PDA

View Full Version : என் கண்ணில் ஏன் விழுந்தாய்?



kavitha
24-02-2005, 08:22 PM
என் கண்ணில் ஏன் விழுந்தாய்?
----------------------------
பார்வையாக சில நேரம்
பாவையாக சில நேரம்
காட்சியாக சில நேரம்
காவலாக சில நேரம்
தூசியாக சில நேரம்
தூண்டலாக சில நேரம்
கனவாக சில நேரம்
கனமாக சில நேரம்
எப்போதும் என் கண்ணில்
நிறை சிறை இருக்கிறாய்
என் கண்ணில் ஏன் விழுந்தாய்?

pradeepkt
25-02-2005, 02:47 AM
கண்ணில இத்தனை விழுதுன்னே நீங்க சொன்னப்புறம்தான் கவி யோசிச்சேன்.
நல்ல கேள்வி!
இதோ பதில் இப்படியும் இருக்கலாம்:

பார்வையாக உன் காட்சிக்கு
பாவையாக உன் மகிழ்ச்சிக்கு
காட்சியாக உன் நெகிழ்ச்சிக்கு
தூசியாக என் நினைவுக்கு
தூண்டலாக உன் வளர்ச்சிக்கு
கனவாக உன்மேல் என் ஆட்சிக்கு
கனமாக என்மேல் உன் ஆட்சிக்கு

அன்புடன்,
பிரதீப்

kavitha
25-02-2005, 01:40 PM
வாசித்து பதில் பதித்தமைக்கு நன்றிகள்.

பாரதி
25-02-2005, 02:46 PM
கவிதை நன்றாக இருக்கிறது கவி. பாராட்டுக்கள்.
எனக்கும் கவிதை எழுத வேண்டும் போல இருக்கிறதே...!
ஒரு வேளை விழுந்தது எழத்தானோ...??

thamarai
25-02-2005, 06:12 PM
கவிதை வித்தியாசமான கோணத்தில்...
வாழ்த்துக்கள்.... கவிதா.

thamarai
25-02-2005, 06:13 PM
எனக்கும் கவிதை எழுத வேண்டும் போல இருக்கிறதே...!
ஒரு வேளை விழுந்தது எழத்தானோ...??
உங்கள் கவிதையையும் எதிர்பார்த்தபடியே...

kavitha
26-02-2005, 11:18 PM
உடனே இங்கேயே எழுதியிருக்கலாமே பாரதி..?!! விரைவில் பதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.



"கவிதை வித்தியாசமான கோணத்தில்...
வாழ்த்துக்கள்.... கவிதா."


நன்றி தாமரை

mythili
01-03-2005, 03:12 AM
கேள்வியும் அதற்கு பதிலும் அருமை.
---------
அன்புடன்,
மைதிலி

pradeepkt
01-03-2005, 04:53 AM
நன்றி மைதிலி,

அமரன்
31-05-2007, 02:39 PM
காதலில் விழுந்த ஒரு மனித உறவின் கலக்கலான சிந்தனையை சிறப்புற உருவகப்படுத்திய கவிதா அக்காவுக்கு நன்றி. உங்களைப் போன்றவர்கள் புதியவர்கள் எமக்கு வழிகாட்டியாக ஒரு ஆசானாக இல்லாமல் போனது எமது துர் அதிஷ்டமே!