PDA

View Full Version : எனது ஆதர்ஷ ஆங்கில எழுத்தாளர் Donald E Westlake



Iniyan
21-04-2005, 10:42 AM
பொதுவாக எனக்குத் தெரிந்த புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர்கள்

சிட்னி ஷெல்டன்
இர்விங் வாலஸ்

இன்ன பிற....


இவர்களைத் தாண்டி நான் படித்து ரசித்த மிகப் பெரும் எழுத்தாளர் டானல்ட் இ வெஸ்ட்லேக்.

இவரைப் பற்றிய அறிமுகமும், இவரது எழுத்துக்களைப் பற்றிய என் விமர்சனமும் இங்கு தொடரும்.

ஆமா யாராவது இவரது எழுத்துக்களைப் படித்துள்ளீர்களா?

Iniyan
21-04-2005, 10:43 AM
இங்கே இந்தத் தலைப்பின் கீழ் தாங்கள் படித்த அந்நிய மொழி புத்தகங்கள் பற்றி எழுதலாமே.

Iniyan
21-04-2005, 12:59 PM
நான் இவரது நாவல் ஒன்றினை கொஞ்சம் கொஞ்சமாக மொழி பெயர்க்கலாமா என யோசித்துக் கொண்டுள்ளேன். இதனால் காப்பி ரைட் பிரச்சனைகள் ஏதும் வருமா எனத் தெரியவில்லை.

gragavan
22-04-2005, 04:54 AM
இனியன். நல்ல தொடக்கம். நானும் கொஞ்சம் ஆங்கிலத்தில் படிக்கிறவனே. நீங்கள் சொன்ன எழுத்தாளர்களை எனது நண்பர்கள் விரும்பிப் படிப்பார்கள். ஆனால் நான் படித்ததில்லை. என்னுடைய ரசனைகள் கொஞ்சம் வேறு மாதிரி.

ருட்யார்ட் கிப்ளிங், ஆன் ரைஸ், ஜே.ஆர்.ஆர்.டோல்கியன், பெர்னார்ட் நைட், ஜே.கே.ரௌலிங் என்று வரிசை போகும். ஒரு மாதிரி கதம்பம்.

கதைகளை மொழி பெயர்ப்பதில் எந்தப் பிரச்சனையும் வராது. ஆனால் அவற்றை வெளியிட வேண்டுமென்றால் கண்டிப்பாக உரிமை வாங்க வேண்டுமென்று நினைக்கிறேன். ரா.கி.ரங்கராஜன் நிறைய ஆங்கிலக் கதைகளை தமிழ்ப்படுத்தியிருக்கிறார். அவர் உரிமைகளை வாங்கினாரா என்று தெரியவில்லை. எதற்கும் நீங்கள் மின்னஞ்சல் மூலம் அந்த எழுத்தாளரைத் தொடர்பு கொள்ளுங்கள். மொழிபெயர்ப்பதனால் நமக்கு பெரிய லாபமோ ராயல்டியோ தமிழில் கிடைக்கப் போவதில்லை என்று சொல்லுங்கள். அவருடைய புகழைப் பரப்பும் ரசிகனின் முயற்சி என்று சொல்லுங்கள். என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

babu4780
22-04-2005, 09:04 AM
சமீபத்தில் 'PAULO COELHO' எழுதிய புகழ் பெற்ற 'ALCHEMIST' நாவல் படித்தேன். ஆஹா அருமை. அதைப்படித்த பிறகு இவர் எழுதிய வேறு 2 நாவல்களையும் ("veronika decides to die" & "By the river Pedre I sat and wept" ) ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

1. ALCHEMIST - following your dreams. ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன். அவனுக்கு வரும் ஒரு வித்தியாசமான் கனவைத் தொடர்ந்து ஏற்ப்படும் நிகழ்ச்சிகள். சாதாரான கதைதான், ஆனால் கதையினிடையில் வரும் கருத்துக்களும் அதைச்சொன்ன விதமும் கடைசியில் ஒரு மெகா twist உடன் கதையை முடிக்குபோதும் அருமை.

2."VERONIKA DECIDES TO DIE - "வாழ்க்கையில் என்னதான் உள்ளது வழக்கமான மசாலாதானே அதே வேலை, அதே நண்பர்கள், அதே வீடு, அதே ஊர் அதே டிவி- . எனக்கு பிடிக்கவிலலை, நான் சாகப்போறேன்" என்று தற்கொலை செய்து கொள்ளப்போகிறாள் வெரோனிகா !!!!!. ஆனால் கடைசி நேரத்தில் காப்பாற்றப்படுகிறாள் கிட்டத்தட்ட இறந்த நிலையில்.
இப்போது அவளுக்கு கொடுக்கப்பட்ட நேரம் வெறும் 7 நாட்கள்தான். ஆம் 7 நாட்களில் அவள் இறந்த்துவிடுவாள் என அவளைக்காப்பாற்றிய மருத்துவர் சொல்கிறார். ஆனால் அடுத்தடுத்து நடக்கும் சில நிகழ்ச்சிகளால் வெரோனிகாவுக்கு வாழக்கை மேல் ஆசை பிறக்கிறது. ஆனால் என்ன செய்வது ??
இதிலும் கதையினிடையில் வரும் கருத்துக்களும் அதைச்சொன்ன விதமும் அருமை.

3. "BY THE RIVER PEDRE I SAT AND WEPT" இது கொஞ்சம் 'spritual' யும் காதலையும் கலந்தது.

இதில் ALCHEMIST கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று

Iniyan
22-04-2005, 02:16 PM
முதலில் இராகவனுக்கும் நண்பர் பாபுவுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் புதிய சில ஆங்கில நாவலாசிரியர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு.

ராகவன்,

நண்பர் பாபு எழுதியுள்ளதைப் போல சின்ன சின்ன அறிமுகங்கள் கொடுக்கலாமே? அது நல்ல முயற்சியாகத் தெரிகிறது. நானும் செய்கிறேன்.

Iniyan
22-04-2005, 03:03 PM
முதலில் அவரது கதா நாயகர்களில் ஒருவர் பற்றிய சின்ன அறிமுகம்.

ஜான் டோர்ட்மண்டர். இவர் ஒரு ஆண்டி-ஹீரோ. (anti-hero வை தமிழ்ல எபப்டி சொல்றது?)

இவரது பிரதான தொழில் கொள்ளை அடிப்பது. அதற்காக ராபின் ஹீட் ஸ்டைல் எல்லாம் கிடையாது. பெரிய அறிவு ஜீவுயும் கிடையாது. ஏதோ அவர் லெவலுக்கு திட்டம் போட்டு வட்டம் போடும் சின்ன லெவல் திருடன். இவர் ஒரு சின்ன கூட்டத்துக்கு கிட்டத்தட்ட தலைவர் மாதிரி. இவர் திட்டம் திட்டுவார். குழுவின் மற்ற மெம்பர்கள் கொடுக்கப்பட்ட வேலையை செய்வார்கள். முடிவில் கிடைத்ததை பகிர்ந்து கொள்வார்கள்.இவர் மாதிரி ஆளை நம்மூரு பக்கம் அதிர்ஷ்டக்கட்டை என்பார்கள். இவர் உப்பு விக்கப் போனால் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும். இவர் மாவு விக்கப் போனால் பெரும் புயல் காத்து அடிக்கும்.

இவரின் சாகசங்கள் முழுக்க முழுக்க நம்ம அப்புசாமி சீதா பாட்டி கதைகள் மாதிரி தொடர்ந்து வருகின்றன. இதில் எனக்கு ரொம்ப பிடித்தது "Drowned Hopes".

Iniyan
22-04-2005, 03:03 PM
இதோ "மூழ்கிய நம்பிக்கைக்கள்" கதைச் சுருக்கம்.

வழக்கம் போல ஜான் டோர்ட்மண்டர் ஒரு விடிகாலையில் இன்னுமொரு தோல்வியடைந்த கொள்ளை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக போலீசில் சிக்காமல் அதே நேரம் வெறுங்கையுடன் வீடு திரும்புகிறார்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக வீடு திரும்பும் ஜானுக்காக காத்திருப்பது ஜானின் பழைய ஜெயில் செல்மேட். இந்த நபர் இனி வாழ்நாளில் ஜெயிலை விட்டே வெளியில் வரப் போவதில்லை என நினைத்திருக்க (ஆண்டவனை வேண்டி நம்பி இருக்க), ஆனால் இதோ இங்கே உயிருடன் சுதந்திரமாக வந்து ஜானின் வீட்டு சோபாவில் ஜானுக்காக காத்திருக்கிறார்.

Iniyan
22-04-2005, 03:03 PM
ஆம். டிம் ஜான்சனுக்கு ஜானின் உதவி தேவை. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயிலுக்கு டிம் போக காரணமாய் இருந்த ஒரு பெரும் கொள்ளை முயற்சியில் அடித்த பணம் பெரும் தொகை. டிம்முடன் அந்தக் கொள்ளையில் ஈடுபட்ட மற்ற பார்ட்னர்கள் எல்லோரும் "ஏதோ" ஒரு விதத்தில் இல்லாமல் போய் விட இப்போது அந்தப் பணம் முழுக்க முழுக்க டிம்முக்கே சொந்தம். ஜெயிலுக்குப் போகும் முன் டிம் அந்தப் பணம் முழுதையும் நியூ யார்க் மாகாணத்தில் ஒரு சிறு பள்ளத்தாக்கில் உள்ள டவுனில் பத்திரமாகப் புதைத்து வைத்திருக்க அந்த ரகசியம் முபப்து வருடங்களாய் மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கிறது. அண்ணாச்சி டிம் சிறையில் இருக்கும் போது நியூ யார்க் மாகாணம் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் ஒரு நீர்த்தேக்கமாக்கி விட [நம்மூரு நர்மதா நதி பள்ளத்தாக்குல நடந்ததில்லையா? அது மாதிரி] இப்ப அந்த பணமெல்லாம் கலங்கலும் கொசப்பலுமா இருக்குற தண்ணிக்குள்ளாற ஆழத்துல.

Iniyan
22-04-2005, 03:03 PM
டிம்மோட ஐடியா - அந்த நீர்தேக்கத்தை வெடி வச்சி தகர்க்கிறது. அந்த நீர்த்தேக்கம் பக்கத்துல இருக்குற மத்த ஊரு மக்கள பத்தி கவலைப்படாம எல்லாத்தையும் வெள்ளத்துல மூழ்கடிக்கிறது. போலீஸ், அரசாங்கம் எல்லாம் வெள்ள நிவாரண வேலைல மும்பரமா இருக்கும் போது அண்ணாசி அவரோட ரிடர்மெண்ட் பணத்த எடுத்துகிட்டு விடு ஜீட். இந்த வெடி வைக்கிற வேலைக்கு ஜானோட உதவி டிம்முக்கு தேவை.

இப்போ அந்த நீர்த்தேக்கம் பக்கத்துல இருக்க ஒரு சின்ன ஊரு முழுக்க அழிஞ்சி போகும் இந்த வெடி வெடிச்சா. அந்த ஊரு மக்கள் தொகை நெருக்கி 1000 பேர். டிம்முக்கு யாரைப் பத்தியும் எதைப் பத்தியும் கவலை இல்லை. அவருக்கு தேவை அவரோட பணம். அவ்ளோ தான்.

Iniyan
22-04-2005, 03:04 PM
ஆனா ஜான் அப்படி இல்ல. என்னதான் திருடனா இருந்தாலும், அத்தன பேர் சாவ பாக்க மனசில்லாம ஜான் அதே பணத்த எடுக்க வேற திட்டம் போடலாம் என்கிறான். இதில் பிரச்சனை என்னவென்றால் ஜான் வெடி வைக்க உதவ மறுத்தாலும் சரி, இல்ல வேற திட்டம் போட மறுத்தாலும் சரி, டிம் வேற யாரையாவது கூட்டி கிட்டு போயி அந்த பணத்த எடுக்கப் போறது உறுதி. அதனால ஜான் டிம்முக்கு உதவியே ஆக வேண்டிய கட்டாயம்.

ஜானோட கூட்டத்துல இருக்குற மத்த மக்களோட முதல் ஐடியா. ஒரு பெரிய லேசர் துப்பாக்கி வைச்சி அந்த நீர்த்தேக்கத்துல இருக்குற தண்ணிய எல்லாம் ஆவியாக்கி காலி பண்ணிட்டு அப்புறமா அந்த பணத்த எடுக்குறது. இது நடக்காத காரியம்னு படாதபாடு பட்டு எல்லோர் மனசையும் மாத்தி ஜான் வேற பிளான் போட்டு தோற்கிறார். திரும்ப வேற ஐடியா. அதே தோல்வி. வேற வேற ஐடியாக்கள். அதுக்கு நடவுல டிம்முக்கு பொறுமை போய் வெடி வைக்க திட்டம்.

gragavan
25-04-2005, 07:55 AM
அடடே! இங்கே கதையே குடுக்குறீங்க. நல்ல அறிமுகம். தொடருங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
25-04-2005, 08:02 AM
ராகவன்,

நண்பர் பாபு எழுதியுள்ளதைப் போல சின்ன சின்ன அறிமுகங்கள் கொடுக்கலாமே? அது நல்ல முயற்சியாகத் தெரிகிறது. நானும் செய்கிறேன்.கண்டிப்பாக இனியன். நிச்சயமாக இடுகிறேன். பழைய மன்றத்தில் நிறைய கதைகளையும் அறிமுகங்களையும் இட்டேன். அதனாலென்ன இங்கும் இடுகிறேன்.
அன்புடன்,
கோ.இராகவன்

babu4780
25-04-2005, 08:06 AM
ராகவன் / பரம்ஸ் பழைய மன்றத்திலிருந்த பல தலைப்புக்கள் இங்கே கொண்டுவரலாமே..உ.ம். "திரைப்படப்பாடல்கள் வினாடிவினா"

pradeepkt
25-04-2005, 01:36 PM
அதான்யா ரொம்ப முக்கியம்!
அதை எடுத்திட்டு வரணும்

gragavan
26-04-2005, 05:09 AM
கொண்டாங்க. நாங்க என்ன வேண்டாமுன்னா சொல்றோம்.

சரி. சரி. நான் சீக்கிரமா ஆன் ரைசைப் பத்தி எழுதிக்கிட்டு இந்தப் பகுதிக்கு வர்ரேன்.

பிரதீப்பு, நீங்களே திரைப்படப் புதிரைத் தொடங்குறது. இல்லைன்னா நான் வேணுமின்னா........

அன்புடன்,
கோ.இராகவன்

நுதல் என்றால்..........
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=97471#post97471

pradeepkt
26-04-2005, 09:58 AM
நானே தொடங்குறேன்
கவலைய விடுங்க

Iniyan
26-04-2005, 03:17 PM
ராகவன் / பரம்ஸ் பழைய மன்றத்திலிருந்த பல தலைப்புக்கள் இங்கே கொண்டுவரலாமே..உ.ம். "திரைப்படப்பாடல்கள் வினாடிவினா"

உங்கள் கையொப்பத்தை யுனி கோடுக்கு மாற்றலாமே?

ரொம்ப கொசப்பமா தெரியுதே? கவனிக்கலையா? அதே போல உங்களின் புரபலில் தனிமடல் (private message) enable செய்து வைத்தால் நல்லது

நன்றி.

babu4780
26-04-2005, 03:48 PM
நன்றி இனியன், கவனிக்கவில்லை. profile உம் மாற்றிவிட்டேன்.

gragavan
27-04-2005, 06:13 AM
ஆன் ரைஸ் (Anne Rice)

இவரொரு பிரபல எழுத்தாளர். பல பிரபலமான (Best Sellers) புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடை கதைகள் அனைத்தும் வேம்ப்பயர்களை மையப்படுத்தியே இருக்கும்.

வேம்ப்பயர் வரலாறுகள் என்று தொடராக பல புத்தகங்களை எழுதியுள்ளார். கற்பனைக் கதைதான் என்றாலும் ஒரு சுவாரசியமான வரலாற்றுப் புத்தகம் படிப்பது போல இருக்கும்.

வேம்ப்பயர் எப்படித் தோன்றியது என்பதிலிருந்து இந்த நவீன காலத்தில் அவை எப்படியெல்லாம் இருக்கின்றன என்பது வரைக்கும் கற்பனையில் மிக அழகாக எழுதியிருக்கிறார்.

இவையெல்லாம் ஆதியிலிருந்து இன்று வரை என்று வரிசையாக இருக்காது. கதை இன்றைய கால கட்டத்திலிருக்கும். ஆனால் நடுவில் பழைய விஷயங்களும் வரும். அதை அலுக்காத வகையில் சொல்லியிருப்பார்.

வேம்ப்பயர் வரலாறுகளில் (Vampire Chronicles) முதம் புத்தகம் வேம்ப்பயருடன் ஒரு பேட்டி (Interview with a vampire). மிகப் புகழ் பெற்று பிரபலமானது. இது திரைப்படமாகவும் வந்தது. பிராட் பிட், டாம் குரூஸ், ஆண்டானியோ பெண்டரேஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மிகவும் அருமையான படமும் கூட.

அன்புடன்,
கோ.இராகவன்

Iniyan
27-04-2005, 08:28 PM
ராகவன் !

அட உங்க டேஸ்ட் - வேம்பயர் கதையிலயா? நான் இது வரை ஒண்ணும் படிச்சதில்லை. ஸ்டீபன் கிங்கோட அமானுஷ்ய கதைகள் படிச்சதோட சரி.

நீங்க நல்லவிதமா சொல்றீங்களேன்னு முயற்சித்துப் பார்க்கிறேன்.

நன்றி.

Iniyan
27-04-2005, 08:37 PM
நான் இப்போ படித்து முடித்த புத்தகம் Ira Levin எழுதிய Boys from Brazil. பரவாயில்லை.

ஹிட்லரின் ஆட்சியில் concentration campல் பல விதமான குரூர பரிசோதனைகளைச் செய்து பார்த்து பின் ஹிட்லரின் வீழ்ச்சியின் போது தப்பி ஓடி இன்னும் பிடிபடாத டாக்டர் மெங்கலே என்பவர் தென் அமெரிக்காவின் பிரேசிலில் இருந்து கொண்டு பல ஜீன் சம்பந்தமான பரிசோதனைகள் செய்து க்ளோனிங் முறையில் வெற்றி கண்டு இறந்து போன ஹிட்லரின் உடல் திசுக்களில் இருந்து 92 சிறு குழந்தைகளை அதாவது சின்ன ஹிட்லர்களை உருவாக்குகிறான். அந்தக் குழந்தைகளை ஒரு தத்து கொடுக்கும் நிறுவனத்தின் வழியாக உலகம் எங்கும் பல நாடுகளில் தத்துக் கொடுக்கிறார்கள். இதில் தத்து எடுக்கும் குடும்பம் கிட்டத்தட்ட ஒரிஜினல் ஹிட்லரின் குடும்பம் போல இருக்குமாறும் பார்த்துக் கொள்கிறார்கள். அதே ஜீன், அதே குடும்ப சூழ்நிலை என இந்த பையன்கள் வளரும் போது அதில் பாதிக்குப் பாதியாவது ஒரிஜினல் ஹிட்லர் போல வர மாட்டார்களா என்ற நம்பிக்கை. இப்படி பல ஹிட்லர்கள் உலகமெங்கும் உருவாகி வர சரியான சந்தர்ப்பம் வரும் போது ஆங்காங்கே பழைய ஹிட்லர் ஆட்சி மலரும் என திட்டம். இதை கண்டுபிடிக்க முயற்சிப்பவர் ஒரு வயதான நாஜிகளை தேடுபவர் என கதை.

gragavan
28-04-2005, 05:05 AM
ராகவன் !

அட உங்க டேஸ்ட் - வேம்பயர் கதையிலயா? நான் இது வரை ஒண்ணும் படிச்சதில்லை. ஸ்டீபன் கிங்கோட அமானுஷ்ய கதைகள் படிச்சதோட சரி.

நீங்க நல்லவிதமா சொல்றீங்களேன்னு முயற்சித்துப் பார்க்கிறேன்.

நன்றி.இல்லை இனியம். வேம்ப்பயர் கதைகளிலும். நான் நிறைய வகைகளைப் படிப்பேன். அதிலொன்று இது. இப்பொழுது படித்துக் கொண்டிருப்பதால் அதைப் பற்றி முதலில் சொன்னேன்.
வழக்கமாக வேம்ப்பயர் கதைகள் என்றால்......வேம்ப்பயர்கள் மனிதர்களைத் தாக்கும். குறிப்பாக இளம் பெண்களை. அவைகளை அழித்து கதாநாயகன் காப்பாற்றுவதுதான் கதையாக இருக்கும். ஆனால் இது வேறு மாதிரியானது. வேம்ப்பயர்கள்தான் கதாநாயகர்கள். நாயகிகள். அவர்களுக்கும் ஏற்படும் உறவுகள். அதன் பிரிவுகள். அவர்கள் இன்றைய சூழ்நிலைக்கு எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றார்கள். அவர்களது ஏக்கங்கள். சோகங்கள். இப்படியெல்லாம் போகும். எல்லாப் புத்தகங்களையும் ஒரேடியாகப் படிக்கக் கூடாது. முதல் புத்தகம் முடித்து விட்டு, வேறு புத்தகங்களைப் படித்து விட்டு அடுத்த புத்தகத்திற்குப் போக வேண்டும்.
அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
28-04-2005, 05:07 AM
நான் இப்போ படித்து முடித்த புத்தகம் Ira Levin எழுதிய Boys from Brazil. பரவாயில்லை.
கதையின் கரு நன்றாக இருக்கிறது. இந்தியாவில் கிடைக்குமா என்று தெரியவில்லை. கடைகளில் தேடிப் பார்க்கிறேன். எத்தன டாலர் விலை?
அன்புடன்,
கோ.இராகவன்

மாரப்பனின் நிபந்தனைகள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=99506#post99506

babu4780
12-05-2005, 08:24 AM
FIVE POINT SOMEONE: what not to do at IIT:

ஆசிரியர்: சேத்தன் பகத். : IIT Alumuni. தன்னுடய IIT அனுபவத்தை கதையாக வடித்துள்ளார். கடந்த ஆண்டு சக்கைபோடு போட்ட நாவல்.
கல்லூரி லூட்டிகள், ராகிங், ரொமன்ஸ், சென்டிமன்ட் என அனைத்து ஏரியாக்களிலும் சதம் அடித்துள்ளார் இந்த ஆசிரியர்/மாணவர்

எனக்கு நாவல்கள் படிக்கும் பழக்கம் சுத்தமாகக் கிடையாது. எதோ ஒரு நண்பன் சொன்னான் என இதை படிக்கப்போயி ஒரே மூச்சில் ஓவர் நைட்டில் படித்து முடித்தேன். முடித்த பிறகு இது போன்ற நாவல் இனிமேல் படிக்க முடியுமா என ஏங்கியது வேறு விசயம்.

www.fivepointsomeone.com (http://www.fivepointsomeone.com)

-பெரி

pradeepkt
12-05-2005, 08:33 AM
FIVE POINT SOMEONE: what not to do at IIT:

ஆசிரியர்: சேத்தன் பகத். : IIT Alumuni. தன்னுடய IIT அனுபவத்தை கதையாக வடித்துள்ளார். கடந்த ஆண்டு சக்கைபோடு போட்ட நாவல்.
கல்லூரி லூட்டிகள், ராகிங், ரொமன்ஸ், சென்டிமன்ட் என அனைத்து ஏரியாக்களிலும் சதம் அடித்துள்ளார் இந்த ஆசிரியர்/மாணவர்

எனக்கு நாவல்கள் படிக்கும் பழக்கம் சுத்தமாகக் கிடையாது. எதோ ஒரு நண்பன் சொன்னான் என இதை படிக்கப்போயி ஒரே மூச்சில் ஓவர் நைட்டில் படித்து முடித்தேன். முடித்த பிறகு இது போன்ற நாவல் இனிமேல் படிக்க முடியுமா என ஏங்கியது வேறு விசயம்.

www.fivepointsomeone.com (http://www.fivepointsomeone.com)

நானும் பெரியிடமிருந்து வாங்கிப் படித்துவிட்டு இப்போது நானே சொந்தமாகவும் ஒரு புத்தகம் வாங்கித் திரும்பப் படித்தேன்.
என்னமோ நான் செஞ்சத எல்லாம் ஒரு டெஹல்கா காமிரா வச்சுப் படம் பிடிச்சது மாதிரி இருந்திச்சு. :D

gragavan
12-05-2005, 11:37 AM
இந்தப் புத்தகத்தைப் பற்றி நண்பர்களும் சொன்னார்கள். நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் படிக்க வேண்டும்.

பிரதீப்பு....அடுத்த படிக்க ஏங்குறதுக்கு....உங்க அனுபவங்கள வெச்சே படைக்கலாமே! அள்ளக் குறையாத சரக்காச்சே!

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
12-05-2005, 11:41 AM
பிரதீப்பு....அடுத்த படிக்க ஏங்குறதுக்கு....உங்க அனுபவங்கள வெச்சே படைக்கலாமே! அள்ளக் குறையாத சரக்காச்சே!


சரியாப் போச்சு. வெளங்கிரும்யா?

gragavan
16-05-2005, 05:20 AM
சரியாப் போச்சு. வெளங்கிரும்யா?பிரதீப், கண்டிப்பா வெளங்கும். நிச்சயமா வெளங்கும். உங்க தெறம ஒங்களுக்குத் தெரியாது. நீங்க அனுமாரு மாதிரி.....

babu4780
16-05-2005, 05:59 AM
பிரதீப், கண்டிப்பா வெளங்கும். நிச்சயமா வெளங்கும். உங்க தெறம ஒங்களுக்குத் தெரியாது. நீங்க அனுமாரு மாதிரி.....
இப்பத்தான், அங்கன சுவேதா வேற மாரினு சொன்னாவ..

pradeepkt
16-05-2005, 06:10 AM
இப்பத்தான், அங்கன சுவேதா வேற மாரினு சொன்னாவ..

ஏல என்ன நக்கலா? வந்தேன்... தாளிச்சுருவேன். :)
ராகவா, பேசாம சுயசரிதய எழுதிருவோம்யா! இந்த பெரி மாதிரி பயல்களோட இன்னொரு பக்கத்தையும் எழுதணுமேன்னு நெனச்சாத்தேன் வருத்தமா இருக்கு.

babu4780
16-05-2005, 06:14 AM
ஏல என்ன நக்கலா? வந்தேன்... தாளிச்சுருவேன். :)
ராகவா, பேசாம சுயசரிதய எழுதிருவோம்யா! இந்த பெரி மாதிரி பயல்களோட இன்னொரு பக்கத்தையும் எழுதணுமேன்னு நெனச்சாத்தேன் வருத்தமா இருக்கு.
சுயசரிதயா... கோவிச்சுக்காதீங்க சார்.. கிளின்டன் எழுதினாலும் எழுதினாரு..எல்லாருக்கும் தைரியம் வந்திருச்சி போல..(இதை கவுண்டர் ஸ்டைலில் படிக்கவும்!!)

BTW யாராவது "MY LIES" சாரி "MY LIFE" படிச்சீங்களா. ??

gragavan
16-05-2005, 07:01 AM
இப்பத்தான், அங்கன சுவேதா வேற மாரினு சொன்னாவ..சோ....மாரின்னு சொன்னது சுவேதாவா? ம்ம்ம்ம்ம்

gragavan
16-05-2005, 07:09 AM
ஏல என்ன நக்கலா? வந்தேன்... தாளிச்சுருவேன். :)
ராகவா, பேசாம சுயசரிதய எழுதிருவோம்யா! இந்த பெரி மாதிரி பயல்களோட இன்னொரு பக்கத்தையும் எழுதணுமேன்னு நெனச்சாத்தேன் வருத்தமா இருக்கு.சுயமாவது சரிதையாவது? இன்னைக்குச் சுயசரிதைன்னு எழுதுறதெல்லாம் சுயமா சிந்திச்சு எழுதுன சரிதமாத்தான் இருக்கு. இருந்தாலும் நீங்களும் எழுதுங்க. நல்லா வரும்.
சென்னைக்கு போனப்ப சண்முக சுந்தரனார் எழுதுன சிலம்பு - திறனாய்வு புத்தகம் வாங்கினேன். மேலோட்டமா ஒரு பாட்டம் படிச்சிட்டேன். இன்னும் ஆழமாப் படிக்கனும். இப்பெல்லாம் தூக்கம் முழிப்பு எல்லாம் சிலப்பதிகாரந்தாம். மொத அத்தியாயத்துக்குப் பேரும் வெச்சாச்சி....மிளகுக் கொடியும் அழகுக் கொடியும். உள்ள உருவாகிக் கிட்டே இருக்கு. இன்னுங் கொஞ்ச வரலாறு தெரிய வேண்டியிருக்கு. யாராவது சேரர் வரலாறு உள்ள புத்தகம் இருந்தா கொடுத்து உதவுங்கய்யா! புண்ணியமாப் போகுன். புத்தகம் வெளி வந்தா நன்றின்னு ஒங்க பேரப் போடுறேன்.
நேத்து செயா டீவில குச்பூ நடத்துற நிகழ்ச்சில கேள்வி. தமிழில் முதல் காப்பியம் எது? அதுக்கு ஒரு அக்கா ராமாயண்-னு வெட சொல்லிச்சு. அது தப்புன்னு சொல்லி சிலப்பதிகாரமுன்னு சொன்ன அடுத்த அணிக்கு மார்க்கு குடுத்தாங்க. அடக் கொடுமையேன்னு தலைல அடிச்சிக்கிட்டேன். மொதக் காப்பியம் யாருக்குத் தெரியும்? அதுதான் கடல்ல போயிருச்சே. ஐம்பெருங்காப்பியங்கள்ள மொதல் காப்பியம்னா அதுவும் சீவக சிந்தாமணி. சமண நூல். அரசனாகிய சீவகனின் வாழ்வினைச் சொல்லுற நூல். கடைசில சாமியாரப் போயிர்ரான் அந்தப் பய.
சிலப்பதிகாரம் ரெண்டாவது. அவரும் சாத்தனாரும் பேசி வெச்சிக்கிட்டு ரெட்டக் காப்பியம் எழுதுனாங்க. இவரொரு பாதி. அவரொரு பாதி. ஆனா சிலப்பதிகாரந்தான் நின்னுச்சி.

babu4780
27-05-2005, 07:15 AM
Digital Fortress :

"Davinci Code" என்ற உலக ஹிட் நாவல் கொடுத்த Don Brown னின் மற்றுமொரு திரில்லர்.
இதில் அவர் எடுத்துக்கொண்டுள்ள சப்ஜெக்ட் அமெரிக்க உளவு அமைப்பும் அதன் அரிய கண்டுபிடிப்பான Transalator என்கின்ற Decoding கருவியும். உலகில் எந்த மூலையில் எலக்ட்ரானிக் செயிதிப் பரிமாற்றம் நிகழ்ந்தாலும் அது Transalator ரிலிருந்து தப்பிக்க இயலாது. அப்படிப்பட்ட ஒரு அசாத்திய கண்டுபிடிப்பிற்கு ஏற்படும் சோதனை தான் கதை.

சும்மா சொல்லக்கூடாது மனுஷர் Encryption, algorithm, mutattion String , virus என பூந்து விளையாடுகிறார்.கதைதானென்றாலும் மிகவும் ரசிக்கத்தக்க வகையிலும் , சிந்திக்கத்துண்டும் வகையிலும், எதிர்பாரா திருப்பங்களுடனும் , பல technical உதாரணங்களுடன், ஒரு திரில்லருக்குத்தேவையான அனத்து அம்சங்களும் சேர்த்துப் படைத்துள்ளார்.

Davinci Code அளவுக்கு இல்லையென்றாலும், ஒரு அருமையான திரில்லர்..
-பெரி

pradeepkt
27-05-2005, 08:02 AM
இதெல்லாம் என்னை மாதிரி ஆளுகளுக்குக் கூடப் புரியுமா?
இப்படித்தேன் மேட்ரிக்ஸுனு ஒரு ஆங்கிலப் படம் பாத்துக் கொஞ்ச நாளு கிறுக்காத் திரிஞ்சேன்.

gragavan
27-05-2005, 08:37 AM
மேட்ரிக்ஸா....அதோட கத எனக்கு இன்னம் புரியலையா! அதுனால அதப் பாகக்த் தொடங்குனதுமே எனக்குத் தூக்கம் வந்திரும். அளவுக்கு மிஞ்சிய கற்பனை. ஆனா அது கூட 13th floor ங்குற பழைய படத்தோட கரகாட்டக்காரன்னு சொன்னாங்க. அந்தப் படத்தோட விசிடியும் எங்கிட்ட இருக்கு. ஆனா இன்னமும் பாக்கலை. இந்த வாரம் பாத்துரனும்.

babu4780
27-05-2005, 08:39 AM
இதெல்லாம் என்னை மாதிரி ஆளுகளுக்குக் கூடப் புரியுமா?
இப்படித்தேன் மேட்ரிக்ஸுனு ஒரு ஆங்கிலப் படம் பாத்துக் கொஞ்ச நாளு கிறுக்காத் திரிஞ்சேன்.
கதையோடு சேர்ந்து பல விசயங்கள் சொல்வதால் எல்லாருக்கும் புரியும்.

உண்மைதான் நீங்கள் சொன்ன மேட்ரிக்ஸ் எனக்கும் இன்னும் புரியல. முதல் பகுதி ஒரளவுக்கு விளங்குச்சு அதுக்கப்புறம் சுத்தம்..சரி எதுக்கு அதிகமா மூலைக்கு வேலைய குடுத்துட்டுனு அடுத்த பகுதிகள பார்க்கவேயில்ல...

gragavan
27-05-2005, 08:40 AM
அது சரி. யாராச்சும் கிம் படிச்சதுண்டா? ருட்யார்டு கிப்ளிங் எழுதியது.

Iniyan
06-09-2005, 06:56 PM
மேட்ரிக்ஸ் பட மேட்டர்ல நானும் நண்பர் இராகவனும் ஒண்ணு. இது நாள் வரைக்கும் ஒரு நா கூட அந்த படத்த முழுசா பாத்தது கிடையாது. (ஆரம்பிச்சு பத்தே நிமிசத்துல தூக்கம் கண்ண அழுத்துனா என்ன செய்யிறதாம்?)