PDA

View Full Version : கடலம்மா!



சுவேதா
19-04-2005, 02:34 AM
கடலம்மா!

கடல் அன்னையே! நீ தான் கடல் மக்களின் தாய்.
நீயே உன் பிள்ளைகளை அழிக்கலாமா???
உனது கதறளே உனது பிள்ளைகளின் காதில்
இரைச்சலாய் மாறினது ஏன்? ஏன்??
உனக்கு ஏன் இத்தனை கோபம்?
உன்னை அவர்கள் என்ன செய்தார்கள்?
உனது கடலின் மீன் பிடித்தமைக்கா? இல்லை
அருகில் இருந்ததா அவர்கள் குற்றம்? ஏன்
சிறியவர் பெரியவர் என்றும் பாராமல் அழித்தாய்
கூறு உன் கோபம்தான் என்ன? கூறம்மா
கூறு? உன்னை உனது பிள்ளைகள் மன்னித்து
விட்டார்கள். கூறம்மா உனது கோபத்தை?

பரஞ்சோதி
19-04-2005, 04:09 AM
மனதின் காயங்களை கவிதையாக சொல்லியிருக்கீங்க. யாருக்குமே விடை தெரியவில்லையே.

கடலன்னை கோபம் தீர்ந்து விட்டது என்பது நிச்சயம்.

pradeepkt
19-04-2005, 06:05 AM
சுவேதா, நல்ல முயற்சி.
கவிதை மட்டும் கொஞ்சம் போல் வசன கவிதையாக இருக்கிறது.
:)

பரஞ்சோதி
19-04-2005, 07:50 AM
சுவேதா, நல்ல முயற்சி.
கவிதை மட்டும் கொஞ்சம் போல் வசன கவிதையாக இருக்கிறது.
:)

தம்பி இதானே வேண்டாங்கிறது.

எனக்கு ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருது.

pradeepkt
19-04-2005, 09:10 AM
சரி, அந்தப் பழமொழியைத்தான் சொல்லுங்களேன் அண்ணா!

சுவேதா
19-04-2005, 11:47 AM
மனதின் காயங்களை கவிதையாக சொல்லியிருக்கீங்க. யாருக்குமே விடை தெரியவில்லையே.

கடலன்னை கோபம் தீர்ந்து விட்டது என்பது நிச்சயம்.


ஆமாம் அவர் கோபம் தீர்ந்து விட்டதனால் தான் அவர் மறுபடியும் வராமல் சென்று விட்டார் இல்லையா? என்னவோ அவர் கோபம் தீர்ந்தால் சரிதான்.

சுவேதா
19-04-2005, 11:54 AM
சுவேதா, நல்ல முயற்சி.
கவிதை மட்டும் கொஞ்சம் போல் வசன கவிதையாக இருக்கிறது.
:)


நன்றி ப்ரதீப் அண்ணா!
நான் இப்பொழுது தான் கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்!
ஏதும் பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து. எனது பிழைளை கூறுங்கள் நான் திருத்த முயற்சிக்கின்றேன்!

pradeepkt
19-04-2005, 12:22 PM
சகோதரி,

உங்கள் முயற்சிகளை இம்மன்றம் எப்போதுமே பாராட்டி உற்சாகப் படுத்தி வரவேற்கிறது.
உங்களால் இன்னும் வார்த்தைகளைப் பின்ன இயலும் என்று இக்கவிதை ஆணித்தரமாகக் கூறுகிறது.

அன்புடன்,
பிரதீப்

பி.கு.: அண்ணா, சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டிட்டீங்களே! நல்ல வேளை! :)