PDA

View Full Version : இலவச தமிழ் மென்பொருள்கள்



Iniyan
21-04-2005, 02:54 PM
http://img.photobucket.com/albums/v247/k_daasan/Gifs/cdcover.jpg
http://img.photobucket.com/albums/v247/k_daasan/Gifs/top1.jpg

அன்பு நண்பர்களே!

Centre for Development of Advanced Computing (C-DAC)ன் இந்திய மொழிகளில் தொழில் நுட்ப வளர்ச்சி தகவல் மையம் (Technology Development for Indian Languages Data Centre) பார்த்திப தமிழ் புத்தாண்டினை ஒட்டி பல பல தமிழ் மென்பொருட்கள் (Softwares), எழுத்துருக்கள் (fonts), தமிழ் அலுவலக பயன்பாடு மென்பொருள் பெட்டகம் (Open Office package), தமிழ் அகராதி(Dictionary), தமிழ் இணைய தளா உலவி (browser), தமிழ் மின்னஞ்சல்(email client), தமிழ் எழுத்துப் பிழை களைப்பான் (Spell Checker), தமிழ் ஒளியியல் உரு வாசிப்பான் (OCR) மற்றும் மழலையர் கவிதைகள் (Nursery Rhymes) அனைத்தும் உருவாக்கி இலவசமாய் வழங்கி வருகின்றது.

இதனை இந்தியாவில் இருப்பவர்கள் சிடியாக பெற்றுக் கொள்ளலாம். இல்லையெனில் அனைவரும் நேரடியாக இணைய தளத்தில் இருந்து இறக்கிக் கொள்ளலாம்.

இவையனைத்தும் கிடைக்கும் இணைய தள முகவரி - http://www.ildc.in/GIST/htm/ (http://www.ildc.in/GIST/htm/)

உங்கள் பெயர், மற்றும் இ-மெயில் ஐடி கொடுத்து இலவசமாகப் பதிந்து கொண்டால் போதும்.

நான் இது வரை தமிழ் அகராதி மற்றும் மழலையர் கவிதைகள் இரண்டு மட்டும் பெற்று பயன்படுத்திப் பார்த்தேன். அருமையாக உள்ளது.

அனைவரும் பெற்று மகிழுங்கள்.

நன்றி.
http://img.photobucket.com/albums/v247/k_daasan/Gifs/bounce.gif

மெல்லத் தமிழினி வாழும்.
தேமதுரத் தமிழோசை உலகெங்கும் கேட்கும்.

பரஞ்சோதி
21-04-2005, 07:44 PM
நன்றி இனியன்,

இதைத் தான் தேடிக் கொண்டிருந்தேன். இன்றே இறக்கி பயன்படுத்தி சொல்கிறேன்.

kayalvizhi
22-04-2005, 03:21 AM
உபயோகமான தகவல். நன்றி

அழகன்
24-04-2005, 08:30 PM
நல்ல பயனுள்ள தகவலை தந்த இனியன் அவர்களுக்கு நன்றிகள் பல. நான் Mozilla Firefox browser இறக்கினேன் மிக நன்றாக வேலை செய்கிறது.
நன்றி

pradeepkt
25-04-2005, 01:38 PM
அருமை அருமை.

gragavan
28-04-2005, 05:23 AM
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு

அன்புடன்,
கோ.இராகவன்

மாரப்பனின் நிபந்தனைகள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=99506#post99506

அறிஞர்
05-05-2005, 04:19 AM
அருமையான பாரட்டப்படவேண்டிய முயற்சி...

இந்த பணிக்கு துணையாயிருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

இந்தியாவில் இப்பொழுது கணினி... ரூ. 16,000 கிடைக்கிறது... பலர் புதிய மென்பொருளை இணைத்து செயலாற்ற தொடங்கியுள்ளனர்...

rethinavelu
05-06-2005, 01:14 AM
நரன் இதற்கான சிடி கேட்டு டிடி அனுப்பியும் மின்னஞ்சல் அனுப்பியும் இதுநாள் வரை எனக்க சிடி
கிடைக்கவில்லை தொலைபேசியிலும் கேட்டுப் பாத்துவிட்டேன் ஒன்றும் பதில் இல்லை
இறக்கம் செய்தும் தட்டெழுத்துப் பலகை இல்லை

அன்பர் இரத்தினவேலு

பாரதி
05-06-2005, 01:24 AM
அன்பு நண்பர்களே, அந்த மென்பொருட்களை சென்னையில் வெளியிடும் தினம் நான் அந்த வலைத்தளத்தில் பதிவு செய்ய பல முறை முயற்சி செய்தேன். ஆனால் பலனில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன் நான் பதிவு செய்ததாக அந்த மென்பொருள் வட்டு எனக்கு அஞ்சலில் வந்து சேர்ந்திருக்கிறது..! இன்னும் நான் முழு அளவில் சோதனை செய்யவில்லை.
மத்திய அரசுக்கு என் நன்றி.

அறிஞர்
08-06-2005, 02:26 AM
இந்தியாவில் கணினி விற்கும் கடைகளில்.... கிடைக்கிறது...

கேட்டால் நமக்கு..... இன்ஸ்டால் பண்ணித்தருகிறார்கள்

இராசகுமாரன்
29-06-2005, 07:25 AM
இதை நான் தொலைக் காட்சியில் பார்த்துவிட்டு இணையத்தில் தேடினேன் கிடைக்கவே இல்லை. இன்று கண்டு கொண்டேன்.

யாராவது இதில் உள்ள OCR மென்பொருள் வேலை செய்கிறதா என பார்த்தீர்களா?

poo
30-06-2005, 08:43 AM
நான் வருமோ வராதோவென என் பெயரிலும் என் மனைவி
பெயரிலும் பதிந்தேன்.. இருவருக்கும் 3 நாள் இடைவெளியில்
அஞ்சலில் அனுப்பிவைத்துள்ளார்கள்.

karke
13-05-2006, 02:49 PM
நன்றி.

mafatsolai
15-05-2006, 11:57 AM
hai friends

i

mukilan
20-05-2006, 06:20 AM
hai friends

i
வருக மஃபட்லால் சோலை. தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் இடுங்களேன். எனக்கும் உங்கள் ஊர்தான்.

mukilan
20-05-2006, 06:26 AM
நன்றி.

வாருங்கள் கார்க்கி, பெயர் சரிதானே! பெரிய சிந்தனையாளரின் பெயர். தரமான படைப்புக்களைப் பதியுங்கள்.

vckannan
01-08-2006, 12:57 PM
நன்றி நல்ல தகவல்

மயூ
08-08-2006, 05:34 AM
நானும் தான் பதிஞ்சன். சுமார் ஐந்து ஆறு மாதங்களிற்கு முதல். பாவப்பட்ட இலங்கையர்கள் இது இந்திய குடிமக்களுக்கு மட்டும் போல????

praveen
21-02-2007, 07:47 AM
நானும் தான் பதிஞ்சன். சுமார் ஐந்து ஆறு மாதங்களிற்கு முதல். பாவப்பட்ட இலங்கையர்கள் இது இந்திய குடிமக்களுக்கு மட்டும் போல????

அப்படியெல்லாம் இல்லை, நானும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன், நானும் பதிந்தேன் வரவில்லை. சில வாரங்கள் கழித்து பின் ஒரு தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம் ஒன்று 20 ரூபாய்க்கு வாங்கும் போது அதனுடன் இலவசமாக தந்தார்கள்.

மயூ
21-02-2007, 08:01 AM
அப்படியெல்லாம் இல்லை, நானும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன், நானும் பதிந்தேன் வரவில்லை. சில வாரங்கள் கழித்து பின் ஒரு தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம் ஒன்று 20 ரூபாய்க்கு வாங்கும் போது அதனுடன் இலவசமாக தந்தார்கள்.
கடைசியாக எனக்கு வந்து சேர்ந்தது.. இ
இலங்கைக்கு அனுப்பி இருந்தார்கள்..... தமிழக அரசுக்கும தலைவர் கருனாநிதிக்கும் நன்றிகள்... :D

sivaas
11-04-2007, 09:50 AM
மிக நல்ல தகவலை தந்த நண்பருக்கு என்னுடைய வாழ்த்துகள்

க.கமலக்கண்ணன்
11-04-2007, 10:02 AM
நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்கள். தொடரட்டும் உங்கள் பணி...

namsec
13-05-2007, 04:13 PM
அருமையான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி