PDA

View Full Version : சில உபயோகமான மென்பொருள்கள்



பாரதி
14-04-2005, 02:45 PM
சில உபயோகமான மென்பொருள்கள்

நம்மிடம் சில பழைய சி.டி.க்களில் சில பாடல்கள் மட்டுமே இருக்கும். அவற்றை எல்லாம் எம்.பி.3 ஆக மாற்றினால் நமக்கு ஒரே சி.டி.யில் கிட்டத்தட்ட 150 பாடல்கள் வரை பதிவு செய்து விடலாம். பல சி.டி.க்களில் இருக்கும் பாடல்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரே சி.டி.யில் பதிவு செய்ய சிடெக்ஸ்(CDex) என்கிற மென்பொருளை உபயோகிக்கலாம்.

பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி:
http://cdexos.sourceforge.net/downloads.php
மென்பொருளின் அளவு: சுமார் 2 MB
---------------------------------------------------------
நம் கணினி திடீர் என்று இயங்க மறுத்தால் "Ctrl+Alt+Del"-கீகளை உபயோகித்து 'டாஸ்க் மேனேஜர்' திரையை வரவழைப்போம். தோன்றும் திரையில் எத்தனை அப்ளிகேஷன்கள் இயக்கத்தில் உள்ளன - அவற்றில் எத்தனை இயங்காமல் உள்ளன என்பதை மட்டும்தான் நம்மால் காண முடியும். அதே அப்ளிகேஷன்கள் எந்த இடத்தில் உள்ளன? அவை ஏன் திறந்து வைக்கப்பட்டுள்ளன? அவற்றின் செயல்பாடுகள் என்னவென்பதை அறிந்து கொள்ளவேண்டுமென்றால் பிராசசர் எக்ஸ்புளோரர் மென்பொருளை பதிவிறக்கிக்கொள்ளலாம். டாஸ்க் மேனேஜராக செயல்படும் இந்த மென்பொருள் தேவையற்ற, இயங்க மறுக்கும் அப்ளிகேஷன்களை இயக்கத்திலிருந்து எளிமையாக நீக்கிவிடும்.
மென்பொருளின் பெயர்: Processor Explorer
மென்பொருளின் அளவு : சுமார் 270 KB
பதிவிறக்கம் செய்ய செல்ல வேண்டிய தளம்: http://www.sysinternals.com/ntw2k/f...e/procexp.shtml

---------------------------------------------------------
இ-ப்ராம்ப்டர்

ஒருவரே பல மின்னஞ்சல் முகவரிகளை வைத்திருப்போம். அஞ்சலைக் காண ஒவ்வொரு முறையும் "லாகின்" செய்து பின்னர் காண வேண்டியதிருக்கும். அதுவும் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் செல்ல தனித்தனியே (உதாரணமாக யாஹவுக்கு ஒரு முறை ... ஹாட்மெயிலுக்கு ஒரு முறை... என்று) பயனாளர் பெயர், கடவுச்சொல் கொடுத்து செல்ல வேண்டியதிருக்கும். அதற்கு மாற்றாக இ-ப்ராம்ப்டர் என்கிற இலவச மென்பொருளை நிறுவிக்கொண்டோம் என்றால், இணையத் தொடர்பில் இருக்கும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை, தானாகவே புதிய அஞ்சல்கள் வந்திருக்கிறதா என்பதை சோதித்து அறிவிக்கும். ஒருமுறை மட்டும் என்ன என்ன மின்னஞ்சல்கள் வைத்திருக்கிறோம் என்பதையும், கடவுச்சொல் என்ன என்பதையும் கான்பிகர் செய்ய வேண்டும்.
இதன் மேலும் ஒரு சிறப்பு அம்சம் அஞ்சல்களை இதிலேயே படிக்க முடியும்! தேவையில்லாததை நீக்க முடியும்.

ஒரு சிறிய குறை - கீழ்க்கண்ட மின்னஞ்சல் உபயோகிப்பாளர்களுக்கு மட்டுமே இது பயன்படும்.

Yahoo
Altavista
Go
Hotmail
Mail.com
Netscape
Onebox
Rediffmail
USA.com
USA.net
Lycos
Juno
Switchboard
AOL
eMail.com
POP3

பதிவிறக்கி உபயோகிக்க விரும்புபவர்கள் சுட்டியைத் தட்டவும்.
http://www.eprompter.com
__________________________________________________________
ஸ்ட்ரோக் இட் (StokeIt)
இந்த இலவச மென்பொருளின் மூலம் mouse-ஐ கொண்டே சில குறிகளை வரைவதன் மூலம் 80 வகையான கட்டளைகளை நாம் பிறப்பிக்கலாம். அதன் மூலம் எக்ஸ்புளோரர், விண் ஜிப் போன்றவற்றை இயக்கலாம். உபயோகிக்க மிக எளிதாக உள்ளது.

தேவைப்படுபவர்கள் http://www.tcbmi.com/strokeit/downloads.shtml என்கிற சுட்டியில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம். இந்த மென்பொருள் தனி நபர் பயன்பாட்டுக்கு மட்டுமே இலவசம் என்பதை அறியவும்.

சுவேதா
17-04-2005, 01:53 AM
நன்றி பாரதி
மிகவும் பயன் உள்ள விஷயங்களை தந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் மேலும் தொடர.

Iniyan
19-04-2005, 01:20 AM
இ-ப்ராம்ப்டர் ரொம்பவே வசதியாக உள்ளது. நன்றி பாரதி. ஆமா இது பாதுகாப்பானது தானே. ஏனெனில் இதை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த தொடங்கிய சிறிது நேரத்தில் என் ஹாட்மெயிலில் இருந்து என் யாகூ மெயிலுக்கு ஒரு மெயில் வந்தது ஏதோ ஒரு அட்டாச்மெண்ட்டுடன்.

அறிஞர்
05-05-2005, 04:20 AM
உபயோகமான மென்பொருள்கள்.. அன்பரே.. நன்றி....

பாணன்
04-11-2005, 11:42 AM
மிகவும் உதவிகரமான பட்டியல். நன்றி நண்பரே.