாதீர்கள். புதிய வார்த்தைகளைக் கொண்டு, புதிய உவமைகளைக் கொண்டு, புதிய வரிகளில் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

சிறிது நாளாக நீங்கள் எழுதவில்லை என்று தோன்றுகிறது. கொஞ்சம் முன்னேறிய (!?) கவிஞர்கள் வந்துவிட்டதனால், பின் வாங்கவோ, பயம் கொள்ளவோ அவசியமில்லை. தொடர்ந்து கவிதை வாசிப்பதன் மூலமும், கவிதைகள் பற்றிய விவாதங்களில் தொடர்ந்து பங்களிப்பதன் மூலமும், நிச்சயம் உங்களாலும் நல்ல செறிவுள்ள கவிதைகளைத் தர முடியும்.

வெற்றி பெற வாழ்த்துகள்

அன்புடன்

சுவேதா
14-05-2005, 09:16 PM

நன்றி அண்ணா உங்களது அறிவுறைக்கு. நான் இப்பொழுதுதான் புதிதாக எழுத ஆரம்பித்தேன் அதனால் எனக்கு தெரியாது எப்படி முறைகள் போட வேண்டும் என்று நான் சில கவிதைகள் வாசித்திருக்கிறேன். அதன் பின்பு நான் சும்மா எழுதினேன் எனக்கு கவிதைகளின் முறைகள் தெரியாது அண்ணா அதுதான் எனது கவிதை அப்படி நான் முயற்சி செய்கின்றேன் சீர் திருத்தமாக எழுதுவதற்கு அண்ணா.

மன்மதன்
15-05-2005, 04:22 AM
ஸ்வேதா அதிர்ஷ்டசாலி, மோதிரக்கையால் ஒரு சொட்டு. நண்பன் கொடுத்த அறிவுரையை மனதில் கொண்டால் போதும் , பெரிய கவிராக ஆக முடியவில்லை என்றாலும் , கவிதை நன்றாக எழுதலாம்.

கவிதை நன்றாக இருக்கிறது ஸ்வேதா.. பாராட்டுக்கள்.

அன்புடன்
மன்மதன்

kavitha
16-05-2005, 04:11 AM
ஆனந்த மழை எப்போதும் பொழியட்டும்.
தொடர்ந்து எழுதுங்கள் :)

சுவேதா
17-05-2005, 01:04 PM
நன்றி அக்கா!

amudha
17-05-2005, 04:44 PM
Swetha,

நல்லா இருக்கு கவிதை...தொடர்ந்து எழுதுங்கள்... :)

பரஞ்சோதி
17-05-2005, 07:59 PM
Swetha,

நல்லா இருக்கு கவிதை...தொடர்ந்து எழுதுங்கள்... :)

ஸ்வேதா, அமுதா உங்களுக்கு அக்காவா, தங்கையா?

சுவேதா
17-05-2005, 11:50 PM
அக்காவா தங்கையா என்று தெரியவில்லையே அண்ணா!.