PDA

View Full Version : படித்ததில் பிடித்தது - சில ஹைகூக்கள்



Iniyan
15-04-2005, 06:08 PM
குளத்தில்
முகம் பார்க்கும் நிலா.
குளிக்காமல்
திரும்பினேன்.

-யாரோ.....

Iniyan
15-04-2005, 06:08 PM
இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?

-யாரோ

Iniyan
15-04-2005, 06:09 PM
நாய்க் காட்சி
நன்றாக இருந்தது.
வெளியே வந்தேன்.
சீ...சொறி நாய்.

-காந்தர்வனின் 'மீசைகள்' எனும் தொகுப்பிலிருந்து......

Iniyan
15-04-2005, 06:09 PM
'பூக்களைப் பறிக்காதீர்கள்'
என போர்டிருந்தும்
தரையெங்கும்
பூக்களின் சிதறல்.
பாவம்!
காற்றுக்குப் படிக்கத் தெரியாது.....


-யாரோ...

பிரியன்
07-06-2005, 05:40 AM
குளத்தில்
முகம் பார்க்கும் நிலா.
குளிக்காமல்
திரும்பினேன்.

-யாரோ.....

ஹைஹு கவிதைகளின் முன்னோடி போஹே எழுதிய மிகச் சிறந்த ஹைஹு இது

பரஞ்சோதி
07-06-2005, 05:49 AM
அருமையான தொகுப்பு, ரசித்தேன் இனியன்.

நானும் தொடர்கிறேன், மற்றவர்களும் தொடரலாமே.

அறிஞர்
07-06-2005, 07:43 AM
'பூக்களைப் பறிக்காதீர்கள்'
என போர்டிருந்தும்
தரையெங்கும்
பூக்களின் சிதறல்.
பாவம்!
காற்றுக்குப் படிக்கத் தெரியாது.....

-யாரோ...
நன்றாக உள்ளது... இனியன்....
இன்னும் கொடுங்கள்....

பாரதி
07-06-2005, 09:34 AM
நல்ல தொகுப்பு இனியன். பாராட்டுக்கள். கவிதைப்பகுதியில் மன்ற உறுப்பினர்களின் கவிதைகள் மட்டுமே இடம் பெறுவது வழக்கம். ஆகவே இதை இலக்கியப்பகுதிக்கு மாற்றி விடலாமே..! நன்றி.

சுவேதா
07-06-2005, 01:33 PM
மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள்!

kavitha
04-07-2005, 04:26 AM
இவையெல்லாம் பழைய மன்றத்தில் படித்தது போலவே இருக்கிறதே இனியன்?!