PDA

View Full Version : என்ன பயன்?kavitha
22-02-2005, 11:35 PM
என்ன பயன்?
------------------

ஐந்திரு திங்கள் சுமந்த பொழுதிலும்
அரைவயிற்றோடு உணவிட்ட பொழுதிலும்
அண்ணாந்து இடுக்கிப் பார்க்கும் பொழுதிலும்
நினைக்கவில்லை அவள்..
இவனால் என்ன பயன்?

வைரம் பாய்ந்த தேகம்
வளமான வாழ்க்கை
வாழ்த்துமளவு புகழ்
இருந்தும் கேட்கிறாய் நீ
இவளால் என்ன பயன்?

இறந்த பின்
பூமி கேட்கிறது
இவனால் என்ன பயன்?

babu4780
23-02-2005, 02:58 AM
ஹம்ம் .. கசப்பான, மன்னிக்கக்கூடாத, உண்மை.

gragavan
23-02-2005, 03:42 AM
பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப் படுவது எந்தப் பெற்றோருக்கும் நடக்கக் கூடாது. தெய்வம் காக்கட்டும். கவிதா, உங்கள் கவிதை ஒரு திருக்கை மீன் சவுக்கு.

அன்புடன்,
கோ.இராகவன்

babu4780
23-02-2005, 04:19 AM
ஒரு திருக்கை மீன் சவுக்கு.

இதற்கு என்ன அர்த்தம்??

pradeepkt
23-02-2005, 07:39 AM
திருக்கை மீனின் வாலில் முள்ளு முள்ளாக இருக்கும். இதை வைத்துச் சவுக்கு செய்வார்கள்.
ஒரு அடி அடித்தால் தோல் ஒரு சதுரமாக வழண்டு வந்துவிடும்.
அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் இருந்தது. அதை வைத்து அடிக்க வேண்டாம். அடிப்பேன் என்று சொன்னாலே போதும். நாங்கள் பாத்ரூமுக்கு ஓடி விடுவோம்

இந்தக் காலத்தில் தெய்வம் அன்றே கொல்கிறது. பெற்றோரைப் புறக்கணிப்பவனுக்குப் பலன் அவன் பிள்ளைகளால் உடனே கிடைக்கிறது.

அன்புடன்,
பிரதீப்

அறிஞர்
23-02-2005, 08:05 AM
நல்ல கவிதை... வாழ்த்துக்கள்.. கவி....

அனைவருக்கும்... ஒரு எச்சரிக்கை மணி...

இதைபோல் இல்லாமல் இருப்பது பற்றி மனதில் மகிழ்ச்சி....

பிரியன்
23-02-2005, 03:31 PM
கொடுத்த ரத்தம்
பிரித்து கொடுத்த பின்
சொல்லட்டும்
அவள் சுமை என்று...

அவன் நிற்கும் மண் கூட அவனை சுமக்க விரும்பாது

உரை கல் கவிதை...
நம்மை உணர்ந்து கொள்ள..
வாழ்த்துகள் கவிதா...

பரஞ்சோதி
23-02-2005, 07:33 PM
கருத்தாழம் மிக்க கவிதை. சகோதரியின் சமூகத்தை சாடும் கவிதைகள் படிப்பது என்றாலே தனி சுகம், அதில் காரம், சவுக்கடி, மரண அடி எல்லாம் இருக்கும். தொடரட்டும் உங்கள் பணி.

பரஞ்சோதி
23-02-2005, 07:34 PM
திருக்கை மீனின் வாலில் முள்ளு முள்ளாக இருக்கும். இதை வைத்துச் சவுக்கு செய்வார்கள்.
ஒரு அடி அடித்தால் தோல் ஒரு சதுரமாக வழண்டு வந்துவிடும்.
அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் இருந்தது. அதை வைத்து அடிக்க வேண்டாம். அடிப்பேன் என்று சொன்னாலே போதும். நாங்கள் பாத்ரூமுக்கு ஓடி விடுவோம்


எங்கள் வீட்டிலும் இருந்தது. எனக்கு பாத்ரூம் ஓட கூட நேரம் கிடைக்காது ;)

pradeepkt
24-02-2005, 02:52 AM
எங்கள் வீட்டிலும் இருந்தது. எனக்கு பாத்ரூம் ஓட கூட நேரம் கிடைக்காது ;)

அண்ணா, இருந்ததா? அல்லது இருக்குதா?
அண்ணிக்கிட்டதான் கேக்கணும். :D :D

அன்புடன்,
பிரதீப்

babu4780
24-02-2005, 04:47 AM
இந்த வார ஆனந்தவிகடனில் 'கதாவிலாசம்' பகுதில 'நறையேறும் காலம்' படிச்சேன் - டச்சிங்கா இருந்த்துச்சி.
யார் இந்த ராமகிருஷ்ணன்?? போன வாரம் கூட நல்லா எழுதியிருந்தார்

-பெரி

pradeepkt
24-02-2005, 07:13 AM
பெரி,
எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கிய வட்டத்தில் மிகவும் அறியப்பட்டவர்.
இதற்கு முன் இவரே ஆனந்த விகடனில் ஒரு இலக்கியத் தொடர் எழுதியதாக ஞாபகம்.
சமீபத்தில் தன்னைத் தீவிர இலக்கியத்தில் மட்டுமே ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அறிந்த நண்பர்கள் கூறலாம்.

நிற்க, ஆனந்த விகடனில் இப்போது நிறைய பகுதிகள் இலக்கியச்சுவையுடன் வருகின்றன. உதாரணத்துக்கு தபூ சங்கர் பக்கம், தெருவாசகம், வாலியின் கிருஷ்ண விஜயம் எனப் பல. அத்தோடு கதாவிலாசமும்.
நல்ல வேளையாக எங்கள் வீட்டுப் பக்கத்திலேயே புத்தகம் கிடைக்கிறது.

அதெல்லாஞ் சரி, இந்தக் கேள்விய ஏன்ப்பா இந்தத் தலைப்புல கேட்ட?

அன்புடன்,
பிரதீப்

babu4780
24-02-2005, 07:47 AM
பெரிய காரணம் ஒண்ணும் இல்ல, இந்த கவிதையும் , கதாவிலாசத்துல கடைசியிலே படகை உதாரணமா சொல்லி முடிச்சிருப்பார் - அதுவும் ஒரே மாதிரி கருத்து, அதான்.

சரி இன்னைக்கு யாரும் கவிதை சொல்லலியா??

--பெரி

பி.கு:
போன வாரம் ஒரு டச்சிங் ட்விஸ்ட் குடுத்து முடிச்சாரே (அந்த பெரியவர் , பல படங்களில் வில்லனின் அடியாளா நடிச்சவர்) . நெஜமாவே கண் கசிந்த்துவிட்டது.

Hayath
24-02-2005, 11:44 AM
மிக நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை. பூமி இதுப் போல கேட்க ஆரம்பித்து விட்டால் அவ்வளவுதான்.

பாராட்டுகள்.

kavitha
24-02-2005, 08:13 PM
பாபு, ராகவன், பிரதீப், அறிஞர், ஹயாத் மற்றும் கவிதை தந்த பிரியன் அனைவருக்கும் நன்றிகள்.
"
அதெல்லாஞ் சரி, இந்தக் கேள்விய ஏன்ப்பா இந்தத் தலைப்புல கேட்ட?

அன்புடன்,
பிரதீப் "

"
பெரிய காரணம் ஒண்ணும் இல்ல, இந்த கவிதையும் , கதாவிலாசத்துல கடைசியிலே படகை உதாரணமா சொல்லி முடிச்சிருப்பார் - அதுவும் ஒரே மாதிரி கருத்து, அதான். "

பாபு, இக்கவிதை எழுதி பல நாட்கள் ஆகிறது. நீங்கள் கூறும் ஆனந்தவிகடன் பதிப்பை இன்னும் நான் படிக்கவில்லை. அதில் வரும் கிருஷ்ண விஜயம் எனக்கு மிகப்பிடித்த ஒன்று. சில வாரங்களாக படிக்கமுடியவில்லை. படித்துவிட்டு எனது கருத்தையும் சொல்கிறேன். நன்றி.

"போன வாரம் ஒரு டச்சிங் ட்விஸ்ட் குடுத்து முடிச்சாரே (அந்த பெரியவர் , பல படங்களில் வில்லனின் அடியாளா நடிச்சவர்) . நெஜமாவே கண் கசிந்த்துவிட்டது. "
சரி இந்தப் பின்குறிப்பின் அர்த்தம் என்ன பாபு?

kavitha
24-02-2005, 08:15 PM
"கருத்தாழம் மிக்க கவிதை. சகோதரியின் சமூகத்தை சாடும் கவிதைகள் படிப்பது என்றாலே தனி சுகம், அதில் காரம், சவுக்கடி, மரண அடி எல்லாம் இருக்கும். தொடரட்டும் உங்கள் பணி. "

நன்றி பரம்ஸ் அண்ணா

babu4780
25-02-2005, 05:42 AM
சரி இந்தப் பின்குறிப்பின் அர்த்தம் என்ன பாபு?

ஒகே. இது இந்த தலைப்புக்கு சிறிது சம்பந்த்தமில்லாதது தான். (பிரதீப் - கோபமா பார்ப்பது தெரியுது !!)

அந்த பகுதில
'ஆயிரத்தில் ஒருவன்' 'அலிபாபாவும் 40..' போன்ற படங்களில் நடித்த வில்லன் அடியாட்க்கள் யாராவது உங்களுக்கு நியாபகமிருக்கானு கேப்பார்.

அப்புறம் சம்பந்தமே இல்லாமல் கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி பற்றி சொல்ல ஆரம்பிப்பார். அதில் ஒரு கிழவரைப் பற்றியும் சொல்வார். கடைசியில் அந்த கிழவர் பல வருடங்களுக்கு முன், 'ஆயிரத்தில் ஒருவன்' 'அலிபாபாவும் 40..' போன்ற படங்களில் அடியாளாக நடித்தவர் என்றும், சினிமாவில் ஹிரோவாக ஆசைப்பட்டு எவ்வளவோ சிரமப்ட்டு, கடைசிவரை முடியாமல், வாழ்க்கையைத்தொலைத்து இப்போது வழியற்று நற்பதாகவும் சொல்லி முடிப்பார்.

- வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் படிக்கவும். (ஆ.வி.)

kavitha
25-02-2005, 01:21 PM
விளக்கத்திற்கு நன்றி பாபு. நேரம் கிடைத்தால் படிக்கிறேன்.

அக்னி
30-05-2007, 05:55 PM
சமுதாயத்தில் இன்று புரையோடிப்போன ஒரு மானுட வெட்கம்...
துல்லியமாய் அறைகிறது... மனதில்...

பென்ஸ்
30-05-2007, 06:10 PM
இந்த கவிதை மன்றத்தில் இருக்கு....

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5129