PDA

View Full Version : நீ ஒரு...



kavitha
18-02-2005, 02:53 AM
நீ ஒரு...

நீ ஒரு வானம்
நினைக்கும்போது வெளிச்சம்
மறக்கும்போது இருள்

நீ ஒரு ரோஜா
நினைக்கும்போது மணம்
மறக்கும்போது முள்

நீ ஒரு பரமபதம்
நினைக்கும்போது ஏற்றிவிடுவாய்
மறக்கும்போது கொத்திவிடுவாய்

நீ ஒரு குழந்தை
நினைக்கும்போது கொஞ்சுவாய்
மறக்கும்போது கெஞ்சுவாய்

நீ ஒரு விண்மீன்
நினைக்கும்போது ஒளிர்வாய்
மறக்கும்போது உதிர்வாய்

நீ ஒரு படகு
நினைக்கும்போது பயணம்
மறக்கும்போது பணயம்

நீ ஒரு மலை
நினைக்கும்போது எழுவாய்
மறக்கும்போது எழுவாய்

நீ ஒரு காடு
நினைக்கும்போது காணாமல்போவேன்
மறக்கும்போது கண்டுகொள்வேன்

நீ ஒரு உண்மை
நினைக்கும்போது தெரியும்
மறக்கும்போது தெரியாது

நீ ஒரு பொய்
இருந்தும் இருப்பாய்
இல்லாமலும் இருப்பாய்

இக்பால்
18-02-2005, 06:02 AM
இதுவும் ஒரு புரிந்து கொள்ள சிரமமானது என்ற வகையில் உள்ள கவிதை எனக்கு.
தொடருங்கள் கவிதைகளை. ஒவ்வொரு மூன்று வரிகளும் ஒவ்வொரு கவிதையாகப் பார்க்கிறேன்.

-அன்புடன் இக்பால்.

babu4780
18-02-2005, 07:00 AM
அருமை .
தொடருங்கள் கவி, நன்றாக உள்ளது.
-பெரி

அறிஞர்
19-02-2005, 03:42 AM
அழகாய் உள்ளது.. கவி....
நண்பர்களின் விருப்பம் கேட்டு.. சில பத்திரிக்கைக்கு அனுப்புங்கள்.....
இன்னும் தொடருங்கள்...

poo
19-02-2005, 08:41 AM
நீ ஒரு புதிரென முடிந்துவிடுமோவென்று நினைத்தேன்!!
நீ காற்று நான் மழை பாடலின் மெட்டில் இந்த வரிகளும் அருமையாக பொருந்தும் கவிதா!

தொடருங்கள்...

மன்மதன்
19-02-2005, 10:15 AM
நீண்ட நாள் கழித்து திரும்பவும் உற்சாகமாக கவி வழங்கும் கவிக்கு பாராட்டுக்கள்..

அன்புடன்
மன்மதன்

kavitha
19-02-2005, 10:53 PM
" இதுவும் ஒரு புரிந்து கொள்ள சிரமமானது என்ற வகையில் உள்ள கவிதை எனக்கு.
தொடருங்கள் கவிதைகளை. ஒவ்வொரு மூன்று வரிகளும் ஒவ்வொரு கவிதையாகப் பார்க்கிறேன்.
-அன்புடன் இக்பால். "


இதுக்குத்தான் அடிக்கடி கவிதைகள் பக்கம் வரணும். இரண்டு வரிகளாவது எழுதிட்டுப்போகணும். உங்களைத்தான் சொல்கிறேன்.




"அருமை .
தொடருங்கள் கவி, நன்றாக உள்ளது.
-பெரி "

நன்றி பாபு.




"
நண்பர்களின் விருப்பம் கேட்டு.. சில பத்திரிக்கைக்கு அனுப்புங்கள்.....

இன்னும் தொடருங்கள்... "

உங்கள் ஊக்கம் எனக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறது. முயற்சி செய்கிறேன் அறிஞரே. நன்றி.




"நீ ஒரு புதிரென முடிந்துவிடுமோவென்று நினைத்தேன்!!

நீ காற்று நான் மழை பாடலின் மெட்டில் இந்த வரிகளும் அருமையாக பொருந்தும் கவிதா!

தொடருங்கள்..."

ஓ! அப்படியா பூ.. உண்மையில் இக்கவிதையை தொடராக வெளியிடவே விரும்பினேன். தொடர்கள்
நேரத்தை விழுங்குவதாய் தோன்றியதாலும் அலுப்பூட்டக்கூடாது என்பதாலும் இத்துடன் நிறுத்திவிட்டேன்.

சில பாடல்களை நினைவு படுத்துகிறது என்பது கவிதைக்கு கிடைக்கும் அங்கீகாரம் எனினும் அதே சாயல் என்பது கொஞ்சம் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
மெட்டு தானே பொருந்தும் என்றீர்கள்! நன்றி பூ.