PDA

View Full Version : பொங்கல் திருநாள் - கும்மிப் பாட்டு



mythili
14-01-2005, 03:22 AM
பொங்கல் திருநாள் அன்று கிராமப்புரங்களில் இளம்பெண்கள் ஒன்று கூடி கும்மி கொட்டுவது வழக்கம்......அதைத் தொடர்ந்து.......

பொங்கல் திருநாள் அன்று எனக்குத் தெரிந்த(கேட்ட) ஒரு கிராமத்து பாடலோடு இன்றைய பதிவுகளை தொடங்குகிறேன்.....

இதைத் தொடர்ந்து அவரவர்கள் அவர்களுக்கு தெரிந்த கிராமியப் பாடல்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பாடியவர் : அனிதா குப்புசாமி

கும்மியடி கும்மியடி குலவையிட்டு
நல்ல கொடி போல ஏழு வண்ண கோலமிட்டு

கும்மியடி கும்மியடி வளையமிட்டு
இளங் குமரியெல்லாம் சேர்ந்து நல்லா தாளமிட்டு

பொட்டுப் பொட்டா முத்தளக்கும் வேப்பிலைக்காரி அவ
தொட்டுப்புட்டா யாரும் இல்லை கும்குமக்காரி

தட்டுத் தட்டா ஏந்துங்கடி தானியப்பாரி அவ
குளிர்ந்துபுட்டா எல்லாம் தருவா களத்துல வாரி

சுத்தி சுத்தி கொட்டுங்கடி சுந்தரக் கும்மி
நல்ல ஜோடி சேர்ந்து கொட்டுங்கடி சோமளக் கும்மி

தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தானானா

மஞ்சகரைச்சு ஹே ஹே ஹே
மாலை அணிஞ்சு ஹோ ஹோ ஹோ
மஞ்சள் பூசி குங்குமம் அணிஞ்சு வருவா முன்னால.....

தான தன்னா தான தன்னா தான தன்னா தானா
தான தன்னா தான தன்னா தான தன்னா தானா

நாகமாகி குடை புடிச்சு ஆத்தா
நல்ல குறி சொல்லிடுவா தந்னே தானே

மேகமாகி மின்னலாகி ஆத்தா போகம்
விளைய வைப்பா தன்னே தானே....

கும்மியடி கும்மியடி குலவையிட்டு
நல்ல கொடி போல ஏழு வண்ண கோலமிட்டு

கும்மியடி கும்மியடி வளையமிட்டு
இளங் குமரியெல்லாம் சேர்ந்து நல்லா தாளமிட்டு

அன்புடன்,
மைத்து

பரஞ்சோதி
15-01-2005, 03:33 AM
நல்ல பாடல் சகோதரி. இங்கே கொடுத்தமைக்கு நன்றி.

பொங்கல் தினத்தில் கிராமிய பாடல்கள், நகரத்து பாடல்கள் என்ற தலைப்பில் நல்ல நல்ல பாடல்கள் கேட்டேன், ஆனால் முழு பாடலும் நினைவில் இல்லை.

kavitha
23-01-2005, 11:15 AM
இந்தப்பாட்டை கேட்டதில்லை மைதிலி. நன்றாக உள்ளது. பாட்டி ஊரில் நேரிலேயே பார்த்தும் கேட்டும் இருக்கிறேன். (இப்போதைக்கு ஞாபகம் இல்லை)

மன்மதன்
04-02-2007, 08:35 PM
நல்ல பாட்டுயக்கா இது..

pradeepkt
05-02-2007, 09:32 AM
இது ஏங்க இந்த சினிமா பகுதியில் இருக்கு???
மாத்திரலாமா?

மதுரகன்
06-02-2007, 04:10 PM
அருமையான வரிகள் எங்காவது ஒலிவடிவில் பதிவிறக்கமுடியுமா..?

அறிஞர்
06-02-2007, 04:13 PM
பழைய பதிவுகள் உயிர் பெறுகிறது.. மதுரகனுக்கு நண்பர்கள் உதவுவார்கள் என எண்ணுகிறேன்.