PDA

View Full Version : காத்திருக்கிறேன்.....



நிலா
15-04-2003, 08:32 PM
என்னவளே!
நான்
ஷாஜகானல்ல
தாஜ்மகாலைப் பரிசளிக்க!
இராமனல்ல
மானைத்தேடிச் செல்ல!
உணர்வற்றவனல்ல
உயிரற்ற பொருட்களைப் பரிசளிக்க!
கலிகாலக் காதலனல்ல
கனவுகளில் சஞ்சரிக்க!
மனமுள்ள மனிதன்
காத்திருக்கிறேன்

என் இதயத்தில் இடமளிக்க!!!

இப்படிக்கு
நிலா

இளசு
15-04-2003, 08:44 PM
தமிழ் மணமுள்ள கவிதை
சுவைக்கும் மனமுள்ள ரசிகன்
காத்திருக்க விடமாட்டான்
அனுப்புகிறேன் பாராட்டை

Narathar
18-04-2003, 05:24 AM
கவி நிலாவா நீங்கள்?

இராசகுமாரன்
19-04-2003, 06:18 AM
பலரும் சொன்ன காதல் வரிகளை
ரொம்ப எளிமையாக சொல்லி
எதார்த்தத்தை காண்பித்துள்ளீர்..
பாராட்டுக்கள்.

karikaalan
19-04-2003, 09:16 AM
நிலாஜி!

கவிதை நல்லாவே இருக்குது; நீங்கள் இதயத்தைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் அல்லவோ!

===கரிகாலன்

Dinesh
19-04-2003, 11:21 AM
எளிமையான ஆனால் மனதை அள்ளும் கவிதை..
வாழ்த்துக்கள் நிலா..

தினேஷ்.

குமரன்
19-04-2003, 01:30 PM
அழகான காதல் (கவிதை) கடிதம்....
அருமை...

வாழ்த்துக்கள் நிலா.

-குமரன்.

puppy
08-01-2004, 05:01 PM
இராமன் எங்கே மானை தேடி போனான்...இலக்குமணன் தானே தேடி போனான்....சரி விடுங்க..கவிதை சூப்பர்....

நிலா
08-01-2004, 05:07 PM
அனைவருக்கும் நன்றி!

பப்பி இந்த லொள்ளுதான வேண்டாம்கிறது.மானைத்தேடி இலக்குமனன் போக அவனைத்தேடி இராமன் போக ...ஈஈஈஈஇ

நல்லாயிருக்குன்னு சொன்னனால நன்றி!

Nanban
08-01-2004, 05:11 PM
நிலா, முன்பு ஒருமுறை கூறியிருந்தேன் - கவிதையின் வடிவத்திலும், வெளியீட்டு முறையிலும் கவனம் செலுத்துங்கள் என்று........

இன்று ஒரு சிறப்பான ஒரு கவிதை.........

தேதியைப் பார்த்தால், மன்ற ஆரம்பகால கவிதை......

இது மாதிரி ஏன் அப்புறமாக தொடரவில்லை,......

முத்து
08-01-2004, 05:11 PM
நல்லா இருக்குது நிலா ...
பாராட்டுக்கள் ... http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons/35.gif

நிலா
08-01-2004, 05:13 PM
நிலா, முன்பு ஒருமுறை கூறியிருந்தேன் - கவிதையின் வடிவத்திலும், வெளியீட்டு முறையிலும் கவனம் செலுத்துங்கள் என்று........

இன்று ஒரு சிறப்பான ஒரு கவிதை.........

தேதியைப் பார்த்தால், மன்ற ஆரம்பகால கவிதை......

இது மாதிரி ஏன் அப்புறமாக தொடரவில்லை,......



நன்றி நண்பன்!நீங்க அப்பவே ஆதரவு கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்!
இனி கண்டிப்பாய் கவனம் செலுத்துவேன் உங்கள் அறிவுரைப்படி!
ரொம்ப நன்றி!

முத்து நன்றி!

இ.இசாக்
08-01-2004, 05:13 PM
என்னவளே!
நான்
ஷாஜகானல்ல
தாஜ்மகாலைப் பரிசளிக்க!
இராமனல்ல
மானைத்தேடிச் செல்ல!
உணர்வற்றவனல்ல
உயிரற்ற பொருட்களைப் பரிசளிக்க!
கலிகாலக் காதலனல்ல
கனவுகளில் சஞ்சரிக்க!
மனமுள்ள மனிதன்
காத்திருக்கிறேன்

என் இதயத்தில் இடமளிக்க!!!

இப்படிக்கு
நிலா

நான் பெரிய புத்திசாலியல்ல.
பாராட்டவோ.. விமர்சிக்கவோ
என்று எழுதலாமா நிலா.

காத்திருக்கிறேன்
நிலாவின் சிறந்த கவிதைகளை வாசிக்க.. ரசிக்க.

puppy
08-01-2004, 05:16 PM
நிலா, முன்பு ஒருமுறை கூறியிருந்தேன் - கவிதையின் வடிவத்திலும், வெளியீட்டு முறையிலும் கவனம் செலுத்துங்கள் என்று........

இன்று ஒரு சிறப்பான ஒரு கவிதை.........

தேதியைப் பார்த்தால், மன்ற ஆரம்பகால கவிதை......

இது மாதிரி ஏன் அப்புறமாக தொடரவில்லை,......



நன்றி நண்பன்!நீங்க அப்பவே ஆதரவு கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்!
இனி கண்டிப்பாய் கவனம் செலுத்துவேன் உங்கள் அறிவுரைப்படி!
ரொம்ப நன்றி!

முத்து நன்றி!

இப்போ தானே தேர்தல் அறிவிப்பு வந்து இருக்கு நிலா

Nanban
08-01-2004, 05:16 PM
அப்பவே ஆதரவு கொடுத்திருந்தால்.........

தவறுதான் நிலா........

ஆரம்பகாலத்தில் நிறைய தடுமாற்றங்கள் இருந்தது உண்மை தான்.........

இனிமேல் என் ஆதரவு கண்டிப்பாக உங்களுக்குக் கிடைக்கும்.........

நிலா
08-01-2004, 05:23 PM
இசாக் ரொம்ப நன்றி!ஆனாலும் உங்களைப்பத்தி ரொம்ப அடக்கி வாசிக்கிறீங்க!

நன்றி நண்பன்!

பப்பி பாயிண்ட்!

kavitha
31-03-2004, 07:43 AM
ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் எதார்த்த காதல் கவிதை.
மேலும் தொடருங்கள் நிலா.

samuthira
01-04-2004, 09:52 AM
நல்ல கவிதை நாட்பட்டாலும் கண்ணில் இப்பொது தான் மாட்டியது.,

எளிமையில் இனிமை நிலா...

விகடன்
03-05-2008, 01:25 PM
நிலமே இன்று உலாப் பூண்டிருக்கும் எமக்கு
இடமளிக்க கத்திருக்கும் நிலா....

(உங்களுடைய :) )கவிதை அழகே.... பாராட்டுக்கள்.

பாரதி
03-05-2008, 03:30 PM
நல்ல கவிதை நிலா! பாராட்டு...!!

வழமை போல உங்களைக் காண நானும் காத்திருக்கிறேன்.