PDA

View Full Version : பெண்ணே..........



நிலா
15-04-2003, 09:39 PM
பெண்ணே!

உன்னை மட்டுமே என் கண்கள்
காட்டுகின்றன!
உன் பெயர் மட்டுமே என் காதுகளுக்கு
கேட்கிறது!
இதயம் உன் பெயர் சொல்லியே
இயங்குகிறது!
கைகளும் கால்களும் உன்னைத்தேடியே
அலைகின்றன!
நெஞ்சினிலே நிறைந்திருந்தால்
நினைவு மட்டுமே ஏங்கியிருக்கும்!
மூளையிலே உறைந்து விட்டாய்
வேறு பணிகள் நான் செய்வது எப்படி?

இப்படிக்கு
நிலா

இளசு
15-04-2003, 10:33 PM
அடடா, இது என்ன
மூளை உறைந்த பின்னும்
கவிதைநதி பாய்கிறதே

அதுசரி நதிமூலம் நமக்கெதுக்கு
நனைந்தபடி நீராடுவோம்.....

அருமை நிலா அவர்களே, இன்னும் கொடுங்கள்
கோடை வெப்பத்துக்கு இதமாய்
சித்ரா பௌர்ணமிக்குப் பொருத்தமாய்......

Nanban
02-06-2003, 11:24 AM
நல்ல ஒரு surrealistic கவிதை. Logic, reasons இவற்றையெல்லாம் கடந்த ஒரு subconscious mind இருந்து வருபவை தான் surrealism. The glorious hallucination. ராம்பால் அவர்களே, இலக்கியம் பகுதியில் நீங்கள் ஆரம்பிக்கும் தொடருக்கு, surrealism தலைப்பிற்கு உ-ம் காட்ட நல்ல கவிதை...

இளைஞன்
02-06-2003, 09:23 PM
]பெண்ணே! [/b]


பெண்ணைப் பற்றிப் பாட ஆண் கவிஞர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் நிலா! என்ன இதிலும் சமவுரிமையா? ஆணைப்பற்றிப் பாடத்தான் கவிஞைகள் இல்லை (குறைவு). எனவே பெண்ணைப் பற்றி கவிதை எழுதுவதை விடுத்து, ஆணைப் பற்றி (இனி) எழுதுங்கள். (இது எனது அன்பு வேண்டுகோள்).

சரி... முதல் முயற்சியாக... இளைஞனைப் பற்றி ஒரு அழகான கவிதை எழுதுங்கள் பார்க்கலாம்! :லொல்:

இனியவள்
23-07-2007, 01:41 PM
உறைந்த மூளையில்
உறையால் காதலின்
நினைவுகள் எழுதத்
தூண்டியதோ கவிதை

வாழ்த்துக்கள்