PDA

View Full Version : ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம்



thiruarul
08-04-2005, 04:46 AM
ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக மக்கள் அடைந்த துன்பங்கள் எண்ணிலடங்கா. ஆனாலும் இலங்கையில் அரச கட்டுப்பாட்டில் இல்லாத பகுதி மக்கள் அடைந்த அவலங்கள், அங்கு நடந்தது என்ன என்பது குறித்து 48 மணிநேரம் கழித்தே செய்திகள் வெளியுலகை வந்தடையத் தொடங்கின.

அவ்வாறான பகுதிகளில் ஒன்றான முல்லைத்தீவுப் பகுதியை சம்பவம் நடந்து 12 மணிநேரத்தினுள் சென்றடைந்த முதலாவது மருத்துவ மீட்பு அணியில் பங்குகொண்டவன் என்ற வகையில் எனது அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொள்ள எண்ணினேன்.

அதனை இலகுவாக்கிவிட்டது ஈழநாதம் பத்திரிகை.

அதில் வெளிவந்த அனுபவக் குறிப்புகளைத் தொடர்ச்சியாக இங்கு தரவிளைகிறேன்.


ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம்

-அ.லோகீசன்-

~சுனாமி| பேரலைகள் பல்லாயிரம் உறவுகளின் உயிர்களையும், பெறுமதிமிக்க சொத்துக்களையும் சில நிமிடங்களில் விழுங்கி ஏப்பம் விட்டு நிற்கிறது. இந்தப் பேரவலம் பொதுவாகப் பல்வேறு நாடுகளிலும் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கிறது. வன்னிப் பகுதியில் முல்லைத்தீவிலும் இது போழப்பை ஏற்படுத்திவிட்டது. இதன் கோரத்தன்மையை யாராலும் கூறிவிட முடியாது.

இந்த நிலையில் பேரழிவுக்குள்ளான முல்லைத்தீவுப் பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் சில மணித்துளிகளுக்குள்ளாகவே ஆரம்பமாகிவிட்டது. இந்தத் தூத மீட்பு நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சகல படையணிகளும், தமிழீழக் காவல்துறையினரும், பொதுமக்களும் எனப் பலரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தூதகதியில் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டமைக்கு பல தரப்பினரும் தமது பாராட்டைத் தொவித்திருந்தனர்.

எனவே மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை சந்தித்து அவர்கள் அந்தப் பகுதிகளில் எவ்வாறு செயற்பட்டார்கள். அவர்கள் எதைக் கண்டார்கள் அந்தப் பகுதிகள் எப்படிஇருந்தது என்பன பற்றிக்கேட்டோம். அவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்ட தமது அனுபவங்களை வாசகர்களுக்குத் தருகிறோம்.

தமிழீழக் காவல்துறையின் முல்லை. மாவட்ட கண்காணிப்பாளர் இ.றஞ்சித்குமார் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்கிறார்.

நாங்கள் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள எமது காவல் பணிமனையில் வழமையான கடமைகளை செய்துகொண்டிருந்தோம். காலை 9.00 மணி இருக்கும் முல்லைத்தீவுப் பகுதியில் கடமையாற்றும் எங்கள் உறுப்பினர் ஒருவர் வேறு ஒருமுகாமில் இருந்து எங்களுக்கு தொடர்பெடுத்து இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவும் அதனால் முல்லைத்தீவுக்குள் செல்ல முடியாமல் இருப்பதாகவும் தொவித்தார். நாங்கள் உடனடியாகவே ஒரு குறிப்பிட்ட உறுப்பினர்களுடன் அந்தப் பகுதிக்கு மீட்பு நடவடிக்கைகளுக்காக புறப்பட்டு விரைவாக வட்டுவாகல் பாலத்தை சென்றடைந்தோம். வட்டுவாகல் பாலத்தை நாங்கள் அடையும்போது மக்கள் பெரும் கூட்டம் கூட்டமாக புதுக்குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

வட்டுவாகல் பாலத்தை நாங்கள் வந்தடைந்துவிட்டோம். பாலத்தின் மேலாக கடல்நீர் முல்லைத்தீவுக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் எங்களுடன் பிறிதொரு அணியும் வந்து இணைந்து கொண்டது. இப்பொழுது நாங்கள் வட்டுவாகல் பாலத்தைக் கடப்பதற்காக முயன்று கொண்டிருந்தோம். பாலத்தில் பெரும் பனைமரங்கள் எல்லாம் வேருடன் வந்து சாய்ந்து கிடந்தன. நாங்கள் 'மறுகரையை அடையவேண்டும் என்ற நோக்குடன் முயன்றுகொண்டிருந்தோம். மறுகரையில் இருந்து வரவேண்டாம்... என்று கை அசைத்துக் காட்டிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பாலத்தின் நிலை என்ன என்பதை அறிவதற்காக நானும் குணராஜ் என்ற உறுப்பினரும் மெதுவாக நடந்துவந்துகொண்டிருந்தோம். அப்போது தான் தொந்தது இரண்டு இடங்களில் பாலம் உடைந்துள்ளது என்ற விடயம். பெரும் மரங்கள் பாலத்தில் வந்து தேங்கிக் கிடந்ததால் நாங்கள் அதை பயன்படுத்தி பாலத்தைக் கடந்து மறுகரையை அடைய முயற்சித்தோம். அப்போது மறுகரையில் இருந்தவர்கள் 'அலைவருது அலைவருது" என்று கத்தியபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் கடலைப்;பார்த்தோம்;. கடல் உண்மையிலேயே மூசிக்கொண்டிருந்தது. இப்போது நாங்கள் தண்ணீருக்குள்ளால் ஓட ஆரம்பித்தோம். ஒருவாறு மறுகரையை போய்ச் சேர்ந்துவிட்டோம். நாங்கள் போய்ச் சேரவும் வெள்ளம் அதிகாக்கவும் சாயாக இருந்தது.

வட்டுவாகல் பாலத்தின் மறுகரையில் கூடி நின்ற மக்களிடம் என்ன நடந்தது என்று கேட்டோம். அவர்கள் கதறி அழுதார்கள். 'அலைவந்து கனபேரைஅடித்துக்கொண்டு போய்விட்டது. காயப்பட்டும் செத்தும் கனபேர் கிடக்கினம். தூக்குறத்துக்கு ஒருத்தரும் இல்லை" என்றார்கள். முல்லைத்தீவில் என்ன மாதி என்று கேட்டோம் அவர்கள் தங்களுக்கு எதுவும் தொயாது என்றார்கள்.

வீதிகள், குடியிருப்புக்கள் எல்லாம் பெரும் வெள்ளம் தேங்கி நின்று கொண்டிருந்ததாலும் இடிபாடுகள், மரமுறிவுகள் அனைத்தும் இடத்தின் தோற்றத்தையே மாற்றி இருந்ததாலும் எங்களுக்கு எவ்வழியால் போவது என்று தொயாமல் இருந்தது. அருகில் நின்ற முல்லைத்தீவு கள்ளப்பாட்டைச் சேர்ந்த நம்பி என்பவர் 'எனக்குப் பாதை தொயும் வாருங்கள் நான் கூட்டிக் கொண்டு போகிறேன்" என்று எங்களைப் பாதைகாட்டிக் கூட்;டிச்சென்றார். அவருடன் சேர்ந்து நாங்கள் சின்னத்தங்காடு பக்கதால் உள்ளுக்கு இறங்கினோம். இறங்கியபிறகு தான் தொந்தது கோரமாய் பலர் செத்துக் கிடந்தார்கள். தப்பியவர்கள் எங்களைக் கண்டதும் 'ஐயோ எங்களைக் காப்பாற்றுங்கள்..." என்று கைகளைக் கூப்பி அழுதார்கள் நாங்கள் அவர்களிடம் எல்லோரையும் றோட்டுக்கரைக்கு கொண்டுவாருங்கள் நாங்கள் அதற்குய ஒழுங்குகளை செய்கிறோம் என்றோம். அத்துடன் உயிருடன் இருப்பவர்களை றோட்டுக்கு வாருங்கள் நாங்கள் உங்களையும் அனுப்புவதற்கு உய ஏற்பாடுகளைச் செய்கிறோம் என்றோம். வட்டுவாகல் பாலத்தின் அடுத்த கரையில் நின்றவர்களிடம் அறிவித்தோம். உடனடியாகவே எங்களுக்குய வாகனங்களை அனுப்புங்கள். காயமடைந்தவர்களும், இறந்தவர்களும் பெருமளவில் உள்ளனர் என்ற விடயத்தையும் தொயப்படுத்தினோம்.

உடனடியாகவே உள்ளகப் பாதுகாப்புப்பிவுப் பொறுப்பாளர் கானகன் அண்ணா அவர்கள் உடைந்த பாலத்தை மண்போட்டும், கற்கள் போட்டும் திருத்தம் செய்து ஒரு உழவு இயந்திரத்தினை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். திடீர் என்று கடல் மூடியதால் அந்த முயற்சி தோல்வி கண்டுவிட்டது. அவர் உடனே எங்களுக்கு இந்தச் சம்பவத்தை அறிவித்து ஆட்களை வேறுபாதையால் மீட்குமாறு கூறினார். எங்களுக்கு வேறுவழி எதுவும் இல்லை. இந்த வழிதான் உள்ளது என்று தொயப்படுத்தினோம். இந்த நிலையில் சிறப்புப் படை உறுப்பினர் வசி என்பவர் தனது உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்துக்குள்ளால் உழவு இயந்திரத்தைக் கொண்டு வந்துவிட்டார். உடனடியாகவே காயமடைந்தவர்களையும், நீல் மூழ்கி உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தவர்களையும் ஏற்றி அனுப்பிவிட்டு முல்லைத்தீவுக்குப் போக ஆரம்பித்தோம். இந்த நிலையில் சின்னத் தங்காட்டுக்கும், முல்லைத்தீவுக்கும் இடையில் உள்ள சிற்றாறு என்ற ஆறு பத்து அடியளவில் பாய்ந்தகொண்டிருந்தது. எதுவுமே தொயவில்லை. நாங்கள் அதனால் போகின்ற முயற்சியைக் கைவிட்டு வேறு சுற்றுப் பாதையால் முல்லைத்தீவு பிரதான வீதிக்குஏறி இடுப்பளவு தண்ணீல் நடந்து வந்து கரைச்சி குடியிருப்புப் பாலத்தை வந்து பார்த்தோம். அடுத்த கரையில் சிலர் அந்தரப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

நாங்கள் தண்ணீருக்குள்ளால் போய்க் கொண்டிருந்தோம். மரங்களின் மேல் ஆட்கள் நின்று எங்களை வரவேண்டாம். அநியாயமாய் சாகப்போறீங்கள் என்று ஏசினார்கள்.

பாலத்தை கடக்க வேண்டும் என்ன செய்வது என்று யோசித்தோம். அப்போது ஒரு உழவு இயந்திரத்துடன் நின்றவர் 'தம்பி முல்லைத்தீவு போகப்போறன் வாறீங்களா?" என்று கேட்டார். அவருடன் கூடிப் போய்க்கொண்டிருந்தோம் உழவு இயந்திரத்தின் பெட்டியை மேவித் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. ஒருவாறு முல்லைத்தீவில் போய் இறங்கினோம். வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு போகவே நீண்ட நேரம் ஆகிவிட்டது.

முல்லைத்தீவின் நிலை மோசமாக இருந்தது. கரைச்சி குடியிருப்பில் கண்டதை விட முல்லைத்தீவு கோரமாக இருந்தது. எங்கும் மனித உடல்கள் உயிரற்றுக் கிடந்தன. எங்கும் கட்டட சிதைவுகளும் முறிந்த மரங்களுமாக முல்லைத்தீவு காட்சி தந்தது.

நாங்கள் மீட்புப்பணியை ஆரம்பித்தோம். கரைதுறைப் பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு அருகில் உள்ள பொய மரத்தில் இருந்து 'மாமா மாமா" என்று கூப்பிடுகின்ற சத்தம் கேட்டது. நாங்கள் மேலே பார்த்தோம். முட்கம்பிகள் சிக்கிய நிலையில் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது உடனடியாகவே அந்தக் குழந்தையை மரத்தில் இருந்து இறக்கினோம் இறங்கியதும் 'தண்ணி தண்ணி" என்று கத்தியபடி மயங்கிவிட்டது அந்தக் குழந்தை. இந்தச் சம்பவம் மிகவும் வேதனையாக இருந்தது. உடனடியாகப் பிள்ளையை வைத்தியசாலைக்கு ஏற்றி அனுப்பிவிட்டோம்.

இதன்பிறகு நாங்கள் தேடுதலை தொடர்ந்தோம். பல உடல்கள் மரங்களில் செருகுப்பட்டுக் கிடந்தன. பல ஆங்காங்கே நெளிந்தும், வளைந்தும் கிடந்தன சில கட்டட இடிபாடுகளுக்குள்ளே சிக்குண்டு கிடந்தன. 'மீட்புப் பணிக்காக வந்திருக்கிறோம் யாராவது இருந்தால் வாருங்கள் என்று கத்தினோம்" எவான் சத்தமும் இல்லை ஒருவர் பனைமரத்தின் மேல் ஏறி இருந்தார். அவரை இறங்கி வருமாறு சைகைகாட்டினோம் அவரோ 'நான் இறங்கி வரமாட்டேன் முதலில் நீங்கள் மரத்துக்கடியில் வாருங்கள்" என்றார். நாங்கள் மரத்துக்கடியில் போனோம் அவர் உடனே இறங்கிவிட்டார் அவருடன் உரையாடினோம். அவருக்கு 40 வயது வரும் அவர் எதையும் பொதாக கதைக்கவில்லை மனத்தாக்கத்துக்குள்ளாகி இருக்கவேண்டும். அவரை உடனே ஏற்றி அனுப்பி விட்டோம் இவ்வேளையில் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஏனைய பிவுப் போராளிகள், பொறுப்பாளர்கள் எனப் பெருமளவானவர்கள் வந்து குவிந்தார்கள் அவர்களுடன் சேர்ந்து மீட்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தினோம்.

எங்கள் மீட்பு நடவடிக்கையில் முதல் கட்டம் காயமடைந்தவர்களையும், உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களையும் மீட்பதாகத்தான் இருந்தது. பலரை மீட்டு அனுப்பினோம் காயமடைந்தவர்களில் சிலர் தாமாகவே வந்தார்கள். கால் கை முறிந்தவர்கள் கருக்குமட்டை வெட்டியவர்கள் மரங்கள், கட்டடங்களுடன் அடிப்பட்டவர்கள் எனப் பலர் எழுந்து நடக்க முடியாமல் முணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை தேடுதல் மூலம் கண்டு பிடித்தோம். சிலர் அவலக்குரல் எழுப்பினார்கள் இப்படியாக நாங்கள் மீட்பு நடவடிக்கைகளை செய்து கொண்டி ருந்தோம். கட்டட இடிபாடுகளை அகற்றி தேடுதல் மேற்கொள்ள முடியாதநிலை காணப்பட்டது. 1.00 மணிவரை வெள்ளம் குறையவே இல்லை முழங்கால் அளவு வெள்ளத்தினால் தான் நாங்கள் மீட்பு நடவடிக்கைகளை செய்தோம் கைக்குழந்தைகள். சிறுவர்கள் பெண்கள், வயோதிபர்கள் என வேறுபாடு இன்றி காண்கின்ற இடம் எல்லாம் சடலங்களாக இருந்தன. பலர் தமது குழந்தைகளை சடலமாக தூக்கி வைத்து கதறினர். சிலர் தங்கள் தாய் தந்தையை சடலமாக தூக்கி வைத்து கதறி அழுதனர் எங்குமே அவலக்குரலும் அழுகுரலும் காதை முட்டிமோதிக் கொண்டிருந்தது. சில சடலங்களை எங்களால் தூக்க முடியவில்லை. எலும்புகளின் மூட்டுக்கள் கழன்றிருக்கவேண்டும் அவற்றை பாய்களில் வைத்து இரண்டு பக்கமும் பிடித்துத் தூக்கி வந்தோம் முதல் நாள் மீட்பு நடவடிக்கையை பொறுத்தவரை பொதாக சடலங்கள் பழுதடையவில்லை. அடுத்தநாள் மீட்பு நடவடிக்கைதான் சிக்கலாக இருந்தது என அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் கண்காணிப்பாளர் றஞ்சித்குமார் அவர்களின் தலைமையிலான மீட்பு அணியினரால் பனை மரத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட அந்த 40 வயது மதிக்கத்தக்க மனிதரை சந்தித்து கடலில் என்ன நடந்தது கடல் எப்படி வந்தது குடியிருப்புக்கள் எப்படி அடித்துச் செல்லப்பட்டது என அவர் மரத்தில் இருந்து நேரடியாக அவதானித்த விடயங்களை அறிவதற்காக முல்லைத்தீவில் உள்ள அனைத்து நலன்பூ நிலையங்களிலும் தேடி அலைந்து பெரும் சிரமங்களின் மத்தியில் அவரைச் சந்தித்தோம். அவர் நோல் கண்ட தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் எங்களுடன் பகிர்ந்தவற்றை வாசகா;களுக்காக தருகிறோம்.

(தொடரும்)

நன்றி: ஈழநாதம்

puppy
08-04-2005, 06:28 AM
திருவருள்

உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.....படித்து தெரிந்து கொள்கிறோம்.....இன்னும் அங்கேயே தான் இருக்கீறீர்களா .

அன்புடன்
பப்பி

thiruarul
08-04-2005, 06:56 AM
நன்றி மதிப்பிற்குரிய பப்பி அவர்களே !

அடியேன் தற்போது கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் மருத்துவப்பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். பணிச்சுமை இங்கு மிக அதிகம்.

26 மருத்துவர்கள் தேவையுள்ள பிரதேசத்தில் நாம் 06 மருத்துவர்கள் மட்டுமே உள்ளோம்.

தற்போது மழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக ஆழிப்பபேரலை பாதித்த பகுதிகளில் இடம்பெயர்ந்து தற்காலிக கொட்டகைகளில் வதியும் மக்கள் பெரும் அல்லற்படுகிறார்கள்.

தொற்றுநோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம்.

அதனால் தற்போது ஓய்வுநேரம் கிடைப்பதரிது. மன்றத்தில் பங்களிப்பதும் வெகு குறைவு

இன்றிலிருந்து புதுவருடத்திற்கு குடும்பத்தினருடன் சேரும்பொருட்டு இருவார விடுமுறை பெற்றிருக்கிறேன். நாளை யாழ்ப்பாணம் செல்வதாக உத்தேசம்.

பணிவுடன் திருவருள்

kavitha
10-04-2005, 02:19 PM
இயன்றபோது தொடருங்கள். தகவலுக்கு நன்றிகள்

பாரதி
10-04-2005, 05:02 PM
இயற்கை தந்த படிப்பினை..!!
படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது திருவருள்..
என்ன இடர் வந்தாலும் மனிதாபிமானம் என்பதும் இருக்கத்தான் செய்கிறது என்பதும் புலனாகவே செய்கிறது.