PDA

View Full Version : mp3 பாடல்களை எப்படி cd-கு மாற்றுவது?



siva
24-02-2005, 06:33 PM
அனைத்து நண்பர்களுக்கும் எனது வணக்கம். என்னிடம் நிறைய mp3 பாடல்கள் உள்ளன. அவற்றை எப்படி cd-யாக மாறற முடியும். ஏதாவது இலவச மென்பொருள் உண்டா? தயவு செய்து உதவுங்கள்

பரஞ்சோதி
25-02-2005, 07:06 AM
வணக்கம் நண்பர் சிவா,

உங்களிடம் இருக்கும் எம்.பி3 பாடல்களை, எம்.பி3 சிடியாக மாற்ற வேண்டுமா அல்லது ஆடியோ டிராக் சிடியாக மாற்ற வேண்டுமா என்பதை சொல்லுங்கள்.

ஒருவேளை எம்.பி3 சிடியாகவே மாற்ற வேண்டும் என்றால் உங்களிடம் சிடி ரைட்டர் இருக்க வேண்டும், சிடி ரைட்டர் இருந்தால், அது வாங்கும் போது அத்துடனே ஒரு சிடி கொடுத்திருப்பார்கள், அது நீரோ பர்னிங் என்ற மென்பொருள் இருக்குமே, அது இருந்தால் மிகவும் எளிது.

உங்களிடம் சிடி ரைட்டர், பர்னிங் மென்பொருள் இருக்கிறதா என்பதை சொல்லுங்கள்.

siva
25-02-2005, 05:20 PM
ஆமாம், என்னிடம் சிடி ரைட்டர், பர்னிங் மென்பொருள் இருக்கின்றது. நான் ஆடியோ டிராக் சிடியாக மாற்ற நினைக்கின்றேன்.

பரஞ்சோதி
27-02-2005, 05:23 AM
நன்று, என்ன மென்பொருள் இருக்கிறது என்பதை சொல்லவில்லை.

மேலும் எம்.பி3யிலிருந்து ஆடியோ டிராக்காக மாற்றும் போது பழைய குவாலிட்டி இருக்காது, மேலும் ஒரு சிடியில் 12 முதல் 15 பாடல்களுக்கு மேல் காப்பி செய்ய முடியாது.

ஆடியோ டிராக்காக மாற்றும் மென்பொருள் என்னிடம் இருக்கிறது, அது எது, எது இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது என்பதை பார்த்து சொல்கிறேன், கொஞ்சம் பொறுத்திருங்கள் நண்பரே.

siva
15-03-2005, 01:07 PM
என்னிடம் nero burning உள்ளது. உங்களிடம் இருப்பது என்ன? audio cd maker எனுமொரு மென்பொருளை அண்மையில் ஒரு இணைய தளத்தில் இருந்து இறக்கினேன். அது 30 நாட்களுக்கு மேல் பயனில்லை. எப்படி முழு version-ஆக மாற்றுவது? வேறேதாவது மென்பொருள் உள்ளதா?