PDA

View Full Version : பாதுகாப்பாக எப்படி சிபியூவை "ஓவர்கிளாக்" செய்வது?



பாரதி
02-04-2005, 08:40 PM
பாதுகாப்பாக எப்படி சிபியூவை "ஓவர்கிளாக்" செய்வது?

சில கணினிப்புத்தகங்களில் சொல்லி இருந்ததை என் அறிவுக்குட்பட்ட வரை சொல்ல முயற்சித்திருக்கிறேன். இதனை உபயோகித்து பார்க்க விரும்புபவர்களுக்கு: பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

ஓவர்கிளாக் என்றால் என்ன..? பிராசசரின் கோர் வோல்டேஜ், பஸ் வேகம் போன்றவற்றை குறிப்பிட்ட அளவு மாற்றுவதன் மூலம் கணினி வழக்கத்தைக் காட்டிலும் வேகமாக செயல்படும். இவ்வாறு மாற்றம் செய்வதையே ஓவர்கிளாக்(கிங்) என்றழைக்கிறோம்.

பெரும்பாலான பிராசசர்கள் ஓரளவு வரை ஓவர்கிளாக் செய்ய அனுமதிக்கப்படுகின்றன. சில பிராசசர்கள் அவைகளின் வடிவமைப்பினால் மேலும் சிறிதளவு ஓவர்கிளாக் செய்ய அனுமதிக்கின்றன. தற்போது வந்து கொண்டிருக்கும் பெரும்பாலான பிராசர்களில் 'கிளாக் மல்ட்டிபயர்ஸ்' லாக் செய்யப்பட்டிருப்பதால் அவைகளை ஓவர்கிளாக் செய்ய முடியாது. அந்த மாதிரி சமயங்களில், கணினியைப் பாதிக்காத வண்ணம் பஸ் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் வேகத்தைக் அதிகரிக்கலாம்.

ஓவர்கிளாக் செய்யும் போது எற்படும் பிரச்சினைகள் சிபியூவின் "வாரண்டி"யில் வராது என்பதால் கவனமாக இருக்கவும். கவனக்குறைவாக நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் பிராசசரை அதிக வெப்பத்திற்குள்ளாக்கவோ.. ஏன் செயல் இழக்கவோ கூட செய்யக்கூடும். பொறுமையும், கண்காணிப்பும், விடாமுயற்சியும் மிகவும் அவசியம்.

ஓவர்கிளாக் செய்வதால் பிராசசர் உட்பட கணினியின் முக்கிய பாகங்களின் வெப்பம் ஓரளவுக்கு அதிகரிக்கும். எனவே உங்கள் கணினி போதுமான காற்றோட்டம் கொண்டதாக உள்ளதா அல்லது புதிதாக மின்விசிறிகள் தேவைப்படுமா என்பதை கண்டறியுங்கள்.

உங்கள் கணினியுடன் தரப்பட்டுள்ள புத்தகத்தில் ஓவர்கிளாக் செய்ய முடியுமா என்ற விபரம் உள்ளதா - ஜம்பர் செட்டிங்குகள் அல்லது பயாஸ் செட்டிங்கை மாற்றுவதன் மூலம் ஓவர்கிளாக் செய்வது எப்படி என்கிற வழிமுறை உள்ளதா என்று பாருங்கள்.

மேற்கண்ட விபரங்களை நன்றாக உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் அதாவது சிபியூவின் மின்னழுத்தம் (கோர் வோல்டேஜ்), கிளாக் மல்ட்டி?பயர், பஸ் வேகம் போன்றவற்றை மாற்ற இயலும் என்பதை நன்றாக உறுதிப்படுத்திக்கொண்ட பின் அடுத்த செயலுக்கு தயாராகுங்கள்.

கணினி இயங்கத் தொடங்கும் போது டெல் (Del) அல்லது எ?ப்-2 (F2) விசைகளை தட்டுவதன் மூலம் பயாஸ் செட்டிங்க்குக்குச் செல்லுங்கள். (இங்கு தரப்படும் விபரங்கள் பயாஸின் வகை மற்றும் வெர்ஷன் பொறுத்து சற்றே மாறுபடும். சரியான தகவல்களை மதர்போர்ட் மேனுவலை நன்றாக படித்து அதில் தரப்பட்டுள்ள Front Side Bus - FSB மற்றும் CPU voltage settings பற்றிய விபரங்களை உபயோகப்படுத்த வேண்டி இருக்கலாம்.)

பிராசசரின் FSB Frequency - ஐ சிறிய சிறிய அளவில் அதிகமாக்குங்கள். உதாரணத்திற்கு ஏற்கனவே இருக்கும் வேகத்தில் இருந்து 2 Mhz அதிகமாக்குங்கள். நீங்களாக சிபியூ வேகம் / வோல்டேஜ் போன்றவற்றை மாற்ற "மேனுவல்" மோடுக்கு மாற்ற வேண்டி இருக்கலாம்.

(ஒவ்வொரு சமயத்திலும், கணினியில் வெப்பம் மற்றும் மின்னழுத்தத்தின் அளவை தொடர்ந்து கண்காணித்து வாருங்கள். புத்தகத்தில் குறிப்பிட்ட அதிகபட்ச அளவுகளுக்குள் அவை இருக்கின்றனவா என்பதையும் அவசியம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.)

உங்கள் மாற்றங்களை சேமித்துக்கொண்டு பயாஸில் இருந்து வெளியேறுங்கள் (F10). கணினியை ரீஸ்டார்ட் செய்யுங்கள். கணினி சாதாரணமாக எப்போதும் போலவே செயல்படத் தொடங்க வேண்டும்.

எப்போதும் போல கணினியில் பணி செய்யுங்கள். பெரிய அளவிலான புரோகிராம்களை இயக்கி கணினியில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்.

மீண்டும் உங்கள் கணினியை ரீபூட் செய்து, மீண்டும் பயாஸ?க்கு செல்லுங்கள். இப்போது சிபியூவின் வோல்டேஜை சிறிய அளவுகளில் அதிகரியுங்கள்.

மாற்றங்களை சேமியுங்கள். மேலே குறிப்பிட்டது போல எல்லாவற்றையும் கண்காணியுங்கள். எந்த பிரச்சினையும் இல்லை என்கிற பட்சத்தில் மீண்டும் ரீபூட் - பயாஸ்- சிறிய அளவில் வேகம்/வோல்டேஜ் அதிகரிப்பு- சேமிப்பு - ரீஸ்டார்ட்- சோதித்தல் - என்று முதலில் செய்ததைப் போலவே திரும்ப செய்யுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் செய்யும் மாற்றங்கள் அதன் அதிகபட்ச அளவை அடைந்து விட்டதா என்று பாருங்கள். சரியான CPU FSB- Voltage, Bus speed அமைவது என்பது Trail and error முறையிலேயே அமையும். ஒரே சமயத்தில் நடந்து விடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பிரச்சினை எதுவும் இல்லாமல் கணினி எப்போது வேகமாக இயங்குகிறதோ அதில் பணி செய்யத்தொடங்குங்கள். வாழ்த்துக்கள்.

kavitha
04-04-2005, 12:16 PM
இது கொஞ்சம் ரிஸ்க் -ஆன சமாச்சாரம் தான். அதிக அளவில் மெமரி உபயோகப்படுத்தப்படும்போது சில சமயங்களில் விர்சுவல் மெமரி போதாமல் கணினி திணறும். அது போன்ற சமயங்களில் பேஜிங் அளவை அதிகரித்து வேகத்தை கூட்டியதுண்டு. இதை மிகவும் கவனமாக கையாளத்தான் வேண்டும். பயாஸ் போனால் மீண்டுமொரு மதர்போர்டல்லவா வாங்க நேரிடும்!!!

Iniyan
04-04-2005, 12:42 PM
இத பண்ணி உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணான்னு ஆயிருமோன்னு பயந்துல்ல கெடக்கு?

பாரதி
04-04-2005, 10:01 PM
கருத்துக்களுக்கு மிக்க நன்றி கவி, இனியன்.
பொதுவாகவே பிராசசர்களில் இந்த ஓவர்கிளாக்கிங் வசதி இருந்தால் மட்டுமே நாம் செய்ய முடியும். இதை எப்படி சொல்வதென்றால், ஒரு இயந்திரத்தின் முழுத்திறனையும் உபயோகிப்பது என்பது போலத்தான். பாதுகாப்புதான் முக்கியம், வேகம் பற்றி கவலை இல்லை எனில் எதுவும் செய்யத் தேவையில்லைதான். ஆனால் என் கருத்து சரியான முறையில் செய்யப்படும் ஓவர்கிளாக்கிங் மிகுந்த பயனளிக்கும் என்பதே.

kavitha
07-04-2005, 07:18 AM
டெஸ்ட் பண்ணி பார்க்கறதுக்கு ஏதாச்சும் ஒரு பழைய மெஷின் கிடைச்சா ஓகே தான்..ஆனா அதுக்கு 'பூ' -வத்தான் கேட்கணும்.. ரொம்ப நாளா ஆளையே காணோம் அவரை!

mania
07-04-2005, 09:50 AM
Originally posted by kavitha@Apr 7 2005, 12:48 PM
டெஸ்ட் பண்ணி பார்க்கறதுக்கு ஏதாச்சும் ஒரு பழைய மெஷின் கிடைச்சா ஓகே தான்..ஆனா அதுக்கு 'பூ' -வத்தான் கேட்கணும்.. ரொம்ப நாளா ஆளையே காணோம் அவரை!



ஏன் கவி....தெரியாமத்தான் கேக்கறேன்.... CPU க்கு மேலே ஒரு கடிகாரம் வைச்சா என்ன....... ஐய்யோ அடிக்காதே........மன்மதன்தான் உங்கிட்டே கேட்டு சொல்லச்சொன்னான்...

அன்புடன்
மணியா.... B) B)

kavitha
07-04-2005, 04:51 PM
"ஏன் கவி....தெரியாமத்தான் கேக்கறேன்.... CPU க்கு மேலே ஒரு கடிகாரம் வைச்சா என்ன....... ஐய்யோ அடிக்காதே........மன்மதன்தான் உங்கிட்டே கேட்டு சொல்லச்சொன்னான்...

அன்புடன்
மணியா.... "

ஒங்க கிட்டேயே 'மணி' (யா ) இருக்கே தலை.... அப்புறம் ஏன் என்கிட்டே கேட்கணும்... 'மண்'மதன் சொன்னா, நீங்க கூட யோசிக்கமாட்டீங்களா? ஹஹாஹா...
நல்ல தலை, நல்ல சிஷ்யன்!!

puppy
08-04-2005, 04:09 AM
பாரதி
தமிழில் அருமையாக சொல்லி இருக்கீங்க பாராட்டுக்கள்....ஓவர்கிளாக் கொஞசம் நிதானமா பார்த்து செய்ய வேண்டிய விஷயம்....நாம் செய்யும் அன்றாட வேலைகளுக்கு இது தேவை இல்லை....கணனி விளையாட்டுக்கள்(gaming) விளையாடுபவர்களுக்கு இது மிக தேவை...
இன்னும் நிறைய தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்
http://www.overclockers.com/

பாரதி
08-04-2005, 04:31 AM
கருத்துக்கும், சுட்டிக்கும் மிக்க நன்றி பப்பி.

mania
08-04-2005, 05:06 AM
Originally posted by kavitha@Apr 7 2005, 10:21 PM
"ஏன் கவி....தெரியாமத்தான் கேக்கறேன்.... CPU க்கு மேலே ஒரு கடிகாரம் வைச்சா என்ன....... ஐய்யோ அடிக்காதே........மன்மதன்தான் உங்கிட்டே கேட்டு சொல்லச்சொன்னான்...

அன்புடன்
மணியா.... "

ஒங்க கிட்டேயே 'மணி' (யா ) இருக்கே தலை.... அப்புறம் ஏன் என்கிட்டே கேட்கணும்... 'மண்'மதன் சொன்னா, நீங்க கூட யோசிக்கமாட்டீங்களா? ஹஹாஹா...
நல்ல தலை, நல்ல சிஷ்யன்!!


மணியா...... .....ஓஓஓஓஓஒ மணி......யா.....யா....(Yeah....yeah)....
அன்புடன்
மணி.....யா....

kavitha
08-04-2005, 07:58 AM
"மணியா...... .....ஓஓஓஓஓஒ மணி......யா.....யா....(Yeah....yeah)....
அன்புடன்
மணி.....யா..."

anna
14-11-2008, 12:54 PM
இந்த சோதனையை ஒரு பழைய கணினியில் செய்து பாருங்கள் அப்புறமா லைவ்க்கு கொண்டு வாருங்கள்.இல்லையெனில் மதர் போர்டு சூடாகி வீணாகி போகும் மிக மிக கவனமாக செய்யவேண்டும்.