View Full Version : லாகின் பிரச்சினைகள்:
பாரதி
20-04-2005, 03:46 PM
மன்ற மேற்பார்வையாளர்களுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள்..
மைதிலியும், தேம்பாவணியும் தமிழ்மன்றத்தில் லாகின் செய்ய முடியவில்லை என்று கூகிள் தமிழ்மன்ற குழுவிற்கு மடல் அனுப்பி இருக்கிறார்கள். மைதிலி மின்னஞ்சல் முகவரி கொடுத்தும் பிழை என்று செய்தி வருவதாக சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் இருவருடைய மின்னஞ்சல் முகவரிக்கும் கடவுச்சொல் குறித்தும், லாகின் குறித்தும் செய்தி அனுப்ப முடியுமா...?
மிக்க நன்றி.
பரம்ஸ்
20-04-2005, 05:13 PM
நான் கூட புதிய யுனிகோட் மன்றத்திற்கு வருவதற்கு முன்பு ரொம்பவும் கஷ்டப்பட்டேன், இறுதியில் நண்பர் ராஜ்குமார் உதவியோடு மன்றம் வர முடிந்தது, பழைய மன்றத்தில் இன்னமும் இருப்பவர்கள் மன்றம் வரமுடியவில்லை என்றால் ராஜ்குமாருக்கு தனிமடலில் இமெயில் ஐடி கொடுக்க சொல்லுங்க, மீதியை அவர் பார்த்துக் கொள்வார்.
smaiva
14-06-2005, 06:39 PM
எனக்கும் அந்த பிரச்சினை உள்ளது. உதவுங்களேன். siva எனது லாகின். smaiva@gawab.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா?
அறிஞர்
15-06-2005, 02:54 AM
smaiva (siva) விரைவில் இராசகுமார் வந்து சரி செய்வார்... ஒரு சில தினங்கள் காத்திருங்கள்...
இராசகுமாரன்
19-06-2005, 01:34 PM
எனக்கும் அந்த பிரச்சினை உள்ளது. உதவுங்களேன். siva எனது லாகின். smaiva@gawab.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா?
நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றியிருக்கிறீர்கள். அங்கே உங்கள் hotmail முகவரி உள்ளது. அதை gawab.com முகவரிக்கு மாற்ற விரும்புகிறீர்களா அல்லது hotmail-லில் உபயோகிக்க விரும்புகிறீர்களா என தெரிவிக்கவும்.
Aren789
19-06-2005, 02:25 PM
எனக்கும் அந்த பிரச்சனை இருந்தது. என்னுடைய மின்னஞ்சல் முகவரி சரியில்லை என்றது. தலைவருக்கு தனிமடல் அனுப்பி அவர் உதவி செய்தும் என்னால் உள்ளே வரமுடியவில்லை. இன்று வேறு பெயரில் நுழைந்திருக்கிறேன்.
அறிஞர்
20-06-2005, 03:39 AM
இன்னும் ஒரு சில நாளில் சரியாகிவிடும் ஆரேன்.
puppy
21-06-2005, 06:02 AM
ஆரென் உங்களது தனிமடலை பாருங்கள்......இன்னும் பிரச்சனை இருப்பின் எனக்கு தெரிவியுங்கள்..
என்னால் நேரடியாக
நமது தளப்பக்கங்களில் யுனிகோடு கொண்டு எழுத முடியவில்லையே ஏன்?
நோட்பேடில் தட்டி வெட்டி இங்கே ஒட்டுகிறேன்..
அறிஞர்
21-06-2005, 08:48 AM
பூ தாங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது... மற்ற யாரும் இது மாதிரி பிரச்சனை பற்றி கூறவில்லை.....
எந்த பக்கங்கள் என தெரிவிக்க முடியுமா... சரி செய்ய முயலுகிறோம்.
puppy
21-06-2005, 09:48 AM
பூ என்ன கணணி என்ன பிரவுசர் எல்லாம் சொல்லவும்.....என்ன பிரச்சனைன்னு பார்க்கிறேன்
vBulletin® v3.7.2, Copyright ©2000-2009, Jelsoft Enterprises Ltd.