PDA

View Full Version : அவள் போனால் என்ன?



kavitha
01-04-2005, 04:16 PM
அவள் போனால் என்ன?
----------------------
அவள் போனால் என்ன?
அவளைப்பார்த்தா நான் பிறந்தேன்?
அவளால் தானா நான் வளர்ந்தேன்?
அவளே என் வாழ்க்கையாவதற்கு...
அதோ
என்னோடு நடை போடும்
அந்த மேகம்..
இதோ என் பின்னே உலாவரும்
இந்த நிலா..
வெறுத்து வெளியேற்றியும் என்னை
விரும்பும் இந்தக் காற்று..
எப்போதும் என்னுடன் இருக்கும்போது
அவள் போனால் என்ன?

பாரதி
01-04-2005, 11:52 PM
மீண்டும் ஒரு கவிதை...
மீண்ட கவிதையா....?
பாராட்டுக்கள்.

அறிஞர்
02-04-2005, 03:48 AM
அவள் போனாள் என்ன........
அழகான கவிதை கவி....
வாழ்த்துக்கள்

பரஞ்சோதி
02-04-2005, 03:57 AM
நல்ல கவிதை, பாராட்டுகள் சகோதரி.

ஆமாம், இப்போ எல்லாம் ரொம்பவும் எளிதாக புரிந்துக் கொள்ளும் கவிதைகள் எழுதுவது ஏன்?

மன்மதன்
02-04-2005, 05:20 AM
நல்ல கவிதை, பாராட்டுகள் சகோதரி.

ஆமாம், இப்போ எல்லாம் ரொம்பவும் எளிதாக புரிந்துக் கொள்ளும் கவிதைகள் எழுதுவது ஏன்?

எல்லாம் நம்மளை மாதிரி ஆட்களுக்காகத்தான்.. :D :D
அன்புடன்
மன்மதன்

kavitha
03-04-2005, 04:09 AM
மீண்ட கவிதையா....?
பாராட்டுக்கள்.

கவிதையிலிருந்தும் சில சமயங்கள் மீண்டுதான் ஆகவேண்டும் பாரதி. உறைந்துவிட முடியாது.



அழகான கவிதை கவி....
வாழ்த்துக்கள்

நன்றி அறிஞரே.



நல்ல கவிதை, பாராட்டுகள் சகோதரி.

ஆமாம், இப்போ எல்லாம் ரொம்பவும் எளிதாக புரிந்துக் கொள்ளும் கவிதைகள் எழுதுவது ஏன்?


எல்லாம் நம்மளை மாதிரி ஆட்களுக்காகத்தான்.. :D :D
அன்புடன்
மன்மதன்

பரம்ஸ் அண்ணா, மன்மதன் இவர்களுக்கும் எனது நன்றி. முதலில் கவிதை புரியவேண்டும் என்பது தான் நோக்கம். உருவகம் என்பது இலை மறைகாய். புரியும் போது அது கனி. :)

karikaalan
03-04-2005, 01:49 PM
அவள் போனால் என்ன என்று வினவும் நா
அவள் இல்லாததால் மற்றவைகளைத் துணைக்கு அழைக்கும் நா

மனதென்னவோ அவளைத்தான் இவற்றில் தேடுகிறது

===கரிகாலன்

kavitha
04-04-2005, 08:26 AM
அவள் போனால் என்ன என்று வினவும் நா
அவள் இல்லாததால் மற்றவைகளைத் துணைக்கு அழைக்கும் நா

மனதென்னவோ அவளைத்தான் இவற்றில் தேடுகிறது

===கரிகாலன்
:) உங்களை இந்தப்பக்கம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

தாங்கள் "VAT" குறித்து ஒரு ஆய்வுக்கட்டுரை தரலாமே!