PDA

View Full Version : மீண்டும் வரட்டும் அந்த கனாக்காலம்



பரஞ்சோதி
11-04-2005, 08:39 AM
நண்பர்களே!

நம் வாழ்க்கையில் என்றைக்கும் மறக்க முடியாத காலம் நம்முடைய இளமை பருவம், இளமை பருவம் என்றால் அதில் பிறந்தது, தவிழ்ந்தது, நடந்தது, பள்ளிக்கூடம் சென்றது, பட்டம் வாங்கியது வரை சொல்லலாம்.

நண்பர்கள் புதிரோ புதிர் தலைப்பில் குழந்தைகள் புத்தகங்களை பற்றி சொன்ன பதிவுகளை படித்துப் பார்த்த போது எனக்கு மீண்டும் குழந்தை பருவம் செல்ல வேண்டும் என்ற ஆசை தோன்றியது.

இங்கே நாம் அனைவரும் நம்முடைய குழந்தை பருவம் முதல் இளமை பருவம் வரை நடந்த சுவாரசியமான விசயங்கள், அனுபவங்கள், ஆசைகளை சொல்லலாமே.


Originally posted by gragavan+Apr 11 2005, 08:18 AM--><div class='quotetop'>QUOTE(gragavan @ Apr 11 2005, 08:18 AM)</div><div class='quotemain'><!--QuoteBegin-பரஞ்சோதி@Apr 10 2005, 02:46 AM
அந்த பெண்மணி நீதிபதியிடம் சென்று, அய்யா, என் கணவர் வெளியூர் சென்றிருக்கிறார், அவர் என்னிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்க சொன்ன 1000 பொற்காசுகளை உங்களிடம் கொடுத்து பத்திரப்படுத்தி வைக்க நினைக்கிறேன், அவர் வந்ததும் நீங்கள் திருப்பிக் கொடுங்கள் என்று சொல்லியிருப்பார்.

அதே நேரத்தில் நம்மவர் வந்து 150 பொற்காசுகள் கேட்க, அதை கொடுக்கவில்லை என்றால் இந்த பெண்மணி தன்னை நம்ப மாட்டார் என்று நினைத்து அவர் கேட்ட 150ஐ கொடுத்து விட்டார்.
97431

சரியாகச் சொன்னாய் தம்பி. இதுதான் விடை. நீ முன்னம் சொன்னது போல ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, பொம்மை, கோகுலம் எல்லாம் நினைவிற்கு வருகிறது. இப்பொழுது எனக்குத் தெரிந்து அம்புலிமாமா, கோகுலம் மற்றும் சுட்டி விகடன் போன்றவை வெளிவருகின்றன.

அன்புடன்,
கோ.இராகவன்

அதிர்ச்சியும் குரங்காட்டமும்....
http://www.tamilmantram.com/new/index.php?showtopic=4891
97459
[/b][/quote]

புதிரோ புதிர்

பரஞ்சோதி
11-04-2005, 08:44 AM
நான் சின்ன வயதில் அனைத்து வகை சிறுவர் கதைகளையும் படித்ததுண்டு,

கோகுலம், பாலமித்ரா, அம்புலிமாமா, வாண்டுமாமாவின் கதைகள், ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், தினமலரின் சிறுவர் மலர் இப்படி எண்ணிக்கையில் அடங்காத புத்தகங்கள் உண்டு.

1 ரூபாய் கொடுத்து கூட புத்தகம் வாங்க முடியாத நிலையில் கூட நான் அனைத்து புத்தகங்களையும் படித்து, சேமித்ததுண்டு, அதற்கு என்னுடைய திறமை தான் காரணம் (பெருமைக்கு சொல்லவில்லை).

நண்பர்களிம் ஆளுக்கு 10 காசு என்று வாங்குவேன், 1 ரூபாய் சேர்ந்ததும் புத்தகம் வாங்கி நான் தான் முதலில் படிப்பேன், பின்னர் தினம் ஒருவருக்கு என்று கொடுத்து பின்னர் எல்லோரும் படித்த பின்பு அதை நான் சேமித்து வைத்துக் கொள்வேன், இதற்கு என்று நான் செலவு செய்தது 10 பைசா கூட அல்ல, ஆனால் யாருடைய மனமும் கோணாமல், பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொண்டது மட்டுமே நான் செலவு செய்தது ஆகும்.

நண்பர்களே இன்னமும் நிறைய இருக்குது, உங்கள் அனுபவங்கள் கொஞ்சம் தேன் சொட்ட சொல்லுங்களேன்.

babu4780
11-04-2005, 09:52 AM
கடந்த முறை வீட்டிற்கு சென்றிருந்த போது வீட்டில் என் சகோதிரியின் பெண்ணிற்கு (LKG) முழுஆண்டு விடுமுறை ஆரம்பிக்கப்போவதாகச் சொன்னார்கள். எனக்கு என்னுடைய முழாண்டு விடுமுறைகள் நினைவுக்கு வந்தது.

இப்போதெல்லம் அந்தமாதிரி விடுமுறை இல்லையே என்று எனக்கு ஒரே பொறாமையா இருந்திச்சு..

அப்போதே கிட்டதட்ட இதேமாதிரி ஒரு தலைப்பு ஆரம்பிக்கனும்னு நினைச்சேன் (பள்ளிகளின் - கோடைவிடுமுறைநாட்களை நினைவுபடுத்தும் வகையில்). சுப்பர்பு பரம்ஸ்..அருமை.

பரஞ்சோதி
11-04-2005, 10:15 AM
அருமை நண்பர் பெரி அவர்கள் சொன்ன கோடை விடுமுறை பற்றிய நம்முடைய அனுபவங்களை சொல்லலாமா?

மன்மதன்
11-04-2005, 10:27 AM
பெரியவங்க தங்கள் இளமை பருவத்தை பற்றி பகிர்ந்து கொள்வது பேரின்பம்.. நான் இன்னமும் இளமைப்பருவத்தில் இருப்பதால், குழந்தை பருவத்தை பற்றி ஏதாவது சொல்லட்டுமா???? :rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
11-04-2005, 10:36 AM
Originally posted by மன்மதன்@Apr 11 2005, 03:27 PM
பெரியவங்க தங்கள் இளமை பருவத்தை பற்றி பகிர்ந்து கொள்வது பேரின்பம்.. நான் இன்னமும் இளமைப்பருவத்தில் இருப்பதால், குழந்தை பருவத்தை பற்றி ஏதாவது சொல்லட்டுமா????
அன்புடன்
மன்மதன்
97477
சொல்லு மன்மதா சொல்லு. சொல்ல வந்ததை ஏன் நிறுத்தி விட்டாய்? தேனோடு கலந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல்.

(யாரோ பின்னனியில் ஊறுகாயோடு சேர்ந்த கள்ளமுது என்று சொல்வது எனக்கு இங்கே கேட்கிறது).

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
11-04-2005, 10:45 AM
அ..ட..ப்..பா..வி.. என்னப்பத்தி சொல்லும் போது கள்ளு, ஊறுகாய் எல்லாம் எப்படி நியாபகம் வருது..
அன்புடன்
மன்மதன்

gragavan
11-04-2005, 10:48 AM
பரஞ்சோதி...உண்மைதான். புத்தகங்களை வாங்குவதும் அவற்றை எல்லாரும் பிரச்சனை வராமல் படிக்கச் செய்வதும் மிகப் பெரிய முதலீடு. அதற்கு முன் அந்தப் பத்து காசு பெரிதல்ல.

என்னுடைய அனுபவங்கள் இன்னமும் வித்தியாசமானது. எந்தக் குழந்தைகள் புத்தகமும் எங்கள் வீட்டில் வாங்கப்பட்டதில்லை. அது நான் தூத்துக்குடியில் அத்தை வீட்டில் இருந்த பொழுது. வீட்டில் எண்ணிக்கை நிறைய. ஆகையால் லெண்டிங் லைப்ரரியில் விகடன், குமுதம், இதயம், குங்குமம் எல்லாம் வீட்டிற்கு வரும். அந்த வயதில் அவைகளையும் விட்டு வைக்க வில்லை. எதையாவது படிக்க வேண்டும் என்ற ஆவல். கிடைப்பதெல்லாம் எடுத்துப் படிப்பேன்.

ஆனாலும் சில நண்பர்கள் வீட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் வாங்குவார்கள். அதற்காகவே அவர்களோடு நல்ல பழக்கம். புத்தகம் படிப்பதற்காகவே அவர்கள் வீட்டிற்குச் செல்வேன். அடிக்கடி அப்படிச் செல்கிறேன் என்று வீட்டில் திட்டு விழும். சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவேன். நான் எங்கு சென்றிருப்பேன் என்று வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரியும். சரியாக அங்கே வந்து கூட்டிக் கொண்டு வருவார்கள்.

எங்கேயாவது ஊருக்குப் போனார் என்ன வேண்டுமென்று கேட்பார்கள். கூட இருக்கும் குழந்தைகள் சீரணி வேண்டும், மிட்டாய் வேண்டும் என்று கேட்பார்கள். நான் ரத்னபாலா வேண்டும். அம்புலிமாமா வேண்டும் என்று கேட்பேன்.

வீட்டில் எப்பொழுதாவது கிடைக்கும் காசுகளைச் சேர்த்து வைத்து சின்னச் சின்ன புத்தகங்கள் வாங்குவேன். நந்தை இளவரசி. பறக்கும் குதிரையும் மாய வீரனும் போன்ற புத்தகங்கள் பழைய புத்தகக் கடையில் நாலணாவிற்குக் கிடைக்கும். அதை வாங்கி ஒளித்து வைத்து படிப்பேன். அதை வீட்டில் கண்டு பிடித்து திட்டும் வாங்கியிருக்கிறேன்.

இன்றைக்குக் கடைக்குப் போய் விரும்பிய புத்தகங்களை வாங்கிப் படிக்க முடிகிறது. ஆனால் அன்றைக்கு......

இப்பொழுது Harry Potter and The Half Blood Price வருகிறது. முன்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் புத்தகம் வெளியாகும் நாளே கிடைக்காது. இரண்டொரு நாள் தாமதமாகும்.

அன்புடன்,
கோ.இராகவன்

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
11-04-2005, 11:00 AM
அனுபவம் பழமை.. அவனிடம் கண்டேன்.. இருந்தாலும் கடைசியில் ....
ரொம்ப பீட்டரா இருக்கு. :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
11-04-2005, 11:46 AM
Originally posted by மன்மதன்@Apr 11 2005, 01:45 PM
அ..ட..ப்..பா..வி.. என்னப்பத்தி சொல்லும் போது கள்ளு, ஊறுகாய் எல்லாம் எப்படி நியாபகம் வருது..
அன்புடன்
மன்மதன்
97480



ஏலே மன்மதா, சின்ன பயபுள்ள மாதிரி பேசு, சின்ன வயசு அனுபவத்தை சொல்லுன்னா, என்ன பேச்சுலே பேசுற - நெல்லை ஆச்சி.

நண்பா, உன் சின்னவயசு விடுமுறை அனுபவம், மற்றவைகளை நகைச்சுவையாக சொல். நன்றி.

gragavan
11-04-2005, 12:24 PM
Originally posted by மன்மதன்@Apr 11 2005, 04:00 PM
அனுபவம் பழமை.. அவனிடம் கண்டேன்.. இருந்தாலும் கடைசியில் ....
ரொம்ப பீட்டரா இருக்கு.
அன்புடன்
மன்மதன்
97483

என்னது பீட்டரா இருக்கா? நெரம்லேய். நேரம். இப்பிடியே மீட்டர் விடாம உங் கதைக்கி வால. ;-)

அன்புடன்,
கோ.இராகவன்

babu4780
11-04-2005, 01:19 PM
Originally posted by பரஞ்சோதி@Apr 11 2005, 03:45 PM
அருமை நண்பர் பெரி அவர்கள் சொன்ன கோடை விடுமுறை பற்றிய நம்முடைய அனுபவங்களை சொல்லலாமா?
97475

நன்றி பரம்ஸ் - சீக்கிரமே என்னோட ஒரு சூப்பர் அனுபவத்தை இங்கே பதிக்கிறேன்..

mania
12-04-2005, 04:45 AM
Originally posted by பரஞ்சோதி+Apr 11 2005, 05:16 PM--><div class='quotetop'>QUOTE(பரஞ்சோதி @ Apr 11 2005, 05:16 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-மன்மதன்@Apr 11 2005, 01:45 PM
அ..ட..ப்..பா..வி.. என்னப்பத்தி சொல்லும் போது கள்ளு, ஊறுகாய் எல்லாம் எப்படி நியாபகம் வருது..
அன்புடன்
மன்மதன்
97480





ஏலே மன்மதா, சின்ன பயபுள்ள மாதிரி பேசு, சின்ன வயசு அனுபவத்தை சொல்லுன்னா, என்ன பேச்சுலே பேசுற - நெல்லை ஆச்சி.

நண்பா, உன் சின்னவயசு விடுமுறை அனுபவம், மற்றவைகளை நகைச்சுவையாக சொல். நன்றி.



சின்ன வயசு அனுபவம்ன்னும் சொல்லி நகைச்சுவைன்னும் சொன்னா எப்படி...?
அவனுக்கு தெரிந்ததே நக ச்சுவை தானே....
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
12-04-2005, 04:49 AM
தலை, உங்க காலம் எங்களுக்கு தெரியாத காலம், அப்போ நடந்த, சந்தித்த சுவையான சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வந்து சொல்லுங்களேன்.

gragavan
12-04-2005, 04:54 AM
சரி. சரி. நேரத்தக் கடத்தாம கதைக்கி வாங்க. எங்கிட்ட ஒரு ரொம்பச் சுவையான அனுபவமிருக்கு. யாராவது இப்பச் சொல்லுங்க. அடுத்து நாஞ் சொல்றேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

நீர்நிலைகளில் செய்யக் கூடாதவை....
http://www.tamilmantram.com/new/index.php?...495&#entry97495

சரியான சுட்டி பின்னர் இணைக்கப்படும்-அமரன்

பரஞ்சோதி
13-04-2005, 11:46 AM
அண்ணா, நீங்க சொன்ன பின்பு தான் சொல்வேன் என்று தம்பி பிரதீப், பெரி எல்லோரும் காத்திருக்கிறார்கள், அண்ணன் அண்ணன் தானே.