PDA

View Full Version : உங்களுக்கு மேல் உள்ளவர் பற்றி ஒரு சில வரிகள்babu4780
24-02-2005, 10:00 AM
சும்மா ஜாலியாக எடுத்துக்குங்க
உங்களுக்கு மேல் உள்ளவரைப்பற்றி சுவையாக, காமெடியாக , ரசிக்கத்தக்க வகையில் ஏழுதுங்கள்...

உதாரணமாக நானே ஆரம்பிக்கிறேன்...
எனக்கு மேல் உள்ளவர்..எனக்கு மேல் யாரும் இல்லை..(ஹி ..ஹி ..எஸ்கேப்..)
அதனால் எனக்கு கீள் உள்ளவர்தான் ஆரம்பிக்கவேண்டும்...

..பெரி.

babu4780
24-02-2005, 10:05 AM
எனக்கு மேல் இருப்பவர் (பெரி), இந்த ஐடியாவை வேறெங்கோ இருந்து..பிட் (காப்பி) போட்டுட்டார்..

அன்புடன்
பெர

pradeepkt
25-02-2005, 03:31 AM
என்னடா சொல்ல வரே?

babu4780
25-02-2005, 04:58 AM
ஒ.கே எனக்குமேல் இருப்பவர் - நண்பர் பிரதீப்.
அவர் இப்படி ட்யுப் லைட் அ இருப்பார்னு தெரியாமபோச்சு.
மத்தபடி அவர் ஒரு வீரர், தீரர்,சூரர். அடிக்கடி போஸ்டிங் தரதால் வேலை வெட்டியில்லாதவர்னு தப்பா
நினைச்சுறாதீங்க.

அப்புறம் "நெஞ்சத் தக நக நட்பது நட்பு"னு நட்பு பத்தி ஏதோ சொல்ல வற்றார்..சுத்தமா புரியலே. :blush: :o

அவருடைய அவதார்லே X மட்டுமே வருது, (வழக்கமா வர்ர மண்டை ஓடு மிஸ்ஸிங்.. அதுவும் இருந்த்தா நல்லாருக்கும்.). இதப்படிச்சதுக்கப்புறம் அதை மாத்திருவாருனு நம்புவோம்..
-பெரி.

பி.கு: பிரதீப், இப்போ ஒ.கே வா. கொஞ்சம் கிரியேட்டிவா, அடிங்க..போதும்..

பரஞ்சோதி
25-02-2005, 08:16 AM
எனக்கு மேலே இப்போ இருப்பவர் நண்பர் பெரி.,

என்னமா பொரி பொரி என்று பொரிந்து விட்டார்.

தம்பி பிரதீப்பை தாக்குவதை தாங்க முடியாமல் வரிந்து கட்டி நான் வந்து விட்டேன்.

தம்பி! வா, தங்க தமிழிலில் பெரிக்கு பதில் தா

pradeepkt
25-02-2005, 08:53 AM
அண்ணா,

இப்பப் புரிஞ்சிருச்சி. என் அறிவுக் கண்ணை (இருக்குதோ இல்லையோ) அப்படியே படக்குன்னு தொறந்து விட்டுட்டீங்க. பரஞ்சோதி என்னும் பெயருக்கேற்ப மன்றத்துக்கே சோதியா இருக்குற நீங்க சோதீயா மாறி இப்படிப் பலருக்குக் கண்ணைத் தொறந்து விட்டுக்கிட்டே இருங்க.

நீங்க ஒரு இமயகிரி - அண்ணி
முன்னாடி மட்டும் பழகின பரி!
கருத்து மழை வழங்குவதில் பாரி!
வெற்றி ஒன்றே உங்கள் குறி!

ஆனா பாருங்க இந்தப் பய இப்படி நமக்குள்ள பிரச்சினை மூட்டப் பாக்குறான். டாய்! என்கிட்ட மாட்டாமலா போயிருவ? அத்தோட எனக்கும் ஆப்பு வச்சிட்டான். அடுத்து வரவரு என்ன சொல்லப் போறாரோ தெரியலியே!

பெரி,
நீ ஒரு அரிசிப் பொரி
நீ சொல்வது பொரியளவும் சரி -
இல்லை என்றுணர்ந்து மக்கள் கட்டுவார்கள் உறி!
நான் ஒரு தீப்பொறி
வம்பிழுத்தவர் முகத்தில் கரி - அதைக்
கண்டு வானகமே மண்ணகமே, சிரி!

என்ன வர வர வைரமுத்து விஜய் அஜீத்து மாதிரி ஆரம்பிச்சிட்டேன். :blink: [b]
இன்னும் நிறையச் சொல்லியிருப்பேன்... மறந்துட்டேன்...

அன்புடன்,
பிரதீப்

gragavan
25-02-2005, 12:32 PM
மாட்டினீரா பிரதீப் (பி.எஸ்.வீரப்பா மாதிரி நான் சிரிக்கிறதா கற்பனை பண்ணிக்கிறுங்க).

பிரதீப்பப் பத்திச் சொல்ல ஒன்னுமேயில்ல. ஆனா சொல்லாம இருக்க வேண்டியது நெறய இருக்கு. அவற்றில் எதைச் சொல்ல! சொல்லாமல் விட!

பெருஞ்சோதியா பரஞ்சோதி வந்துதான் அவருக்கு அறிவுக் கண்ணே தெறந்திருக்கு. ஏந்தெரியுமா? தப்பா எழுதினாத்தானே அழிக்க ரப்பர் வேணும்! தப்பா எதையாவது செஞ்சாத்தானே அறிவைப் பயன்படுத்தி அதைச் சீர் படுத்தனும். இப்பப் புரியுதோ! கொஞ்சம் அறிவு அதிகமாவே இருக்கு. எனக்குக் நெறயவே பொறாமைதான்.

சரி. எல்லாரும் கவித சொல்றாங்க. நானுஞ் சொல்றேன்.

பிரதீப் ஒரு பிரகாச தீப்
மலைப் பாதையில் வேகமா ஓடுற ஜீப்
அவருக்கு இல்லாதது ஒரு கீப்
ஞானமோ ரொம்ப ரொம்ப டீப்
போட்டியில பண்றது ஸ்வீப்
அவரு வரும் போதெல்லாம் கேக்குறது பீப்

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
25-02-2005, 12:35 PM
Originally posted by pradeepkt@Feb 25 2005, 01:53 PM
[b]Originally posted by pradeepkt@Feb 25 2005, 01:53 PM
அண்ணா,

நீங்க ஒரு இமயகிரி - அண்ணி
முன்னாடி மட்டும் பழகின பரி!

அன்புடன்,
பிரதீப்


ஹா ஹா ஹா என்ன பிரதீப் இப்படிச் சொல்லீட்டீரு.

அப்போ உங்க அண்ணி என்னோட தம்பிய பயங்கரமா கடிப்பாங்களா?

முன்னாடி போனா கடிக்கும் பின்னாடி போனா ஒதைக்கும். எது? குதிரைதான!

அத அன்போட வேற சொல்றீகளாக்கும். என் சகோதரியைப் பற்றிச் சொல்ல என்ன துணிச்சல்?

அன்புடன்,
கோ.இராகவ

பரஞ்சோதி
27-02-2005, 08:29 AM
அண்ணன் ராகவன்,

அண்ணனுக்கு எல்லாம் அண்ணன், தம்பிகளுக்கும் அண்ணன் தான்.

தானாகவே சாமி ஆடுபவரிடம் பூடம் போட்டு, உடுக்கை அடித்தால் சும்மாவா விடுவார், டிங் டிங் என்று சாமி ஆடிவிடுவார், அந்த கணக்காக தம்பி பிரதீப் ஒரு பாட்டை பாட, அண்ணன் ராகவனோ எதிர் பாட்டு, எதிரி பாட்டு என்று பாடி எதிரியை விட்டு விட்டு என்னை கலங்கடித்து விட்டார்.

babu4780
04-03-2005, 07:09 AM
எனக்கு மேலிருப்பவர் 5000 போஸ்ட் களைக் கடந்த்துள்ளார்
சீக்கிரமே 10000 த்தையும்..கடந்துவிடுவார்..
...வாழ்த்துக்கள்,பரஞ்சோதி

அன்புடன்.
பெரி

சீக்கிரமா பிரதீப்புக்கு முன்னாடி யாராவது கீழே வாங்க..

pradeepkt
04-03-2005, 07:57 AM
வந்திட்டேண்டா வந்திட்டேன்.
கீழ யாராச்சும் என்னைக் கலாய்ச்சாலும் பரவாயில்லைன்னு வந்திட்டேன், ஏன்னா நான் அப்ப ரொம்ப நொந்திட்டேன்.

பெரி, புது அலுவலகத்தில் என்ன வேலை என்ன வேலைன்னு எல்லாரும் கேட்டாங்க. தம்பி சொல்லாமல் அமுக்கமா ஒரு சிரிப்பு சிரிச்சாப்பல. இப்பத் தெரியுது என்ன வேலைன்னு! தம்பி ஹார்லிக்ஸ் விளம்பரத்தில வர குழந்தை மாதிரி "ரொம்ப்ப்ப்ப்ப ப்ப்ப்ப்ப்ப்பிஸீஈஈஈஈஈ"
பெரிசுன்னு மக்கள் கூப்பிடறதுக்குத் தோதா ஆபீஸில என்ன பஞ்சாயத்துன்னாலும் தம்பிதான் சின்னக் கவுண்டர் மாதிரி ஏதோ ஆலமரமோ, புளிய மரமோ, புளிச்சுப் புளிச்சுன்னு எச்சித் துப்புற சொம்புகூட இல்லாமத் தீர்ப்புச் சொல்ல வந்திருவாரு!
காதல் படத்தை விமர்சனம் பண்ண அளவைப் பாத்தா உங்களுக்கெல்லாம் என்ன வேணாலும் தோணலாம். ஆனா பையன் பாவம் இன்னும் என்னத்துக்கோ காத்திருக்கான்.

இன்னும் நிறையச் சொல்லுவேன். என்னமோ நான் இப்ப ரொம்ப்ப்ப்ப்ப ப்ப்ப்ப்ப்ப்பிஸீஈஈஈஈஈ! அதனால பொழைச்சாப்புல தம்பியாப் புள்ள!

அன்புடன்,
பிரதீப்