PDA

View Full Version : காதல் இழப்புக்கள்!

சுவேதா
16-04-2005, 10:40 PM
காதல் இழப்புக்கள்!

முதன் முதலில் உனைப் பார்த்தபோது உன்னால்
என் உறக்கத்தை இழந்தேன்!
உன்னுடன் பேசிய முதல் நாள்
என் நினைவை இழந்தேன்!
உன்னுடைய நட்புக்கிடைத்த முதல் நாள்
என் படிப்பை இழந்தேன்!
உன்னை நினைக்கும் வேளையிலே
என் மனதை நான் இழந்தேன்!
மொத்தத்தில் உன்னால்
என்னையே இழந்தேன்!
ஆனால் ஒரு போதும் உன்னை
நான் இழக்கமாட்டேன். இழந்தால்
என் உயிரையும் இழப்பேன்!

Narathar
31-05-2008, 04:25 AM
.........................ஆனால் நம் அன்புத்தங்கை சுவேதாவை மன்றம் இழந்து விட்டதோ?

எங்கே சுவேதா???

இளசு
20-06-2008, 09:32 PM
இத்தனை நாள் எப்படித் தவறவிட்டேன்?

காதல் -
இதை இழக்காமல் இருக்க
எதையெல்லாம் இழக்க வேண்டியிருக்கிறது??!!!

-----

அன்புத்தங்கை சுவேதா..
எங்கிருந்தாலும் நலமாயிருக்க வேண்டும்!
எப்போது வாய்ப்பு கிட்டினாலும் மன்றம் வரவேண்டும்!!

ஓவியன்
21-06-2008, 02:06 AM
ஒன்றைப் பெறுகையில்
ஒன்றை இழப்பதென்பது
வழக்கமாக
வாடிக்கையாகப் போய்விட்டது....

சுவேதா நேரம், காலம்
கூடி வருகையில்
நீங்களும் மன்றத்தில்
கூட வாருங்கள்...!!! :)

சிவா.ஜி
21-06-2008, 04:47 AM
எதை அடைய இத்தனை இழக்கிறோமோ அது கிடைத்துவிட்டால் இழந்தவைகள் விட்டுச்சென்ற வலி மறைந்துவிடும். கிடைக்கப்போவது உயர்வான காதலெனில் எதையும் இழக்கலாம். அழகான வரிகள் சுவேதா. வாழ்த்துகள்.

crisho
21-06-2008, 04:48 PM
சரியா போட்டீங்க இமயமே!!

காதலுக்காக எல்லாவற்றையும் இழந்தோர் பலர்... காதலுக்காக எதையும் வேண்டுமானாலும் இழக்கலாம்!!

இழப்பவை எதையும் இழக்காமல் கவி வடித்த விதம் அருமை சகோதரியே! பாராட்டுக்கள்.

சுவேதா
20-09-2008, 04:03 AM
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

இது வெறும் கற்பனைதான் நான் எதையுமே இழக்கவில்லைங்கோஓஓஓ:D:D:D

சுவேதா
20-09-2008, 04:04 AM
.........................ஆனால் நம் அன்புத்தங்கை சுவேதாவை மன்றம் இழந்து விட்டதோ?

எங்கே சுவேதா???

இல்லை ஒருபோதும் இழந்து விடாது!!

தீபா
20-09-2008, 04:16 AM
நீண்ட நாளுக்குப் பிறகு பதில் எழும்பும் திரிகளில் இதுவும் ஒன்று..

திருமணத்திற்குப் பின்,

இவ்வரிகள் நெஞ்சை நிறைக்கவேண்டும். திருமண அழுந்தலில் காதல் புதைந்து விடக்கூடாது..

அருமை சகோதரி சுவேதா..

அன்புடன்
தென்றல்

சுவேதா
20-09-2008, 04:18 AM

நன்றி அண்ணா

தீபன்
20-09-2008, 04:19 AM
அடடா... இதில இப்பிடி விசயம் வேற இருக்கா.... வாழ்த்துக்கள் சுவேதா!

சுவேதா
20-09-2008, 04:21 AM
அடடா... இதில இப்பிடி விசயம் வேற இருக்கா.... வாழ்த்துக்கள் சுவேதா!

என்ன விசயம் ?

தீபா
20-09-2008, 04:25 AM
நன்றி அண்ணா

அட ராமா!!

உங்களை விட வயதில் சிறிய குழந்தையான என்னை அதிலும் பெண்ணை அண்ணா வென்றா சொல்லுவது???

நாரதரே! உங்கள் தங்கையை விசாரிக்க மாட்டீர்களா?

rajatemp
20-09-2008, 04:30 AM
இது காதல் இழப்பல்ல

ஆசை இழப்பு

தீபன்
20-09-2008, 04:33 AM
சுவேதா வயது 21. தென்றல் வயது 99. ஏன் தென்றல் இப்பிடி அனியாயத்துக்கு பொய் சொல்றிங்க. நீங்க பெண் என்று சொல்லிவிட்டு உங்க விபரங்களில் (profile)தொழிலாய் பொய் சொல்வதென்றும் சொல்லியிருக்கிறியள். நாங்க எதை நம்ப...?

shibly591
20-09-2008, 08:00 AM
சுவேதாவின் கவிதையை படிக்க சந்தோசமாக இ.ருக்கிறது..

அடிக்கடி இப்படி பதிவுகள் தாருங்கள்

வாழத்துக்கள்..........

arun
20-09-2008, 12:14 PM
வாவ் அனைத்தும் அற்புதமான வரிகள் பாராட்டுக்கள்

சுவேதா
20-09-2008, 02:08 PM
அட ராமா!!

உங்களை விட வயதில் சிறிய குழந்தையான என்னை அதிலும் பெண்ணை அண்ணா வென்றா சொல்லுவது???

நாரதரே! உங்கள் தங்கையை விசாரிக்க மாட்டீர்களா?

ஐயோ என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நான் தவறுதலாக அடித்துவிட்டேன்:confused:

சுவேதா
20-09-2008, 02:08 PM
சுவேதா வயது 21. தென்றல் வயது 99. ஏன் தென்றல் இப்பிடி அனியாயத்துக்கு பொய் சொல்றிங்க. நீங்க பெண் என்று சொல்லிவிட்டு உங்க விபரங்களில் (profile)தொழிலாய் பொய் சொல்வதென்றும் சொல்லியிருக்கிறியள். நாங்க எதை நம்ப...?

அதுதானே :confused::confused::confused:

சுவேதா
20-09-2008, 02:08 PM
சுவேதாவின் கவிதையை படிக்க சந்தோசமாக இ.ருக்கிறது..

அடிக்கடி இப்படி பதிவுகள் தாருங்கள்

வாழத்துக்கள்..........

நன்றி நிச்சயமாக:)

சுவேதா
20-09-2008, 02:09 PM
வாவ் அனைத்தும் அற்புதமான வரிகள் பாராட்டுக்கள்

மிக்க நன்றி:)

சுவேதா
20-09-2008, 02:09 PM
இது காதல் இழப்பல்ல

ஆசை இழப்பு

:confused::confused:

அக்னி
20-09-2008, 10:08 PM
அழகுக் காதல் முரண்.

இழக்கப்பட்டன,
இழக்காமலிருக்க...

இழக்காமல் உயிர் உண்டு.
இழந்தால் இழக்க...

பாராட்டுக்கள் சுவேதா அவர்களே...

சுவேதா
20-09-2008, 10:52 PM
அழகுக் காதல் முரண்.

இழக்கப்பட்டன,
இழக்காமலிருக்க...

இழக்காமல் உயிர் உண்டு.
இழந்தால் இழக்க...

பாராட்டுக்கள் சுவேதா அவர்களே...

மிக அழகாக கூறினிர்கள் அண்ணா மிக்க நன்றி!

தீபா
22-09-2008, 07:38 AM
ஐயோ என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நான் தவறுதலாக அடித்துவிட்டேன்:confused:

அய்யய்யோ!!! யாரை அடித்தீர்கள்? :D

பாபு
22-09-2008, 09:38 AM
காதல் கணக்கில் மட்டும் தான் இரு மனமும் லாபமடைகிறது, ஒரு பார்வையில் !!

நன்றாக இருக்கிறது சுவேதா ! பாராட்டுக்கள் !!

lolluvathiyar
22-09-2008, 10:54 AM
காதல் இழப்புகளை பற்றி அழகான வரிகளால் தந்திருக்கும் கவிதையை மிகவும் ரசித்தேன். காதலிக்கும் வரை உறக்கம் நினைவு படிப்பு மனம் ஏன் தன்னையே தன் உயிரையே கூட இழக்க தயாராகி விடுகிறார்கள். காதல் என்பது ஆக்கசக்தி அல்ல அல்லது அழிக்கும் சக்தி என்று சொல்ல வருகிறார் போல தெரிகிறது.