PDA

View Full Version : விலங்கினம்...



rambal
15-04-2003, 06:24 PM
கம்பி கட்டி
மண்ணைப் பிரித்து
இது என் எல்லை
என்று
தம்பட்டம் அடிக்கும்..
ஆயுதம் குவித்து
கேட்பாரற்ற வேலி காக்கும்..

வழிபாடு முறை வைத்து
மனிதனைப் பிரித்து
தனிப் பெருங்கூட்டம் உருவாக்கி
தலைவன் என்று
மார்தட்டும்..
ஆயுதமேந்திய
ஆத்திகனாகவும் காட்டிக் கொள்ளும்..

செய்யும் தொழில் வைத்து
இனம் உருவாக்கி
அதில்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
என்றும்
வாய்கிழியப் பேசும்..
சுடுகாட்டைக் கூட
பிரித்து வைக்கும்..

இப்படித்தான்
மனிதன் என்ற நாட்டு விலங்கினம்
தனித்தனித் தீவாய் போனது
கண்டு
காட்டு விலங்கினம்
சிரித்துக் கொண்டிருக்கிறது...

இளசு
15-04-2003, 06:34 PM
அருமை ராம்

ஹோமோ சேபியன்ஸ்
இந்த மிருகம்
கோபம் வந்தால்...
சக மிருகத்தை
சகட்டு மேனிக்கு
மற்ற மிருகம் பேர் சொல்லி திட்டும்


அதைக்கேட்டு
கூட்டம் கூட்டி உண்ணும்
கூடப்பறந்து வழி காட்டும்
கர்ப்பவாசம் கண்டால் விலகும்
பசித்த பின்தான் அடித்துப் புசிக்கும்

மற்ற மேலான மிருகம்
சிரிக்காமல் என்ன பண்ணும்..???

kaathalan
15-04-2003, 08:27 PM
நல்லா இருக்கிறது இருவருடைய கவிதைகளும்.
நகைப்புக்கிடமானதையிட்டு இந்த விலங்கும் தன்னினத்தை பார்த்து
கவலையோடு சிரித்துவைத்தது.

இளசு
15-04-2003, 08:49 PM
[quote]நல்லா இருக்கிறது இருவருடைய கவிதைகளும்.
நகைப்புக்கிடமானதையிட்டு இந்த விலங்கும் தன்னினத்தை பார்த்து
கவலையோடு சிரித்துவைத்தது

அருமையான முத்தாய்ப்பு இளவலே, மிக ரசித்தேன்.

poo
16-04-2003, 05:57 PM
ஆளுக்கொரு பெயர்...
அதுமட்டில் இந்த விலங்கினம்
அபூர்வம்தான்!!!

-பாராட்டுக்கள் ராம் மற்றும் அண்ணனுக்கு!!!