PDA

View Full Version : கூகிளில் தமிழ்மன்ற குழு..!பாரதி
05-02-2005, 09:56 PM
கூகிள் தமிழ்மன்ற நண்பர்கள் குழு

அன்பு நண்பர்களே,

தனிமடலை பொது மடலாக ஆரம்பித்த (!) பிறகு இந்த எண்ணம் ஏற்பட்டது. சில நண்பர்கள் அரட்டை அடிக்கவும் வசதியாக கூகிளில் இந்த குழுவை தொடங்கியுள்ளேன். சிலரது பெயரை இணைக்க கூகிளில் விண்ணப்பித்துள்ளேன். இரண்டு தினங்களாக இன்னும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. இதில் கலந்து கொள்ளவும் ஆலோசனைகளை கூறவும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
இக்குழு தமிழ்மன்றத்தை தவிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. மன்றம் தவிர்த்து கலந்துரையாட வசதியாக இருக்கும் என்பதால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் எந்த மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பவர்களும் இணைய முடியும்.

யுனிக்கோடில் தமிழில் பதிவுகள் செய்ய முடியும்.

இப்போதைக்கு கட்டுப்பாடு இல்லாத திறந்த குழுவாக இது இருக்கும்.
இணைய விரும்பும் நண்பர்கள் சுட்டியைத்தட்டி இணையவும். நன்றி.

http://groups-beta.google.com/group/tamilmantram

pradeepkt
07-02-2005, 02:30 AM
நல்ல முயற்சி,
நானும் சேர்ந்து விட்டேன்.

அன்புடன்,
பிரதீப்

அறிஞர்
11-02-2005, 08:51 AM
மக்கள் கலாய்க்க... நல்ல வழி வகுத்துள்ளீர் நண்பரே..

நிறைய மெயில்கள் வந்து குவிகிறது....

நண்பர்களின் ஈடுபாடு மன்றத்தில் குறைந்துவிடுமோ என்று ஒரு அச்சம் உள்ளது.....

aren
11-02-2005, 09:42 AM
எனக்கும் அந்த பயம் உள்ளது. இதனால் நம் உறுப்பினர்கள் மன்றம் வருவது குறைந்துவிடுமோ என்ற பயம் இருக்கிறது எனக்கு.

எது செய்தாலும் இங்கேயே ஒரு குழுவாக செய்யலாமே? தனியாக கூகிள் குழு எதற்கு.

இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த தமிழ்மன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் குறைந்துவிட்டால் தலைவர் இதை மூடிவிடுவார்,

ஆகையால் மறுபரிசீலனை செய்யவும்.
பாரதி அவர்களே, உங்களிடம் இது ஒரு வேண்டுகோளே.

பாரதி
11-02-2005, 03:50 PM
அன்பு ஆரென் மற்றும் அறிஞருக்கு,

முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். இக்குழு தமிழ்மன்றத்தை தவிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல. இக்குழுவின் பெயரே தமிழ்மன்ற நண்பர்கள் குழு என்பதுதான்.!

ஐ லவ் தமிழ் ஆரம்பித்த போதும் கூட இது போன்ற ஒரு குழு இராசகுமாரனால் யாஹுவில் தொடங்கப்பட்டது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இந்தக்குழு ஆரம்பிப்பதற்கு முன்னரே.. ஏராளமான மடல்கள் ஜிமெயிலில் நமக்கு வந்து கொண்டிருந்தன.. அது தனி நபருக்கா.. அல்லது குழுவுக்கா என்கிற சந்தேகம் அடிக்கடி வரும். மடலைத் திறந்து பார்த்தால்தான் அது தீரும். இப்போது குழுவாக இருப்பதால்... தனிமடல் அனுப்ப விரும்புபவர்கள் தனியாக மட்டுமே அனுப்புவார்கள். குழப்பம் இருக்காது.

ஆங்கிலத்தில் அல்லது யுனிகோடில் மடல்கள் அனுப்ப வசதியுள்ளது.

இதை வைத்துக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற அடத்தில் நான் சொல்லவில்லை. இப்போது இணைந்து இருக்கும் நண்பர்கள் பெரும்பான்மையோர் வேண்டாம் என்றும் சொல்லும் பட்சத்தில் இது குறித்து கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யலாம்.

நண்பர்கள் தயவு செய்து தங்களது கருத்துக்களைக் கூறவும்.

aren
12-02-2005, 01:00 AM
உங்கள் உடன் பதிலுக்கு நன்றி பாரதி அவர்களே.

பரஞ்சோதி
12-02-2005, 09:18 AM
நண்பர்களுக்கு என்னுடைய கருத்துகளை சொல்ல இருக்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பாரதி அண்ணாவின் கூகிள் குழுவினால் மன்ற நடவடிக்கையும், வருகையும் குறையும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
ஒரு குழுவினால் தமிழ் மன்றம் பொலிவு இழந்து என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள், கண்காணிப்பாளர்கள், தூண்கள், மற்றும் நட்சத்திர உறுப்பினர்கள் எல்லாம் ஆடிக்கு ஒரு முறையும், அமாவாசைக்கு ஒரு முறையும் வருதாக இருக்கிறது, ஏன் இந்த நிலைமை?

அப்புறம் மன்றத்தில் கலப்பாகவும், கருத்துள்ளதாகவும் கொண்டு சென்று கொண்டிருந்த உறுப்பினர்களான, இளசு அண்ணா, நிலா, சுமா, கவிதா, மைதிலி, நண்பன், இசாக், அசன்பசர், முத்து, பூ, சேரன், கரிகாலன் அண்ணா, இக்பால் அண்ணா, அறிஞர் இன்னமும் பல பல உறுப்பினர்கள் எங்கே?

அதை முதலில் சரி செய்ய முடிவு செய்ய வேண்டும். மன்றத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் தங்களுடைய நண்பர்களுக்கு மன்றத்தை பற்றி சொல்லி, உறுப்பினர்களாக சேர்க்க வைக்க வேண்டும், இது போன்ற காரியங்களில் எத்தனை பேர் ஈடுபடுகிறார்கள்?

நண்பர் ராஜகுமாரன் அவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம், வாரம் ஒரு புத்தகம் அப்படியே நிற்கிறது?

தயவு செய்து இந்த தலைப்பை மன்றத்தின் ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உதவும் படியாக பேச அழைக்கிறேன்.

(என்னாலும் முன்பு போல் வரமுடியவில்லை, காரணம் வேலைப்பளு மற்றும் சக்தியின் வருகை, விரைவில் முன்பு போல் மன்றம் வரமுடியும் என்பதை சொல்லிக் கொள்கிறேன்).

aren
12-02-2005, 03:54 PM
பரஞ்சோதி அவர்களே,

உங்கள் பதிவிற்கு நன்றி.

இளசு அவர்கள் சுனாமி வந்ததிலிருந்து மன்றம் பக்கமே வருவதில்லை. அது ஏன் என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதற்கு முன்பாக அவருடைய பங்களிப்பு எப்படியிருந்தது என்று உங்களுக்கே தெரியும். அவர் கூடியவிரைவில் மன்றம் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் புதிதாக தொழில் ஆரம்பித்திருப்பதால் என்னால் முன்போல் இங்கே வரமுடிவதில்லை. இதைப்பற்றி நான் தலைவர் அவர்களுக்கு செய்தி அனுப்பியிருக்கிறேன். அப்படியிருந்தும் என்னால் முடிந்த அளவு இங்கே வந்துகொண்டுதான் இருக்கிறேன்.

மேலும் சில நண்பர்கள் வேலை பளு காரணமாக இங்கே தினமும் வரமுடிவதில்லை. அதை நாம் ஒரு குற்றமாக சொல்லமுடியாது. ஏனெனில் அவர்களுடைய தொழில்தான் முக்கியது. அது முடிந்து நேரமிருந்தால் இங்கே வந்து நம்முடன் பங்களிப்பில் கலந்து கொள்ளலாம். அதற்காக வருகிற ஒரு சிலரையும் இங்கேயிருந்து தனியாக வரும்படி அழைப்பது நியாயமாக எனக்குப் படவில்லை.

அப்படி நடந்தால் இங்கே வரும் அந்த ஒரு சிலரும் வராமல் இருந்துவிடுவார்கள். இந்த மன்றத்தை நடத்துவதைவிட மூடி விடலாம். மன்றத்தை மூடுவது நம்முடைய நோக்கமல்ல. நம்மால் முடிந்த அளவு இங்கே பங்களித்து இவ்வளவுதூரம் வளர்ந்த தமிழ்மன்றத்தை இன்னும் வளர்க்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

தலைவர் ராஜகுமாரன் அவர்கள் வருவதில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். அவர் தன்னுடைய சொந்த முதலீட்டில் இந்த மன்றத்தை நடத்துகிறார். இது அவர் நமக்கு அளித்திருக்கும் பெரும் உதவி.

அதுபோல் புதிதாக ஆரம்பித்திருக்கும் வாரம் ஒரு புத்தகமும் நமக்கு கிடைத்திருக்கும் ஒரு பொக்கிஷம். அவர் வேலை பளுவால் இங்கே வரமுடியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் வந்து உங்களுக்குத் தேவையான புத்தகங்களை இங்கே வழங்குவார் என்று நம்பலாம்.

பரஞ்சோதி அவர்கள் இந்த மன்றத்திற்கு நிறைய செய்திருக்கிறார்கள். அவர்கள் இங்கே தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதை ஒரு வேண்டுகோளாக ஏற்றுக்கொண்டு உங்களுடைய பங்களிப்பை இங்கே தொடர்ந்து அளித்துவரவேண்டும்.

நிச்சயம் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

பரஞ்சோதி
13-02-2005, 03:23 AM
நன்றி ஆரேன் அண்ணா,

நான் விரைவில் பழைய நிலையை அடைந்து, தொடர்ந்து தமிழ் மன்றத்தில் பங்கேற்க முடியும் என்று நம்புகிறேன்.

இளசு அண்ணாவை பொருத்தமட்டும், எவ்வளவு பணி என்றாலும் மன்றம் வராமல் இருக்க மாட்டார்கள், அப்படிபட்டவர் மன்றம் வரவில்லை என்றால் ஏதேனும் காரணம் உண்டா என்று அறியவே அவரது இமெயில் ஐடி கேட்டேன், யாரிடமும் கிடைக்கவில்லை. பரவாயில்லை அவர் வருகைக்கு என்று காத்திருப்போம்.

ஐவர் அணி மட்டும் மன்றம் வந்தால் போதாது, இதர அணியினரும் மன்றம் வந்தால் மட்டுமே மன்றம் கலகலப்பாகவும், அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் கொண்டதாகவும் இருக்கும்.

நண்பர் ராஜ்குமார் மீண்டும் நம்முடன் சேர்ந்து பங்கேற்க அழைக்கிறேன்.

அறிஞர்
23-02-2005, 08:02 AM
என்ன பரம்ஸ் சந்தடி சாக்கில... நம்ம பெயரையும் சேர்த்துட்டிங்க......

எப்பவும் போல தான் மன்றம் வருகிறேன்... அன்பரே....

அனைவரும் நன்றாக பங்கேற்க வேண்டும் என்பது என் விருப்பம்.....

kavitha
26-02-2005, 11:13 PM
நண்பர்

"அப்புறம் மன்றத்தில் கலப்பாகவும், கருத்துள்ளதாகவும் கொண்டு சென்று கொண்டிருந்த உறுப்பினர்களான, இளசு அண்ணா, நிலா, சுமா, கவிதா, மைதிலி, நண்பன், இசாக், அசன்பசர், முத்து, பூ, சேரன், கரிகாலன் அண்ணா, இக்பால் அண்ணா, அறிஞர் இன்னமும் பல பல உறுப்பினர்கள் எங்கே?"

" என்ன பரம்ஸ் சந்தடி சாக்கில... நம்ம பெயரையும் சேர்த்துட்டிங்க......
எப்பவும் போல தான் மன்றம் வருகிறேன்... அன்பரே....
அனைவரும் நன்றாக பங்கேற்க வேண்டும் என்பது என் விருப்பம்.....

--------------------
-----------
என்றும் அன்புடன்
உங்கள் அறிஞர்... "
பரம்ஸ் அண்ணா, நானும் அவ்வப்போது வந்துக்கொண்டுதான் இருக்கிறேன்