PDA

View Full Version : பெயர் குறித்து...



பாரதி
14-04-2005, 08:40 AM
பெயர் குறித்து...

ஏற்கனவே திஸ்கியில் பதிவு செய்யப்பட்ட பெயர்கள் இப்போதும் திஸ்கியாக இருப்பதால் சரியாக தெரியவில்லை. "லாகின்" செய்யும் பெயரையும், பதிவுகளில் உள்ள திஸ்கி பெயர்களையும் யுனிகோடிற்கு மாற்றி விடலாமா...?

புதிய தளம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

admin
14-04-2005, 08:43 AM
ஆம், அனைவரும் பழைய திஸ்கியில் எழுதிய பயனாளர் பெயரை யூனிகோடிற்கு மாற்றிக் கொண்டால் நல்லது.

உங்களால் முடிந்தால், நீங்களே செய்து கொள்ளுங்கள். அல்லது
அதில் ஏதும் பிரச்சனை இருந்தால் எனக்கு தனிமடல் அனுப்பவும், அல்லது இங்கே பதியலாம். நான் உங்களுக்கு மாற்றித் தருகிறேன்.

[இப்போது உங்கள் பெயரை மாற்றுகிறேன்]

நன்றி

இராசகுமாரன்

பாரதி
14-04-2005, 08:48 AM
பெயரை யுனிகோடில் மாற்றுவதற்கு நன்றி இராசகுமாரன். இதே போல இடத்தின் பெயரையும் யுனிகோடுக்கு மாற்றிவிடவும்.

திஸ்கியில் இருக்கும் உறுப்பினர் பெயரை அவர்களாகவே யுனிகோடுக்கு மாற்றிக்கொள்ளலாமா..?

பழைய மன்றத்தில் இருந்த ஒரு வசதி - தனிமடல் - இங்கு இல்லையே... ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டா..?

admin
14-04-2005, 10:09 AM
பழைய மன்றத்தை விட இங்கு நிறைய உண்டு.
என்னென்ன இல்லை என யாராவது தெரிவித்தால்,
அனைத்து வசதிகளும் கொடுக்கப் படும்.

admin
14-04-2005, 11:35 AM
பாரதி,

நீங்கள் கூறிய பின் தான் சென்று சோதித்துப் பார்த்தேன்.

1) உறுப்பினர்கள் தங்கள் பெயரை மாற்ற முடியாதாம். மாடரேட்டர்கள் தான் மாற்ற முடியுமாம் அதனால், விரைவில் அனைத்து நண்பர்களிடமும் கேட்டு ஒவ்வொன்றாக மாற்றி விடவேண்டும்.

2) தனி மடல் வசதி இருக்கிறது. அதை ஒவ்வொருவரும் தேவையில்லையெனின் தடை செய்து வைத்துக் கொள்ளலாம், அப்படி ஏதும் ஆகி இருக்கா என பார்க்கவும்.

மேலே உள்ள மெனுவில், Quick Links-ன் கீழ் Miscellaneous பகுதியில் Private Message சுட்டி உண்டாகும். அப்படி இல்லையெனில், User ControlPanel-ல் Edit Option-ல் Enable Private Message என்று இருக்கிறதா என பார்க்கவும்.

பாரதி
14-04-2005, 01:59 PM
மிக்க நன்றி இராசகுமாரன்.
இப்போது தனிமடலுக்கான விபரமும் வந்துவிட்டது. என்னால் பார்க்கவும் முடிகிறது.
இப்போது மன்றத்தில் உபயோகிக்கப்படும் எழுத்துரு என்ன..?
புதிய பதிவுகள் செய்யும் போது வரும் யுனிகோட் கன்வெர்டர் வசதி நன்றாக உள்ளது. அதே போல பதிவுகளை படித்தபின் கருத்து எழுதுவதற்கும் யுனிகோட் கன்வெர்டர் இருந்தால் வசதியாக இருக்கும்.
வேறு தேவைகள் ஏற்பட்டால் எழுதுகிறேன்.

Iniyan
14-04-2005, 02:24 PM
மிக்க நன்றி இராசகுமாரன்.
இப்போது தனிமடலுக்கான விபரமும் வந்துவிட்டது. என்னால் பார்க்கவும் முடிகிறது.
இப்போது மன்றத்தில் உபயோகிக்கப்படும் எழுத்துரு என்ன..?
புதிய பதிவுகள் செய்யும் போது வரும் யுனிகோட் கன்வெர்டர் வசதி நன்றாக உள்ளது. அதே போல பதிவுகளை படித்தபின் கருத்து எழுதுவதற்கும் யுனிகோட் கன்வெர்டர் இருந்தால் வசதியாக இருக்கும்.
வேறு தேவைகள் ஏற்பட்டால் எழுதுகிறேன்.

பாரதி!

யுனிகோட் மாற்றி எல்லா பக்கங்காளிலும் வருகிற்தெ எனக்கு.

Iniyan
14-04-2005, 02:25 PM
அட்மின்!

என் பெயரை "இனியன்" என இனிய தமிழில் மாற்றித் தர இயலுமா????

admin
18-04-2005, 09:19 AM
பாரதி,

இங்கு புதிய பதிப்புகள் பகுதியில் உபயோகப் படுத்தும் எழுத்துருக்கள் பின்வருமாறு:

1) Latha 2)aAvarangal 3) TheneeUni 4) TSCu_InaiMathi 5) TSCu_Paranar

இந்த வரிசைப் படி உங்களிடம் எது முதலில் உள்ளதோ அதை எடுத்துக்கொள்ளும்.

admin
18-04-2005, 09:21 AM
அட்மின்!

என் பெயரை "இனியன்" என இனிய தமிழில் மாற்றித் தர இயலுமா????

இப்போது மாற்றியாச்சு இனியவரே..

Iniyan
18-04-2005, 09:31 AM
ஆகா நன்றி.

balakmu
19-04-2005, 04:36 PM
I am unable to read or type in tamil. Please help me how to set fonts I used to type it before in tamil. Please tell me where is the help line which used to be there before

Iniyan
20-04-2005, 01:31 PM
I am unable to read or type in tamil. Please help me how to set fonts I used to type it before in tamil. Please tell me where is the help line which used to be there before

Did u read all information abt how to get UNICODE working? Waht is Ur OS and What software u are using to type in Tamil?

mania
25-04-2005, 08:54 AM
இந்த பெயர் பிரச்சினை எனக்கு புரியவில்லை....நான் இப்போது இருக்கும் என் பெயரை மாற்ற வேன்டுமா...ஏன்....? அப்பிடியானல் எனக்கு உங்கள் உதவி தேவை
அன்புடன்
மணியா...

admin
26-04-2005, 07:03 AM
இந்த பெயர் பிரச்சினை எனக்கு புரியவில்லை....நான் இப்போது இருக்கும் என் பெயரை மாற்ற வேன்டுமா...ஏன்....? அப்பிடியானல் எனக்கு உங்கள் உதவி தேவை
அன்புடன்
மணியா...

மணியா,

இது பழைய மன்றத்தில் தமிழில் பெயர் வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால் பழைய மன்றத்தில் தமிழில் எழுதும் போது திஸ்கியில் எழுதினோம், இங்கே யூனிகோடில் எழுதுகிறோம்.

இருந்தாலும், ஆங்கிலத்தில் பெயர் வைத்திருந்தவர்கள், தமிழில் மாற்றம் செய்து கேட்டாலும் கொடுக்கப் படும்.

mania
26-04-2005, 07:29 AM
மிக்க நன்றி அட்மின்
அன்புடன்
மணியா...

வாணி
27-04-2005, 03:16 PM
எனது பெயரை"வாணி" என தமிழில் மாற்றி தர இயழுமா அண்ணா

சுவேதா
28-04-2005, 01:04 AM
அண்ணா!
எனது பெயரை சுவேதா என தமிழில் மாற்றித் தருவீர்களா?

majara
25-05-2005, 06:09 AM
நான் மட்டும் என்ன கருப்பா.............. :huh:

அண்ணா அண்ணா

எனது பெயரையும் மாற்றி தருவீர்களா

பரஞ்சோதி
25-05-2005, 06:26 AM
நான் மட்டும் என்ன கருப்பா.............. :huh:

அண்ணா அண்ணா

எனது பெயரையும் மாற்றி தருவீர்களா

தமிழில் என்ன பெயர் வேண்டும் என்று சொல்லுங்க, நிர்வாகி மாற்றுவார்.

பிரியன்
26-05-2005, 03:16 PM
என் பெயரை பிரியன் அல்லது உங்கள்பிரியன் என மாற்றித் தர முடியுமா?

பிரியன்
29-05-2005, 07:37 PM
எனது கேள்விக்கு பதில் எதையும் காணலியே,,,,
நிர்வாகிகள் கவனித்து உதவுங்களேன்.

இராசகுமாரன்
07-06-2005, 06:12 AM
உங்கள் பதிவை பார்க்கவில்லை அதனால் தாமதம்.
இப்போது மாற்றப் பட்டுவிட்டது.

பிரியன்
07-06-2005, 06:15 AM
நன்றி . பிரியன் என்று மாற்ற முடியுமா. ஏனென்றால் மழைய மன்றத்தில் பிரியன் என்றே இயங்கினேன். முடியாவிட்டால் பரவாயில்லை நண்பரே

பிரியன்
07-06-2005, 06:26 AM
மிக்க நன்றி ராஜகுமாரன். சொந்த வீட்டிற்கு வந்தது போல் இருக்கிறது . மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது

உதயா
17-08-2005, 10:25 AM
திரு.ராஜகுமாரன் அவர்களே... manmadan என்று இருக்கும் என் பெயரை மதன் என்று மாற்றி தாருங்கள். நன்றி

மன்மதன்
17-08-2005, 10:35 AM
மதன் என்று ஏற்கனவே ஒருவர் இருக்கிறார்.. நீங்கள் வேறு நல்ல பெயராக தேர்வு செய்யுங்கள்.. கவிதை, கட்டுரை எழுதும் போது ஒரு அட்ராக்டிவாக இருக்கும் படி தேர்ந்தெடுங்கள்.. உ.தா மன்னன், கலைஞன், லோகு, சிபி, மேஜர், ராம்ஸ் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...
அன்புடன்
மன்மதன்

உதயா
17-08-2005, 10:56 AM
அப்படியா.. வெற்றி அல்லது உதயா என்று மாற்றி தாறுங்கள்.

pradeepkt
17-08-2005, 12:09 PM
நல்லதாப் போச்சி...
ஆக, இப்ப புது மன்மதன் வெற்றி ஆகிட்டாரா?
எல்லாத் தளங்களிலும் பங்கு பெற்று வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்.

மன்மதன்
17-08-2005, 12:13 PM
இனிமேல் உங்களுக்கு வெற்றிதான்.. வாழ்த்துக்கள்..
அன்புடன்
மன்மதன்

ஜீவா
17-08-2005, 12:20 PM
இனிமேல் உங்களுக்கு வெற்றிதான்.. வாழ்த்துக்கள்..
அன்புடன்
மன்மதன்

எப்படீயோ புது மன்மதனை விரட்டி வெற்றி ஆ(க்)கிட்டிங்க....:rolleyes: :rolleyes: :D :D

இராசகுமாரன்
17-08-2005, 12:35 PM
பிரியன் + priyan = பிரியன்

இரண்டு பெயர்களை இணைக்கும் வசதி இந்த மென்பொருளின் ஒரு சிறப்பு அம்சம். அதை உபயோகித்து நண்பர் பிரியனின் இரண்டு பயனாளர் பெயர்களையும் ஒன்று சேர்த்தாச்சு. ஒவ்வொன்றிலும் 500+ பதிப்புகள் வைத்திருந்தவர், இப்போது 1000+ ஆகிவிட்டார்.

வேறு யாராவது இது போன்று 2 பெயர்கள் வைத்துக் கொண்டு இணைக்கும் வசதி தேவையா?

ஜீவா
17-08-2005, 12:51 PM
என்னுடைய பதிப்புகள் பழய மன்றத்தில அழகுராசான்னு இருக்ககும்.. அது முடியுமா???

இராசகுமாரன்
17-08-2005, 01:02 PM
ஜீவா உங்கள் பெயரையும் இணைத்தாச்சு..

ஜீவா + அழகுராசா = ஜீவா

இது ஒரு one way traffic. இணைத்தவுடன் பழைய பெயர் தானாக நீக்கப் பட்டுவிடும். Profile-ஐ சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

மன்மதன்
17-08-2005, 01:02 PM
பிரியனுக்கு வாழ்த்துக்கள்.. இராசகுமாரனுக்கு நன்றி.. நேற்றுதான் இது பற்றி என்னிடம் பிரியன் சொன்னார். உடனடியாக சரி செய்தாகிவிட்டது..
அன்புடன்
மன்மதன்

உதயா
17-08-2005, 01:23 PM
நன்றி நண்பர்களே. இப்போதே நான் வெற்றி பெற்றது போலதான்.

ஜீவா
17-08-2005, 01:26 PM
ஜீவா உங்கள் பெயரையும் இணைத்தாச்சு..

ஜீவா + அழகுராசா = ஜீவா

இது ஒரு one way traffic. இணைத்தவுடன் பழைய பெயர் தானாக நீக்கப் பட்டுவிடும். Profile-ஐ சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அருமை அருமை.. நானும் இப்போது 250 போஸ்ட்க்கு மேல் வந்துட்டேன்..

மன்மதன்
17-08-2005, 01:33 PM
250 என்பதெல்லாம் உங்களுக்கு சாதாரணம் ஜீவா..
அன்புடன்
மன்மதன்

மஸாகி
30-04-2006, 03:53 AM
அன்புள்ள
நிர்வாகி அவர்களுக்கு,

நலமா.. நலமே..

நண்பர் நலமாக இருந்தால்
நாங்களும் நலமாக இருந்தமாதிரி..

உங்க பக்கம் இப்போ சூடுதானே
அதான் - கொஞ்சம் ஐஸ் வச்சு
எனக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்ன
சாதிக்கலாம் என நினச்சேன்..

தாங்கள் கொஞ்சம்
பெரிய மனசு பண்ணி - Mazaagy
என்று ஆங்கிலத்தில் உள்ள என் பெயரை
தமிழில் மஸாகி என்று மாற்றிடுங்களேன்..
ரொம்ப நன்றிங்க..

நட்புடன் - மஸாகி
30.04.2006

இராசகுமாரன்
14-05-2006, 02:19 PM
நேரமின்மையால் நண்பர்கள் கையில் இந்த பொறுப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

உங்கள் பெயர் மாற்றம் செய்யப் பட்டுவிட்டது.
கடமையை செய்ய ஐஸ் வைக்க தேவையில்லை மஸாகி..

மஸாகி
16-05-2006, 03:43 AM
உங்கள்
கடமையுணர்ச்சிக்கு முன்னால்,
நான் தோற்றுவிட்டேன் நண்பரே..

என் பெயரை
அழகிய தமிழில்
மாற்றிக் கொடுத்தமைக்கும்,
நான்
கோரிக்கை விடுக்காமலேயே,
என்னையும் ஓர் பண்பட்டவராக
தெரிவு செய்தமைக்குமாக சேர்த்து

இரண்டு முறை - நன்றிகள்..

என்றும் நட்புடன்,
மஸாகி

ravi_apn
02-08-2006, 07:38 PM
என் பெயரை இனிய தமிழில் மாற்றித் தர இயலுமா

இனியவன்
07-08-2006, 09:43 AM
பிரியன் + priyan = பிரியன்

இரண்டு பெயர்களை இணைக்கும் வசதி இந்த மென்பொருளின் ஒரு சிறப்பு அம்சம். அதை உபயோகித்து நண்பர் பிரியனின் இரண்டு பயனாளர் பெயர்களையும் ஒன்று சேர்த்தாச்சு. ஒவ்வொன்றிலும் 500+ பதிப்புகள் வைத்திருந்தவர், இப்போது 1000+ ஆகிவிட்டார்.

வேறு யாராவது இது போன்று 2 பெயர்கள் வைத்துக் கொண்டு இணைக்கும் வசதி தேவையா?

இனியவனாய் அடியெடுத்து வைத்தேன்.
இடையில் கடவுச் சொல் தவறால்
இனியனாய் அவதரித்தேன்.
இரண்டையும் இணைத்து இனியன்
எனத் தொடர வழியுண்டா?