PDA

View Full Version : தொலைந்து போ.....



நிலா
15-04-2003, 08:22 PM
ஜீவன் தொலைந்து போக
மரணம் வந்து தழுவும்!
வறுமை தொலைந்து போக
உறவு உரிமை கொள்ளும்!
செல்வம் தொலைந்து போக
தனிமை தாக்கம் கொள்ளும்!
வாசம் தொலைந்து போக
மலரின் வாட்டம் கூடும்!
இளமை தொலைந்து போக
முதுமை வந்நு செரும்!
ஆசை தொலைந்து போக
அடக்கம் ஆட்சி கொள்ளும்!
தாகம் தொலைந்து போக
சோர்வு சேர்க்கை கொள்ளும்1
வெற்றி தொலைந்து போக
தோல்வி தோற்றமெடுக்கும்!
இன்பம் தொலைந்து போக
இறுக்கம் இணக்கம் கொள்ளும்!

ஆகையால்
இதயமே தொலைந்து போ
காதலி எனக்கு கிடைக்க!!!!


இப்படிக்கு
நிலா

madhuraikumaran
15-04-2003, 08:29 PM
வாருங்கள் இளைய கவியே. பெயரிலேயே கவிதை கொண்டிருக்கும் உங்கள் முதற்கவிதையும் (மன்றத்தில்) அருமை !!! நீங்கள் மென்மேலும் பங்கேற்று மன்றத்துக்கு மெருகூட்ட வாழ்த்துகிறேன் !

kaathalan
15-04-2003, 08:32 PM
அழகான கவிதை தந்து தமிழ் மன்றத்தை அலங்கரித்த நிலா அவர்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள். மேலும் இதுபோல் சிறப்பான ஆக்கங்கள் தந்து அலங்கரிக்க வாழ்த்துக்கள்.

இளசு
15-04-2003, 08:45 PM
நல்வரவு முல்லைமன்றம் வந்த கவிநிலவுக்கு

இதயம் கொடுத்து காதலி வாங்கலாம்
ஓ தொலைப்பதே அவளிடம்தானோ

நிலா
15-04-2003, 11:50 PM
வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி!

நிலா

gankrish
16-04-2003, 05:28 AM
நிலா அருமையான கவிதை. நீங்களும் தொலைந்து போகாமல் மேலும் மேலும் எழுதுங்கள்

rambal
16-04-2003, 05:32 PM
ஒன்றின் முடிவில்தான் மற்றதின் ஆரம்பம்.. ஆனால்,
கொஞ்சம் சோகம் அதிகம்..
இருந்த போதிலும்
நன்றாகச் சொன்ன உங்களுக்குப் பாராட்டுக்கள்.. தொடருங்கள்..

poo
16-04-2003, 05:44 PM
இதயம் தொலைக்காத காதலியொன்றை பெற்றிட வேண்டும்!!..

நிலா.. அருமை.. தொடருங்கள்!!!

Nanban
02-06-2003, 11:07 AM
காதலி வந்த பின்பு அவளை அடையாளம் காட்டிட இதயம் வேண்டுமே? பின் மற்றுமொரு தேடல் ஆரம்பிக்குமோ?

puppy
08-01-2004, 09:09 PM
நிலாவின் முதல் கவிதையாம்....அடடா......அருமை.....

விகடன்
25-05-2008, 11:16 AM
நல்லதொரு கவிதை நிலாக்கா. அதிலும் காதலிற்காக உயிரை விட துணிந்த ( இதயம் தொலைந்தால் பிறகென்ன.. :D) உங்களின் காதல் மேன்மையே...

முதற்கவிதையாக படைத்தாலும் அழகாகவே பாராட்டுக்கள்.

பி.கு: என்றொருநாள் கட்டாயம் திரும்பி வருவீர்கள். எமது பின்னூட்டல்களை படிப்பீர்கள் என்று நினைத்தே எழுதுகிறோம்.)

சூரியன்
25-05-2008, 12:36 PM
பி.கு: என்றொருநாள் கட்டாயம் திரும்பி வருவீர்கள். எமது பின்னூட்டல்களை படிப்பீர்கள் என்று நினைத்தே எழுதுகிறோம்.)

நமது ஆசைகள் நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் அண்ணா.
அந்த நாளுக்காக காத்திருப்போம்.

Narathar
25-05-2008, 03:24 PM
சுவரை விற்று சித்திரமா?