PDA

View Full Version : எங்கோ படித்த காட்சிப்பாக்கள்



இளசு
15-04-2003, 11:03 PM
எங்கோ படித்த காட்சிப்பாக்கள்
------------------------------
கூட்டமான பேருந்து
குழந்தையின் பசியால் விலகின...
வெட்கமும் முந்தானையும்
------------------------------
ஆங்கிலத்தோடு போட்டியில்
இங்கும் உனக்கு இரண்டாம் இடமா
பழைய பேப்பர் கடை
------------------------------
கபாலம் உடைத்து கட்டி எடுத்தார்
கஷாயம் குடித்தார் தன் தலைவலிக்கு
நியுரோசர்ஜன்
------------------------------

poo
16-04-2003, 05:48 PM
முதலில் பாசம்..(தாய்ப்பற்று)
அடுத்ததாய் சுவாசம்... (தமிழ்ப்பற்று)
மூன்றாவதாய் முரண்..(ஆனாலும், நாட்டுப்புறப்பற்று!!!)

-பாராட்டுக்கள் அண்ணா!!!

rambal
16-04-2003, 05:56 PM
அழகான குறும்பாக்கள்.. (ஹைக்கூவிற்கு பதிலாக இனி இதையே உபயோகிப்போம்)
அளித்தமைக்கு நன்றி..
பூ..
மூன்றாவதில் எங்கிருந்து வந்தது நாட்டுப்பற்று?

poo
16-04-2003, 06:15 PM
அழகான குறும்பாக்கள்.. (ஹைக்கூவிற்கு பதிலாக இனி இதையே உபயோகிப்போம்)
அளித்தமைக்கு நன்றி..
பூ..
மூன்றாவதில் எங்கிருந்து வந்தது நாட்டுப்பற்று?

நாட்டுப்பற்றல்ல ராம்... "நாட்டுப்புறம்" (அதாம்பா நம்ம கிராமப்புறத்தை என்ன சொல்வாங்க?!!) .. பாட்டி வைத்திய கஷாயம் சொன்னேன்!!!!

இளசு
18-04-2003, 08:24 PM
இரு தம்பிகளுக்கும் இந்த அண்ணனின் நன்றி...

மன்மதன்
28-09-2004, 09:28 AM
முதலில் பாசம்..(தாய்ப்பற்று)
அடுத்ததாய் சுவாசம்... (தமிழ்ப்பற்று)
மூன்றாவதாய் முரண்..(ஆனாலும், நாட்டுப்புறப்பற்று!!!)

-பாராட்டுக்கள் அண்ணா!!!

மூன்று மிகச்சிறந்த ஹைக்கூக்களுக்கும் மிகச்சிறந்த கருத்து .
அன்புடன்
மன்மதன்

விகடன்
19-07-2008, 01:58 PM
அழகான கைக்கூ கவிதைகள் அண்ணா...
பாராட்டுக்கள்