PDA

View Full Version : துளசி தளம்

Iniyan
19-04-2005, 01:24 AM
கடந்த வெள்ளியன்ரு இரவு சந்திர முகி படம் பார்த்து விட்டுத் திரும்பிய போது எனக்கு நினைவுக்கு வந்த ஒரு கதை - எண்டமூரி வீரெந்திர நாத்தின் "துளசி தளம்" மற்றும் "மீண்டும் துளசி". கதையின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை பேய் பிசாசு மற்றும் அறிவியல் இரண்டையும் கலந்து அட்டகாசமாய் எழுதி இருப்பார். கதையின் முடிவில் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் பேய் பிசாசே இல்லை அறிவியலே என கலந்து இருவகையிலும் ஆர்வமாய் வாதமிட தேவையான அளவு விசயம் வைத்து....அடடா. ஒரு மாஸ்டர் பீஸ்.

படித்த நண்பர்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்

பரஞ்சோதி
19-04-2005, 04:14 AM
நானும் சின்னவயதில் அந்த கதைகள் படித்திருக்கிறேன், மேலும் எனக்கு இந்திரா சவுந்திரராஜன் கதைகள் எல்லாம் ரொம்பவும் பிடிக்கும்.

பொதுவாக சினிமா ஆகட்டும், கதைகள் ஆகட்டும், முதலில் பேய் இருப்பதாக சித்தரிக்கும் போது நிறைய விசயங்களை சொல்கிறார்கள், பின்னர் பேய் என்பது இல்லை என்று சொல்லும் போது முன்பு சொன்ன சம்பவங்கள் எப்படி நடந்தன என்பற்கு சரியான விளக்கம் இல்லை.

சந்திரமுகி படத்தில் கூட மாடி அறைக்கு படியில் கால் வைத்ததும் தூசி, துரும்பு எல்லாம் ஆடுகிறது, கால் எடுத்தால் அமைதியாகிறது, கடிகாரம் உடைகிறது, படத்தின் இறுதியில் பேயே இல்லை என்றும் சொல்கிறார், அப்படி என்றால் அந்த சம்பவங்கள் எல்லாம் எப்படி நடைபெற்றன என்பதற்கு விளக்கமே இல்லை.

பரஞ்சோதி
19-04-2005, 04:15 AM
இனியன் மேலே சொன்ன கதை புத்தகங்களை வாங்கி படித்தால் தான் மீண்டும் அவற்றை அசைபோட்டு கருத்துகள் சொல்ல முடியும்.

ஏன் இந்த புத்தகங்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கவில்லை?

gragavan
19-04-2005, 05:48 AM
இந்திரா சசுந்திரராசனுடைய கதைகளும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். ஏன்? இப்பொழுது ஆங்கிலத்தில் கலக்கிக் கொண்டு இருக்கும் டாவின்சி கோடு புத்தகமும் கிட்டத்தட்ட அப்படியொரு புத்தகமே. எனக்கும் அப்படியொரு கதை எழுத ஆசையுண்டு.

அதற்குக் கருவையும் யோசித்து வைத்து விட்டேன். ஊரில் குழந்தைகள் இறந்து போகிறார்கள். அதற்கு ஒரு குழந்தைதான் காரணம். இதுதான் கரு.

அன்புடன்,
கோ.இராகவன்

மங்குவதெல்லாம் எவை?
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=97255#post97255

pradeepkt
19-04-2005, 06:13 AM
அடடே.. இது எப்ப? எப்ப?
சீக்கிரம் எழுதுங்கப்பு.
மதுரையில இருந்து ஒரு இந்திர சௌந்திரராஜன்னா, தூத்துக்குடியில இருந்து ஒரு ராகவன் கோபால்சாமின்னு பேனர் கட்டிப்பிடுவோம் கட்டி.

பரஞ்சோதி
19-04-2005, 07:27 AM
இந்திரா சசுந்திரராசனுடைய கதைகளும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். ஏன்? இப்பொழுது ஆங்கிலத்தில் கலக்கிக் கொண்டு இருக்கும் டாவின்சி கோடு புத்தகமும் கிட்டத்தட்ட அப்படியொரு புத்தகமே. எனக்கும் அப்படியொரு கதை எழுத ஆசையுண்டு.

அதற்குக் கருவையும் யோசித்து வைத்து விட்டேன். ஊரில் குழந்தைகள் இறந்து போகிறார்கள். அதற்கு ஒரு குழந்தைதான் காரணம். இதுதான் கரு.

அன்புடன்,
கோ.இராகவன்

மங்குவதெல்லாம் எவை?
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=97255#post97255

ஆகா, அருமை, சீக்கிரம் அண்ணா. ஆவலோடு காத்திருக்கிறேன்.

gragavan
19-04-2005, 08:35 AM
சீக்கிரமா? எங்க சீக்கிரம். இன்னும் எழுத வேண்டியது நெறய இருக்கே. அதையெல்லாம் முடிச்சிட்டுதான் இது.

ஆனா ஒன்னு. ஒருவேள எங்கதைக பிரபலமானா.....எங்கூரு தூத்துக்குடியும் பிரபலமாகும்.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
19-04-2005, 09:17 AM
தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி ...
எனக்கு வர கோவத்துக்கு???

யாதும் ஊரே யாவரும் கேளிர்னு படிச்சதில்லையா நீங்க? அதுலயும் அந்தக் கால "மதுரை" மாவட்டத்தில இருந்துகிட்டு எப்பப் பாத்தாலும் ஊருப் பெருமை ...
என்னைப் பாருங்க... மாமனிதர்வாழ் மதுரையின்னாலும் அடக்கி வாசிக்கிறேனில்ல ???

(அப்பா! இப்பத்தான் நிம்மதியாச்சு)
:)

gragavan
19-04-2005, 12:39 PM

:)எனக்கு மாபாவியர் வாழ் மதுரைன்னு சங்கரதாசு சுவாமிகள் சொன்னது நெனவுக்கு வருது :)

gragavan
20-04-2005, 11:40 AM
என்ன பிரதீப். மாபாவியர் வாழ் மதுரைன்னு சொன்னேன்னு கோவிச்சிக் கிட்டீங்களா? இதுவும் புகழ்ச்சிதாங்க. கற்றவரும் செல்வம் பெற்றவரும் வாழும் ஊர் என்று பொருள்.

அன்புடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
20-04-2005, 12:09 PM
சீக்கிரமா? எங்க சீக்கிரம். இன்னும் எழுத வேண்டியது நெறய இருக்கே. அதையெல்லாம் முடிச்சிட்டுதான் இது.

ஆனா ஒன்னு. ஒருவேள எங்கதைக பிரபலமானா.....எங்கூரு தூத்துக்குடியும் பிரபலமாகும்.

அன்புடன்,
கோ.இராகவன்

அண்ணா இது கொஞ்சம் ஓவராக தெரியுது.

அது சரி, இனியன் சொன்னதை எப்போ பேச போகிறோம்.

Iniyan
20-04-2005, 01:16 PM
கதைச்சுருக்கம் இது தான்.

துளசி என்னும் சிறு பெண்ணின் பெயரில் இருக்கும் சொத்துக்களை அடைவதற்காய் வெவ்வேறு வில்லன்கள் முயற்சி செய்வர்.

Iniyan
20-04-2005, 01:17 PM
ஒரு வில்லன் ஒரிசாவில் இருக்கும் ஒரு மந்திரவாதியின் உதவியுடன் காஷ்மோரா என்னும் பூதத்தை குழந்தையின் மேல் ஏவுவான். இது கிட்டத்தட்ட நம்மூரு செய்வினை மாதிரி.

இந்த காஷ்மோரா பூதம் 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் உயிர் பெறும். இந்த பூதம் விழிக்கும் நேரத்தில் சரியாகப் பயன்படுத்த வேண்டும். சில சிக்கலான விதிமுறைகள் இருக்கும் இந்த பூதத்தினை ஏவ. இதில் ஏதேனும் தவறினால் ஏவினவனுக்கே ஆப்பு அடித்து விடும்.

அதே நேரம் இன்னோரு வில்லன் அறிவியலைப் பயன்படுத்தி துளசியைக் கொல்ல முயற்சிப்பான்.

Iniyan
20-04-2005, 01:17 PM
குழந்தை துளசியின் தகப்பன் ஸ்ரீதர் ஒரு இன்ஜினியர். ஸ்ரீதரின் குடும்ப டாக்டர், துளசியின் ஒவ்வொரு சுகவீனத்துக்கும் சரியாக ஒரு மருத்துவ காரணம் சொல்லுவார். அதே நேரம் அந்த சுகவீனங்கள் எல்லாமே காஷ்மோரா பூதத்தின் ஏவல் தான் என ஒரு டிராக்கில் ஆசிரியர் கொண்டு செல்வார். கடைசியில் என்ன என்பதை அப்பறமாய் பேசலாம்.

முதல் பாகத்தில் காஷ்மோரா மற்றும் அறிவியல் பூர்வமான வில்லன்களின் முயற்சிகள் தோல்வி அடைந்து குழந்தை துளசி தப்பிப்பாள்.

அடுத்து 12 வருடங்அள் கழித்து அடுத்த அட்டாக்.

அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

Iniyan
20-04-2005, 01:21 PM
தான் படித்த படிப்பினால் இந்த செய்வினை பூதம் பிசாசு இவற்றில் நம்பிக்கை இல்லாமலும் அதே நேரம் தனது ஒரே குழந்தை படும் பாட்டினை பார்த்து பரிதவித்தும் அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையே போராட்டும் ஸ்ரீதரின் உணர்ச்சிகள், சொட் சொட் என விழும் தண்ணீர் துளிகளால் ஏதோ சோதனை செய்யப் போக அதனால் பாதிப்படைந்து பாதி பைத்தியமாயும், மீதி அதி புத்திசாலி விஞ்ஞானியாயும் திரியும் ஒரு வில்லன், ஆவி பேய் பூதம் என ஒரிசாவில் ஏதோ ஒரு சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு ஆட்டி வைக்கும் மந்திரவாதி, என சூடு பறக்கும்.

Iniyan
20-04-2005, 01:22 PM
அதிலும் பாகம் இரண்டில் எண்டமூரி அறிவியலை துணைக்கு வைத்துக் கொண்டு கலக்குவார் பாருங்கள்.

இந்திரா சவுந்திரராஜன் கதைகள் நான் படித்திருந்தாலும், துளசி தளம் மற்றும் மீண்டும் துளசி அளவு எந்த திகில் மர்ம கதையும் என்னை பாதித்ததில்லை.

Iniyan
20-04-2005, 01:26 PM
சந்திரமுகி படத்தில் கூட மாடி அறைக்கு படியில் கால் வைத்ததும் தூசி, துரும்பு எல்லாம் ஆடுகிறது, கால் எடுத்தால் அமைதியாகிறது, கடிகாரம் உடைகிறது, படத்தின் இறுதியில் பேயே இல்லை என்றும் சொல்கிறார், அப்படி என்றால் அந்த சம்பவங்கள் எல்லாம் எப்படி நடைபெற்றன என்பதற்கு விளக்கமே இல்லை.

எண்டமூரி கதையின் சிறப்பம்சமே விரிவான விளக்கம் தான். ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் விளக்கம் ஒன்று, அறிவுக்கெட்டாத மாய பேய் பூத பிசாசு விளக்கம் ஒன்று. கதையின் முடிவில் அறிவியலா பேயா என்ற கேள்விக்கான பதிலை படிப்பவர் கற்பனைக்கே விட்டிருப்பார்.

Iniyan
20-04-2005, 01:27 PM
இந்திரா சசுந்திரராசனுடைய கதைகளும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். ஏன்? இப்பொழுது ஆங்கிலத்தில் கலக்கிக் கொண்டு இருக்கும் டாவின்சி கோடு புத்தகமும் கிட்டத்தட்ட அப்படியொரு புத்தகமே. எனக்கும் அப்படியொரு கதை எழுத ஆசையுண்டு.

அதற்குக் கருவையும் யோசித்து வைத்து விட்டேன். ஊரில் குழந்தைகள் இறந்து போகிறார்கள். அதற்கு ஒரு குழந்தைதான் காரணம். இதுதான் கரு.

அன்புடன்,
கோ.இராகவன்

மங்குவதெல்லாம் எவை?
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=97255#post97255

எழுதுங்க இராகவன். ஆர்வமாய் காத்திருக்கிறேன் படித்து ருசிக்க.

gragavan
21-04-2005, 04:56 AM
அண்ணா இது கொஞ்சம் ஓவராக தெரியுது.

அது சரி, இனியன் சொன்னதை எப்போ பேச போகிறோம்.என்ன ஓவரு? சுசாதா சீரங்கத்தப் பத்தி மூச்சுக்கு முவாயிரந் தடவ சொல்றாரு. கி.ரா இன்னமும் கோயில்பட்டி சுத்து வட்டாரத்துக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருக்காரு. அவங்க அளவுக்கு இல்லைன்னாலும் நானும் ஏதோ நாம் பொறந்த மண்ணுக்கு ஏதாச்சும் செய்யனுமுன்னு பாக்குறேன். கொட்டிக் குடுக்க கோடி இல்ல. அதான் இப்படி.
அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
21-04-2005, 05:17 AM
எண்டமூரி கதையின் சிறப்பம்சமே விரிவான விளக்கம் தான். ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் விளக்கம் ஒன்று, அறிவுக்கெட்டாத மாய பேய் பூத பிசாசு விளக்கம் ஒன்று. கதையின் முடிவில் அறிவியலா பேயா என்ற கேள்விக்கான பதிலை படிப்பவர் கற்பனைக்கே விட்டிருப்பார்.எண்டமூரியின் கதைகளை நான் படித்ததில்லை. ஆனால் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். இனிமேல் வாய்புகள் கிடைத்தால் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் இனியன்.
அன்புடன்,
கோ.இராகவன்

kavitha
02-07-2005, 10:55 AM
ரொம்பவே ஆர்வமூட்டும் கதைகள்; இங்கே பதித்து நாங்களும் தெரிந்து கொள்ளச்செய்தமைக்கு நன்றி இனியன். :)
ராகவன் அண்ணாச்சி, சீக்கிரம் உங்க மாயாஜால கதைய ஆரம்பிங்க... கதைக்கருவே அபாரமா குழந்தைகளை வைத்து இருக்கு.
குழந்தைகளுக்கும் சொல்றா மாதிரி எழுதுங்க... :)

Iniyan
06-09-2005, 06:52 PM
துளசி தளம் புத்தகம் இந்தியாவில் இருந்து வருவதற்காக காத்திருக்கிறேன். வந்ததும் வாரம் ஒரு அத்தியாயமாக தட்டச்சி பதிக்கலாம் என உள்ளேன்.

pradeepkt
07-09-2005, 05:13 AM
அருமை அருமை
வாழ்க இனியன்.

mukilan
09-09-2005, 05:28 AM
தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி ...
எனக்கு வர கோவத்துக்கு???

யாதும் ஊரே யாவரும் கேளிர்னு படிச்சதில்லையா நீங்க? அதுலயும் அந்தக் கால "மதுரை" மாவட்டத்தில இருந்துகிட்டு எப்பப் பாத்தாலும் ஊருப் பெருமை ...
என்னைப் பாருங்க... மாமனிதர்வாழ் மதுரையின்னாலும் அடக்கி வாசிக்கிறேனில்ல ???

(அப்பா! இப்பத்தான் நிம்மதியாச்சு)
:)

யாருவே அது தூத்துக்குடியைப் பத்தி சொல்றது. நாங்க திருநெல்வேலி மாவட்டத்திலதான முதல்ல இருந்தோம். மதுரை மாவட்டத்தில இருந்தோமானு தெரியலையே! எப்படி இருந்தாலும் கட்டபொம்மன், பாரதியார், சிதம்பரனார்னு பல தியாகிங்க உள்ள மாவட்டமய்யா எங்க ஊரு!!