PDA

View Full Version : எதிர் வினைkavitha
18-02-2005, 02:51 AM
எதிர் வினை
-------------

* என்னை மிதிப்பதால்
மண்ணை மிதிக்கிறேன்
மிதியடி!

* முள்ளும் மலரும்
அனலில் இட்டால்..
மலரும் கூம்பும்
வாடை தொட்டால்..

அறிஞர்
19-02-2005, 03:46 AM
கவிதைகளை.. வித்தியாசமான நோக்குடன் தொடர்கிறீர்கள்...

பலருக்கு புரிவது கடினமே....

நேரம் கிடைக்கும்போது..... விளக்கம் கொடுங்கள்...

pradeepkt
19-02-2005, 07:41 AM
ஆமா ஆமா.
எனக்கும் புரியலை.
விளக்கம் சொல்லுங்க கவி.

அன்புடன்,
பிரதீப்

poo
19-02-2005, 08:31 AM
வாழ்த்துக்கள் கவி...

புதிய கோணத்தில் வரிசையாய் வருகிறது.....

ஒரு சின்ன வேண்டுகோள்.. எல்லா வகையாகவும் கலந்து தாருங்கள்... நேற்று முதல் நான் படித்த தங்கள் கவிகள் அனைத்தும் ஒரேமாதிரியான தோற்றத்தை எனக்கு தருகிறது.. இயல்பான கவி(தா) ஏதோ இக்கட்டில் (இலக்கண கட்டுப்பாட்டில்..?!) எழுதுவதைப்போன்ற தோற்றம்..
இது என் கருத்து,..,. தவறாக நினைக்கவேண்டாம்!


கவி.. மீண்டும் கலக்கவேண்டுகிறேன்!!

எதிர்வினை... அருமை கவி!!

மன்மதன்
19-02-2005, 10:13 AM
* என்னை மிதிப்பதால்
மண்ணை மிதிக்கிறேன்
மிதியடி!

என்னை மிதிப்பதால்
மண்ணை மிதிக்கிறாய் ... என்று இருந்திருக்கணுமோ..??
--

kavitha
19-02-2005, 11:10 PM
"புதிய கோணத்தில் வரிசையாய் வருகிறது.....

ஒரு சின்ன வேண்டுகோள்.. எல்லா வகையாகவும் கலந்து தாருங்கள்... நேற்று முதல் நான் படித்த தங்கள் கவிகள் அனைத்தும் ஒரேமாதிரியான தோற்றத்தை எனக்கு தருகிறது.. இயல்பான கவி(தா) ஏதோ இக்கட்டில்(இலக்கண கட்டுப்பாட்டில்..?!) எழுதுவதைப்போன்ற தோற்றம்..
இது என் கருத்து,..,. தவறாக நினைக்கவேண்டாம்!


கவி.. மீண்டும் கலக்கவேண்டுகிறேன்!! "


பூஊஊஊஊஊஊஊஊ! உங்கள் கருத்தை மிக மிக வரவேற்கிறேன். நீங்கள் தயக்கமின்றியே சொல்லலாம்.
இப்போது இலக்கணத்தின் கண் ஈடுபாட்டைக்கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம்.
ஆனால் இக்கவிதை எழுதி பல மாதங்கள் ஆகின்றன.
இலக்கணக் கட்டுப்பாடெல்லாம் ஒன்றும் இல்லை.
சாதாரண ஹைக்கூ தான்!
எதிர்வினை என்பதை செய்வினை, செயப்பாட்டுவினையோடு ஒப்பிடாதீர்கள்

ஒரு செயலுக்கு மீண்டும் நேரும் எதிர் செயலையே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

விளக்கம்:-

* என்னை மிதிப்பதால்
மண்ணை மிதிக்கிறேன்
மிதியடி!


சில சமயங்களில் நமக்கு மேலிடத்து பிரசர் இருக்கும். காரணம் பார்த்தால் அவரை
அவருக்கு மேலே இருப்பவரின் பிரசர் தான்.
அதைக் கருப்பொருளாகக் கொண்டு மிதியடியோடு (செருப்பு) ஒப்பிட்டு எழுதிய
வரிகள் தான் இது.

என்னை மிதிப்பதால் - ஏற்கனவே எனக்குத் தந்த அழுத்தத்தில்
மண்ணை மிதிக்கிறேன் - உன்னை நிர்ப்பந்திக்கிறேன்.
மிதியடி - மேலாளர்
மண் - அவருக்கு கீழே பணிபுரிபவர்

* முள்ளும் மலரும்
அனலில் இட்டால்..
மலரும் கூம்பும்
வாடை தொட்டால்..

இக்கவிதைக்கு விளக்கம்:

சரி! வினைகள் எப்படி இருக்கவேண்டும்?

முள்ளும் மலரும் அனலில் இட்டால் - முள் என்பது விகாரம்( ஆ! இங்கேயும் இலக்கணம்)
அல்லது கடுமையைக் குறிக்கும் சொல் ஆகும். அதை மலரச்செய்வது எப்படி?
நெருப்பில் இட்டுப் பாருங்கள். வெடித்து மலரும்.

மலரும் கூம்பும் - மலர் என்பது விரிந்த ஒன்று. அது மீண்டும் எப்படி கூம்பும்?
வாடை (காற்று) தொட்டால் - காற்று தொட்டால் மீண்டும் அது கூம்பி விடும். இதை
மாலை வேளைகளில் பார்த்திருக்கக்கூடும் (காலையில் மலரும் மலர்களுக்கு மட்டும் பொருந்தும்)


ஒற்றை வரியில் விளக்கம் சொல்லணும்னா "ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்"னு சொல்லிருக்கேன்.


இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். சரிதானே அறிஞரே!
பிரதீப் ஓகேவா?

பூ... என்னை இலக்கணவாதியாகப் பார்க்காதீர்கள். அதை நான் தொட இன்னும்
நிறைய தூரம் கடக்கவேண்டியுள்ளது."என்னை மிதிப்பதால்
மண்ணை மிதிக்கிறாய் ... என்று இருந்திருக்கணுமோ..?? "

இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லையே மன்மதன்!??? :)

pradeepkt
21-02-2005, 03:45 AM
பிரதீப் ஓகேவா?


ஓகே ஓகே... ரொம்ப ஓகே.
:)

அன்புடன்,
பிரதீப்

அறிஞர்
22-02-2005, 03:28 AM
டபுள் ஓகே மேடம்,...........

நல்ல விளக்கங்கள்.... இப்போ தெளிவாக புரிகிறது

poo
22-02-2005, 05:06 AM
என்னை மிதிப்பதால்...


அப்போதே புரிந்துகொண்டேன் கவிதா... சில நாட்களுக்கு முன் மனைவியிடம்கூட இதைச்சொன்னேன்... பல இடங்களில் காயப்படுபவர்களுக்கு ஆறுதலே அதுதான்!!

kavitha
22-02-2005, 11:51 PM
சந்தோசம் பூ. அறிஞருக்கும் எனது நன்றிகள்

அக்னி
30-05-2007, 09:16 PM
ஆகா! விளக்கம் இல்லாவிட்டால், எனக்கு விளக்கம் இல்லமலே போய் விட்டிருக்கும்...

அழகு....

சிவா.ஜி
03-06-2007, 04:58 AM
மிதியடி என்று சாதாரனமாக வீட்டு வாசலில் இட்டிருக்கும் துணியையோ பாயையோதான் சொல்வார்கள். அதனால் தான் நானும் சிறிது குழம்பிவிட்டேன் கவிதா. விளக்கத்திற்கு பிறகு நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.பாராட்டுக்கள்.