PDA

View Full Version : மலேசிய செய்திகள் செவ்வாய்கிழமை ஏப்ரல் 19,2005Mano.G.
19-04-2005, 05:51 AM
கட்டண உயர்வு

Feri சேவைக் கட்டணத்தை எதிர்வரும் மே 1 திகதியிலிருந்து, 10 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை உயர்த்த போக்குவரத்துத் துறை முடிவெடுத்துள்ளதாக அதன் அமைச்சர் Datuk Seri Chan Kong Choi தெரிவித்தார்.

லாபத்தை ஈட்டுவதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் அவ்வமைச்சு பல்வேறு வகையான வசதிகளைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தருவதற்காகவே இக்கட்டண உயர்வு
அமல்படுத்தப்படவிருப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

Penang Port Sdn Bhd என்னும் நிறுவனம் இந்த Feri சேவையை பல ஆண்டுகளாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


-----------------------------------------------------------------


விவசாயத்துறை மேம்பாட்டிற்குப் பயிற்சி பெற்ற அதிகாரிகள்

நாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கும்,நவீனமாக்குவதற்கும் சுமார் 3,000 பயிற்சி பெற்ற அதிகாரிகள் தேவைப்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.

விவசாயத்துறையினை மறுசீரமைப்பு செய்வதன் தொடர்பில் அத்துறைக்கு மேலும் அதிகாரிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

இது மட்டுமின்றி Mardi-கழகத்திற்கு சுமார் 500 ஆய்வு அதிகாரிகள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால் இந்த பதவிகளுக்கு உண்டான கல்வித்தகுதிகளைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே
பணியமர்த்தபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Muzium Negara-வில் விவசாயம் தொடர்பான கண்காட்சி ஒன்றைத் தொடக்கி வைத்த
போது அவ்வாறு தமது உரையில் குறிபிட்டார்.


-----------------------------------------------------------------


(felda) குடியிருப்பு மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு

Felda குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு முழு கவனம் செலுத்தும் என்று துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.

Felda குடியிருப்பு மக்களின் வாழ்க்கைத்தரம் தற்பொழுது குறிப்பிட்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளபோதும், அங்கு சமூக பிரச்சினைகள் பெருமளவில் உருவாகி வருவதாக அவர் தெரிவித்தார்.

எனவே, அதன் தொடர்பாக தீர்வு காண்பதற்கு வெகுவிரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், felda குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் தற்பொழுது 1.9 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


-----------------------------------------------------------------


திட்டம் முழுமையடைந்த பின்பே நடவடிக்கை நிறுத்தம்

கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட OPS TEGAS நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் முழுமையான திருப்தியடைந்த பிறகே அந்நடவடிக்கை நிறுத்தப்படும் என உள்நாட்டு விவகார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் Datuk Paduka Abdul Rahman Ibrahim தெரிவித்தார்.


அனைத்து சட்டவிரோத வெளிநாட்டுப் பிரஜைகளும் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரே இந்நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்


-----------------------------------------------------------------

விபத்தில் ஆடவர் மரணம்

Jalan Tanjung Bungah-விலுள்ள வியாபாரி ஒருவர் குளிர்பான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் கார் ஒன்று அவரை மோதியதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் 4 மணி நேரத்திற்கு பின் மரணமுற்றார்.

சுமார் 49 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் பினாங்கு மருத்துவமனையில் மரணமுற்றதாக பொது போக்குவரத்து போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டை இழந்த கார் அவ்வாடரை மோதியதால் பலத்த காயங்களுக்கு இலக்கான அவர் மரணமுற்றதாக அவர் மேலும் கூறினார்.


-----------------------------------------------------------------


பிரதமர் திரங்கானு பயணம்

பிரதமர் படாவி மற்றும் துணைப் பிரதமர் நஜிப் ஆகியோர் அரை நாள் பயணமாக நேற்று Kuala Terengganu சென்றனர்.

அவர்களை திரங்கானு Menteri Besar Datuk Seri Idris Jusoh, அவரது துணைவியார் Puan Seri Cik Kamariah Zakaria, மாநில சட்டமன்ற பேச்சாளர் Datuk Che Mat Jusoh, அரசாங்க அதிகரிகள் மற்றும் Barisan Nasional தலைவர்கள் வரவேற்றனர்.

பிரதமர் Hulu Terengganu-வில் Semai Bakti என்ற நிகழ்ச்சியை அவர் நேற்று தொடக்கி வைத்தார்.


-----------------------------------------------------------------

சூறைக்காற்றில் சேதமடைந்த தேசிய சேவைப் பயிற்சி முகாம்

Taman Templer தேசிய சேவை பயிற்சி முகாம் பகுதிகளில் வீசிய கடுமையான காற்றில், அம்முகாம்களின் கூரைகள் விழுந்து ஐந்து மாணவர்களும், இரு பெற்றோர்களும் காயமுற்றனர்.

இச்சம்பவம் நேற்று முன் தினம் மாலை 5 மணி அளவில், ஏற்பட்டதாக Gombak மாவட்ட
போலிஸ் தலைவர் ACP Mohd Azmi Mohd Nazri தெரிவித்தார்.

காயமுற்ற ஏழு பேரும் தற்போது வெளி நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.


-----------------------------------------------------------------


மின்கசிவால் தீ விபத்து

கிள்ளான் Connaught மின் உற்பத்தி நிலையத்தில், எண்ணை கசிவுகள் ஏற்பட்டதால் அதன் transformer வெடித்து தீப்பற்றியது என சிலாங்கூர் Tenaga Nasional Berhad உயர் நிர்வாகி Amir Nordin Abd Aziz தெரிவித்தார்.

இச்சம்பவம், நேற்று முன் தினம் மாலை ஐந்து மணி அளவில் ஏற்பட்டதாகவும், இதனால் மின்சாரத்தடை ஏதும் ஏற்படவில்லை என அவர் கூறினார்.

அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, தீயணைப்பு வண்டிகளும், வீரர்களும் அவ்விடத்துக்கு விரைந்து முப்பது நிமிடத்தில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்ததாகவும், தெற்கு கிள்ளான் தீயணைப்பு அதிகாரி Ghafar Mat Zin தெரிவித்தார்.

இச்சம்பவத்தில், உயிருடர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
_____________________________________________________________________

முதலில் இந்தியா,பின்பே பாகிஸ்தான்

இந்தியா மேற்கொண்டு வரும் ஏவுகணை சோதனைகளை முதலில் நிறுத்தினால் பாகிஸ்தானும் உடனடியாக நிறுத்த தயார் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூறினார்.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர், நேற்று முன் தினம் டெல்லியில் இந்தியா பாகிஸ்தான் ஆடிய கிரிக்கெட் போட்டியை பார்த்தார்.

இதன் பிறகு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப்பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே தொழில் வர்த்தக உறவை மேம்படுத்தவும், கூடுதலான பஸ்,ரெயில்களை இயக்கவும் உடன்பாடு ஏற்பட்டது.

காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச்சு எழுந்த போது இந்திய எல்லைகளை மாற்றியமைப்பது நடக்காத காரியம் என பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக கூறிவிட்டதாக இந்திய அரசின் தகவல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க முடியாது: சீனா

சீனாவில் ஜப்பானுக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரங்களுக்காக, தாங்கள் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சீனாவின் Shanghai நகரில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் மீதும், ஜப்பானியர்களின் கடைகள், நிறுவனங்கள் மீதும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், ஜப்பானிய பிரதமரின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

ஜப்பானியர்களுக்கு எதிரான இந்நடவடிக்கைகளுக்காக சீனா மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், ஜப்பானியர்களுக்கு நஷ்ட ஈடு அளிக்குமாறும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் Nobuthaka Simura எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சர் Lee Sausing, நடக்கும் விஷயங்களுக்கு ஜப்பானே காரணம் எனவும், இரண்டாம் உலகப் போரின் போது நடந்த சம்பவங்களுக்காக ஜப்பான் தான் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், சீனா மன்னிப்பு கேட்காது எனவும் அவர் கூறினார்.


-----------------------------------------------------------------


இலங்கையில் நோர்வே தூதர்

சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், வடகிழக்கு பகுதியை சீரமைப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நார்வே அமைதி தூதர் Eric Solheim இலங்கை வந்துள்ளார்.

அவர் அதிபர் சந்திரிகா, பிரதமர் ராஜபக்சே, இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில்
விக்ரம்சிங்கே, மற்றும் விடுதலைப்புலி தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இதனிடையே, மட்டக்களப்பு பகுதியில், விடுதலை புலிகளுக்கும் கருணா பிரிவிற்கும் இடையே நடந்துவரும் மோதல்கள் குறித்தும் அவர்கள் விவாதிக்கவுள்ளனர்.


-----------------------------------------------------------------


தலிபான்கள் வெடிக்கச் செய்த அமெரிக்க லாரிகள்

ஆப்கானிஸ்தானிலுள்ள Kandahar-ரில் தலிபான் தீவிரவாதிகள் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெடித்ததில் அமெரிக்க ராணுவ முகாமுக்கு எண்ணெய் ஏற்றிச் செல்லும் ஐந்து டேங்கர் வாகனங்கள் வெடித்துச் சிதறின.

இச்சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று லாரி ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர்.

டேங்கர் லாரி திடீரென வெடித்ததால் அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற லாரிகளும் வெடித்துச் சிதறியதாக ராணுவ அதிகாரிகள் கூறினர்.

தலிபான் தீவிரவாதிகளே வெடிகுண்டுகளைப் புதைத்து வைத்து லாரிகளை வெடிக்கச் செய்தனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


-----------------------------------------------------------------


பிலிப்பைன்ஸில் போக்குவரத்து வேலைநிறுத்தம்

பிலிப்பைன்ஸில் பொது போக்குவரத்து நடத்துனர்கள் நேற்று மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தில் மணிலா மற்றும் பிற நகரங்களின் போக்குவரத்து நிலைக்குத்தியது.

எண்ணெய் விலையேற்றத்தைத் தொடர்ந்து போக்குவரத்து கட்டணத்தை 50 சதவிகிதம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்நாட்டு போக்குவரத்து இலாகா தற்காலிகமாக உல்லாச பயண பஸ்களைப் பயன்படுத்தி
நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்துள்ளது.

_____________________________________________________________________


வளரும் நாடுகளில் நோய்களால் ஆண்டுதோறும் 11 மில்லியன் குழந்தைகள் இறப்பு
வளர்ந்து வரும் நாடுகளில் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 11 மில்லியன் குழந்தைகள் நோய்கள் மற்றும் பல்வேறு காரணங்களினால் இறப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

தொற்றுநோய்,வயிற்றுப்போக்கு,அம்மை,மலேரியா போன்ற நோய்களால் குழந்தைகள் அதிகம் இறப்பதாக அவர் தெரிவித்தார். உலக வளர்ச்சி குறித்து கண்காணிக்கும் அதிகாரிகள் அவ்வாறு தெரிவித்தனர்.

1990 ஆம் ஆண்டு தீட்டப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி அடுத்த 25 ஆண்டுகளில் குழந்தை இறப்பு எண்ணிக்கை தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கிடையில் பெரிதும் வேறுபடுவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாடுகளுக்கு உள்ளேயே சமுதாயத்தில் ஏற்ற-இறக்கங்கள் நிலவுவதே இதற்குக் காரணம் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

உலகம் முழுவதும் ஏறத்தாழ 100 மில்லியன் குழந்தைகள் கல்வி கற்கப் பள்ளிக்குப் போகாமல் இருப்பதாகவும் அவர்களுள் 60 சதவீதம் பேர் பெண்கள் என்றும் உலகவங்கி தெரிவித்துள்ளது.

பரஞ்சோதி
19-04-2005, 07:59 AM
அண்ணா, நன்றி எப்படி சொல்வது என்று தெரியவில்லை.

நீண்ட நாட்களுக்குபின்பு மலேசிய, உலக செய்திகள் படித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

விளையாட்டு செய்திகள் இல்லையே ஏன்? அதுவும் யூரோ கால்பந்து கோப்பை பற்றி ஒன்றும் சொல்லாதது ஆச்சரியமாக இருந்தது.

gragavan
20-04-2005, 05:05 AM
உலக செய்திகள் பயனுள்ளவையாக உள்ளன. மனோ நன்றிகள் பல.

அன்புடன்,
கோ.இராகவன்

Mano.G.
22-04-2005, 06:08 AM
சாலை நெரிசலைக் குறைக்கும் நோக்கில் விரிவாக்கப்பணிகள்

சாலை நெரிசலைக் குறைக்கும் நோக்கில் Seremban-Senawang வடக்கு தெற்கு நெடுஞ்சாலை விரிவாக்கப்பணித் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது என பொதுப்பணி அமைச்சர் Datuk Seri S.Samy Vellu தெரிவித்தார்.

அதேபோன்று Senawang-Ayer Keroh ,Rawang-Tanjung Malim ,Tanjung Malim-Slim River- ஆகிய வடக்கு தெற்கு விரைவு நெடுஞ்சாலைகளின் இதர பிரிவுகளின்
நிர்மாணிப்புப் பணிகளும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Jelapang toll-சாவடியின் இடத்தை மாற்றியமைக்கும் பணி உட்பட அனைத்து விரிவாக்க பணிகளுக்கும் சுமார் 900 million செலவு செய்யப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

மலாக்கா Ayer Keroh-விலுள்ள அனைத்துலக வாணிப மையத்தில் மஇகா பிரதிநிதிகளின் ஒன்று கூடல் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.


------------------------------------------------------------


அணிசேரா நாடுகளின் தலைமையில் மலேசியப்பணிகள்

NAM எனப்படும் அணி சேரா நாடுகளின் தலைமை பதவியை வகிக்கும் மலேசியா, அவ்வமைப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என வெளியுறவு விவகார அமைச்சர் Datuk Seri Syed Hamid Albar தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் ஏற்பாடு செய்யப்படவிருக்கும் NAM- வர்த்தகக் கருத்தரங்குகள், NAM அமைச்சர்கள் கூட்டம், பெண்களின் முன்னேற்றம் தொடர்பான கருத்தரங்குகள் போன்றவை மேம்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியே என அவர் விளக்கினார்.

இதுபோன்ற முயற்சிகளும் நடவடிக்கைகளும் NAM அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என மலேசியா நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

Asia- Africa உச்சநிலை மாநாட்டில் அமைச்சர்கள் அளவிலான விவாதத்தின் போது அமைச்சர் Albar அவ்வாறு தெரிவித்தார்.


----------------------------------------------------------------
பேராவில் சட்டவிரோத மரவெட்டு இல்லை

பாதுகாக்கப்பட்டு வரும் TASIK TEMENGGOR காடுகளில் சட்டவிரோத வெட்டு மரத் தொழில் தற்பொழுது நிகழ்வதில்லை என பேராக் மாநில Menteri Besar Datuk Seri Tajol Rosli Ghazali தெரிவித்தார்.

அனுமதிக்கப்பட்ட வெட்டு மரத் தொழில்களே அங்கு தற்பொழுது நடந்து வருவதாகவும், சட்டவிரோத வெட்டு மர தொழில்கள் நிகழாமல் காடுகளைப் பாதுகாப்பதில் மாநில வன இலாகா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அங்கு அச்சம்பவம் நிகழ்வதில்லை என அவர் தெரிவித்தார்.


----------------------------------------------------------------


திருட வந்தவர் கொலை

Taman Cheras Jaya பகுதியில் அமைந்துள்ள Reka Cipta Jais Sdn Bhd எனப்படும் தொழிற்சாலை ஒன்றில் இரும்பு திருட வந்த இந்திய ஆடவர் ஒருவரை அங்குள்ள இரு பாதுகாவலர்கள் இரும்பால் தாக்கியதில் ,அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றார்.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் தமது 5 நண்பர்களுடன் இத்திருட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக காஜாங் வட்டார தலைமை போலீஸ் அதிகாரி ACP Mohamad Noor Hakim Kassim தெரிவித்தார்.

இத்திருட்டுக் கும்பல் காஜாங் வட்டாரத்தில் வெகு நாட்களாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிப்பதாகவும், இதன் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.


----------------------------------------------------------


தமிழ்ப்பள்ளிக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா

Shah Alam-இல் அமைந்துள்ள எமரால்ட் தமிழ்ப்பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியினால் சுமார் 37 லட்சம் ரிங்கிட் செலவில் Paramount மேம்பாட்டு நிறுவனம் தனது சொந்த முயற்சியில் இக்கட்டிடத்தை நிர்மாணிக்கவுள்ளது.

இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சாமிவேலு இந்நிறுவனத்தினைப் பாராட்டியதுடன், பிற நிறுவனங்களும் இது போன்று தமிழ்ப்பள்ளிகள் புனர்நிர்மாணத்திற்கு கை கொடுத்து உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டார்.


-----------------------------------------------------------


தயார் நிலையில் சுகாதார அமைச்சு

கிளந்தான் மாநிலத்தில் kepialu காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அனைத்து மருத்துவமனைகளும், அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத் துறையின் இயக்குனர் Datuk Dr. Ahmad Razin Ahmad Mahir தெரிவித்தார்.

இதுவரையில் 203 பேருக்கு இக்காய்ச்சல் கண்டிருப்பதாகவும், இந்நோய் கண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும் இதுவரை இரண்டு உயர்கல்வி மாணவர்கள் இறந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே வியாபாரிகளும், மக்களும் தத்தம் வளாகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவில் இரயில் விபத்து:20 பேர் பலி

_____________________________________________________________________
̃á ¢ Ţ
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நேற்று அதிகாலை சபர்மதி எக்ஸ்பிரஸ் என்ற பயணிகள் இரயில், எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு இரயில் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிவேக இரயிலான சபர்மதி, காசி நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது.
ஈராக் ஆற்றில் மிதந்த 50 சடலங்கள்

ஈராக்கில் உள்ள மதீன் நகரின் தெற்குப்பகுதியில் TIGRIS ஆற்றிலிருந்து 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை மதீன் நகரிலிருந்து பணயக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட 50 பேரைக் கொன்று தீவிரவாதிகள் அந்த ஆற்றில் வீசியிருக்கக்கூடும் என ஈராக் அதிபர் JALAL TALABANI தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அனைத்து விபரங்களையும் வெளியிடப்போவதாகவும் அவர் கூறினார்.


--------------------------------------------------------------------------------


நேப்பாளத்தில் பள்ளிக்கட்டடம் மீது வெடிகுண்டு வீச்சு

நேப்பாளத்தில் அதிகக் கட்டணம் வசூலித்த ஒரு பள்ளிக்கூடத்தின் மீது Maoist தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அப்பள்ளிக்கட்டிடமே இடிந்து தரை மட்டமானது.

நேப்பாளத்தில் அதிகமாக கட்டணம் வசூலித்து வரும் பள்ளிகளின் மீது தீவிரவாதிகள்
அண்மைக்காலமாக அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன் தினம் காட்மாண்டு அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தினர். நேற்று பள்ளி விடுமுறையாக இருந்ததால் குழந்தைகள் தப்பினர்.

ஆனால் வெடிகுண்டு வெடித்ததில் 4 போலீஸ்காரர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர்.


--------------------------------------------------------------------------------


ஜப்பானுக்கு எதிராக அமைதிப் போராட்டம் போதும்:சீனா

ஜப்பானுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களை கைவிட்டு, அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கும்படி தங்கள் நாட்டு மக்களை சீன அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

1931ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சீனாவின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்த ஜப்பான் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்தது.

ஆனால், தற்போது ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்களில், இந்த வரலாற்று சம்பவம் உண்மைக்கு மாறாக திரித்து எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஜப்பானை கண்டித்து சீனாவில் பெரிய அளவில் போராட்டமும்,வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, சீன மக்கள் தங்களின் உணர்வுகளை அமைதியான முறையில் தெரிவிக்கும்படி அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமநிலையில் premiership ஆட்டம்

Chelsea மற்றும் Arsenal அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற Premiership காற்பந்தாட்டத்தில் இரு அணிகளும் எந்த ஒரு கோல் எண்ணிக்கையும் இன்றி சமநிலை கண்டன.

தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. Everton
மற்றும் Manchester United அணிகளுக்கிடையே நடைபெற்ற மற்றும் ஒரு ஆட்டத்தில், Everton அணி 1-0 என்ற கோல் எண்ணிகையில் Manchester United அணியை வீழ்த்தியது.

இதனிடையே, Manchester United அணியின் ஆட்டக்காரர்கள் Gary Neville மற்றும்
Scholes ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால், அவ்வணி ஒன்பது ஆட்டக்காரர்களுடன் தனது ஆட்டத்தை தொடர நேரிட்டது.

பரஞ்சோதி
22-04-2005, 11:47 AM
நன்றி அண்ணா.

யூரோ கால்பந்து கிளப் போட்டிகளை ரசித்து வருகிறேன். நீங்களும் தானே.