PDA

View Full Version : என்னருகில் நீ



kavitha
18-02-2005, 02:37 AM
என்னருகில் நீ
---------------

காயும் நிலவு
கலையா வானம்
என்னருகில் நீ

பனி கொஞ்சும் முகில்
நனி துஞ்சும் மலை
என்னருகில் நீ

ஒற்றைக் கிளை
இரட்டைக் கிளி
என்னருகில் நீ

பாயும் அலை
பரவா விரல்கள்
என்னருகில் நீ

மஞ்சள் விரவும் மாலை
இமை அகலா பார்வை
என்னருகில் நீ

துடிக்கும் விரல்கள்
தூங்கும் கை
என்னருகில் நீ

நனையா முத்தம்
நினைந்த கனவு
என்னருகில் நீ

pradeepkt
18-02-2005, 03:15 AM
நனையா முத்தம்
நினைந்த கனவு
என்னருகில் நீ

-------------------------
கடைசி வரியில போட்டீங்களே ஒரு போடு... அற்புதம் கவி. நான் என்னமோ அது "நனைந்த" கனவுன்னு முதல்ல படிச்சு அப்புறம் அது நினைந்ததுன்னு புரிஞ்சப்புறம் என்னமோ ஆகிப் போச்சு.
இப்பத்திய சீஸனுக்கு இது ஒரு நல்ல மட்டுமல்ல உபயோகமான கவிதை.
வாழ்த்துகள்.

அன்புடன்,
பிரதீப்

இக்பால்
18-02-2005, 05:33 AM
சில நாட்களுக்குப் பிறகு படிக்கும் தங்கையின் கவிதை. பாராட்டுகள்.

நன்றாக இருக்கிறது. ஆனால் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது.

நனி என்றால் என்னங்க தங்கை? -அன்புடன் அண்ணா.

பரஞ்சோதி
19-02-2005, 03:24 AM
சில நாட்களுக்குப் பிறகு படிக்கும் தங்கையின் கவிதை. பாராட்டுகள்.

நன்றாக இருக்கிறது. ஆனால் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது.

நனி என்றால் என்னங்க தங்கை? -அன்புடன் அண்ணா.

நான்+நீ = நனி

(சக்தி கிட்ட கேட்ட போது சொன்னது)

அறிஞர்
19-02-2005, 03:31 AM
மீண்டும் கவியை பார்ப்பது சந்தோஷம்.....

கவிதை அருமையாக உள்ளது.....

பரம்ஸின் விளக்கமும் வித்தியாசமாக உள்ளது.....

pradeepkt
19-02-2005, 07:39 AM
சால உரு தவ நனி கூர் கழி
இவை அனைத்தும் உரிச் சொற்கள் என்று சிறு வயதில் படித்த ஞாபகம்.
இவை அனைத்தும் அடுத்து வரும் பொருட்களின் தன்மையை உயர்த்துவனவோ? மறந்து விட்டேன்.
நண்பர்கள் அறிந்து கூறினால் மகிழ்வேன்.

அன்புடன்,
பிரதீப்

poo
19-02-2005, 08:37 AM
சோம்பல் விரட்டிய கவியே... கொஞ்சி விளையாடும் கவிதைகள் இன்னும் வரட்டும்!

மன்மதன்
19-02-2005, 10:17 AM
சோம்பல் விரட்டிய கவியே... கொஞ்சி விளையாடும் கவிதைகள் இன்னும் வரட்டும்!

ஹாஹ்ஹ்ஹாஹ்.. சோம்பல் விரட்டியாச்சே.. உங்க கவிதைகளையும் கொடுக்கிறது..

கவிதை அருமை கவி..
-
ஒரு கிளை
இரு கிளிகள்..
நான் ரசித்த வரிகள்..

அன்புடன்
மன்மதன்

thamarai
19-02-2005, 08:01 PM
நிலவு வானத்தையும், முகில் மலையையும், கிளை கிளியையும், அலை விரல்களையும், மாலை பார்வையையும், விரல்கள் கையையும், முத்தம் கனவையும்... என்னருகில் நீ என்று ஒப்பிட்டு கவிதா வடித்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...

kavitha
19-02-2005, 10:08 PM
சபாஷ் தாமரை.. வித்யாசமான கண்ணோட்டம். அதையே இரண்டு கவிதை வரிகளில் பதித்திருக்கலாமே! மகிழ்ச்சியுடன் உங்கள் கருத்திற்கு நன்றி.



கவிதை அருமை கவி..
-
ஒரு கிளை
இரு கிளிகள்..
நான் ரசித்த வரிகள்..

அன்புடன்
மன்மதன்
:) நன்றி மன்மதன்.



ஹாஹ்ஹ்ஹாஹ்.. சோம்பல் விரட்டியாச்சே.. உங்க கவிதைகளையும் கொடுக்கிறது..


அதானே பூ.. உங்களது "புது" கவிதைகள் எங்கே?




சால உரு தவ நனி கூர் கழி
இவை அனைத்தும் உரிச் சொற்கள் என்று சிறு வயதில் படித்த ஞாபகம்.
இவை அனைத்தும் அடுத்து வரும் பொருட்களின் தன்மையை உயர்த்துவனவோ? மறந்து விட்டேன்.
நண்பர்கள் அறிந்து கூறினால் மகிழ்வேன்.

அன்புடன்,
பிரதீப்

பிரதீப் சரியாகச் சொன்னார். நனி,சால, உறு, கழி ஆகியவை சொல்வதை மிகைப்படுத்துவதற்காக
உள்ள சொல். இங்கே 'ஆழ்ந்து உறங்கும்' என்ற பொருளில் வந்துள்ளது.



மீண்டும் கவியை பார்ப்பது சந்தோஷம்.....

கவிதை அருமையாக உள்ளது.....
நன்றி அறிஞரே.. உங்களைப்பார்த்ததில் எனக்கும் சந்தோசம்.




நான்+நீ = ந()னி

(சக்தி கிட்ட கேட்ட போது சொன்னது)

ஹஹ்ஹா.. சக்தி குட்டி இப்பவே ஹிந்தி பேச ஆரம்பிச்சுட்டாளா?




ஆனால் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது.

நனி என்றால் என்னங்க தங்கை? -அன்புடன் அண்ணா.

அண்ணாவிற்கு புரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
கவிதையே புரியவில்லையா அண்ணா?
நனி என்றால் மிகவும் என்று பொருள் படும்.




அற்புதம் கவி. நான் என்னமோ அது "நனைந்த" கனவுன்னு முதல்ல படிச்சு அப்புறம் அது நினைந்ததுன்னு புரிஞ்சப்புறம் என்னமோ ஆகிப் போச்சு.
இப்பத்திய சீஸனுக்கு இது ஒரு நல்ல மட்டுமல்ல உபயோகமான கவிதை.

ஒழுங்கா படிக்கணும் புரிஞ்சுதா?
(மிரட்டறே ந்னு பார்க்காதீங்க..சும்மாச்சுக்கும்)

உபயோகமான கவிதை?! ம் ம்... புரிஞ்சுப்போச்சு....:))

Hayath
24-02-2005, 11:53 AM
இந்த கவிதை என்னருகில் யார் ? என பார்க்க வைத்தது. பாராட்டுகள்,உங்கள் கவிதை அருமை.

kavitha
24-02-2005, 08:21 PM
நன்றி ஹயாத்

அக்னி
30-05-2007, 07:08 PM
வார்த்தைகள் குறுகி விடயம் பரந்து விரியும் அழகுக் கவிதை இது...
வாழ்த்துக்கள்...