PDA

View Full Version : சில கேள்விகள்!



நிலா
15-04-2003, 11:34 PM
வணக்கம்!

என்னுள்ளே பல கேள்விகள்!அவற்றில் சில...
ஆறாவது அறிவின் உபயோகமென்ன?
உணர்வினை வெளிப்படுத்துவதற்கு தயக்கமென்ன?
அன்பினை அறிவிப்பதில் வெட்கமென்ன?
அருகிலேயிருந்தால் ,எளிதாக கிடைத்தால் அது அற்பமா?
சில பதில்களும் உண்டு!
அவை உங்களின் பதில் கண்டு.............


நிலா

anushajasmin
15-04-2003, 11:56 PM
1.
.ஆறாவது அறிவை பகுத்தறிவு என்கிறார்கள் மூடநம்பிக்கையை எதிர்ப்பவர்கள்
ஆறாவது அறிவை ஞானத்தின் பாதை என்கிறார்கள் சாமியார்கள்
சிந்திக்க தெரிந்தது மனிதனின் ஆறாம் அறிவு என்கிறது விஞ்ஞானம்

ஆறாவது அறிவை எதையும் ஆராய்ந்து செய்ய சிந்திக்க என்று பயன்படுத்துகிறோம்

3. உணர்வினை வெளிப்படுத்துவது எனில்.... எவ்வித உணர்வை.....
அன்பை அறிவிப்பதில் யார்க்கும் வெட்கமில்லை ... யார் மீது வைத்திருக்கும்
அன்பை என்பதில்தான் பிரச்னை.....

4. கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவுமே அற்பம்தான்
கஷ்டப்படும் நேரங்களில் அரவணைப்பு
கவலையான நேரங்களில் தீர்வு
அருகிலேயே கிடைக்கும் அம்மாவின் அன்பு - இதெல்லாம் அற்பம் இல்லை

madhuraikumaran
16-04-2003, 12:06 AM
ஆறாவது அறிவின் உபயோகமென்ன?

சிரிப்பது, மனிதாபிமானம், நல்லது-கெட்டது, பாவ-புண்ணியங்களை பகுத்தறியும் திறன் - இவையெல்லாம் இயற்கை வழங்கிய பலன்கள்.
இயற்கையை மறந்தது, இயற்கையும், அதன் படைப்புகளும் தனக்கு அடிமை என நினைத்து அவற்றின் பால் அன்பு செய்ய மறுத்தது, தேவைக்கு அதிகமாய் சேர்த்து வைக்கத் தொடங்கியது - இது போன்றவை ஆறாம் அறிவினால் விளைந்த உப பலன்கள்.



உணர்வினை வெளிப்படுத்துவதற்கு தயக்கமென்ன?

சொல்லப்படாமலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பாக இருக்கலாம். அல்லது சொல்லப்பட்ட பின் சரியாகப் புரிந்து கொள்ளப்படுமா என்ற தயக்கமாக இருக்கலாம்.


அன்பினை அறிவிப்பதில் வெட்கமென்ன?

அன்பு அறிவிக்கப்பட வேண்டியதில்லை. அனுபவிக்கப்பட வேண்டியது.
ஆங்கிலப் படங்களில் வருவது போல் I Love You - I love You என்று நொடிக்கொரு முறை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை.


அருகிலேயிருந்தால் ,எளிதாக கிடைத்தால் அது அற்பமா?

சில சமயங்களில் இந்தத் தவறு நடந்துவிடக்கூடும். அது தொலைந்த பின், தூரப்போன பின் அதன் அருமை தெரியும்.
இதனால் தான் காதல் இனிக்கிறது, கல்யாணம் கசக்கிறது. எனவே தான் மனவியலாளர்கள் சொல்லுகிறார்கள், மண வாழ்க்கை சலிக்காமலிருக்க வருடத்திற்கொரு முறை பிரிவு அவசியம் என்று !

எனக்குத் தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன். நிச்சயம் மாற்றுக் கருத்துகள் வரும் என நினைக்கிறேன். வர வேண்டும் !

நிலா
16-04-2003, 09:04 PM
என் கேள்விக்கு விடையளித்த அனுஷாவுக்கும்,மதுரைக்குமரனுக்கும்
நன்றிகள் பல!

உங்கள் பதில்களிலிருந்து.......


யார் மீது வைத்திருக்கும்
அன்பை என்பதில்தான் பிரச்னை.....


அன்பு வைத்த பின்பு அதை அறிவிப்பதில் பிரச்சனை என்ன?


அன்பு அறிவிக்கப்பட வேண்டியதில்லை. அனுபவிக்கப்பட வேண்டியது.

ஒருவர் அறிவிக்காமலிருந்தால் மற்றவர் அனுபவிக்க இயலுமா?
ஒருவர் மனதினில் இருப்பது மற்றவர்க்கு எப்படித் தெரியும்?
மனதினைத் திறந்தால் மாற்றங்கள் நேராதோ?
மானுடம் தழைக்காதோ?

விடை தாருங்கள்!

நிலா

madhuraikumaran
17-04-2003, 04:31 AM
மானுடம் தழைக்காதோ?

மானுடம் தழைக்க ஒருவர் மீது மட்டும் அன்பு வைக்காமல் அந்த மொத்த மானுடத்தையும் அன்பு செலுத்த வேண்டும்.
இது ஒருவர் மீது வைத்துள்ள அன்பெனில், உண்மையான அன்பு, செய்யும் காரியத்தில் வெளிப்படும். எதற்கு இவ்வளவு கஷ்டம்? சொல்லி விட்டுப் போக வேண்டியது தானே என்கிறீர்களா? வார்த்தைகள் மதிப்பிழந்து போய் ரொம்ப நாட்களாகி விட்டன. நீங்கள் மனந்திறந்து சொன்னாலும் கேட்பவர் 'நிஜமாவா சொல்ற?' என்று ஒரு முறையேனும் கேட்காமலிருக்கிறார்களா என்று பாருங்கள். நிறையப் போலி வார்த்தைகள் கேட்டுக் கேட்டு ஏற்பட்ட அவநம்பிக்கை இது. இப்படிச் சொல்லிப் புரியவைப்பதற்குப் பதில் செயல்களால் உணர்வால் உணர்த்தலாம். தப்பில்லை !

lavanya
17-04-2003, 10:02 AM
நல்ல விளக்கம் மதுரைக்குமரன் அவர்களே..... இதுதான் உலக இயல்பு....
பிறர் அன்பாய் இருக்க வேண்டும், அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று
நாம் எதிர்பார்க்கிறோம் .ஆனால் நாம் செய்கிறோமா என்று தெரியவில்லை.
எதுவும் நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.இது ஏனோ நிறைய
பேருக்கு தெரிவதேயில்லை

Hayath
17-04-2003, 10:31 AM
நல்ல விளக்கம் மதுரைக்குமரன் அவர்களே..... இதுதான் உலக இயல்பு....
பிறர் அன்பாய் இருக்க வேண்டும், அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று
நாம் எதிர்பார்க்கிறோம் .ஆனால் நாம் செய்கிறோமா என்று தெரியவில்லை.
எதுவும் நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.இது ஏனோ நிறைய
பேருக்கு தெரிவதேயில்லை


நீங்கள் மற்றவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கு செய்யுங்கள் அப்போதுதான் அது உங்களுக்கு திரும்பி கிடைக்கும்.இப்போது வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இதனை காணலாம்.

அனைவருடைய கருத்துக்களும் அருமையாக உள்ளது பாராட்டுக்கள்.

poo
17-04-2003, 05:14 PM
என்னுள் ஒரு (மடத்தனமான?!) கேள்வி..
ஆறு அறிவுகள் என்றால் எவை?.
1)உண்ணுதல்... 2) நுகர்தல்..(இப்படி ஆரம்பிக்குமோ?!!)

இளசு
17-04-2003, 05:30 PM
சரியே தம்பி
ஐம்புலன் அடுத்து ஆறாம் புலனால் உய்த்துணர்ந்தறிவது
ஆறாம் அறிவாம்... அது இருப்பவர் வந்து மேலும் விளக்குவர்!
எனக்கெதுக்கு....!!!!!!!

poo
17-04-2003, 06:41 PM
சரியே தம்பி
ஐம்புலன் அடுத்து ஆறாம் புலனால் உய்த்துணர்ந்தறிவது
ஆறாம் அறிவாம்... அது இருப்பவர் வந்து மேலும் விளக்குவர்!
எனக்கெதுக்கு....!!!!!!!

இந்த குசும்பில் குறைச்சலே இல்லை!!!!

அமரன்
26-05-2008, 06:21 PM
இதை நூரவிடாமல் வெச்சிருந்தால் வெளிச்சம் கிடைக்குமா பாருங்கள்.