PDA

View Full Version : என்னை விட்டுப் போ..



kavitha
18-02-2005, 02:45 AM
என்னை விட்டுப் போ..
-----------------------
ரிக்டர் அழுத்தம்
நானோ வேகம்
சதவீத ஊக்கம்
இருந்தும் இல்லை ஆக்கம்
'பிறகு பார்க்கலாம்' எனும்
பாரன்ஹீட் சோம்பலே!
என்னை விட்டுப் போ..
கவிதை மழை
என்னில் இறங்கிவிட்டது.

இக்பால்
18-02-2005, 06:04 AM
இறங்கி விட்ட சிந்தனை மழையில்...
பெருகி விட்ட கவிதை விளைச்சலை...
காணக் காத்திருக்கிறோம்.

babu4780
18-02-2005, 07:15 AM
Originally posted by kavitha@Feb 18 2005, 09:15 AM
ரிக்டர் அழுத்தம்
நானோ வேகம்
சதவீத ஊக்கம்...

இந்த 3 வரிகள் ??
அய்யோ என் மர மண்டையை என்ன சொல்வது..

பாரதி
18-02-2005, 01:29 PM
அன்பு நண்பரே...
பூமி அதிர்ச்சியை அளக்கும் அளவுகோல்
கணினிகளில் சிப்புகள் செயல்படும் அல்லது செயல்படப்போகும் வேகம்
கணிதத்தில் வரும் சதவிகிதம்.. நூறாக கொள்ளலாம்
வெப்பமானி தரும் வெப்பத்தின் அளவு...
மழை
இப்படி இயற்கையாக நடக்கும் விசயங்களை குறிப்பாக காட்டி கவிதாயிணி அவர்கள் எழுதி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சரியான விளக்கம் என்றால் அவர்களே தரக்கூடும்.

அறிஞர்
19-02-2005, 03:37 AM
பாரதியின் விளக்கம் அருமையாக உள்ளது....
கவியின் விளக்கத்தையும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்...

அறிஞர்
19-02-2005, 03:39 AM
பிறகு பார்க்கலாம் என்ற சோம்பலே...
வாழ்க்கையில் பல வெற்றிகளுக்கு (படைப்புக்களுக்கு)
தடையாய் உள்ளது
என அழகாய் படம் பிடித்து காட்டிய கவி(தை)......
வாழ்த்துக்கள்....

kavitha
19-02-2005, 10:17 PM
பாரதி அவர்களின் விளக்கத்திற்கு நன்றி.

பாபு! பாரதி அளவுகோல்களுக்கு சரியான விளக்கம் அளித்துள்ளார்.

"பூமி அதிர்ச்சியை அளக்கும் அளவுகோல்
கணினிகளில் சிப்புகள் செயல்படும் அல்லது செயல்படப்போகும் வேகம்
கணிதத்தில் வரும் சதவிகிதம்.. நூறாக கொள்ளலாம்
வெப்பமானி தரும் வெப்பத்தின் அளவு..."

இப்போது கவிதையைப்படித்து பாருங்கள். புரியும்
உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். நன்றி.



பிறகு பார்க்கலாம் என்ற சோம்பலே...
வாழ்க்கையில் பல வெற்றிகளுக்கு (படைப்புக்களுக்கு)
தடையாய் உள்ளது
என அழகாய் படம் பிடித்து காட்டிய கவி(தை)......
வாழ்த்துக்கள்....



நன்றி அறிஞரே

kavitha
19-02-2005, 10:19 PM
இறங்கி விட்ட சிந்தனை மழையில்...
பெருகி விட்ட கவிதை விளைச்சலை...
காண காத்திருக்கிறோம்.


மிக்க மகிழ்ச்சி. நன்றி அண்ணா.